PDA

View Full Version : புதிய மோகன் தமிழ் விசைப்பலகை

leomohan
25-01-2007, 11:45 AM
நான் மைக்ரோஸாஃப்டில் உள்ள லதா எழுத்தருவை பயன்படுத்தி வருகிறேன். இது ஒரு யூனிகோட் ஒருங்குறி அமைப்பு. மிகவும் எளிமையாக இருக்கிறது. கற்பதும் சுலபம்.

ஆனால் என்னால் கேள்விக்குறி பயன்படுத்த முடியாமல் இருந்தது.

இதனால் லதா எழுத்துருவை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய தமிழ் விசைபலகை அமைத்துள்ளேன்.

இதில் விசைப்பலகையில் தற்போது கேள்விக்குறி வரும் இடம் ய எனும் எழுத்து. ஷிஃப்டு ய போட்டால் கேள்விக்குறி வரும்.

இங்கு ஏற்றியிருக்கிறேன். பயன்படுத்தி பயனைடயுங்கள்.

http://mkmohan.etheni.com/Mohan.zip

பாரதி
25-01-2007, 11:54 AM
அன்பு மோகன்,
முதலில் உங்கள் முயற்சிகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

இப்படி சிறிய குறைகள் இருந்தால், கணினி அறிவு உள்ளவர்கள் முயற்சித்து, தங்களால் இயன்ற மென்பொருட்களை படைக்க முடிந்தால், கணினித்தமிழ் மென்மேலும் வளர்ச்சி பெறும்.

வாழ்க உங்கள் தமிழ்தொண்டு.

leomohan
25-01-2007, 12:15 PM

நன்றி பாரதி. ஒரு புதிய சுலபமான எழுத்தரு அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். மென்பொருள் வல்லுனன் இல்லை. ஏதோ ஆர்அன்டி தான். ஒருங்குறியில் முயற்சி செய்கிறேன்.

அறிஞர்
25-01-2007, 02:43 PM
இருக்கும் திறமைகளை, தமிழ் வளர்ச்சி பயன்படுத்துவது.... மகிழ்ச்சியை தருகிறது...

தொடரட்டும் தங்களின் பணி மோகன்

ஷீ-நிசி
25-01-2007, 03:05 PM
நல்ல முயற்சி மோகன்.. ஆனால் நானும் latha எழுத்துருதான் பயன்படுத்துகிறேன். எனக்கு ? பதிக்க முடிகிறதே.. எப்படி?

ஆதவா
25-01-2007, 03:42 PM
நண்பரே எனக்கு தவறு செய்தி வருகிறதே!!!

A netrwork error occured while attempting to read from the file........

அறிஞர்
25-01-2007, 03:57 PM
நண்பரே எனக்கு தவறு செய்தி வருகிறதே!!!

A netrwork error occured while attempting to read from the file........
எனக்கு பிரச்சனை இல்லையே.. ஆதவா...

இளசு
25-01-2007, 09:29 PM
மோகனின் முயற்சி, பணிக்கு பாராட்டும் வாழ்த்தும்..

தொடரட்டும் உங்கள் வெற்றிகள்..

மயூ
28-01-2007, 04:25 AM
நல்ல பணி!
யாம் இ-கலப்பை பாவிக்கின்றோம்... பாமினி முறை தட்டச்சு!
என்னால் ? பதிக்க முடிகின்றது....
எ.கா ?????????????????????????????????
??????????????????????????????????????
???????????????????????????????????????
????????????????????????????????????????
?????????????????????????????????????????
??????????????????????????????????????????

aren
28-01-2007, 04:53 AM
மோகன், நீங்கள் பல திறமைகளை உள்ளடக்கிய மனிதர் என்று நன்றாகவே தெரிகிறது. உங்கள் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவந்து இன்னும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

உங்கள் முயற்சி தொடரட்டும்.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
28-01-2007, 08:05 AM
நல்ல பணி!
யாம் இ-கலப்பை பாவிக்கின்றோம்... பாமினி முறை தட்டச்சு!
என்னால் ? பதிக்க முடிகின்றது....
எ.கா ?????????????????????????????????
??????????????????????????????????????
???????????????????????????????????????
????????????????????????????????????????
?????????????????????????????????????????
??????????????????????????????????????????

நன்றி மயூரேசன். நீங்கள் இகலப்பையின் போனோடிக் ஒலிவழி விசைபலகை உபயோகிக்கிறீர்களா.

தமிழில் குறியீடுகள் உபயோகப்படுத்தும் வழக்கம் இல்லை. உங்கள் பெயர் என்ன என்றாலே அது கேள்வியை குறிக்கிறது. அதனால் ஆங்கலத்தில் பயன்படுத்தப்படும் பல குறியீடுகள் தமிழ் விசைப்பலகையில் இருப்பதில்லை

' Single Quotes
" Double Qutoes
( Left Bracket
) Right Bracket
? Question Mark
, Comma

போன்றவை. இவை அனைத்தும் உபயோகப்படுத்த முடிகிறதா, சாதாரண விசை பலகையில் - அதாவது ஒலி வடிவில் இல்லாத விசை பலகையில்.

நான் மேற் சொன்னவைகளையும் சேர்த்து விசைபலகையை தமிழ் தட்டச்சு முறை பயன்படுத்தும் லதா யூனிகோடில் அமைத்திருக்கிறேன். முன்பு ? வைத்து செய்த சோதனை வெற்றியடைந்ததால் இதையும் செய்திருக்கிறேன்.

விரைவில் ஏற்றுகிறேன்.

இராசகுமாரன்
28-01-2007, 02:25 PM
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

leomohan
28-01-2007, 02:32 PM
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ராஜகுமார்.

pradeepkt
29-01-2007, 01:30 PM
மோகன், புதுப்புது முயற்சிகளில் இறங்கும் உங்கள் தணியாத தாகம் பெரும் முன்னேற்றங்களைத் தரட்டும். வாழ்த்துகள். நானும் உங்கள் புதுக் கணினி விசைப்பலகையை உபயோகித்துப் பார்க்கிறேன்.

leomohan
29-01-2007, 02:32 PM
மோகன், புதுப்புது முயற்சிகளில் இறங்கும் உங்கள் தணியாத தாகம் பெரும் முன்னேற்றங்களைத் தரட்டும். வாழ்த்துகள். நானும் உங்கள் புதுக் கணினி விசைப்பலகையை உபயோகித்துப் பார்க்கிறேன்.

மிக்க நன்றி ப்ரதீப்.

srimariselvam
05-11-2007, 09:58 AM
அண்ணா, நான் மாடுலர் விசைப்பலகை பயன்படுத்துகிறேன். அதனை அடிப்படையாகக் கொண்ட தமிழ்விசைப்பலகை அமைத்துத்தர முடியுமா? தயவுசெய்து......

நேசம்
05-11-2007, 10:13 AM
தமிழ் மன்றத்தில் பயனுள்ள படைப்புகளை தந்து வரும் லியோமோகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாரட்டுகளும்

leomohan
15-11-2007, 01:19 PM
அண்ணா, நான் மாடுலர் விசைப்பலகை பயன்படுத்துகிறேன். அதனை அடிப்படையாகக் கொண்ட தமிழ்விசைப்பலகை அமைத்துத்தர முடியுமா? தயவுசெய்து......

உங்களுடைய விசைபலகையின் அமைப்பு விபரம் பார்த்தேன். எந்த மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்.

இப்போதெல்லாம் கிடைக்கும் மென்பொருட்களில் புதிய தமிழ் எழுத்துக்கள் தான் கிடைக்கின்றன. பழைய லை, னா கொம்புகளுடன் இருக்கும் எழுத்துகள் கிடைப்பதில்லை. இருந்தாலும் தேடி பார்க்கிறேன்.

இலவச Font maker மென்பொருட்கள் கொண்டு நாமே புதியதாக அமைக்கலாம். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் அல்லது சுண்டெலி கொண்டு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும். பிறக அதனை பிரிண்ட் செய்து, ஸ்கான் செய்து புதிய எழுத்துரு உருவாக்கலாம்.

அறிஞர்
15-11-2007, 02:40 PM
புது புது முயற்சிகள்.. தொடர்ந்து வெற்றி பெறட்டும்.. மோகன்..
------
தங்களின் கையெழுத்து தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை காட்டுகிறது... விரைவில் வடு மறைந்து.... கையெழுத்தும் மாறட்டும்.

ramanan4u
18-11-2007, 07:01 AM
வாழ்த்துக்கள் தோழரே உங்கள் முயற்ச்சிக்கு
நானும் ஒரு முற்றிலும் தமிழ் மயமாக்கபட்ட ஓர் மின்னஞ்சல் தளத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன், முடிந்தால் என்னக்கும் உங்கள் தகவல்களை தந்து உதவவும்

leomohan
18-11-2007, 07:21 AM
வாழ்த்துக்கள் தோழரே உங்கள் முயற்ச்சிக்கு
நானும் ஒரு முற்றிலும் தமிழ் மயமாக்கபட்ட ஓர் மின்னஞ்சல் தளத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன், முடிந்தால் என்னக்கும் உங்கள் தகவல்களை தந்து உதவவும்

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே.

srimariselvam
19-11-2007, 08:27 AM
அண்ணா, தமிழில் எழுத இளங்கோ தமிழ் 2005 உபயோகப்படுத்துகிறேன்.
ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்.எக்ஸ்.பி.

leomohan
20-11-2007, 12:31 PM
அண்ணா, தமிழில் எழுத இளங்கோ தமிழ் 2005 உபயோகப்படுத்துகிறேன்.
ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்.எக்ஸ்.பி.

நன்றி செல்வன். புதியதாக எடிட்டர் அமைக்க வேண்டும் என்றால் ப்ரோகிராமிங்கில்ல நல்ல திறன் இருக்க வேண்டும். என்னுடையது சுமார் தான். நண்பர்களுடன் கலந்து பேசி விரைவில் முயற்சிக்கிறேன். நன்றி

leomohan
20-11-2007, 12:33 PM
அண்ணா, தமிழில் எழுத இளங்கோ தமிழ் 2005 உபயோகப்படுத்துகிறேன்.
ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்.எக்ஸ்.பி.

இளங்கோ தமிழ் 2005 தரவிறக்கம் செய்ய தொடுப்பு தரமுடியுமா? நன்றி.