PDA

View Full Version : பொக்கற்பிசியில் தமிழ் எழுத்துருவை எப்பட

ksenthil
24-01-2007, 06:12 PM
பொக்கற்பிசியில் தமிழ் எழுத்துருவை எப்படி install செய்வது? நான் C# மொழியை உபயோகிக்கிறேன்.அது ttf or unicode ஆகவும் இருக்கலாம்.

thoorigai
25-01-2007, 09:50 AM
பொக்கற்பிசி என்றால் என்ன செந்தில்?

Gurudev
25-01-2007, 11:43 AM
பொக்கற்பிசி என்பது Palm Pc என ஆங்கிலத்தில் கூறப்படுவது. கல்குலேற்றர் அளவு இருக்கும். (5" x 3" அங்குலம்) இதை தான் குறிப்பிடுகிறார் என எண்ணுகின்றேன்

பாரதி
25-01-2007, 04:25 PM
மேசைக்கணினி, மடிக்கணினி போல இதை கைக்கணினி என்றும் அழைக்கலாமே செந்தில்?

கைக்கணினியில் புதிய எழுத்துருக்களை சேர்ப்பதில் சற்று சிரமம் இருக்கக்கூடும். மேலும் இணைத்த எழுத்துருக்களால் எந்த விதத்தில் பயன் கிட்டும் என்பதையும் உறுதியாக கூற இயலாது.

ஒரு வேண்டுகோள்: வினாவும் நண்பர்கள் தாங்கள் உபயோகிக்கும் கணினி எது? இயங்குதளம் எது? எதற்காக இதை கேட்கிறோம்? என்னவிதமான பிரச்சினைகள் உள்ளன என்பதை விவரித்து கூறினால், தீர்வு தெரிந்தவர்களுக்கு பதிலளிப்பது எளிதாக இருக்கும்.

இளசு
25-01-2007, 08:27 PM
அன்பு பாரதி

நீண்ட இடைவெளிக்குப்பின் உன் பதிவுகள் காண்பதில் மிக மகிழ்ச்சி..

ksenthil
27-01-2007, 03:58 PM
பொக்கற் பிசி என்பது கைக்கணிணி ஆகும்.நான் டொட் நெற் 2005 ஐ உபயோகிக்கிறேன்.
ஒப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் மொபைல் ஆகும்.Hand wriiting recognition மூலம் தமிழ் எழுத்துருவை கையாள வேண்டியுள்ளது.

ஆதவா
27-01-2007, 05:00 PM
பொக்கற் பிசி என்பது கைக்கணிணி ஆகும்.நான் டொட் நெற் 2005 ஐ உபயோகிக்கிறேன்.
ஒப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் மொபைல் ஆகும்.Hand wriiting recognition மூலம் தமிழ் எழுத்துருவை கையாள வேண்டியுள்ளது.
உங்கள் தகவலுக்கு நன்றி செந்தில்...

ஓவியன்
06-02-2007, 08:55 AM
மூலம் தமிழ் எழுத்துருவை கையாள வேண்டியுள்ளது.

நண்பரே நானும் அவ்வாறு தான் கையாளுகிறேன், கணனிக்குப் போன்றே ஒரு மென் பொருள் கண்டுபிடித்தால் தேவலை!

Mano.G.
06-02-2007, 09:14 AM
என்னிடம் பாக்கெட் பிசி (Dopod 900) உள்ளது
இண்டர்நெட் வசதியுள்ளது
இது ஒரு மேஜை கணனி போல்
அனைத்து வசதிகளும் உள்ளன.
ஆப்பரேட்டிங் சிஸ்தம் மைக்ரோசப்ட் மொபைல்.

ஆனால் தமிழ் font பதிவிறக்கம் செய்ய முடியவில்லை
உபயோகிக்கவும் முடியவில்லை. அதனால் மடி கணனியையே
வாங்கிவிட்டேன்.

மனோ.ஜி

மயூ
06-02-2007, 09:23 AM
பொக்கற்பிசி என்பது Palm Pc என ஆங்கிலத்தில் கூறப்படுவது. கல்குலேற்றர் அளவு இருக்கும். (5" x 3" அங்குலம்) இதை தான் குறிப்பிடுகிறார் என எண்ணுகின்றேன்
Pocket PC???