PDA

View Full Version : நுகர்வோர் சேவை (customer Care) - 2020 -ல்



ஷீ-நிசி
25-01-2007, 06:02 AM
CUSTOMER CARE IN 2020........

நுகர்வோர் சேவை (CUSTOMER CARE)எப்படியிருக்கும் 2020 -ல்


உதவியாளர்: நன்றி!, நீங்கள் பீஸா கார்னரை அழைத்ததற்கு...

கஸ்டமர்: நான் ஆர்டர் கொடுக்கவா?

உதவியாளர்: நான் உங்கள் பன்முக சேவை கொண்ட அட்டை எண்ணை தெரிந்துக்கொள்ளலாமா?

கஸ்டமர்: ஒரு நிமிடம்...88986135610204 9998-45-54610

உதவியாளர்: நன்றி! திரு. சிங்..நீங்கள் No.17 ஜலான் காயு, பஞ்சாப்..லிருந்து அழைக்கிறீர்கள். உங்கள் வீட்டு தொ.பேசி எண்: 4094! 2366. உங்கள் அலுவலக எண்: 76452302. உங்கள் செல்பேசி எண்: 0142662566.. நீங்கள் இப்போது எந்த நம்பரிலிருந்து அழைக்கிறீர்கள்?

கஸ்டமர்: வீட்டு எண்ணிலிருந்து. எப்படி என் எல்லா எண்களையும் தெரிந்துவைத்திருக்கிறீர்கள்?!

உதவியாளர்: நாங்கள் system -உடம் இணைத்திருக்கிறோம்.

கஸ்டமர்: எனக்கு மீன் மற்றும் இறாவில் செய்த பீஸா வேண்டும்.

உதவி: நீங்கள் தேர்ந்தெடுத்தது சரியில்லை..

நுகர்: எப்படி சொல்கிறீர்கள்?

உதவி: உங்கள் மருத்துவ அறிக்கையின் படி, உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது.

நுகர்: என்ன? பிறகு வேற என்னதான் சாப்பிட சொல்ற?

உதவி: கொழுப்பு குறைவான எங்களுடைய ஹாக்கின் மீ பீஸாவை சாப்பிட்டு பாருங்கள் சார்.. உங்களுக்கு பிடிக்கும்?

நுகர்: உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு பிடிக்குமென்று?

உதவி: நீங்கள் கடந்த வாரம் நேஷ்னல் நூலகத்திலிருந்து "பாப்புலர் ஹாக்கின் டிஸ்ஸஸ்" என்ற புத்தகத்தை எடுத்து சென்றுள்ளீர்கள்.

நுகர்: சரி! பெரிய அளவு பீஸா 3 ஆர்டர் எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு பணம்?

உதவி: உங்கள் வீட்டிலிருக்கும் 10 பேருக்கு இது போதுமானதென நினைக்கிறேன். இதன் விலை $49.99.

நுகர்: நான் கிரடிட் கார்டு வழியாக பணம் செலுத்தலாமா?

உதவி: அது முடியாது சார். நீங்கள் பண்மாக செலுத்திவிடுங்கள். உங்கள் கிரடிட் கார்டின் லிமிட் தாண்டிவிட்டது. நீங்கள் $3, 720.55 தொகை செலுத்த வேண்டியுள்ளது. கடந்த அக்டோபரிலிருந்து வீட்டு லோன் தாமதமாக செலுத்தியுள்ளீர்கள். தாமதமாக செலுத்தியதற்கான அபராதத் தொகை அந்த தொகையில் சேர்க்கபடவில்லை.

நுகர்: சரி! நான் அருகிலிருக்கும் ATM சென்று பணம் எடுத்து வந்து விடுகிறேன் நீங்கள் இங்கே வருவதற்குள்.

உதவி: உங்களால் முடியாது சார். எங்களிடம் உள்ள ரெக்கார்டு படி, நீங்கள் உங்களுடைய transaction daily llimit தாண்டிவிட்டீர்கள்.

நுகர்: சரி! நீங்கள் பீஸாவை எடுத்து வாருங்கள். நான் வீட்டில் பணம் வைத்திருக்கிறேன். எவ்வலவு நேரமாகும் நீங்கள் இங்கே வருவதற்கு?

உதவி: 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் நீங்கள் காத்திருக்க வேண்டாம். உங்க்ள் இருசக்கர வாகனத்தில் இங்கே வந்து பெற்றுக்கொள்ளவும்.
நுகர்: என்ன சொல்றீங்க?

உதவி: எங்களிடம் உள்ள ரெக்கார்ட் படி உங்கள் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்: 1123

நுகர்: ?????

உதவி: வேறு ஏதாகிலும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

நுகர்: ஒன்றுமில்லை. சரி! நீங்கள் விளம்பரம் செய்தபடி பீஸாவுடன் 3 பாட்டில் கொக்க கோலா உண்டுதானே?!
உதவி: நாங்கள் தருவோம் சார். ஆனால் எங்கள் ரெக்கார்டின் அடிப்படையில் உங்களுக்கு டயாபடீஸ் இருப்பதால் உங்கள் உடல்நலன் கருதி நாங்கள் தரமாட்டோம்.

நுகர்: #$$^%&$@$%^

உதவி: நீங்கள் பேசியது சரியில்லை. கடந்த ஜீலை 25-ஆம் தேதி 1987 -ஆம் வருடம் உங்கள் நண்பரை கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகபடுத்தி திட்டியதற்காய் போலீஸ் காவலில் இருந்ததை மறந்துவிட்டீர்களா?

நுகர்: (அமைதியாகிவிட்டார்)


(நண்பர்களே இது எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்தது. முடிந்தவரை மொழிபெயர்த்துள்ளேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்..)

pradeepkt
25-01-2007, 07:09 AM
எனக்கும் சில வருடங்களுக்கு முன்பு இது மின்னஞ்சலில் வந்தது.
இன்றைய காலகட்ட வளர்ச்சியைப் பார்க்கையில், இது எந்த வகையிலும் சாத்தியமே என்று தோன்றுகிறது. பிற்காலச் சந்ததியினர் "இங்க பாருடா அந்தக் காலத்திலேயே நம்மளப் பத்தி ஒரு தீர்க்கதரிசி சொல்லிருக்காரு"ன்னு சொல்லிப் புளகாங்கிதம் அடைவாங்க பாருங்க :D

ஷீ-நிசி
25-01-2007, 04:47 PM
நண்பர்களே இதை யாருமே கண்டுக்கலயா? ரொம்ப கஷ்டபட்டு மொழி பெயர்த்தேன் உறவுகளே....

ஆதவா
25-01-2007, 04:52 PM
கண்டு கொண்டேன் நண்பா!!! இப்போதுதான் படித்தேன்... அருமை. அருமை... நுகர்வோர் சேவை எப்படியெல்லாம் மாறிவிடும் பாருங்கள்........

tamil81
27-01-2007, 02:55 PM
நண்பரே நல்ல படைப்பு
நல்ல சயின்ஷ் பிக்சன் படித்தது போல் இருந்தது
மேலும் தொடரவும்

மதுரகன்
28-01-2007, 05:26 PM
அடப்பாவிங்களா விஞ்ஞானம் எதிர்காலத்தில் எங்களை நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே...
எப்படியாகிலும்
உங்கள் சிந்தனையை ரசித்தேன் ஷீ வாழ்த்துக்கள்...

thoorigai
03-02-2007, 05:42 AM
நடைமுறையாகப்போகுமொரு கற்பனையே.

pgk53
08-02-2007, 01:45 PM
நல்ல கற்பனைதான்.
இருப்பினும் நடைமுறையாவதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக உள்ளது.

அறிஞர்
08-02-2007, 01:56 PM
அருமையாக சிந்தித்து எழுதியிருக்கிறார்கள்.....

அமெரிக்காவில் உங்களின் சோசியல் செக்யூரிட்டி எண்ணை கொடுத்தால் எல்லா தகவல்களும் கிடைக்கும். ஆனால் பாதுகாப்பு, தனிப்பட்ட காரணங்களுக்காக... எல்லாரும் எல்லா தகவலையும் கண்டறிய முடியாது.

பிச்சி
08-02-2007, 02:06 PM
ரொம்ப அருமையா இருக்கு...

sham
09-02-2007, 09:15 AM
நன்றாகவுள்ளது நண்பரே.
மிஞ்சிய விஞ்ஞான வளர்ச்சியால் ஆபத்தும் அதிகம்தான்..................

மயூ
09-02-2007, 09:19 AM
வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது ஷி...

maganesh
09-02-2007, 09:38 AM
கண்டு கொண்டோம். கண்டு கொண்டோம். எதிகாலத்தை மையாமகக் கொண்ட நகைச்சுவைப் புயல்கள் மையம் கொள்ள ஆரம்பித்திவிட்டது எமது மன்றத்தில். இது நகைச்சுவையாக இருந்தாலும் நளைய நிதர்சனம்.