PDA

View Full Version : நட்புக் கவிதைகள்



ஆதவா
25-01-2007, 05:35 PM
நண்பர்களே!! காதல் கவிதைகளுக்கு ஈடாக நட்புக் கவிதைகளும் எழுதலாம்.. நட்பு காதலை விட புனிதம். நட்பிலிருந்து காதல் போவதைவிட காதலில் நட்பிருந்தால் அது அதிபுனிதம்.... என் தோழி ஒருத்திக்காக நான் எழுதிய நட்புக் கவிதைகள் இங்கே இடுகிறேன்.. உங்களிடம் இருந்தாலும் இடுங்கள்....

உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

பிச்சி
26-01-2007, 07:26 AM
அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
இடையில்
இழைந்தோடுமே
நட்பு

பிச்சி
26-01-2007, 07:28 AM
மகிழம்பூ வாசனை நெடியில்
தேன் கலந்த
இனிமையான துகள்களின்
ருசியே உனக்கும் எனக்கும்
உண்டான நட்பு

அறிஞர்
26-01-2007, 09:12 PM
நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

காதலில்
ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
ஆனால்
நட்பில்..........

பென்ஸ்
27-01-2007, 04:04 AM
நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

காதலில்
ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
ஆனால்
நட்பில்..........

அறிஞரே...
காதலில் மட்டும் அல்ல...
நட்பிலும் எதிர்பாப்புகள் உண்டு...

எதிர்பாப்புகள் இல்லாத உறவுகள் இல்லை என சொல்லலாம், ஆனால் அவற்றை நாம் ஏற்றுகொள்ளுவதில்லை...
நட்பு என்ன,ரத்த உறவுகளிலும்தான்...

நட்பு..
காதலின் இனிமையும்..
தாய்மையின் ஸ்பரிசமும்
சகோதர பாதுகாப்பும்..
தகப்பன் கண்டிப்பும்
கொண்ட ஒரு கலவை...

பழமும் சுவைதான்.. பஞ்சாமிர்தமும் சுவைதான்....

பிச்சி, ஆதவா... கவிதைகள் அருமை...
என்னதான் இருந்தாலும் நட்பின் மீதான என் நட்பு என்றும் ஏறுகோனமாய்...

மனோஜ்
27-01-2007, 06:58 AM
உன் நன்பன் யார் என்று கூறு நான் உன்னை பற்றி கூறுகிறோன் என்று ஏன் செல்கிறார்கள் நட்பின் அறுமை அறிந்துதான்

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு...

பிச்சி
27-01-2007, 12:23 PM
நட்பை அதிகம் மதிப்பவர்கள் நம்மவர்கள்....

ஆதவனின், பிச்சியின் கவி வரிகள்.. நட்பை சிறப்பாக்குகின்றன......

காதலில்
ஈர்ப்போ, எதிர்பார்ப்போ உண்டு
ஆனால்
நட்பில்..........


அறிஞரே...
காதலில் மட்டும் அல்ல...
நட்பிலும் எதிர்பாப்புகள் உண்டு...

எதிர்பாப்புகள் இல்லாத உறவுகள் இல்லை என சொல்லலாம், ஆனால் அவற்றை நாம் ஏற்றுகொள்ளுவதில்லை...
நட்பு என்ன,ரத்த உறவுகளிலும்தான்...

நட்பு..
காதலின் இனிமையும்..
தாய்மையின் ஸ்பரிசமும்
சகோதர பாதுகாப்பும்..
தகப்பன் கண்டிப்பும்
கொண்ட ஒரு கலவை...

பழமும் சுவைதான்.. பஞ்சாமிர்தமும் சுவைதான்....

பிச்சி, ஆதவா... கவிதைகள் அருமை...
என்னதான் இருந்தாலும் நட்பின் மீதான என் நட்பு என்றும் ஏறுகோனமாய்...


உன் நன்பன் யார் என்று கூறு நான் உன்னை பற்றி கூறுகிறோன் என்று ஏன் செல்கிறார்கள் நட்பின் அறுமை அறிந்துதான்

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு...

உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி......

மதுரகன்
27-01-2007, 03:33 PM
என்னுடைய ஒவ்வொரு அடிகளும் இடறப்பட்டாலும்
தேற்றி அழைத்துச்செல்லும் தோழர்களே...
காத்திருக்கிறேன் உங்கள் தொந்தரவுகளுக்காய்....

பிச்சி
28-01-2007, 01:31 PM
என்னுடைய ஒவ்வொரு அடிகளும் இடறப்பட்டாலும் தேற்றி அழைத்துச்செல்லும் தோழர்களே...
காத்திருக்கிறேன் உங்கள் தொந்தரவுகளுக்காய்....

மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?

ஷீ-நிசி
28-01-2007, 02:03 PM
இவர்கள் தங்களின்
பெற்றோரைக் காட்டிலும்
தன் நண்பனின் பெற்றோருக்குத்தான்
அதிக மரியாதை கொடுப்பார்கள்

மதுரகன்
28-01-2007, 03:59 PM
நன்றி பிச்சி...

மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?
ஒன்றன் கீழ் ஒன்றாய் என்றால் வசனத்தை பிரிக்க சொல்கிறீர்களா??
அப்படியானால் பிரித்துவிட்டேன் பாருங்கள்..

பிச்சி
29-01-2007, 03:24 PM
நன்றி பிச்சி...

ஒன்றன் கீழ் ஒன்றாய் என்றால் வசனத்தை பிரிக்க சொல்கிறீர்களா??
அப்படியானால் பிரித்துவிட்டேன் பாருங்கள்..

ஆம் மதுரகன்.. அருமையா இருக்கு.. நீங்க என்ன படிக்கிறீப்ங்க.. போட்டவில் படிக்கிறவர் மாடிரி இருக்கே!

மதுரகன்
29-01-2007, 04:19 PM
ஆம் மதுரகன்.. அருமையா இருக்கு.. நீங்க என்ன படிக்கிறீப்ங்க.. போட்டவில் படிக்கிறவர் மாடிரி இருக்கே

நான் மருத்துவக்கல்லூரிக்கு தெரிவாகியுள்ளேன்
இன்னமும் முதல் வருடம் ஆரம்பிக்கவில்லை
ஏப்ரல் அளவில் ஆரம்பிக்கும் என எண்ணுகின்றேன்
தற்போது ஒரு கணனிக்கல்லூரி ஒன்றில் பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றுகின்றேன்..
இந்த தகவல் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா..? :) :) :)

அறிஞர்
29-01-2007, 04:22 PM
இவர்கள் தங்களின்
பெற்றோரைக் காட்டிலும்
தன் நண்பனின் பெற்றோருக்குத்தான்
அதிக மரியாதை கொடுப்பார்கள்
இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறதே.....

எனக்கு இது மாதிரி.... ஏற்பட்டதில்லை....

மதுரகன்
29-01-2007, 04:35 PM
எதற்காக என்று புரியாத சில கேள்விகள்
சற்றும்பொருத்தமற்ற சில பதில்கள்
சில மன்னிப்புகள் பல நன்றிகள்
ஒவ்வாமைகள் ஒத்துழைப்புகள்
மிகுந்த கெளரவமாவே காணப்படுகின்றது நம் நட்பு

ஷீ-நிசி
29-01-2007, 04:36 PM
இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறதே.....

எனக்கு இது மாதிரி.... ஏற்பட்டதில்லை....

அதிகம் இல்லை அறிஞரே... உண்மைதான்..

யாராகிலும் நண்பர் வீட்டிற்கு சென்றால், நண்பனின் அம்மா, அல்லது அப்பா இவனிடம் ஏதாகிலும் விசாரித்தால், ஆமாம்மா, ஆமாப்பா, இல்லப்பா, நல்லா இருக்காங்கப்பா, கிளம்பும்போது, வரேன் மா, வரேன் பா, என்ற ரீதியில் பணிவோடு பேசுவார்கள். அது அவர்கள் நட்பிற்கு காட்டும் மரியாதை..

ஆனால் அவன் அம்மாவிடம் பேசும்போது ரொம்ப பணிவோடு பணிந்து குழைந்து பேசமாட்டான், உரிமையாக பேசுவான், காரணம் அது அவன் தாய். அதனால் அவனுடைய பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. நட்புக்கு மரியாதை கொடுத்து அவன் பெற்றோரைக் காட்டிலும் அவன் நண்பனின் பெற்றோருக்கு அதிக மரியாதை கொடுப்பான்.

pradeepkt
30-01-2007, 03:40 AM
மதுரகன்.. அழகாய் இருக்கிறது.. இதை ஏன் நீங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக போடக்கூடாது?
ஒன்றன்கீழ் ஒன்றாகப் போட்டால்தான் கவிதையா என்ன??? :)

pradeepkt
30-01-2007, 03:44 AM
அதிகம் இல்லை அறிஞரே... உண்மைதான்..

யாராகிலும் நண்பர் வீட்டிற்கு சென்றால், நண்பனின் அம்மா, அல்லது அப்பா இவனிடம் ஏதாகிலும் விசாரித்தால், ஆமாம்மா, ஆமாப்பா, இல்லப்பா, நல்லா இருக்காங்கப்பா, கிளம்பும்போது, வரேன் மா, வரேன் பா, என்ற ரீதியில் பணிவோடு பேசுவார்கள். அது அவர்கள் நட்பிற்கு காட்டும் மரியாதை..

ஆனால் அவன் அம்மாவிடம் பேசும்போது ரொம்ப பணிவோடு பணிந்து குழைந்து பேசமாட்டான், உரிமையாக பேசுவான், காரணம் அது அவன் தாய். அதனால் அவனுடைய பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. நட்புக்கு மரியாதை கொடுத்து அவன் பெற்றோரைக் காட்டிலும் அவன் நண்பனின் பெற்றோருக்கு அதிக மரியாதை கொடுப்பான்.
ஒரு வகையில் உண்மைதான் இது. ஆனாலும் நம் பெற்றோருக்கு மரியாதைக் குறைவாக எண்ணலாமா? இறைவனையே ஒருமையில் அழைப்பதுதானே தமிழன் பண்பாடு?? அதில்தான் ஒரு உரிமை வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.

இது முக்கியமாக அழைப்பதை மட்டும் வைத்துச் சொல்லப்பட்ட வாதம். அன்போடு நீங்க வாங்க என்று அழைத்தும் மரியாதைக் குறைவாக இருக்கலாம் இல்லையா? அப்படி இருக்கக் கூடாது!

ஏனெனில் எங்கள் வீட்டில் அம்மாவை நீ வா போ என்றுதான் அழைப்பேன். என்றாவது நீங்க வாங்க போங்க என்றால் எங்கம்மாவே ஏண்டா என்னமாச்சும் உடம்பு கிடம்பு சரியில்லையா? என்று டென்சன் ஆகிவிடுவார். :D

ஆதவா
31-01-2007, 06:25 PM
ஒன்றன்கீழ் ஒன்றாகப் போட்டால்தான் கவிதையா என்ன??? :)

அருமையான கேள்வி.......... அதேசம்யம் தொடர்ந்து எழுதிக்கொண்டே போய்விட்டாலும் அது கவிதையா பிரதீப் சார்?

அறிஞர்
31-01-2007, 06:29 PM
ஏனெனில் எங்கள் வீட்டில் அம்மாவை நீ வா போ என்றுதான் அழைப்பேன். என்றாவது நீங்க வாங்க போங்க என்றால் எங்கம்மாவே ஏண்டா என்னமாச்சும் உடம்பு கிடம்பு சரியில்லையா? என்று டென்சன் ஆகிவிடுவார். :D
அம்மாவிடம் உரிமையோடு எப்பவும் பேசுவேன்.. கொஞ்சம் உரிமைக்குரல் குறந்தால் இதே டென்சன், கேள்விதான் எனக்கும்... B) B) B)

pradeepkt
01-02-2007, 05:22 AM
அருமையான கேள்வி.......... அதேசம்யம் தொடர்ந்து எழுதிக்கொண்டே போய்விட்டாலும் அது கவிதையா பிரதீப் சார்?
ம்ஹூம்...
மரபுக் கவிதை எழுதும்போதே விதிகளுக்குள் அத்தனை சுதந்திரம் இருக்கும்போது புதுக்கவிதை எழுதும்போது வானம்தான் எல்லை.

ஆயினும் கவிதைக்குரிய கருத்துச் செறிவே முக்கியம்... வடிவம் இரண்டாம் பட்சமே..

பிச்சி
03-02-2007, 04:09 PM
விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.

பிச்சி
03-02-2007, 04:10 PM
பருக்கையின்
பிளவுக்குள்ளே
பொத்தி வைக்கப்பட்டிருக்கும்
அரூப அன்பே
காரணமில்லா நட்பு

பிச்சி
03-02-2007, 04:11 PM
ஒரு கை மண்ணின்
எண்ணிலடங்கா துகள்களில்
ஒளிந்திருக்கும் காந்தமே
உலகத்தில்
உலாவும்
உன்னதமான நட்பு

பிச்சி
03-02-2007, 04:12 PM
தென்னங்காயைப் போல்
இளமையாயும்
தேங்காயைப் போல்
வலிமையாயும்
இளநீரைப் போல்
இனிமையாயும்
இருப்பதுவே
நட்பு

பிச்சி
03-02-2007, 04:12 PM
தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு

மதுரகன்
03-02-2007, 04:14 PM
நட்புக்கவிதைகளிலும் பிச்சு வாங்குகிறீர்கள் பிச்சி
பொறுங்கள் என் கவிதைகளையும் போட்டுவிடுகிறேன்...

மதுரகன்
03-02-2007, 04:19 PM
உங்களுக்காக அழுதே கண்கள் சோர்ந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை அழுதீர்கள்..

மதுரகன்
03-02-2007, 04:21 PM
உங்களுக்காக மகிழ்ந்திருந்தே இதயம் நிறைந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை இன்பம் தரித்தீர்கள்...

மதுரகன்
03-02-2007, 04:22 PM
உங்களுக்காக வாழ்ந்தே வாழ்க்கை சலித்தாலும்
எனக்காகவும் ஒருமுறை வாழ்ந்தீர்கள் தோழர்களே...

ஆதவா
03-02-2007, 05:06 PM
உங்களுக்காக வாழ்ந்தே வாழ்க்கை சலித்தாலும்
எனக்காகவும் ஒருமுறை வாழ்ந்தீர்கள் தோழர்களே...


உங்களுக்காக மகிழ்ந்திருந்தே இதயம் நிறைந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை இன்பம் தரித்தீர்கள்...


உங்களுக்காக அழுதே கண்கள் சோர்ந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை அழுதீர்கள்..

நண்பரே இது மூன்றையும் ஒன்றாக பதிந்திருக்கலாமே!!! நன்றாக இருந்திருக்கும்

மதுரகன்
04-02-2007, 05:19 PM
இது ஒரு சிம்பதி பிரேக் ஆதவா
அதுவும் அழகுதானே...

ஆதவா
04-02-2007, 05:20 PM
இது ஒரு சிம்பதி பிரேக் ஆதவா
அதுவும் அழகுதானே...

அதுவும் சரிதான்...

மன்மதன்
04-02-2007, 08:11 PM
உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

கன்னத்தில் முத்தமிட்டால் நட்பு இல்லை என்று ஏன் நினைக்கனும்.. ஆனாலும் கன்னத்தில் கை தானே இருக்கு. அந்த ஸ்பரிசத்தில் நட்பு இருக்கு.

மன்மதன்
04-02-2007, 08:13 PM
அதிரவைக்கும் பூப் பிரசவத்திற்கும்
அழகுபடுத்தும் வண்டொலிக்கும்
இடையில்
இழைந்தோடுமே
நட்பு

அழகு அழகு....

வண்டொலி என்பது வண்டோசை அல்லது ரீங்காரம் என்றிருக்க வேண்டுமோ??

மன்மதன்
04-02-2007, 08:14 PM
மகிழம்பூ வாசனை நெடியில்
தேன் கலந்த
இனிமையான துகள்களின்
ருசியே உனக்கும் எனக்கும்
உண்டான நட்பு

சொக்க வைக்கும் நட்பு.. கவிதை...

pradeepkt
05-02-2007, 11:01 AM
விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.
விழுது விழுதுங்கறீங்களா, விழலைங்கறீங்களான்னு புரியலை.

மற்றபடி விழாது என்பது இலக்கணப்படி சரியான பதம்!

விழுது தாங்கும்
ஆலமரத்தின் விழுப்பமே
விருப்பமான நட்பு!

இது எப்படி???

pradeepkt
05-02-2007, 11:02 AM
தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு
இங்கே உவமை எப்படி வருகிறது என்று தெரியவில்லை...
ஆயின் உங்கள் கருத்து உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! நம்பிக்கைதானே நட்புக்கு அச்சாணி?

பாராட்டுகள்.

pradeepkt
05-02-2007, 11:03 AM
அழகு அழகு....

வண்டொலி என்பது வண்டோசை அல்லது ரீங்காரம் என்றிருக்க வேண்டுமோ??
வண்டொலி என்பதை வண்மையான ஒலி என்றும் பொருள் கொள்ளலாம்... ஆயின் வண்டொலி ரீங்காரம்தானே... அது கவிதை அழகை எவ்விதத்திலும் மாற்றவில்லை என்பது இன்னும் அழகு!

பிச்சி
05-02-2007, 12:46 PM
அழகு அழகு....

வண்டொலி என்பது வண்டோசை அல்லது ரீங்காரம் என்றிருக்க வேண்டுமோ??

ஆமாம்... அது எல்லாரும் உபயோகம் செஞ்சுருக்கங்க. அதனாலதான் வண்டொலின்னு போட்டேன்.

பென்ஸ்
05-02-2007, 12:47 PM
ஆதவா...
உங்களுக்கு பணி பளு அதிகம் என்று அறிவேன்...
இருந்தாலும் , தினம் ஒரு கவிதையாவது கொடு...
ஒரு முறை சாப்பிடாமலும் இருந்திடுவேன்... ஆனால்
ஒருமுறையேனும் கவிதை வாசிக்காமல் முடியாது...

பிச்சி
05-02-2007, 12:48 PM
விழுது விழுதுங்கறீங்களா, விழலைங்கறீங்களான்னு புரியலை.

மற்றபடி விழாது என்பது இலக்கணப்படி சரியான பதம்!

விழுது தாங்கும்
ஆலமரத்தின் விழுப்பமே
விருப்பமான நட்பு!

இது எப்படி???

விழுது எப்போமே விழாது.. அதுமாதிரி நட்பும் எப்போதுமே விழாது... (பாதாளத்தில்னு கூட வைக்கலாம்)
உங்க கவிதை அழகா இருக்கு.. நிறைய எழுதலாம்தானே. ?

பிச்சி
05-02-2007, 12:50 PM
இங்கே உவமை எப்படி வருகிறது என்று தெரியவில்லை...
ஆயின் உங்கள் கருத்து உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை! நம்பிக்கைதானே நட்புக்கு அச்சாணி?

பாராட்டுகள்.

அட சும்மா வந்தது எழுதினேங்க. இது கற்பனைதான். தண்ணியில கல்ல போட்ட கலங்குமா இல்லியா? ஆனா நட்புங்கற தண்ணீயில கல்லுங்குற பிரச்சனைகளோ துன்பங்களோ இன்னபிறவோ போட்ட கலங்காம நிக்கும்..

பென்ஸ்
05-02-2007, 01:02 PM
பிச்சி....
குழந்தாய்...

கவிதைகள் அருமை... உணர்ச்சிபூர்வமான கவிதைகள்...
*********/
விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.
*********/
விழுந்தாலும் , தாங்கி கொள்ளதானே...
********/
தெள்ளிய நீரினில்
பாறாங் கல்லைப் போட்டாலும்
கலங்காமல் இருக்கும்
உண்மையான நட்பு
********/

நீர் தெளிந்து இருந்தாலும்...
அழுக்கு படிமங்களாய்.. கீழே தங்கி, தங்கி...
என்றோ ஒரு நாள் சந்தேக கல் விழ ...
எல்லாம் கலங்கி போகும்...

பிச்சி.. கவணித்திருக்கிறாயா..
ஓட்டத்தில் இருக்கும் நீர் மட்டுமே, சிறிது கலஙினாலும்,
உடனே தெழிந்து மீண்டும் புதிதாய்...
மாற்றத்தை எற்று...

நாமும் மாற்றத்தோடு வாழும் போது கலங்காமல்....

வாழ்க்கை நீர் ஓட்டத்தில்...
நட்பு, ஓடையாய்..
முட்டி .. மோதி..
ஒலி எழுப்பி...
வளந்து..
சாடி.. ஓடி...
இளமையாய்...

நித்திய கடலில் கரையும் போது...
அடங்கி போயிருக்கும்...
அப்போதும் நினைவேனும் நெல்லி கடித்து , நீரை சுவைக்கும் போதும்...

உன் கவிதைகளை போலவே சுவையாய்...

pradeepkt
05-02-2007, 01:06 PM
விழுது எப்போமே விழாது.. அதுமாதிரி நட்பும் எப்போதுமே விழாது... (பாதாளத்தில்னு கூட வைக்கலாம்)
உங்க கவிதை அழகா இருக்கு.. நிறைய எழுதலாம்தானே. ?
எழுதலாம் எழுதலாம்...
எழுத சூழலும் இல்லை இப்ப வார்த்தைகளும் இல்லை. எனக்கும் எழுதிப் பழக வேண்டும் என்ற ஆவல் உண்டு. உங்கள் கவிதைகள் கண்டு மகிழ்வதோடு சரி.

பிச்சி
05-02-2007, 01:12 PM
பெஞ்சமின் அண்ணா!!! (குழந்தை ஆக்கிட்டீங்க :) ) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை மாதிரி இருக்கு... நான் டைமுக்குதான் எழுதினேன். அது நல்லா இருக்கவும் போட்டுட்டேன். நீங்க சொன்னது கூட அருமையா இருக்கு யோசிக்க வைக்குது.

பிச்சி
05-02-2007, 01:12 PM
எழுதலாம் எழுதலாம்...
எழுத சூழலும் இல்லை இப்ப வார்த்தைகளும் இல்லை. எனக்கும் எழுதிப் பழக வேண்டும் என்ற ஆவல் உண்டு. உங்கள் கவிதைகள் கண்டு மகிழ்வதோடு சரி.

நீங்க நினைச்சா உண்டுதானே!

பிச்சி
05-02-2007, 01:17 PM
விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

பிச்சி
05-02-2007, 01:18 PM
கருவிழி வளையங்களின்
பார்வைக் கணைகளைத்
தாங்கித் தாங்கியே ஆனாலும்
நெஞ்சு நிமிர்ந்து
நடக்கிறது
என் காதலை மீறிய நட்பு.

பிச்சி
05-02-2007, 01:20 PM
நெருக்கமான ரேகைகளைப் போல்
பிணைப்பே
உண்மையான நட்பு

பிச்சி
05-02-2007, 01:21 PM
மிஞ்சத் தூண்டுதா நட்பு?
கெஞ்சத் தோன்றுதா நட்பு?
வஞ்சத்தை எறியுமே நட்பு
நெஞ்சத் தகநக நட்பு

நல்லா இருக்கா? பிழையில்லையே?

பென்ஸ்
05-02-2007, 01:26 PM
விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு


குழந்தை... (படத்தில் இருப்பதால் மட்டும் அல்ல)

கவிதையை விளக்கலாமா???

பிச்சி
05-02-2007, 01:28 PM
ஏதாவது ஒரு மரத்தின்
நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு
முல்லைக் கதைகள் பேசி,
கைகோர்த்து, இலைகளை உதிர்த்து
பூக்களை சபித்து,
பிழை கருதி நெருக்கமின்றி
மரப்பட்டைகளை உரித்தவாறு
கணைகளை நீக்கி
என் விழிகளின் வழி
என் உள்ளம் சென்று
காணுவாய்!

உன் உயிர் அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
மீண்டும் வந்துவிட்டு என்னோடு பேசுவாய்
கை கோர்ப்பாய்!
உள்ளத்தில் என்றென்றும் உன்னை
தூக்கத்திலேயே வைத்திருக்கிறேன்,,, நண்பா!
விழித்துவிட்டால் இதயத்தை நோண்டுவாய் என்று!!!

பிச்சி
05-02-2007, 01:31 PM
குழந்தை... (படத்தில் இருப்பதால் மட்டும் அல்ல)

கவிதையை விளக்கலாமா???

அதுவும் சரிதான். நான் இப்போ கூட குழந்தைதான்.

விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

இது காதலா அல்லது நட்பா என்ற கவிதை! இமைகளின் படபடப்பில் விழி ரேகைகளின் இடையில் சிக்கி இவர்கள் காதலிக்கிறாங்களா இல்லை நண்பர்களா என்று தவிக்கிறது.

மனோஜ்
05-02-2007, 02:37 PM
பிச்சி அவர்களே நட்பின் வாசனையை மன்றத்தில் படறவிடுவதற்காக நன்றி

மயூ
05-02-2007, 04:02 PM
அதுவும் சரிதான். நான் இப்போ கூட குழந்தைதான்.

விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

இது காதலா அல்லது நட்பா என்ற கவிதை! இமைகளின் படபடப்பில் விழி ரேகைகளின் இடையில் சிக்கி இவர்கள் காதலிக்கிறாங்களா இல்லை நண்பர்களா என்று தவிக்கிறது.
நிஜமான கவிதை! ;)

பிச்சி
06-02-2007, 01:28 PM
மிக்க நன்றி. மயூரேசன் அவர்களுக்கு..

அறிஞர்
06-02-2007, 01:32 PM
மிஞ்சத் தூண்டுதா நட்பு?
கெஞ்சத் தோன்றுதா நட்பு?
வஞ்சத்தை எறியுமே நட்பு
நெஞ்சத் தகநக நட்பு

நல்லா இருக்கா? பிழையில்லையே?
குறள் போல் உள்ள கவிதை... அருமை பிச்சி.....

அறிஞர்
06-02-2007, 01:33 PM
உன் உயிர் அங்கே தூங்கிக் கொண்டிருக்கும்
மீண்டும் வந்துவிட்டு என்னோடு பேசுவாய்
கை கோர்ப்பாய்!
உள்ளத்தில் என்றென்றும் உன்னை
தூக்கத்திலேயே வைத்திருக்கிறேன்,,, நண்பா!
விழித்துவிட்டால் இதயத்தை நோண்டுவாய் என்று!!!
உள்ளத்தின் வைத்திருக்கும் நண்பனின் நட்பு என்றும் தொடரட்டும்...

அறிஞர்
06-02-2007, 01:35 PM
விழி ரேகைகளின்
மெல்லிய இடைவெளியில்
நம் இமைகளின் படபடப்பில்
வீழ்ந்து தவிக்கிறது
நட்பு

இது காதலா அல்லது நட்பா என்ற கவிதை! இமைகளின் படபடப்பில் விழி ரேகைகளின் இடையில் சிக்கி இவர்கள் காதலிக்கிறாங்களா இல்லை நண்பர்களா என்று தவிக்கிறது.
நட்பை விட காதலில் தவிப்பு அதிகம்.....

இரண்டுக்கும் வேற்றுமை காண்பது சற்று அரிதுதான்..

maganesh
06-02-2007, 01:36 PM
எது நட்பு
நானும் நீயும்
சந்தேகத்தோடு
கட்டிக்கொள்வதா
புரிந்துகொண்டு
என்னை நீயும்
உன்னை நானும்
வெட்டிக்கொல்வதா?

பிச்சி
06-02-2007, 01:43 PM
அறிஞர் அவர்களுக்கு மிக்க நன்றி

பிச்சி
06-02-2007, 01:43 PM
எது நட்பு
நானும் நீயும்
சந்தேகத்தோடு
கட்டிக்கொள்வதா
புரிந்துகொண்டு
வெட்டிக்கொள்(ல்)வதா?

இதோட கருத்து எனக்கு விளங்கல..

maganesh
06-02-2007, 01:48 PM
எது நட்பு
நானும் நீயும்
சந்தேகத்தோடு
கட்டிக்கொள்வதா
புரிந்துகொண்டு
என்னை நீயும்
உன்னை நானும்
வெட்டிக்கொல்வதா?
தமிழின் உறவே இப்போது புரிகிறதா

பிச்சி
06-02-2007, 01:53 PM
அதரத்தின் பாஷைகள்
அறியாமல் போனதினால்
அறியாமல்
ஆழத்தோண்டுகிறாய்
அன்புக் கிணறு.
அன்பு நண்பனே!
அகழி என்று வெட்டுவது சரிதான்
அது நீர்க்குமிழிதான்...
அன்றி, வெட்டுவது நிறுத்து.
அன்பை நட்பாலே போதும் பொருத்து...

பிச்சி
06-02-2007, 01:56 PM
வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?

பிச்சி
06-02-2007, 01:59 PM
தமிழின் உறவே இப்போது புரிகிறதா

புரியாத பேதை நான்... சொற்களாலே விளக்குங்கள் பிளீஸ்

pradeepkt
07-02-2007, 04:32 AM
எது நட்பு
நானும் நீயும்
சந்தேகத்தோடு
கட்டிக்கொள்வதா
புரிந்துகொண்டு
என்னை நீயும்
உன்னை நானும்
வெட்டிக்கொல்வதா?
கட்டிக் கொள்வதிலும்
வெட்டிக் கொல்வதிலும்
இல்லை நட்பு
மற்றோர்
உள்ளங்களை உள்ளுவதில்
உள்ளதே நட்பு!!!

சே-தாசன்
07-02-2007, 05:11 AM
நண்பர்களே!! காதல் கவிதைகளுக்கு ஈடாக நட்புக் கவிதைகளும் எழுதலாம்.. நட்பு காதலை விட புனிதம். நட்பிலிருந்து காதல் போவதைவிட காதலில் நட்பிருந்தால் அது அதிபுனிதம்.... என் தோழி ஒருத்திக்காக நான் எழுதிய நட்புக் கவிதைகள் இங்கே இடுகிறேன்.. உங்களிடம் இருந்தாலும் இடுங்கள்....

உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

போட்டு தாக்கீட்டீங்க தலீவா. அண்ணாத்த இன்னும் எழுது.

பிச்சி
07-02-2007, 12:40 PM
கட்டிக் கொள்வதிலும்
வெட்டிக் கொல்வதிலும்
இல்லை நட்பு
மற்றோர்
உள்ளங்களை உள்ளுவதில்
உள்ளதே நட்பு!!!

ஆம்...ஆமாமாமாஅம...

அறிஞர்
07-02-2007, 12:59 PM
கட்டிக் கொள்வதிலும்
வெட்டிக் கொல்வதிலும்
இல்லை நட்பு
மற்றோர்
உள்ளங்களை உள்ளுவதில்
உள்ளதே நட்பு!!!
கவிஞர் பிரதீப்பின் வரிகள் அருமை...

அறிஞர்
07-02-2007, 01:02 PM
வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?

என்ன சொல்ல வரீங்க பிச்சி...
"போய் வருகிறேன்" என்றது கவிஞனின் பொய் போன்ற வார்த்தையா...

pradeepkt
08-02-2007, 06:05 AM
கவிஞர் பிரதீப்பின் வரிகள் அருமை...
என்னை வச்சுக் காமெடி கீமெடி பண்ணலையே??? :rolleyes:

பிச்சி
08-02-2007, 01:17 PM
என்ன சொல்ல வரீங்க பிச்சி...
"போய் வருகிறேன்" என்றது கவிஞனின் பொய் போன்ற வார்த்தையா...

வெகுதொலைவில் எங்கோ
சென்றுகொண்டிருக்கும்
எந்தன் பூவின் வாசனை நுகர்ந்து
என் காதருகே சொல்கிறாய்
"போய் வருகிறேன் தோழி!!!"

கவிதை எழுதத்தெரியாது என்று
கவிஞனின் பொய்யாய் பொய்கிறாய்
ஒரு வரியில் சொன்னது என்னவாம்?

நேரடிக்கருத்தாக: கவிதை எழுதத் தெரியாது என்று சொன்ன என் கவிஞனான நண்பன், என் பூவின் வாசனையை நுகர்ந்து " போய் வருகிறேன் தோழி" என்று சொன்ன வரிகளே எனக்குக் கவிதையாகத் தோன்றுகிறது... தமிழில் ஒரு வரி எழுதப்பட்டாலே அது கவிதைதானே? அதனால்தான் அப்படி எழுதினேன். தப்பாய் இருந்தால் மன்னிக்கவும்

பிச்சி
28-02-2007, 02:31 PM
சக்கரத்தின் கம்பிகளில்
தொங்கிக்கொண்டு சுழலும்
உன்னை என் நட்பென்ற
சுழியாலே காத்திடுவேன்..
நீ சிரித்திடுவாய்..

பிச்சி
28-02-2007, 02:32 PM
ரசத்தின் காரம் மிகும்போது
சிரம் தட்டுவாய் நண்பனே!
அந்த அதிர்ந்த ஒலியிலும்
கலந்து இருப்பேன் நட்பாக...

பிச்சி
28-02-2007, 02:34 PM
நீ அள்ளிய மணற்துகள்களிலும்
பருகிய நீர் நிலைகளிலும்
நெகிழ்ந்த நெருப்புக் கனலிலும்
ஆகாயத்தின் பிரவேசத்திலும்
கலந்து இருப்பேன் உன் தோழியாக...

பிச்சி
28-02-2007, 02:35 PM
நெருக்கமான இலைகளின் மத்தியில்
அமர்ந்து ஆடிக் காற்றில்
ஆனந்தமாய் ஆடும் தெய்வீகம்
உனக்கும் எனக்குமான நட்பு

பிச்சி
28-02-2007, 02:36 PM
ஒரு தள்ளாட்டத்தில்
உன் கைகளைப் பற்றி
ஊன்றுகோலாய் உன் கால்களாய் மாறும்
என் நிலையா உண்மையான நட்பு
என்று சொல்கிறாய்?....

பிச்சி
28-02-2007, 02:37 PM
நவீன ஓவியத்தின் தந்தையும்
குழம்பும் நவீன ஓவியம்
நன் நவீன நட்பு..

பிச்சி
28-02-2007, 02:41 PM
ஓர் நட்புக் குடுவையில்
ஹைட்ரஜனாக மிதக்கிறேன்..
நீ இல்லாவிடில் பறந்திருப்பேன்
ஒரு பலூனாக...

pradeepkt
01-03-2007, 03:34 AM
என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே...

மனோஜ்
01-03-2007, 06:54 AM
நட்பின் பிறிவை கூறுகிறீர்களா பிச்சி அவர்களே
பிரதிப்புக்கு புரியலையாம் கொஞ்சம் விளக்கம் குடுங்க....

pradeepkt
01-03-2007, 09:41 AM
நட்பின் பிறிவை கூறுகிறீர்களா பிச்சி அவர்களே
பிரதிப்புக்கு புரியலையாம் கொஞ்சம் விளக்கம் குடுங்க....
ஏன் உங்களுக்குப் புரிஞ்சா நீங்கதான் சொல்லுங்களேன்...
எப்பவுமே மக்கள் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்டே பழகிப் போயிட்டீங்க :D

ஷீ-நிசி
01-03-2007, 09:44 AM
ஏன் உங்களுக்குப் புரிஞ்சா நீங்கதான் சொல்லுங்களேன்...
எப்பவுமே மக்கள் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்டே பழகிப் போயிட்டீங்க :D

அப்பத்தான நம்ம இலைக்கு கொஞ்சமாவது கிடைக்கும்... :rolleyes: :rolleyes:

பிச்சி
02-03-2007, 11:45 AM
என்ன சொல்ல வரீங்கன்னு புரியலையே...

நான் நட்பை பத்தி எழுதி இருக்கிறேன். நீங்க எந்த வரிகள் கேக்குறீங்க?:confused:

பிச்சி
02-03-2007, 01:04 PM
தோட்டத்தில் இரைத்துவிட்ட
பூக்களாய் என் நட்பு இரைந்துகிடக்கிறது.
ஒவ்வொன்றாய் எடுத்து
உன் இதயத்தில் பொருத்து.
இறுதி வரும் முன்னே
மீண்டும் இரைக்கச் சொல்வேன்
நட்பென்ற மரத்தை..

பிச்சி
02-03-2007, 01:06 PM
விண்ணில் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறாய்
ஏதாவது ஒரு நட்சத்திரமாக
ஒவ்வொன்றாக துலாவுகிறேன்
நீ எங்கே என்று.
நான் ஒரு பைத்தியக்காரி..
என் பின்னே நீ வால்நட்சத்திரமாய்
சுற்றுவதை அறியாமல் போகிறேனே!

பிச்சி
02-03-2007, 01:11 PM
தேனில் குழைத்த ஒரு மயிலிறகின்
இழைகளை நீ தந்த மாத்திரம்
என் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருப்பேன்
ஒவ்வொருமுறையும் திறக்கும் போது
நெடியுடன் உன் நினைவும் தாலாட்டும்..

பிச்சி
02-03-2007, 01:15 PM
உடைந்து போன குயில்
உன்னை அழைத்து பாட சொல்கிறதா?
தனக்குரிய தனிச்சிறப்பை கொக்கு
தவிக்கவிட்டு உன்னிடம் தேடுகிறதா?
நொடிந்துபோன மயில்
உன்னை அழைத்து ஆடச் சொல்கிறதா?
என்னை மட்டுமே நினை!
நட்பின் சிறப்பும் அதுதான்.

பிச்சி
02-03-2007, 01:18 PM
மேகங்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் தோழனா?
மின்னல்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் காதலனா?
இடியும் மழையும் இணைந்து கேட்டது
அவன் உன் கணவனா?
என்னிடம் வார்த்தை இல்லை
இந்த ஜடங்களுக்கு பதில்சொல்ல...

பென்ஸ்
02-03-2007, 02:07 PM
குழந்தை...

வேகு நாட்களுக்கு பிறகு கவிதை வாசிப்பதால் எனக்கு கவிதை நயம் புரிய வில்லையா...
இல்லை லயிக்க முடியவில்லையா...
இல்லை புரியவில்லையா????

கவிதைகள் பல பொருள் கொடுப்பதாக இருக்கும் போது அழகு...
ஆனால் உன் கவிதைகளில் ஒரு பொருளும் எடுத்து கொள்ளமுடியவில்லையே குழந்தை...

இங்கு 91வது பதிவில் வந்திருக்கும் கவிதை..
எழிதாக தோன்றியது, நட்பை பற்றி எந்த நாதாரி எது பேசினாலும் நமக்கேன்ன ...
ஜடங்களுக்கு விளக்கமளித்து ஒன்றும் நடக்க போவதில்லை...

ஆனால்...
பதிவு என் 90, 89, போன்ற கவிதைகள் என்ன சொல்லுகிறது என்று எனக்கு தெரியலையேமாமா....!!!!

பதிவு 88 அழகு....
நண்பன் எப்பவும் அப்படிதான்....
கோடிகளின் மத்தில் எதோ ஒரு கோடியில் ஒளிந்து இருந்தாலும் கண்டு பிடிக்க பட்டு விடுவான்....

பதிவு 87ஐ பார்... கடைசி வரியில் ஏதோ மற்றம் தேவை படுது...
(முதல் வரியில் நட்பை பூவாக சொல்லிவிட்டு) சரியான பொருளை தர மறுக்குது அல்லது கவிதையின் சுகத்தையே கேடுக்குது...

கவிதை பதிவு 81...
அடைக்க படுவது நட்பிற்கு அழகு இல்லையே குழந்தை...
ஆனால் கவிதை அழகு...

அறிஞர்
02-03-2007, 02:14 PM
மேகங்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் தோழனா?
மின்னல்கள் என்னிடம் கேட்டன
அவன் உன் காதலனா?
இடியும் மழையும் இணைந்து கேட்டது
அவன் உன் கணவனா?
என்னிடம் வார்த்தை இல்லை
இந்த ஜடங்களுக்கு பதில்சொல்ல...



இங்கு 91வது பதிவில் வந்திருக்கும் கவிதை..
எளிதாக தோன்றியது, நட்பை பற்றி எந்த நாதாரி எது பேசினாலும் நமக்கென்ன ...
ஜடங்களுக்கு விளக்கமளித்து ஒன்றும் நடக்க போவதில்லை...
...
உள்ளே ஒன்றை வைத்து
வெளியே ஒன்றை பேசும்
உலகில்......
ஜடங்களின் சிந்தனையும் இப்படியா....

பென்ஸு சொல்வது போல் இவைகளுக்கு விளக்கமளித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

பிச்சி
03-03-2007, 03:27 PM
தேனில் குழைத்த ஒரு மயிலிறகின்
இழைகளை நீ தந்த மாத்திரம்
என் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருப்பேன்
ஒவ்வொருமுறையும் திறக்கும் போது
நெடியுடன் உன் நினைவும் தாலாட்டும்..

என் நண்பன் எனக்கு படிப்பதற்காக கொடுத்த மயிலிறகை என் புத்தகத்தில் வைத்திருக்கிறேன். அதௌ திறக்கும் போது அவன் நினைவு வந்து அலைமோதும்..


உடைந்து போன குயில்
உன்னை அழைத்து பாட சொல்கிறதா?
தனக்குரிய தனிச்சிறப்பை கொக்கு
தவிக்கவிட்டு உன்னிடம் தேடுகிறதா?
நொடிந்துபோன மயில்
உன்னை அழைத்து ஆடச் சொல்கிறதா?
என்னை மட்டுமே நினை!
நட்பின் சிறப்பும் அதுதான்.


உடைந்து போன குயில்
நொண்டியாக நிற்கும் கொக்கு
நொடிந்துபோன மயில்

குறையுள்ள இவைகளும் உன்னை ஆட பாட சொல்கிறதா? என்னை மட்டுமே நினை போதும்.. இவைகளின் குரலுக்கு செவிமடுக்காதே!!
நட்பின் சின்றப்பு அதுதான்.

பிச்சி
03-03-2007, 03:29 PM
தோட்டத்தில் இரைத்துவிட்ட
பூக்களாய் என் நட்பு இரைந்துகிடக்கிறது.
ஒவ்வொன்றாய் எடுத்து
உன் இதயத்தில் பொருத்து.
இறுதி வரும் முன்னே
மீண்டும் இரைக்கச் சொல்வேன்
நட்பென்ற மரத்தை..


ஆம் அண்ணா! நீங்க சொல்றவது மாதிரி ஏதோ ஒன்று விடுபட்ட தோற்றம்..

பிச்சி
03-03-2007, 03:32 PM
ஓர் நட்புக் குடுவையில்
ஹைட்ரஜனாக மிதக்கிறேன்..
நீ இல்லாவிடில் பறந்திருப்பேன்
ஒரு பலூனாக...

ஒ நட்புக் குடுவை... இந்த உலகம் அலது நட்பென்ற உலகம்
நீ மட்டும் இல்லையென்றால் இந்த உலகத்தை விட்டு பறந்து போயிருப்பேன். ஒரு சாதாரன பலூன் போல.

அண்னா என் கவிதை அனைத்தையும் படித்து இருக்கீக. அங்கங்கே என்னால் முயன்ற அளவு விளக்கம் கொடுத்துவிட்டேன்.. சில கவிதைகள தவறு இருக்க்கிறது.. கூடுமானவரை தவறு நீக்கப் பார்க்கிறேன்...

பிச்சி
08-03-2007, 01:16 PM
கைகளின் அணைப்பில்
ஊடுறுவிச் செல்லுகிறது
உன் மனதின் எண்ணங்களும்
என் மனதின் வண்ணங்களும்
நட்பு என்ற நரம்புப் பாதையில்.

பிச்சி
08-03-2007, 01:30 PM
இயற்கையின்
எழிலும் வெட்கித்
தோற்கும் படி
அமைந்துவிடுகிறது
இயற்கையை மீறிய
நமது நட்பு

pradeepkt
09-03-2007, 04:13 AM
கைகளின் அணைப்பில்
ஊடு(று)ருவிச் செல்லுகிறது
உன் மனதின் எண்ணங்களும்
என் மனதின் வண்ணங்களும்
நட்பு என்ற நரம்புப் பாதையில்.
எண்ணங்களும்
வண்ணங்களும்
கலப்பதே ஓவியம்

ஓவியனின் எண்ணம் தனியாக இருந்தாலும் அவன் உபயோகிக்கும் வண்ணம் தனியாக இருந்தாலும் ஒரு கை ஓசையே! கலப்பதினால் வரும் ஓவியம், காவியம்!

இன்னும் எழுதுங்கள்.

பிச்சி
12-03-2007, 01:44 PM
நன்றி அண்ணா!

அறிஞர்
12-03-2007, 02:24 PM
இயற்கையின்
எழிலும் வெட்கித்
தோற்கும் படி
அமைந்துவிடுகிறது
இயற்கையை மீறிய
நமது நட்பு
நல்ல நட்பிற்கு... முன்
அனைத்திற்கும் தோல்விதான்....

அருமை பிச்சி.. தொடருங்கள்.

பிச்சி
15-03-2007, 02:56 PM
மிகவும் நன்றிங்க அறிஞர் அண்ணா!

பிச்சி
15-03-2007, 03:00 PM
காலம் மண்டியிட்டு
வணங்கி,
உன்னிடம் கெஞ்சுகிறதா
நம் நட்பின் மேன்மையை?

பிச்சி
15-03-2007, 03:03 PM
ஒரு கண்ணில் அன்பும்
மறு கண்ணில் தாய்மையும்
வைத்துக்கொண்டு அலைகிறது
நம் இரு இதயங்கள்

பிச்சி
15-03-2007, 03:04 PM
சிறகுகள் ஒடுக்கப்பட்ட
நிலையிலும் இளைபாற பூக்கள் உண்டு
பூக்களை புதிதாக்க
வண்டுகளின் புன்னகையும் உண்டு..

பிச்சி
15-03-2007, 03:06 PM
நீ
மேன்மையின் அதிசயம்
உச்சத்தின் ஆரோக்கியம்
வாழ்வுக்காக கூக்குரலிடும்
ஆன்மாவின் ஒலிப்பேழை
கிட்ட நெருங்கமுடியும்
பகலவனின் பருக்கள்

பிச்சி
15-03-2007, 03:25 PM
நண்பனே!
சிதறப்பட்ட மலர்களின்
விதைகளில் எல்லாம்
ஒளிந்து காணப்படுகிறாய்
சற்று வெளியே வா!
உனக்காக பூந்தோட்டம்
அமைத்திருக்கிறேன்
இந்த மலர்களை வைத்து...

poo
16-03-2007, 06:03 AM
பல பக்கங்கள் தாண்டிவிட்டபடியால்..தொட்டுப்படிக்கவும்.. தொடர்ந்து வரவும் சிறு தயக்கம்..

படித்தமட்டில் பரவசம்..

விதைபோட்ட ஆதவனுக்கும்.. தொடர்ந்து பராமரிக்கும் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்..

இளசு
17-03-2007, 12:52 AM
நட்பை ஆராதிக்கும் வாசனை வரிகளை
வாரி வழங்கும் பிச்சிக்கு நட்பான வாழ்த்துகள்..

நெருங்க முடியும் சூரியப்பரு..
விதையாய் ஒளிந்த நண்பனின் திறமைகள்..

நல்ல நட்பு... ஒரு வரம்.. வாய்க்க வேண்டும்..

ஆராதனைகள் தொடரட்டும்..

ஆதவா
18-03-2007, 08:26 AM
நட்பு என்ற கவிதை திரி ஆரம்பித்து வைத்துவிட்டு கவிதைகள் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனவந்தான்... இப்போதுதான் வருகிறேன்.. மன்னிக்க மக்களே!

பல கவிதைகள் கொடுத்த பிச்சியை பாராட்ட முடியாமல் தவிக்கிறேன் :icon_03: .

இடையிடையே கவி பல கொடுத்த மதுரகன், ஷீ மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றி எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.. :food-smiley-011:

சரி.. இனி நான்..........

என் தோழி ஒருத்திக்காக நான் எழுதிய கவிதைகளை இங்கே படரவிடுகிறேன். எல்லாமே SMS மூலமாக அனுப்பியதுதான். அதனால் பதிலும் இருக்கும்.. இரண்டையும் இணைத்து படிக்கவும்..
என் கவிதை பச்சை வண்ணத்திலும் அவள் பதில் கத்திரி வண்ணத்திலும் இருக்கும்

சுமார் ஒருவார காலம் என்னிடம் அவள் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட கோபத்தில் நான் அனுப்பிய குறுஞ்செய்தி.

நீ என் மேல்
கோபப்பட்டுள்ளாய்

அன்புக்கு நிகரானது
கோபம்
வம்புக்கு புதிரானது
அல்ல
என் மீது உள்ள கோபம்
உண்மை என்றால்
என்னை
எரித்து விடு; அல்லது
எறிந்து விடு.

என்னாச்சு சூர்யா?

பதில்கள் இல்லையடி
உன்னிடம் சிலநாள்
விதிகள் விளையாடுது
என்னிடம் அதனால்
நியாயமற்ற உன் கோபம்
எனக்கு கண்ணீர் வரவைக்கும்
பாவமற்ற எனகும்
உயிரையே மறைவிக்கும்
உன் கோபம்தான் தீருமா?

சூர்யா உன் மேல கோபமே இல்லப்பா! ஒரு வாரம் பேசலைன்னா பொறுத்துக்க மாட்டியா?

பார்வை அறியாமல்
நட்பு கொண்டேன்
உன்னோடு
கோர்வை தெரியாமல்
வார்த்தை கொண்டேன்
நட்போடு
சூர்யாவை கோபமுறுவதில்
என்ன நியாயம்?
சூரியனைக் காணாமல்
இருக்கமுடியுமா நாளும்?

கவிதை நல்லா இருக்குடா! எக்ஸாம் இருந்தனால பேசலடா நாளைக்கு கூப்பிடறேன். இன்னிக்கு வேண்டாம். அப்பா இருக்கார்.

விதைகள் கூட
முட்டி மோதிவருகிறது
மண்ணோடு
என்னால் முட்டி
வாதிட முடியவில்லை
பெண்ணோடு
மண்ணும் பெண்ணும்
ஒன்றல்ல
நீயும் நானும் வேறல்ல

உனக்கு ஏதோ ஆச்சு. இருந்தாலும் பரவால்ல. கவிதை அனுப்பு. என் காலேஜ்ல உன் கவிதைய சொன்னேன்பா சூப்பர்ப் னு சொன்னாங்க தெரியுமா? நாளைக்கு கூப்பிடறேண்டா இப்போ போய் தூங்கு.

மறைமுக கண்கள்
என் கண் எதிரே
தோன்றுகின்றன
பிறைமுக நீயோ
என் கேள்விக்கு
பதில் சொல்லவில்லை
கால விரயம் ஆவது
என்றும் புதிதல்ல
ரெண்டு நாளும் பேசாதிருப்பது
புதிதுதானே?

சரி கேள்வி என்னன்னு சொல்லு. உனக்கு இன்னிக்கு என்னமோ ஆச்சு. இப்டி மழையாட்டம் கொட்டற. எனக்கு எவ்வ்ளோ பிரச்சனை தெரியுமா?

தடங்கல்கள் வந்தால்
என்னை நினை
தடங்கல்கள் விழுந்தால்
என்னை நினைக்காதே
இன்று நினைத்துள்ளாய்
போகட்டும் - இப்போது
கன்று தவிக்குதடி அது
சாகட்டும்?

ஏதோ வம்பிழுக்கறதுக்காகத்தாண்டா கவிதை எழுதுற. ராதி அப்பாட்ட மாட்டிக்கிட்டா. எவனோ போன் பண்ணீ போட்டு கொடுத்துட்டான். இந்த பிரச்சனைக்கு நடுவுல நீவேற கோபம் னு மெஸேஜ் கொடுக்கர

கண்கள் சொக்கிவிட்டன
காட்சிகள் மறைந்துவிட்டன
நேரம் விரைந்துவிட்டன
நெஞ்சம் கரையவில்லை
உனக்கு...

ப்ளீஸ் .. செல்லம். எனக்கு தூக்கம் வருது. உன் மேல கோபம் எதுவுமில்லை. நாளைக்குத்தான் இனி... குட்நைட்...TC :062802sleep_prv:

ஹி ஹி... மீதி நாமும் நாளைக்கு பார்க்கலாமே! :musik010:

ஷீ-நிசி
18-03-2007, 10:19 AM
ஆதவா... சூப்பரா இருக்கு....கவிதைகள்...

ஆதவா
19-03-2007, 05:27 PM
ஆதவா... சூப்பரா இருக்கு....கவிதைகள்...

நன்றிங்க ஷீ! இன்னும் இருக்கு......... அது ஒரு தொடர்காவியம்.... :D

ஆதவா
19-04-2007, 08:50 AM
ஓவியரே! அன்பு ரசிகரே!!! இங்கயும் வந்து எட்டிப் போங்கள்....

slgirl
19-04-2007, 10:30 AM
நட்பு பூந்தோட்டத்தில் கவிதைகள் அனைத்தும் நட்பு பேசுகின்றது

அருமை தோழர்களே அனைத்து நட்பு கவிகளும்

ஆதவா
பிச்சி
மயூரேசன்
நிசி
பிரதீப்
அறிஞர்

அனைவரின் எழுத்துக்களும் நட்பு பேசுகின்றன நட்பு கவித்திரியில்

அன்புரசிகன்
19-04-2007, 10:48 AM
ஓவியரே! அன்பு ரசிகரே!!! இங்கயும் வந்து எட்டிப் போங்கள்....

வந்துட்டேன்.

ஆனாலும் தலையை ரொம்ப பிய்க்க வேண்டியுள்ளது. சிதம்பர சக்கரத்தை பார்த்தது போல். படைப்புகளை குறைசொல்லவில்லை. (எனதறிவு அந்தளவே) புரிந்தால் நிச்சயம் பின்னூட்டம் இடுவேன். அழைத்ததற்கு நன்றிகள்.

ஆதவா
19-04-2007, 10:53 AM
அப்படியே உங்க கவிதையையும் எடுத்து விடுங்க.....

ஆதவா
19-04-2007, 10:55 AM
அட!! இங்க நான் பதித்தது ரொம்பவே குறைவுங்க அன்பு!! பாதிக்கும் மேல பிச்சி மேடம் தான் பதிஞ்சிருக்காங்க... படியுங்க....

அறிவு நாம் வளர்த்துவதுதான்..... கமான்...

ஓவியன்
21-04-2007, 12:48 PM
ஓவியரே! அன்பு ரசிகரே!!! இங்கயும் வந்து எட்டிப் போங்கள்....

அடடே இப்படி ஒரு பதிவா?
இன்றுதான் என் கண்களில் பட்டது ஆதவா!!
ஒவ்வொன்றாக வாசிக்க கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறதே!

ஓவியன்
21-04-2007, 12:56 PM
உனக்கென ஆயுள் முடிந்துவிட்டது;
எனக்கும்தான்.
இருவரும் சொர்க்கத்தில்.
உன் கன்னத்தில் என் கைகள்
என் கன்னத்தில் உன் கைகள்
நினைக்கிறார்கள் முத்தமிடுவோமென்று
நட்புக்கென்றுதான் சந்தேகத் தீர்வோ?

ஆண்-பெண் நட்பை கையிலெடுத்துக் கருவாக்கி இருக்கின்றீர்கள். என்னதான் தூய்மையாக நாம் நட்பை பேணி வந்தாலும் சமூதாயம் பொதுவாக இந்த நட்பை சந்தேகக் கண்ணோடு பார்ப்பது தான் கொடுமை.

ஆனால் என்ன தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டுமென நாம் நட்பிலே கண்ணாக இருப்பதே மேல்.

ஓவியன்
21-04-2007, 01:03 PM
விழுதினைப் போல
விழுகாது இருக்கும்
விருப்பமான நட்பு.

பிச்சி நட்புக் கவிதையிலே பிச்சு உதறி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

சுட்டிபையன்
21-04-2007, 01:04 PM
கவிதைகள் எல்லாம் அழகு
உங்கள் நட்பு பூந்தோட்டத்தில்
என் செடிகளும் பூ பூக்க
அனுமதிப்பீர்களா........?

ஓவியன்
22-04-2007, 04:09 AM
உங்களுக்காக அழுதே கண்கள் சோர்ந்திருந்தாலும்
எனக்காகவும் ஒருமுறை அழுதீர்கள்..

மதுரகா அருமையான வரிகளில் அழகாக உணர்வுகளைக் கோர்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.

ஓவியன்
22-04-2007, 04:16 AM
ஓர் நட்புக் குடுவையில்
ஹைட்ரஜனாக மிதக்கிறேன்..
நீ இல்லாவிடில் பறந்திருப்பேன்
ஒரு பலூனாக...

அடடா அருமை பிச்சி!
உங்களை நெறிப்படுத்தி, நிலைப்படித்திய நட்பு வாழ்க அதை வரியாக்கி மன்றத்திலே கவியாக்கிய உங்கள் திறமை வாழ்க.

ஓவியன்
22-04-2007, 04:19 AM
தேனில் குழைத்த ஒரு மயிலிறகின்
இழைகளை நீ தந்த மாத்திரம்
என் புத்தகத்தில்
ஒளித்து வைத்திருப்பேன்
ஒவ்வொருமுறையும் திறக்கும் போது
நெடியுடன் உன் நினைவும் தாலாட்டும்..

நண்பர்களை அவர் தம் நினைவுகளை மீளவும் அசை போடுவதும் ஒரு சுகமான அனுபவமே!!!

நன்றாக இருக்கிறது பிச்சி!

ஓவியன்
22-04-2007, 04:24 AM
எண்ணங்களும்
வண்ணங்களும்
கலப்பதே ஓவியம்

ஓவியனின் எண்ணம் தனியாக இருந்தாலும் அவன் உபயோகிக்கும் வண்ணம் தனியாக இருந்தாலும் ஒரு கை ஓசையே! கலப்பதினால் வரும் ஓவியம், காவியம்!


ஆகா பிரதீப் அண்ணா!, உங்களது இந்த பதிவை இன்று தான் பார்த்தேன்!

உங்கள் கருத்து எனது கையெழுத்தாக இருக்கிறதே!!!

ஓவியன்
22-04-2007, 04:32 AM
ஆதவா உங்கள் குறுஞ்செய்திக் கவிதைகள் அருமை, அனுபவித்தேன் எனது நண்பர்களை கண் முன்னே நிழலாட வைத்தன உங்கள் வரிகளும் அனுபவமும்.

வாழ்த்துக்கள் , தொடருங்கள் - காத்திருக்கின்றேன்.

கும்பகோணத்துப்பிள்ளை
17-01-2017, 02:40 PM
இந்த பகுதிக்கு புதிதாய் வந்ததில் என் என்னங்களையும் பதிக்கிறேன்



நீ தருவதிலிருந்து பெருவதற்கும்
நீ தருவதைப் பெருவதற்கும்
மிக நுட்பமான வித்தியாசங்கள்
இருக்கின்றன நன்பா!
நேற்று நீயிருந்த நிலைக்கும்
இன்று நானிருக்கும் நிலைக்கும்
வித்தியாசமிருக்கிறதாய்
உன்னுள்ளிருந்து யோசிப்பதை
நான் அறியமலாயிருக்கிறேன்?!
உன்னைப்பற்றி நி உனராத சில நான் உணர்ந்திருப்பதால்
இன்றும் உன் நன்பனாய் நானிருக்கிறேன்!

என்றென்றும் நட்புடன்