PDA

View Full Version : வீராசாமி ! - மின்னஞ்சலில் வந்த விமர்சனம் !



franklinraja
25-01-2007, 09:01 AM
பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை , திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..
அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர் ..

மும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...
கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...

விமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்று உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...

கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.
ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...

கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...

விஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...

படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...
அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...
அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...

காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...

படத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா ? மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது

டேய் லூசு..
உன்னோட பேரு தாசு..
இப்ப போடப்போறேன் டாசு..
நான் வெட்னா நீ பீசு..
ஆகாது இது போலீஸ் கேசு.
எனக்கு இருக்குது மக்கள் மாஸு..

என்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...

படத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்...

மொத்தத்தில் வீராசாமி, வீர ஆசாமிகள் பார்க்கவேண்டிய படம்...!

நன்றி: செந்தழல் ரவி!

இனியவன்
25-01-2007, 09:45 AM
ஃப்ராங்கா சொல்லணும்னா
சூப்பரப்பூ.
பின்னிப் பெடலெடுத்துருக்கீங்க.

gragavan
25-01-2007, 09:45 AM
இது செந்தழல் ரவியோட விமர்சனம்தானே. நாங்கூட இத மொதல்ல படிச்சிட்டு உண்மையோன்னு நெனச்சிட்டேன்.

Isaiprabhu
25-01-2007, 09:54 AM
அருமை சீரித்து சீரித்து வயிரு வலிகுது:p :p :p

Narathar
25-01-2007, 10:40 AM
அட! உங்கள் விமர்சமனே படத்தை பார்க்க................. :eek: :eek: தூண்டியது

மதுரகன்
25-01-2007, 04:25 PM
படம் பார்க்கவே தேவையில்லை போஸ்டரை பார்த்ததிலேயே நான் மயங்கி சரிஞ்சிட்டேன்...

ஆதவா
25-01-2007, 04:30 PM
எங்க ஊர்ல ரிலீசு இல்ல.... வந்தா கண்டிப்பா பாக்கமாட்டேன்.....

ஓவியா
26-01-2007, 12:25 AM
:D :D :D

போடுடா ஒரு டிக்கட், சிங்கார சென்னைக்கு கிளம்பியாச்சு......எப்படியாவது பார்த்துடானோம்

Isaiprabhu
26-01-2007, 06:47 AM
http://www.dinakaran.co.in/epaperdinakaran/2612007/1072746_1.jpg

அறிஞர்
26-01-2007, 02:21 PM
விட்டா ஆளுக்கொரு அருவாளை தூக்கிட்டு கிளம்பிடுவாங்க போல.....

அருவாள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஏதும் விளம்பரம் செய்கிறார்களா......

இது மாதிரி படங்களை பார்ப்பதே இல்லை...

ஓவியா
26-01-2007, 02:45 PM
தமிழ் நாட்டுக்கு,
வரும் பிப்ரவரி மாதம் கடும் சோதனை

ஜோசியர்
ஓவியா

பிச்சி
26-01-2007, 03:01 PM
:D :D :D

போடுடா ஒரு டிக்கட், சிங்கார சென்னைக்கு கிளம்பியாச்சு......எப்படியாவது பார்த்துடானோம்

இந்த ஊர்ல வந்து சாகிரத விட அங்கேயே பொழைக்கலாம்...

ஓவியா
26-01-2007, 03:14 PM
இந்த ஊர்ல வந்து சாகிரத விட அங்கேயே பொழைக்கலாம்...

அடடா,
எனாங்க இப்படி சொல்லிட்டீங்க, :eek: :eek:

எனக்கு நாட்டு பற்று அதிகம் அம்மிணி
என் நாடில் போர் வந்தாலும், நான் உடனே பறந்து சென்று விடுவேன்.
நாட்டிர்க்காக உயிர் துரக்க தயங்காத பெண்களும் பாரில் இருக்காங்க

பிச்சி
26-01-2007, 03:18 PM
அடடா,
எனாங்க இப்படி சொல்லிட்டீங்க, :eek: :eek:

எனக்கு நாட்டு பற்று அதிகம் அம்மிணி
என் நாடில் போர் வந்தாலும், நான் உடனே பறந்து சென்று விடுவேன்.
நட்டிர்க்காக உயிர் துரக்க தயங்காத பெண்களும் பாரில் இருக்காங்க

அய்யோ அக்கா! நான் சொன்னது அந்த படத்தை... நீங்க வீராசாமி பாத்து செத்துப்போறதுக்கு அங்கயே பொழக்கலாம்னு சொன்னேன்..

மன்மதன்
26-01-2007, 05:57 PM
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சன் டிவியில் இந்த படத்தின் டிரைலர் பார்த்தேன்.. கொடுமை சாமி. சிம்பு 8 ஸ்டெப்ஸ் போட்டு டான்ஸ் ஆடினா தகப்பன் 16 ஸ்டெப்ஸ் போட்டு கலக்குறாரு.. வயத்த...........:D

பென்ஸ்
26-01-2007, 06:56 PM
பிராங்.... விமர்சனம் சூப்பர்...

விமர்சனம் செந்தழல் ரவியோடதா??? அப்படியானா "நன்றி: தெந்தழல் ரவி" என்று போட்டு போட்டு இருக்கலாமே...

இங்கு பதித்த உங்களுக்கும் நன்றி...

படைத்தவருக்கு பாராட்டுகள்...

tamil81
27-01-2007, 03:16 PM
உங்களோட விமர்சனம் இருக்கே சாமீ !சாமீ !
எங்கேருந்து இதை எல்லாம் கத்துகிறீங்களோ ?
போங்கப்பா
உங்க முன்னாடி எதுவும் எழுத தோணவிலை

pradeepkt
29-01-2007, 01:20 PM
கோவிச்சுக்காதீங்க, நானே உங்க சார்பா ரவிக்கு நன்றி சொல்லிட்டேன்.
நிஜமாவே விமர்சனம் படிச்சு மெரண்டுட்டேங்க.. :D

franklinraja
31-01-2007, 09:16 AM
நன்றி நண்பர்களே...

எனக்கு இது மின்னஞ்சலில் வந்தது... அதனால், முதலில் யார் எழுதியது என்று தெரியவில்லை...

எப்படியாயினும், சொந்தக்காரருக்கு நன்றி... (தலைப்பையும் மாற்றியிருக்கிறேன்)

உபரி செய்தி: வீராசாமி, பிப்ரவரி 1 அன்று வீருகொண்டு வருகிறார்...! :D

மதுரகன்
31-01-2007, 04:54 PM
நல்லவேளை விமர்சனம்படிச்சது...
இதைக்காட்டித்தான் வீராசாமிபார்க்கவேண்டும் என அடம்பிடிக்கும்
எனது நண்பனை கட்டுப்படுத்தினேன்..
நான் சமீபகாலமா ராஜேந்தரை கண்டுக்கிறதில்லை என்று முடிவு பண்ணிட்டேன் ..

மனோஜ்
31-01-2007, 05:03 PM
அய்யே பாவம்:angry: அருவாளுக்கு வாய்யிருந்தா :eek: அழுதிருக்கும் இவருக்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனென்னு:confused:

மன்மதன்
31-01-2007, 05:12 PM
ஒருவழியா இன்று 1 பிப்ரவரி இப்படம் ரிலீஸ்.. :D :D ஒருவேளை படம் ஓடிடிச்சின்னா ?? :D :D

தங்க கம்பி
01-03-2007, 02:06 PM
இந்த காலத்தில் இப்படியொரு படமா? சோதனையடா சாமி.

மயூ
01-03-2007, 02:20 PM
மகன் அலுப்புத் தாங்க முடியேல என்று நொந்து போய் இருக்கையில் தகப்பனுமா???

pradeepkt
02-03-2007, 02:43 AM
மகன் அலுப்புத் தாங்க முடியேல என்று நொந்து போய் இருக்கையில் தகப்பனுமா???
மகன் அலுப்பைத் தியேட்டரில் போய்ப் பாத்தவந்தானே நீ??
ஆனந்த விகடனில் "பரீட்சைக்கு மதிப்பெண் போடலாம் விஷப் பரீட்சைக்கு????" அப்படின்னு சொல்லிட்டாங்க :D

sekars
03-03-2007, 02:19 AM
விமர்சனம் கலக்கல்! விழுந்து விழுந்து சிரிசிட்டிருக்கேன்! :)

படைத்தவருக்கு பாராட்டுகள்.

raj6272
03-03-2007, 03:17 AM
ஹுண்டாய் கம்பெனி எம்ப்ளாயீஸ் ஒரு 100 பேரு மொத்தமா டிக்கெட் புக் பண்ணி படம் பார்க்க போனாங்க, என்னய்யான்னு கேட்டால், இனிமேல் ராஜேந்தர் படமே எடுக்கக்கூடாது, அந்த அளவுக்கு தியேட்டரில் போயி கலாட்டா பண்ணப்போறோம் ன்னு சொன்னாங்க.

saguni
11-03-2007, 06:19 PM
உங்கள் விமர்சனம் பிரமாதம். மொத்தத்தில் இந்த வருடத்தின் சிறந்த சிரிப்பிற்கான விருதைத் தட்டிச்செல்லும் என்ற ஐயமில்லை....

காலம் போன கடைசியில் என்னடா இது சோதனை??? இது காணாத குறைக்கு இப்போ சன் டிவியில் பண்ற கொடுமை அதைவிட கொடூரம்... இதனால் சன் டிவி பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.

பென்ஸ்
11-03-2007, 06:38 PM
இதாவதுபரவாயில்லை....
இவர் சன் டீவிக்கு கொடுத்த ஒரு பேட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது...

என் முழு டீமையும் கூப்பிட்டு காட்டினேன்.. சிரிக்காதவங்களே இல்லல....

எங்க ஊரு பக்கம் இந்த ஆளு வந்தா காசிகொடுத்து சாணம் அடிப்பேன்.... ரொம்பதான் ஓவரா பண்ணுறாரு...

மன்மதன்
12-03-2007, 06:30 AM
இதாவதுபரவாயில்லை....
இவர் சன் டீவிக்கு கொடுத்த ஒரு பேட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது...

...

அதை எனக்கு அனுப்பி வையுங்கோ..

aren
12-03-2007, 07:43 AM
இந்த படத்தை அவரே தயாரித்திருக்கிறார் போலிருக்கு. மகன் சம்பாதித்ததை அப்பன் காலிபண்ணிய கதையாகிவிடப்போகிறது.

சே-தாசன்
09-04-2007, 05:31 AM
5 பேரை கொன்று பிறந்தவன் ஆறுச்சாமி
படம் பார்க்கிற அத்தனை பேரையும் கொல்றவன் இந்த வீராச்சாமி