Log in

View Full Version : எனது வாழ்வின் கவிதை



தமிழ்பித்தன்
24-01-2007, 03:17 AM
இது வரை தமிழ்மன்றத்தின் இணையப் பகுதியில் மட்டுமே உலாவி வந்த நான் முதலில் இந்தப் பகுதிக்கு வருகிறேன் என வியப்பாக பார்கிறீர்கள் போலும் எமக்கும் மனசுண்டு அதிலே அதிலே சுமையுண்டு என்ன செய்வது அதை முகம் தெரியாத உங்களிடம் தானே கொட்ட முடியும் ஆமாம் எனது வாழ்வில் என்னை பாதிக்கும் விசயங்கள் நடந்தால் உடனே நான் அதை கவிதையாய் கொட்டித் தீர்ப்பது வழக்கம் அதுக்காக நான் கண்ணதாசனே வைரமுத்துவே எனக் கூற வில்லை இங்கே நான் பதிந்துள்ள கவிதைகள் எச்சந்தர்பத்தில் வடித்திருப்போன் எனக்கூறுங்கள் பார்க்கலாம் 24 மணி நேரத்தின் பின் நானே பதில் கூறுவேன்

1) தாமரையில் உள்ளவரை பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை
சேற்றில் விழுந்த பின்பு அது திரும்ப வழியுமில்லை

2) காதலைத் துரத்திக் கொண்டு காததூரம் (நீண்ட) ஓடினேன் திரும்பிப்
பார்த்தேன் காலம் கடந்து விட்டது (ஆமாம் நானும் தேவதாஸ் ஜாதிதான்)

மீதி தொடர்ந்து பதிகிறேன்
கொசுறு:- சத்தியமா எங்கேயும் சுடலேங்க நானாத்தான் எழுதினேன் புடிக்கலே டாச்சரா இருக்குதென்னா சொல்லுங்க நான் இங்கால் பக்கமே தலை வைத்துப் படுக்கமாட்டேன் இணையப் பகுதியோட நின்னுறுறன்

ஷீ-நிசி
24-01-2007, 03:42 AM
1) தாமரையில் உள்ளவரை பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை
சேற்றில் விழுந்த பின்பு அது திரும்ப வழியுமில்லை

2) காதலைத் துரத்திக் கொண்டு காததூரம் (நீண்ட) ஓடினேன் திரும்பிப்
பார்த்தேன் காலம் கடந்து விட்டது (ஆமாம் நானும் தேவதாஸ் ஜாதிதான்)

இரண்டுமே மிக அழகாக உள்ளது பித்தன். தொடர்ந்து பதியுங்கள்

எச்சந்தர்பத்தில் வடித்திருப்போன் எனக்கூறுங்கள் என்று கேட்டிருந்தீர்கள்

முதல் கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே காதல் மறுக்கப்பட்ட பின். (அப்படியென்று நான் நினைக்கிறேன். ஒருவேளை கருத்துக்கள் வித்தியாசப்படலாம்)

காலம் கடந்த பின் உணர்ந்துள்ளீர்கள்!
காதல் கடந்த் பின் உணர்ந்துள்ளீர்கள்!

farhan mohamed
24-01-2007, 04:46 AM
ஷீ-நிசியின் பதிலைத்தான் நானும் சொல்லவருகிறேன்.ஆனால் பனித்துளி என்று கூறியது காதலியையா அல்லது உங்களையா என்று தெரியவில்லை.எப்படியிருந்தாலும் காதலில் தோல்வியின் பின் எழுதியது என தோன்றுகிறது.
பனித்துளி என உங்களைக்குறிப்பிட்டிருந்தால் நீங்கள் காதலியிருக்கும் போது புரியாமல் கிடைக்காமல் போனபின் வருந்துவதைக் காணலாம்.இல்லை காதலியென கருதியிருந்தால் மாற்றமாய் சிந்தித்திருப்பீர்கள். அருமையான வரிகள் சற்று அதிகமாகத்தான் கொடுங்களேன்.

இளசு
24-01-2007, 06:51 AM
நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு , நண்பரே..

உற்சாகமாய் இன்னும் இன்னும் எழுதிப்பதியுங்கள்..

வரவேற்கிறேன்.. வாழ்த்துகிறேன்.

தாமரை இலை பனித்துளி
காலம் இழந்த காதல் ஓட்டம்

இரண்டுமே அழகிய கவிதைக் கூறுகள்..

Narathar
24-01-2007, 11:55 AM
தமிழ் பித்தனுக்குள் புலமைப்பித்தன் ஒருவன் ஒழிந்திருக்கின்றார்.... என்று காட்டிவிட்டது உங்கள் கவிதை......

புலமைப்பித்தனை கொஞ்சம் வெளியே வர வழி விடுங்கள்....

பிச்சி
24-01-2007, 12:31 PM
இது வரை தமிழ்மன்றத்தின் இணையப் ்கள் பார்க்கலாம் 24 மணி நேரத்தின் பின் நானே பதில் கூறுவேன்

1) தாமரையில் உள்ளவரை பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை
சேற்றில் விழுந்த பின்பு அது திரும்ப வழியுமில்லை

காதலில் விழுந்த பின்

2) காதலைத் துரத்திக் கொண்டு காததூரம் (நீண்ட) ஓடினேன் திரும்பிப்
பார்த்தேன் காலம் கடந்து விட்டது (ஆமாம் நானும் தேவதாஸ் ஜாதிதான்)


காதலிலிருந்து எழுந்தபின்

அறிஞர்
24-01-2007, 04:20 PM
காதலுக்கு முன்/பின் எனத்தலைப்பு கொடுக்கலாமோ.....

தங்களின் பெரிதான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.. அன்பரே...

பென்ஸ்
24-01-2007, 08:11 PM
1) தாமரையில் உள்ளவரை பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை
சேற்றில் விழுந்த பின்பு அது திரும்ப வழியுமில்லை

2) காதலைத் துரத்திக் கொண்டு காததூரம் (நீண்ட) ஓடினேன் திரும்பிப்
பார்த்தேன் காலம் கடந்து விட்டது (ஆமாம் நானும் தேவதாஸ் ஜாதிதான்)


(1)
தாமரையில் உள்ளவரை
பனித்துளிக்கு - அதன்
அருமை புரியவில்லை

சேற்றில் விழுந்த பின்பு
அது திரும்ப வழியுமில்லை

(2)
காதலைத் துரத்திக் கொண்டு
காததூரம் ஓடினேன்
திரும்பிப் பார்த்தேன்
காலம் கடந்து விட்டது ...!!!!

நீங்க எழுதியதுதான் தமிழ்பித்தன்...
நாங்க எல்லாம் இப்படிதான்...
ஒரு வரிக்கு கீழே இன்னொரு வரிய போட்டு
கடைசியா ஆச்சரிய குறிய போட்டு அதை கவிதைன்னு சொல்லுவோம்...:rolleyes: :rolleyes: :D :D

ஆனா பாருங்க உங்க எழுத்தை கவிதை இல்லை என்று ஒருத்தன் கூட சொல்லமாட்டான்...
அவ்வளவு அழகா இருக்கு...
ஆனா இன்னும் கொஞ்சம் வார்த்தை மெருகு ஏறனும்... அவ்வளவுதான்...

தமிழ்பித்தன்
25-01-2007, 02:40 AM
எல்லோரும் வந்து பதில் போட்டு அசர வைத்தீர்கள் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் தமிழ்பித்தன் என்றும் அடிமை தாமரையில் உள்ளவரை பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை சேற்றில் விழுந்த பின்பு அது திரும்ப வழியுமில்லை இதிலே நான் பனித்துளிக்கு அதன் அருமை புரியவில்லை என்பது பனித்துளிக்கு தாமரையின் அருமை புரியவில்லை என்பதேயாகும் நான் இதை எச்சந்தர்ப்பத்தில் எழுதியிருப்போன் எனக் கேட்டிருந்தேன்

எல்லோரும் பல விதமாக எழுதினாலும் எல்லோருடைய காதலாகவே இருந்தது ஷீ-நிசி farhan mohamed ஆகியோர் இதை காதல் மறுக்கப்பட்ட பின் எனவும் அறிஞர் காதலுக்கு முன் எனவும் narathar காதலில் விழுந்தபின் எனவும் ஆகியோர் சந்தர்ப்பம் கூற முன்வரவில்லை இதிலே உண்மையில் எல்லோருடைய கருத்தும் என்னுடன் ஒத்துப்போக வில்லை ஏனென்றால்

இது உண்மையில் நான் எழுதிய சந்தர்ப்பம் பக்கத்து வீட்டில் குடியிருந்த அருமையான குடும்பம் பாசமான தாய் தந்தைக்கு அருமையாக ஓரே மகள் என்னுடன் அக்கா போல பழகுவார் காதலித்து ஒருவருடன் ஓடிப்போனார் அவனே குடிகாரன் அவா படும் வேதனையைக் கண்டு எழுதினேன் மற்றையது

காதல் என்பது கருத்து சரி ஆனால் சந்தர்ப்பம் அதுவல்ல நான் காதல் காதல் என படிப்பை கவனம் இல்லாமல் திரிந்தேன் (உயர்தரப்) பரீட்சை நெருங்கும் சந்தர்ப்த்தில் ஞானேதயம் வந்தது ஆனால் இனிபடித்து பரீட்சையில் சித்தியடைவது கடினம் என தெரிந்த போது எழுதினேன்

இளசு
25-01-2007, 08:20 PM
...
நாங்க எல்லாம் இப்படிதான்...
ஒரு வரிக்கு கீழே இன்னொரு வரிய போட்டு
கடைசியா ஆச்சரிய குறிய போட்டு அதை கவிதைன்னு சொல்லுவோம்...:rolleyes: :rolleyes: :D :D

...

ஆஹ்ஹ்ஹ்ஹாஹா..
பென்ஸ் இப்படியா தொழில் ரகசியத்தை
பணால் என போட்டு உடைப்பது..:mad:

தமிழ்ப்பித்தன்

பென்ஸ் சொல்வதுபோல் உங்களுக்கு நல்ல கவிதை எழுதவருகிறது..
தொடர்ந்து எழுதுங்கள்.. நிறைய வாசியுங்கள்.. வாழ்த்துகள்..

மதுரகன்
29-01-2007, 05:27 PM
பயப்படாம எழுதுங்க தமிழ்ப்பித்தன்..
நாங்க ஆதரவு தருகிறோம்...

தமிழ்பித்தன்
30-01-2007, 03:19 AM
மீண்டும் கவிதை வடிக்கும் நேரம் வந்து விட்டது


காதல் ஆழமானதுதான் அதுவே ஒருவனுக்கு
அகழியாகிவிடக் கூடாது

பெண்ணே காதலின் பெயரைச் சொல்லி
அவனை சிதைக்க நினைக்காதே
அவன் காமத்தின் பெயரால்
உன்னை சீரழித்து விடுவான்