PDA

View Full Version : என்ன கொடுமை சரவணன் இது?



lenram80
25-01-2007, 01:36 AM
ஆர்குட்டை சும்மா தேடும் போது, "என்ன கொடுமை சரவணன் இது?" - என்று ஒரு community இருந்தது. இந்த டயலாக்கிலிருந்து, நான் எழுத try பண்ணிய காமெடிகள்

செந்தில்: இந்த அலாரத்தை எவ்வளவு அழுத்தினாலும் ஆஃப் ஆக மாட்டேங்குது... என்ன கொடுமை சரவணன் இது?
சரவணன்: டேய்... பேசாம படுடா... அது பக்கத்து வீட்டு அலாரம்டா.. காலங்காத்தாலே இவன் டார்ச்சர் தாங்கலப்பா..

- * -

செந்தில்: ஏதாவது கடன் கிடன் வாங்கினிங்களா? கீழ் வீட்டு காரர் என்கிட்டே வந்து பணம் கேக்கிறார். என்ன கொடுமை சரவணன் இது?
சரவணன்:அடப்பாவி, அவர் தான்டா வீட்டு ஓனரு. அவர் கேக்கிறது வாடகைப் பணம்டா...

-*-

செந்தில்: போன மாதம் வாங்கிட்டு வந்த பேண்ட் அதுக்குள்ளே சின்னது ஆயிடுச்சு. நான் காம்ப்ளான் கூட குடிக்கிறது இல்லெ. அப்பறம் எப்படி நான் வளந்தேன்? என்ன கொடுமை சரவணன் இது?
சரவணன்: டேய்... அது என் பேண்ட்ரா வெண்ணை.

-*-

செந்தில்: ஷேவ் பண்ணிட்டு இப்பதான் வர்ரேன். அதுக்குள்ளே முடி மொளைச்சுடுச்சு. என்ன கொடுமை சரவணன் இது?
சரவணன்: டேய்... மூஞ்சியெ ஷேவ் பண்ணிட்டு பொறடியெ* பாத்தா, முடி இருக்காமே... அப்பறம் என்னடா இருக்கும்?
பொறடி - பிடறி அல்லது பின் தலை (தஞ்சாவூர் மாவட்டப் பாஷை)
-*-

ஓவியா
25-01-2007, 01:40 AM
நன்றி லேனின்

படித்து சிரித்தேன்

தொடருங்க
..............................................................................................................................................................................................................................

அடடே, என்ன கொடுமை சரவணன் இது.......

யாராவது அந்த பதிவை தூசு தடுங்களேன்......;)

மதி
25-01-2007, 03:42 AM
கலக்கல் லெனின்..
வாழ்த்துக்கள்..

ஷீ-நிசி
25-01-2007, 04:33 AM
படிச்சிட்டு வரும்போதே முடிஞ்சிடுச்சே. என்ன கொடுமை லெனின் இது?

gragavan
25-01-2007, 05:10 AM
என்ன கொடுமை சரவணன் இது..பாதி லட்டு மட்டும் குடுத்திருக்காங்களே. மீதி எங்க!

pradeepkt
25-01-2007, 08:04 AM
மீதி லட்டு சரவணன் வந்து குடுப்பான்... என்ன கொடுமை சரவணா இது??? சீக்கிரம் வந்து குடுப்பா...

மயூ
25-01-2007, 09:44 AM
இந்தக் குழுமத்தில் நானும் அங்கத்தவர்தான்....

நன்றி லெனின் கலக்கல்....

paarthiban
25-01-2007, 09:51 AM
வடிவேலு - பார்த்திபன் அலம்பலை விட கலக்கலா இருக்கே
என்ன கொடுமை சார் இது ( சந்திரமுகி பிரபு ஸ்டைலில் படிங்க)

மன்மதன்
26-01-2007, 07:50 PM
நல்ல காமெடி கொடுமையா கொடுத்திருக்கிங்க.. மேலும் கொடுக்கிறது..

அறிஞர்
26-01-2007, 07:56 PM
கலக்கலோ.. கலக்கல்... இன்னும் கொடுங்கள்.. அன்பரே....

இந்த சரவணன்... குழுமம் யாருப்பா... நம் மன்றத்து மக்களா...

leomohan
26-01-2007, 08:36 PM
கலக்கல் லெனின். என்ன கொடுமை தொடரட்டும்.

மனோஜ்
27-01-2007, 07:50 AM
லெனின் என்ன கொடுமைஇது ?
சூப்பர்....

tamil81
27-01-2007, 03:51 PM
நல்ல நகைசுவை நண்பரே படித்து படித்து ரசித்தோம்
தொடரவும்

ஓவியன்
21-10-2007, 06:10 AM
செந்தில்: போன மாதம் வாங்கிட்டு வந்த பேண்ட் அதுக்குள்ளே சின்னது ஆயிடுச்சு. நான் காம்ப்ளான் கூட குடிக்கிறது இல்லெ. அப்பறம் எப்படி நான் வளந்தேன்? என்ன கொடுமை சரவணன் இது?
சரவணன்: டேய்... அது என் பேண்ட்ரா வெண்ணை.*-

இப்படி நல்லா காமெடி தந்திட்டு, இப்போ காமெடி பக்கமே வாற இல்லையே...

என்ன கொடுமை லெனின் இது...! :redface:

அன்புரசிகன்
21-10-2007, 06:19 AM
ரொம்ப கொடுமை....

தொடரட்டும்.... நீங்க வாறதும்...

பூமகள்
21-10-2007, 06:03 PM
என்ன கொடுமை சார் இது??
அடுத்த சரவணன் பதிவு காணோமே??

ரொமப் நல்லாயிருக்கு நகைப்பு...!!
தொடருங்கள் அப்பு....!!

நுரையீரல்
22-10-2007, 04:48 AM
ரொம்ப அருமை லெனின், வாழ்த்துக்கள்

அக்னி
24-10-2007, 02:56 AM
மிகவும் ரசித்துப் படித்தேன்...
தொடர்ந்தும், சரவணன் கொடுமைகள் வரவேண்டும் என, கோரிக்கை வைக்கின்றேன்...

பாராட்டுக்கள் லெனின் அவர்களே...

விகடன்
24-10-2007, 05:12 AM
கலக்கிவிட்டீர்கள் லெனின்.
பாராட்டுக்கள்.
------------------------------
இவ்வளவுதானா நகைச்சுவைகள்?
என்ன கொடுமை லெனின்....