PDA

View Full Version : மருத்துவ கேள்வி-பதில்கள்



அறிஞர்
24-01-2007, 03:58 PM
மருத்துவம் சம்பந்தமான கேள்விகளை இங்கு கேட்கலாம்.

தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் பதில் கொடுக்கலாம் (ஆங்கில, சித்த, ஆயுவேத மருந்துகளை).

முதல் கேள்வியை நான் கேட்கிறேன். குளிர்காலங்களில் பலருக்கு வரும் வியாதி என்பதால், பலருக்கு உபயோகமாக இருக்கும்.

1. ஆஸ்துமா வியாதி என்றால் என்ன?
சதாரண இருமலில் இருந்து ஆஸ்துமாவை எப்படி வேறுபாடு கண்டுபிடிப்பது?
வரும் முன் தடுக்க இயலுமா?
வந்த பின் ஆரம்ப காலங்களில் குணப்படுத்த வழிமுறைகள் என்ன?

இளசு
25-01-2007, 08:47 PM
அன்பு அறிஞர்


இது திஸ்கியில் நான் முன்னர் பதிந்தது -

மேலும் தகவல்கள் நண்பர்கள் கேட்டால் படித்து பதில் எழுதுவேன்.. நன்றி..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=432

முன்னுரை:

நேற்று காலை அவசரமாய் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
"ஹாய்" ...... மெல்ல பக்கமாய் வந்த காரில் என் நண்பர்.
இறக்கினார் கார் கண்ணாடியை. "வணக்கம் " என்றபடி பார்த்தேன்....
வாயிலே புகையும் சிகரெட்.
அருகே பள்ளி செல்லும் ஆறு வயது மகன்.!!
அவனுக்கு ஆஸ்துமா இருப்பது எனக்குத் தெரியும்..
நெருங்கிய நண்பர் அவர். எனவே உரிமையுடன்
அவர் வாயிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தேன்...

" உங்களால் உங்களின் அழிவை நிறுத்த முடியவில்லை...
உங்கள் சிகரெட்டால் கூடவே உலக மரங்கள் அழிவது போதாதா..
உங்கள் குலக் கொழுந்தும் கருக வேண்டுமா...?"
நண்பரின் கண்களில் அடிபட்ட வலியும், வேதனையும்.
அவர் மகன் முகத்தில் ஆச்சரியமும், சிறு முறுவலும்....

நண்பரிடம் நான் பகிர்ந்துகொண்ட கருத்துகள்
இங்கே மன்றத்தில் உங்களுடனும்


ஆஸ்துமா என்றால் என்ன?
இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!

இந்த மாற்றம் சில மணி நேரங்களில்...ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.
மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..--> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.

ஏன் வருகிறது ?

இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டு தூசி
போர்வை, தலையணை " அழுக்கு"
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்...!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)


யாருக்கு வரும் ?

எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.

நோய்க்குறிகள் என்ன ?

வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்


ஆஸ்துமா: நிவாரணம் என்ன ?

பொது அறிவுரை:
1) நல்ல குடும்ப மருத்துவரின் ஆலோசனை
2) அவர் பரிந்துரையில், தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரின் அவதானிப்பு
3) புகையில்லா சூழல்
வாகனப் புகையை குறைக்கத்தான் முடியவில்லை.
வாய் விடும் புகை, ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள்.
பொதுவாக, Passive Smoking -ன் கேடுகள், குறிப்பாக குழந்தைகள்
பாதிக்கப்படுவது இன்னும் பரவலாக பலரால் அறியப்படவில்லை.
ஒரு அறை / காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்து
புகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.
4) ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி
5) மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப்
பயன்படுத்துங்கள் - உடல் நலமாய் இருந்தாலும்.


மருந்துகள்:

Inhalers __> இன்ஹேலர்ஸ் (மூச்சில் உறிஞ்சுபவை)

1) தீர்ப்பவை = Relievers
வந்துவிட்ட மூச்சுத்திணறலை உடனடியாக கட்டுப்படுத்த/ போக்க.
சுருங்கிய காற்றுக் குழாய்களின் தசைகளை தளர்த்தி
விட்டத்தை அதிகரிக்கிறது.
எப்போதும் (காலாவதியாகாத) மருந்து கைவசம் இருக்கட்டும்.
(எதிர்பாராத விருந்தாளி ஆயிற்றே நம் ஆஸ்துமா...!)
கண்டிப்பாய் வரும் என (பழக்கத்தால்) நீங்கள் கண்டுகொண்ட சூழல்களில்
(விளையாட்டு, குளிர்க்காற்று), அவற்றை எதிர்கொள்ளும் சற்று முன்பே
(முன் ஜாமீன்) இவற்றைப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி, தினமும் இவை தேவைப்பட்டால், வருமுன் காக்கும் அடுத்த கட்ட
மருந்துகள் தேவை என்று அர்த்தம்.

2) காப்பவை = Preventers
காற்றுக்குழாய் அகவணி அழற்சியைக் கட்டுப்படுத்தி, வீக்கம், சளிநீர் கோர்ப்பதை
மட்டுப்படுத்தும்.
தொடர்ந்து , உடல் நலமாக இருப்பினும் பயன்படுத்த வேண்டும்.
மருந்தளவு கூட்ட, குறைக்க மருத்துவர் ஆலோசனை தேவை.

இதற்கு அடுத்த கட்ட சிகிச்சைகள்:
நெபுலைசர் ( சிறுதுகள்களான "தீர்ப்பவை" ரக மருந்துகளை
வேகமாக ஒரு கருவி மூலம் மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவது)
ஆக்ஸிஜன்
ஸ்டீராய்டு மாத்திரைகள்
போன்றவை உங்களைப் பரிசோதித்த மருத்துவரின் நேரடி
கண்காணிப்பில் நடக்க வேண்டிய சமாச்சாரங்கள்.

இளசு
25-01-2007, 08:49 PM
அப்பதிவில் அருமை நண்பர் மதுரைக்குமரன் எழுப்பிய கேள்விகளும் என் பதில்களும்..


1) ஆஸ்த்மா என்பது ஒரு நோயல்ல, குறைபாடு என்கிறார்களே உண்மையா?
-(2) இது ஜீன்களின் வழியாக சந்ததியினருக்குப் பரவுகின்றதா?
-(3) இது ஒரு தொற்று நோயா?
-(4) பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளால் இதைக் குணப்படுத்தி விட முடியுமா?
-(5) (அ) ஆஸ்த்மாவிற்கு 'உட்கொள்ளப் படும்' மருந்துகளை விட சுவாசித்தல் மூலம் (puff - inhalers, nebulizers) செலுத்தப்படும் மருந்துகள் மிகச் சரியான பலனளிக்குமா?
-(5) (ஆ) இதனால் பக்க விளைவுகள் குறைவா?



.
.பதில்கள்:
(1) நோய்தான்.
(2) குறிப்பிட்ட ஜீன் என்று (தற்போதைக்கு)சொல்லமுடியாவிட்டாலும்
மரபு வழி வரும் நோய்தான். அதே சமயம் " எங்க பரம்பரையிலேயே
யாருக்கும் இல்லியே, எனக்கு மட்டும் ஏன்" என்ற வசனமும் பொருந்தும் பாதி பேருக்கு.
(3) நிச்சயம் இல்லை. ஒதுக்கி வைக்கும் பாவம் செய்யாதீர்கள் யாரும்.
(4) நிச்சயம் நன்மை பயக்கும். குணப்படுத்துமா என்பது தெரியாது.
நம்பிக்கை எதையுமே சாதிக்கும் என்பது என் நம்பிக்கை.
(5) (அ) குறைந்த அளவு மருந்து சரியான இடத்துக்கு போய்ச்சேருவதால்
இவை மாத்திரை, ஊசிகளை விட மேலானவை. ஆனால், சரியாகப்
பயன்படுத்த, அசிரியர், பயிற்சி தேவை.
(5) (ஆ) குறைந்த மருந்தளவால், பக்க விளைவுகள் குறைவே.

அறிஞர்
25-01-2007, 09:24 PM
தெளிவான பதில்கள் நன்றி... இளசு....

பழைய மன்றத்தில் வேறு எது பற்றி பேசியுள்ளோம்.. அதை இங்கு மாற்றலாமே...

ஓவியா
25-01-2007, 11:00 PM
தேவையான பதிவு
தெளிவான விளக்கம்

நன்றி அறிஞர், நன்றி இளசு

farhan mohamed
26-01-2007, 04:48 AM
நல்ல அருமையான பகுதி அனைவருக்கும் பயனானதாக அமையுமென கருதுகிறேன்.வினாக்களுக்கு தெரிந்தவர்கள் பதில் வழங்கினால் சிறப்பாக அமையும்.

ஆதவா
26-01-2007, 06:24 AM
நண்பரே!! என் நண்பன் ஒருவன் தொடர்ந்து உட்கார்ந்துகொண்டே வேலை செய்தால் மாரடைப்பு வரலாம் என்று சொன்னான்,,,, என்னை பார்த்துதான்.. உண்மையாகவா?

அறிஞர்
26-01-2007, 03:16 PM
நண்பரே!! என் நண்பன் ஒருவன் தொடர்ந்து உட்கார்ந்துகொண்டே வேலை செய்தால் மாரடைப்பு வரலாம் என்று சொன்னான்,,,, என்னை பார்த்துதான்.. உண்மையாகவா?

உட்காரும்போது உடற்பயிற்சி இன்றி... கொழுப்புச்சத்து அதிகரிக்கும்.. அதனால் மாரடைப்பு வரலாம்.. இதை உம் நண்பர் சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன்.

இளசு
26-01-2007, 10:25 PM
பழைய மன்றத்தில் வேறு எது பற்றி பேசியுள்ளோம்.. அதை இங்கு மாற்றலாமே...


ஹெப்படைடிஸ் பி, சி, உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பல தலைப்புகள் அங்கு உள்ளன அறிஞரே..

ஒவ்வொரு கேள்வியாய் வர வர புதிதாகவோ, அங்கிருந்து எடுத்தோ பதியலாம்..

karikaalan
27-01-2007, 05:13 AM
இளவல்ஜி

மைக்ரேன் பற்றி சில சொற்கள் கூறுங்களேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என்னைப் பீடித்திருப்பது இதுவும் ஒன்று எனத் தெரியவந்தபோது, எனது குடும்ப மருத்துவர் Sibilium 10mg ஒரு வில்லை உறங்கச் செல்லுமுன் உண்ணச் சொன்னார். ஆறு மாதங்களுக்குப் பின் மருந்தினை நிறுத்தினார். இரண்டு மாதங்கள் சென்றன. எப்போதாவது தலை காட்டும். மருத்துவரை அணுகியதில், Sibilium 5mg ஒரு வில்லை விழுங்கச் சொன்னார். கடந்த ஆறு மாதங்களாக மருந்தினை அறவே நிறுத்திவிட்டார். மைக்ரேன் தலைவலி அதிகமாக வருவதில்லை... அதாவது மூன்று மாதங்களில் மெதுவாகத் தலை காட்டும். சொல்ல மறந்துவிட்டேன்.. நடுவில் ஒரு முறை MRI Scan செய்து பார்க்கப்பட்டது. தலையில் ஒன்றுமில்லை (!!), அதாவது கட்டிகள் போன்றவை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

===கரிகாலன்

aam537
27-01-2007, 08:29 AM
நண்பர்களே பான்பராக், மானிக்சந்த் சாப்பிடுவதால் என்ன பின் விளைவுள் வரும் விபரம் அறிந்த நண்பர்கள் அறிவுரை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்

இளசு
29-01-2007, 07:52 PM
இளவல்ஜி

மைக்ரேன் பற்றி சில சொற்கள் கூறுங்களேன்..

===கரிகாலன்


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=435

நிச்சயம் அண்ணலே..

மேற்கண்ட (திஸ்கி) திரியில் ஏற்கனவே எழுதியதை இப்போதைக்கு
யூனிகோடில் மாற்றிப்பதிக்கிறேன்...

--------------------------------------------------

ஒற்றைத் தலைவலி

சில உண்மைகள்:

0
ஒரு சமயம் ஒரு பக்கம் வலிக்கும்
ஆனால், ஒருவருக்கே இடது, வலது
என மாறி மாறி வரலாம்.
0
பெயர்க்காரணம்

Hemicranial Headache
பாதித் தலைவலி
இதில் சில எழுத்துக்களைப் பிடுங்கி அமைத்த சொல்.
Migraine

0
ஆண்களில் 100 க்கு ஆறு பேர்
பெண்களில் 100 க்கு 15 பேர் வரை
இதனால் பாதிக்கப்படுகிறார்கள்

0
தலைவலி, குமட்டல், வாந்தி,
(நரம்பு மண்டலப் பாதிப்புகள்)
இவை வெவ்வேறு கூட்டணியில்
ஆனால் ஒரே பாணியில்
மீண்டும் மீண்டும் தாக்கும்.
(நம்ம அரசியல்வா(வியா)திகள் போலவே! )

0
தூண்டுபவை:

பசி
வெயில்/ கூசும் ஒளி
சில உணவு வகைகள் : சாக்லேட்,சைனீஸ் சமையல் உப்பு போன்ற பல
(நீங்களே சங்கர்லால் போல் துப்பறிய வேண்டும்)
மது
மாதவிலக்கு
உறக்கமில்லாமை
பெண்மை ஹார்மோன் மாத்திரைகள் (ஈஸ்ட்ரோஜென்)
கவலை
வாசனைத் திரவியங்கள்
மனச்சோர்வான நிலை (Depression)

0
தடுப்பவை:
நல்ல உறக்கம்
மகிழ்ச்சி
கர்ப்பம்
முறையான மருந்துகள்

0
காரணங்கள் :
மரபுக் காரணங்கள் (முழுதும் அறியப்படவில்லை).

இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது.....

0
தீர்ப்பவை, தடுப்பவை என இருவகை மருந்துகள்
உண்டு. மருத்துவ ஆலோசனையின்படி இவை எடுத்து,
தூண்டுபவை தவிர்த்து
இந்தக் கொடும் வலியில் இருந்து விடுதலை பெற வாழ்த்துகள்.

karikaalan
30-01-2007, 05:38 AM
நன்றிகள், இளவல்ஜி!

முன்னர் படித்ததாக நினைவு இல்லை. மன்னிக்கவும்.

எதனால் என்று இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

===கரிகாலன்

இளசு
31-01-2007, 09:10 PM
அண்ணலுக்கு

பணிச்சுமையால் இந்நோய் பற்றி புதிதாய், விரிவாய் எழுதிப் பதிக்க இயலாமைக்கு நீங்கள்தாம் என்னை மன்னிக்க வேண்டும்..

பெரும்பாலும் இதன் காரணம் தெரியவருவதில்லை..

அடிக்கடி வந்தால் நோய்த்தடுப்பு சிகிச்சை அவசியம்..