PDA

View Full Version : ஜனவரி 26, 2001lenram80
25-01-2007, 02:30 AM
(ஜனவரி 26, 2001-ல் குஜராத் பூக்கம்பத்தை உலுக்கியது ஒரு பூகம்பம்.
அந்த பூகம்பம் பறித்த பூக்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம்.)

கும்பாபிஷேகம் நாளை என்று
குஷியாய் இருந்த கோவில்கள் எத்தனையோ!

மணநாள் நாளை என்று மயக்கத்திலிருந்து
பிணமாய் போன மனங்கள் எத்தனையோ!

எதைக் கண்டு சிலிர்த்தாய் பூமித்தாயே!

மனிதனை உண்ணவா, உன் மேல் தாடையை அசைத்தாய்?
இல்லை,
கட்டிடங்கள் விழவா நீ கரகாட்டம் ஆடினாய்?

வரலாறு எழுதவா நீ தகராறு செய்தாய்?
சரித்திரத்தில் இடம் பெறவா இந்த தரித்திர வேலை செய்தாய்?

குடியரசு அன்று கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்து
கூழாகிப் போன குழந்தைகள் எத்தனையோ!

ஒரு வேளை பசிக்கு, ஊரையே அழித்தவளே!
என் பூமித்தாயே,
"தாய் மண்ணே வணக்கம்" என்றால் இனி மணக்குமா?

அன்னையே நீயும் அனைத்துண்ணி என்று சொல்லவா
அத்தனையையும் தின்றாய்?

அகழ்வாரைத் தாங்கும் நிலமா நீ?
அநியாயமாய் அத்தனை பேரையும்
அரை நொடியில் அழித்து விட்ட பிறகும் கூட,
வள்ளுவா! என்ன தாமதம்?
குறளை மாற்றி எழுது!

அணுகுண்டை உன் மேல் போட்ட போது
அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
ஆடித் தொலைத்து விட்டாயே!

உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
வேறு என்ன பாவம் செய்தோம்?

உன் பொன்னை தோண்டி எடுத்து
எங்கள் பெண்கள் அணிவதால்
சண்டைக்கு வந்த சண்டாளியா நீ?

அத்தனை பேரும் உன்னை மிதிப்பதால்
ஆத்திரப்பட்டுத் தான் ஆடித் தொலைத்தாயோ?

எங்கள் மழலைகளின் மயக்கும் மந்திரப் புன்னகையை
ரசிக்கும் ரசனை கூட இல்லாத ராட்சசியா நீ?

உன் குழந்தைகளை நீயே அழுக்கும் நீ
எங்களுக்கெல்லாம் தாயா? அல்லது
தாய் என்று ஏமாற்றி வந்த பேயா?

பூமியே! நிச்சயம் உனக்கு அழிவு உண்டு!
இத்தனை பேரை கொன்று விட்டு
தண்டனை கிடைக்காமல் போனால் அது தவறு!
தவறு செய்தவன் தண்டிக்கப் படவேண்டும்!
இது இயற்கையின் நியதி!
அதாவது, நீயே உனக்கு விதித்துக் கொண்ட விதி!

ஷீ-நிசி
25-01-2007, 03:38 AM
நல்ல கவிதை நண்பரே!.. இனி உலகம் சந்திக்ககூடாது அதுபோல் ஒரு நிகழ்வு....

pradeepkt
25-01-2007, 06:54 AM
உங்கள் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் வெகுவாகவே வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.

மதுரகன்
25-01-2007, 04:53 PM
உங்கள் இழப்புகளை அற்புதமாக நீட்டியுள்ளீர்கள்...

அணுகுண்டை உன் மேல் போட்ட போது
அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
ஆடித் தொலைத்து விட்டாயே!

உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
வேறு என்ன பாவம் செய்தோம்?


அற்புதம்..
வாழ்த்துக்கள்

ஆதவா
25-01-2007, 05:04 PM
பழைய நினைவுகள்தாம் என்றாலும் ஞாபகம் ஒரு தாய்வீடு........................

வரிகள் சிலவற்றில் லெனின் லெனின்தான்..
உதாரணத்திற்கு

அகழ்வாரைத் தாங்கும் நிலமா நீ?
அநியாயமாய் அத்தனை பேரையும்
அரை நொடியில் அழித்து விட்ட பிறகும் கூட,
வள்ளுவா! என்ன தாமதம்?
குறளை மாற்றி எழுது!

அணுகுண்டை உன் மேல் போட்ட போது
அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
ஆடித் தொலைத்து விட்டாயே!

உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
வேறு என்ன பாவம் செய்தோம்?

அருமைப்பா!!!
ஆனால்... லெனின் கோபித்துக்கொள்ளக்கூடாது...... சுனாமியை கடலை, பூமியை திட்டுவது என்பது நிறைய கவிதைகள் படித்தாகிவிட்டது.... அதிலிருந்து மீண்டவர்கள் பற்றி ஒரு கவிதை எழுதலாமே!!
ஏனெனில் சுனாமியாக் பாதிக்கப்பட்டவர்களே கிட்டத்தட்ட அதை மறந்திருக்கும் போது நாம் கவிதையால் இன்னுமா கடலை சாடவேண்டும்?

பிச்சி
26-01-2007, 07:45 AM
நானும் எழுதியிருக்கிறேன்... கொஞ்சம் பழய கவித தான் என்னோடது

அறிஞர்
26-01-2007, 02:34 PM
(ஜனவரி 26, 2001-ல் குஜராத் பூக்கம்பத்தை உலுக்கியது ஒரு பூகம்பம்.
அந்த பூகம்பம் பறித்த பூக்களுக்கு, இக்கவிதை சமர்ப்பணம்.)

கும்பாபிஷேகம் நாளை என்று
குஷியாய் இருந்த கோவில்கள் எத்தனையோ!

மணநாள் நாளை என்று மயக்கத்திலிருந்து
பிணமாய் போன மனங்கள் எத்தனையோ!

எதைக் கண்டு சிலிர்த்தாய் பூமித்தாயே!

மனிதனை உண்ணவா, உன் மேல் தாடையை அசைத்தாய்?
இல்லை,
கட்டிடங்கள் விழவா நீ கரகாட்டம் ஆடினாய்?

வரலாறு எழுதவா நீ தகராறு செய்தாய்?
சரித்திரத்தில் இடம் பெறவா இந்த தரித்திர வேலை செய்தாய்?

குடியரசு அன்று கும்மாளம் அடிக்கலாம் என்றிருந்து
கூழாகிப் போன குழந்தைகள் எத்தனையோ!

ஒரு வேளை பசிக்கு, ஊரையே அழித்தவளே!
என் பூமித்தாயே,
"தாய் மண்ணே வணக்கம்" என்றால் இனி மணக்குமா?

அன்னையே நீயும் அனைத்துண்ணி என்று சொல்லவா
அத்தனையையும் தின்றாய்?

அகழ்வாரைத் தாங்கும் நிலமா நீ?
அநியாயமாய் அத்தனை பேரையும்
அரை நொடியில் அழித்து விட்ட பிறகும் கூட,
வள்ளுவா! என்ன தாமதம்?
குறளை மாற்றி எழுது!

அணுகுண்டை உன் மேல் போட்ட போது
அமைதி காத்து விட்டு - நாங்கள் அமைதியாய் இருந்த போது
ஆடித் தொலைத்து விட்டாயே!

உன் முகத்தின் பருவாய் வீடு போட்டோம்!
உன் கரத்தின் ரேகையாய் ரோடு போட்டோம்!
வேறு என்ன பாவம் செய்தோம்?

உன் பொன்னை தோண்டி எடுத்து
எங்கள் பெண்கள் அணிவதால்
சண்டைக்கு வந்த சண்டாளியா நீ?

அத்தனை பேரும் உன்னை மிதிப்பதால்
ஆத்திரப்பட்டுத் தான் ஆடித் தொலைத்தாயோ?

எங்கள் மழலைகளின் மயக்கும் மந்திரப் புன்னகையை
ரசிக்கும் ரசனை கூட இல்லாத ராட்சசியா நீ?

உன் குழந்தைகளை நீயே அழுக்கும் நீ
எங்களுக்கெல்லாம் தாயா? அல்லது
தாய் என்று ஏமாற்றி வந்த பேயா?

பூமியே! நிச்சயம் உனக்கு அழிவு உண்டு!
இத்தனை பேரை கொன்று விட்டு
தண்டனை கிடைக்காமல் போனால் அது தவறு!
தவறு செய்தவன் தண்டிக்கப் படவேண்டும்!
இது இயற்கையின் நியதி!
அதாவது, நீயே உனக்கு விதித்துக் கொண்ட விதி!

அருமையான கவிதை... சோகத்தில் உள்ளம் தவிக்கிறது....

அகழ்வாரை தாங்கும் அத்தனை பேரையும் கொள்ளை கொண்டது வேதனையே...

வாழ்த்துக்கள் லெனின்.

அறிஞர்
26-01-2007, 02:34 PM
நானும் எழுதியிருக்கிறேன்... கொஞ்சம் பழய கவித தான் என்னோடது
கொடுங்கள் பிச்சி.. படிக்கலாம்..

இளசு
26-01-2007, 10:11 PM
பல வரிகள் அற்புதம்..

குறிப்பாய்

பரு, ரேகை
தங்க நகை, கோபம்
மேல் தடை அசைத்தல்
அனைத்துண்ணி
அணுகுண்டுக்குப் பொறுத்தது..

அசந்துவிட்டேன் லெனின்..
மிக அழகிய கவித்திறனைப் பறைசாற்றும் கவிதை..

மனமார்ந்த பாராட்டுகள்..

lenram80
27-01-2007, 06:52 PM
இறந்தவர்களுக்கு காணிக்கை செய்த அத்தனை பேருக்கும் நன்றி