PDA

View Full Version : புத்தாண்டு - புதிய நிர்வாகக்குழுஇளசு
23-01-2007, 11:48 PM
அன்பு மன்ற நண்பர்கள் அனைவருக்கும்,

வந்தனம்.

அண்மைக்காலமாக மன்றத்தில் பெருக்கெடுத்தோடும் புத்துணர்வும்
படைப்பு வெள்ளமும் நம் அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

நாளும் புதுவரவு.. நாளும் கவிதை ஊர்வலம்..படைப்புகள், பின்னூட்டங்கள் என திருவிழாக்கோலம்.

தினசரி அறுபதுக்கும் குறையாத அன்பர்களின் வரவு..
அதில் பாதிப்பேர் பதிவுகள் தந்து அலங்கரிப்பது..
என களை கட்டும் காலம்..

இந்த உற்சாகம் இன்னும் பெருக வேண்டும்..

இன்னும் இன்னும் நண்பர்களை, சொந்தங்களை மன்றம்
அழைத்து வாருங்கள்..

தாய்க்கூடு அழைக்கிறது.. மன்றம் வாராமல் மறந்திருக்கும்
பழைய சொந்தங்களை தாய் மடி பாசமாய் அழைக்கிறது..

தமிழ் என்னும் கயிறால் கட்டப்பட்ட அன்பு உள்ளங்களே..

உங்கள் பங்காற்றலால் மட்டுமே மன்றம் இருக்கிறது..இருக்கும்..

அனைவரும் கூடி இந்த இணையத்தேரை இழுப்போம்..
எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பொக்கிஷமாய் இதை வளர்ப்போம்..


இந்த உற்சாக தருணத்தில் , நம் மன்றத்தை வழிநடத்த,
வேண்டுவோருக்கு உதவி செய்து நெறிப்படுத்த

தலைவர் இராசகுமாரனின் வழிகாட்டுதலில் நம் மன்ற நிர்வாகக்குழு
புதுவடிவம் பெறுகிறது.


நம் மன்ற நிர்வாகக்குழுவின் அமைப்பு:

நிர்வாகி - இராசகுமாரன்

இணை நிர்வாகி - அறிஞர்

மேற்பார்வையாளர்கள் - ஆரென், மன்மதன், தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமின்.

மன்ற ஆலோசகர் - மனோஜி,இளசு


நாம் அனைவரும் புதிய நிர்வாகக்குழுவுக்கு நம் அன்பான ஒத்துழைப்பை நல்கி வாழ்த்துவோம்.

- தமிழ்மன்ற நிர்வாகக்குழு.

மன்மதன்
24-01-2007, 07:00 AM
மனோஜி,தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமினுக்கு என் வாழ்த்துகள். இணை நிர்வாகி அன்பு அறிஞருக்கு என் வாழ்த்துகள். மன்றம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

அறிஞர்
24-01-2007, 01:25 PM
மனோஜி, தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமினுக்கு என் வாழ்த்துகள். இணை நிர்வாகி அன்பு அறிஞருக்கு என் வாழ்த்துகள். மன்றம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.
புதிய குழு..புதுப்பொழிவுடன் மன்றத்தைக் கட்ட வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுக்கு நன்றி மன்மதா.....

இன்னும் பல படைப்பாளிகள் மன்றம் திரும்பினால் சிறப்பாக இருக்கும்.

இளசு
24-01-2007, 08:15 PM
பொறுப்புயர்வு பெற்ற மன்ற நாளம் அறிஞருக்கு வாழ்த்துகள்.

புதிய பொறுப்பு பெற்ற அன்பு நண்பர்கள் செல்வன், பிரதீப், பென்ஸூக்கு என் இனிய பாராட்டுகள்.

தொடர்நடை போடும் அன்பின் ஆரென், மன்மதனுக்கு உற்சாகங்கள்..

என் அன்பு முன்னோடி மனோஜிக்கு என் வந்தனமும் வரவேற்பும்

உங்கள் பணியாற்றலில் மன்றம் இன்னும் செழிக்கட்டும்.

புதிய -பழைய மன்ற உறவுகள் இணைந்து
இந்த இணையப்பாலத்தை இன்னும் வலுவாக்குவோம்..

பென்ஸ்
24-01-2007, 08:28 PM
தமிழ் மன்றத்திற்க்கு நன்றி....

அடடே அடடே மன்மதன்... நன்றி மன்மதா...

ஓவியா
24-01-2007, 08:28 PM
நிர்வாகக்குழு சான்றோர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மன்றம் மேன்மேலும் சிறக்க எனது பங்கு அவசியம் உண்டு.

மொழி வளர தங்களுடன் இணந்திருப்பேன்.


ஐய்யா, அல்லாரும் நம்ம கச்சிதான். ;) :D

இளசு
24-01-2007, 08:34 PM
தமிழ் மன்றத்திற்க்கு நன்றி....

...

இனிய பென்ஸ்

உங்களைப்போல ஒரு இனிய வல்லவரை இங்கே அடைந்ததற்கு
ஒத்த அலைவைசை மனவளம் கொண்டவரை நெருங்கியதற்கு
நாங்களல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்..


இன்னும் ஓரிரு நாளில் இராசகுமாரன் உங்கள் தகுதி நிலையை மென்பொருளில் மாற்றி அமைப்பார். அதுவரை பொறுக்கவும்..நன்றி

leomohan
24-01-2007, 08:45 PM
அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழை போற்றுவோம், அறிவை பகிர்வோம், இலக்கியத்தில் இன்பம் காண்போம்.

மதி
25-01-2007, 03:34 AM
அட..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அடுத்த முறை சந்திக்கும் போது ட்ரீட் காத்திருக்கிறது.
ஆவலுடன் ட்ரீட்டை எதிர்பார்க்கும்...

ஷீ-நிசி
25-01-2007, 04:17 AM
http://novaplaza.com/cards/congrats.jpg

மன்றத்தின் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஷீ-நிசியின் அன்பின் வாழ்த்துக்கள்

farhan mohamed
25-01-2007, 06:02 AM
புதிய நிர்வாகக் குழு அனைத்து நம் நண்பர்களையும் அடியேனும் வாழ்த்துகிறேன்.

pradeepkt
25-01-2007, 06:18 AM
அனைவருக்கும் நன்றி!
எங்கள் மேல் நம்பிக்கை வைத்துப் புதுப் பொறுப்பு அளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி!
இப்பொறுப்பை மிகக் கவனத்தோடு நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

poo
25-01-2007, 08:26 AM
சொந்தங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

மனோஜ்
25-01-2007, 08:53 AM
நிர்வாகி - இராசகுமாரன்

இணை நிர்வாகி - அறிஞர்

மேற்பார்வையாளர்கள் - ஆரென், மன்மதன், தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமின்.

மன்ற ஆலோசகர் - மனோஜி,இளசு

ஆனைத்து தலைவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆதவா
25-01-2007, 09:00 AM
எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள்........ (ட்ரீட் எப்போ????)

thoorigai
25-01-2007, 09:23 AM
புத்தாண்டில் புறப்பட்டிருக்கும் புதிய நிர்வாக குழுவினருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

புலரட்டும் புதியதொரு காலை
புனையட்டும் புதிய தீங்கவிதை

புதுக்குழு படைக்கப் போகும் தமிழ்தீனி
எதிர்நோக்கியிருக்கும் மன்ற மாந்தர் நாம்

மயூ
25-01-2007, 09:25 AM
http://novaplaza.com/cards/congrats.jpgஎன்ன ஷி... வித்தியாசமா ஏதோ பார்ட்டி வைக்கப் போறதாத் தெரியுது??? :D

மயூ
25-01-2007, 09:26 AM
புதிய தமிழ் அணிக்கு வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு :)

paarthiban
25-01-2007, 09:34 AM
அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். தூள் கிளப்புங்க. கலக்குற சந்துரு போல எல்லார் பேரையும் நென்சாஇ சொல்லுங்க.

Mano.G.
25-01-2007, 10:00 AM
எதிர்பார்க்கா அன்பு ஷாக்,
மன்ற புதிய நிர்வாக அணிக்கு எனது
வாழ்த்துக்கள்

நிர்வாகி - இராசகுமாரன்

இணை நிர்வாகி - அறிஞர்

மேற்பார்வையாளர்கள் - ஆரென், மன்மதன், தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமின்.

மன்ற ஆலோசகர் - இளசு

உங்களோடு மன்றத்தில் பணியாற்ற வாய்பளித்தமைக்கு
மிக்க நன்றி.

மனோ.ஜி

பாரதி
25-01-2007, 11:41 AM
புதிய பொறுப்பில் பீடு நடை போட்டு, புதுப்பொழிவுடன், புத்துணர்ச்சியுடன் பணியாற்ற அனைத்து நிர்வாகக்குழு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இராசகுமாரன்
28-01-2007, 12:16 PM
புதிய மேற்பார்வையாளர்களான தாமரைச்செல்வன், பிரதீப், பெஞ்சமின் என்ற விண்மீன்களை நிர்வாக வானத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

மனோ.ஜி, ஆரன், மன்மதன் மீண்டும் நமது மன்றத்து நிர்வாக பணியில் சிறக்க வாழ்த்துக்கள்.

மன்றத்தில் அதிகம் பங்களிக்க இயலாததினால் இளசுவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கௌரவமாக ஒதுங்கிக் கொள்ளலாம் என்றால், அவர் அறிஞரை இணை நிர்வாகியாக்கி விட்டு ஆலோசகரமாக மாறிவிட்டாரா, இருக்கட்டும் அடுத்த வருடம் பார்த்துக் கொள்கிறேன்.

பப்பி, சுடர் இருவரும் தற்போது வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்கள், அவர்கள் வரும் போது தக்க நிர்வாக பதவி வழங்கப் படும்.

இளசு
28-01-2007, 12:30 PM
நன்றி தலைவரே

பொறுப்புகள் மாறிமாறி வரும் சம உரிமைச் சோலை நம் மன்றம்..

நம் எல்லோருடைய பட்டங்கள் மாறலாம்..
மன்றத்தில் வைத்த மன ஈடுபாடு மாறாது.

மதுரகன்
28-01-2007, 04:45 PM
புதிய நிர்வாகக்குழுவிற்கு அடியேனின் வாழ்த்துக்களும் உரித்தாகுக...

tamil81
28-01-2007, 05:03 PM
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Mathu
13-02-2007, 11:47 AM
புதிய நிர்வாககுழுவிற்கு என் வாழ்த்துகள்

உங்கள் சேவையில் மன்றம் இன்னும் வளர்ந்து மகிழ்விக்கட்டும்

mukilan
13-02-2007, 04:02 PM
புதிய நிர்வாக குழுவிற்கு எனது இனிய வாழ்த்துக்கள். புதியதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் செல்வன், பென்ஸீ பிரதீப் உங்களுக்கு தனி வாழ்த்துக்கள். மன்மதார்ஜீ, அறிஞர், ஆரென், மனோஜி, இளசு அவர்கட்கு அவர்களது அரும் பணிக்காக பாரட்டுக்கள்.

அறிஞர்
13-02-2007, 04:14 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி...

முகிலன், மதுவை இங்கு கண்டது சந்தோசம். வருங்காலங்களில், தங்களின் பங்களிப்புகள் அதிகரிக்கும் என நம்புகிறேன்.

சேரன்கயல்
15-02-2007, 11:42 AM
நிர்வாக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
வல்லவர்களின் வழிநடத்தலில் மன்றம் இன்னும் வசீகரமாகட்டும்...
சேரன்...

அறிஞர்
15-02-2007, 02:47 PM
நிர்வாக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
வல்லவர்களின் வழிநடத்தலில் மன்றம் இன்னும் வசீகரமாகட்டும்...
சேரன்...
தாங்கள் கூட இருந்தால் இன்னும் வசீகரமாகும்.. நண்பரே...

crisho
02-04-2007, 10:12 AM
நிர்வாக பொறுப்பேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் அடியேனின் பாராட்டுக்களுடனான வாழ்த்துக்கள்!

வெகு தாமதமாக இத்திரியை கண்டதால் தாமதமாகியது என் பதிவு.

தாமடைந்த அடியேனின் வாழ்த்துக்களையும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். :D

அறிஞர்
02-04-2007, 02:48 PM
நிர்வாக பொறுப்பேற்ற அனைத்து சகோதரர்களுக்கும் அடியேனின் பாராட்டுக்களுடனான வாழ்த்துக்கள்!

வெகு தாமதமாக இத்திரியை கண்டதால் தாமதமாகியது என் பதிவு.

தாமடைந்த அடியேனின் வாழ்த்துக்களையும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். :D வாழ்த்துக்களுக்கு நன்றி.
நான் எதுவோ.. தமிழ் புத்தாண்டில் புதுக்குழுவோ என எண்ணிவிட்டேன்.