PDA

View Full Version : கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைக்க



மனோஜ்
23-01-2007, 04:14 PM
அனைவருக்கும் வணக்கம்
கணினியிலிருந்து தொலைபேசிக்கு அழைப்பது எப்படி :confused:
அதற்கு என்ன செய்ய வேன்டும் உதவுகள் நன்பர்களே..

மதுரகன்
23-01-2007, 05:11 PM
நன்பரே இணையத்தகவல்கள் சுட்டிகள் என்ற பகுதிக்கு சென்றுபாருங்கள்..
அங்கு தமிழப்பித்தன் அவர்கள் இலவசபோன் என்ற ஒரு விடயம் கூறியுள்ளார்..

மனோஜ்
23-01-2007, 05:34 PM
மதுகரன் அதில் எப்படி என்று கூற படவில்லை சற்று விளக்கமாக தரஇயலுமா

தமிழ்பித்தன்
24-01-2007, 02:25 AM
ஆமாம் மனோஜ் நான் அதிலே எதைப் பயன் படுத்தலாம் என்று தான் கூறியிருக்கிறேன் எப்படி கணனியிலிருந்து போனுக்கு அழைப்பது என்று கூறுகிறேன் நீங்கள் இவ்விசயத்தில் தொட்டில்பிள்ளையாட்டம் இருப்பதால் விரிவாக கூறுகிறேன்
தேவையான பொருட்கள்
1அகலக்கற்றை இணையம்
2 mic
3 speker
http://www.globe7.com (http://www.globe7.com) முதலில் இலகுவானதை பயன்படுத்திப் பாருங்கள் எனும் தளத்தில் இருக்கின்ற மென்பொருளை இறக்கி உமது கணனியில் நிறுவவேண்டும் அப்படி நிறுவி முடியும் தறுவாயில் உம்மை பதிந்து கொள்ளுமாறு விண்ணப்பம் வரும் அதை பூர்த்தி செய்தால் உமது நிறுவல் பூர்த்தியாகும் பின்பு உமது ஆகியவற்றைக்கொண்டு யாகூ messeger உள்நுழைவது போல் உள் நுழைந்து நீர் விரும்பும் தொலைபேசிக்கு அதில் காட்டப்பட்ட இலக்கத்தைக் கொண்டு டயல் செய்து கதைத்து மகிழுங்கள்
கொசுறு;- இதைப் பயன்படுத்தி கணினியில் வீடியோ காட்சிகளை பார்க்கலாம் அதைப் பார்க்க பார்க்க உங்களுக்கு உங்கள் balance கணக்கில் கூடும் இதில் வேறு பல சேவைகளும் உண்டு
(அந்தந்த தளத்துக்கு அவரவர் தரும் மென்பொருளையே பயன்படுத்துங்கள் )

மனோஜ்
24-01-2007, 01:18 PM
இந்த தொட்டில்பிள்ளைக்கு கற்று கொடுத்த ஆசானே வாழ்க வாழ்க

மனோஜ்
25-01-2007, 07:39 AM
தமிழ் பித்தன் அவர்களே கிலோப்7 இலவச நேரம் இவர்கள் கொடுப்பதில்லை
ரிச்சார்ச் செய்ய என்ன செய்ய வேன்டும்

மதுரகன்
27-01-2007, 05:11 PM
நீங்கள் www.freecalls.com இல் உள்ள மென்பொருளை பதிவு செய்து
பயன்படுத்துங்கள் அங்கு வரையறுக்கப்பட்டபெரிய நாடுகளுக்கு
இலவச அழைப்புகளை கொடுக்கிறது...
அதனை இறக்கி உங்கள் தொலைபேசி இலக்கமொன்றை பதிவு செய்துவிட்டு அழைப்பை ஏற்படுத்தலாம்...

மனோஜ்
28-01-2007, 04:37 PM
மதுரகன் நீங்கள் கொடுத்த சுட்டியிலும் அவர்களிடம் கிரடிட் காட் மூலம் வாங்ககும் வாடிக்கையருக்கு மட்டும் வாங்கும் நேரத்தை பொருத்து இலவச நிமிடம் கொடுக்க படுகிறது
என்னிடம் கிரடிட் காட் கிடையாது இதற்கு ஒரு வழி கூறுங்கள்

மதுரகன்
28-01-2007, 04:43 PM
அப்படியெதுவும் இல்லை மனோ..
முதலில் நீங்கள் அந்த பைலை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்..
பின்னர் உங்கள் பெயர் வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றை பதிவிட்டபின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்த அழையுங்கள்..
நான் அழைத்து பார்த்துவிட்டேன் வேலைசெய்கிறது...

அடுத்து எந்தெந்த நாடுகளுக்கு இலவசம் எனறு அவர்கள் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள்...

மனோஜ்
28-01-2007, 07:03 PM
Free internet phone service
Internet phone service
IP telephony
Cell phone plan
Calling card international
Internet phone calling
VOIP telephony
Cable internet phone
Free phone calls from internet
Cellular phone rental

இதில் எந்த பகுதி

Gurudev
29-01-2007, 02:47 PM
Free International Calls From Your Phone
Freecallplanet.Com connects your phone to 40 countries via the internet.


www.freecalls.com என்ற தளம் கொடுத்த Popular Link மூலம் Freecallplanet என்ற தளத்திற்கு (கம்பனிக்கு) போய் பார்த்தேன். அவர்கள் இலவச இணைப்பு கொடுப்பது உண்மைதான். அமெரிக்காவில் உள்ள அந்த கம்பனியை கனடாவிலிருந்து தொடர்பு கொள்ள நிமிடத்திறிற்கு 8 சதத்தை நான் எமது உள்ளூர் கம்பனிக்கு செலுத்தவேண்டும். தொடர்பு கொண்டபின் அவர்கள் அமெரிக்காவிலிருந்து வேறு நாடுகளுக்கு இலவசமாக இணையம் மூலம் இணைப்பை தருகிறார்கள். உ.ம்; அவுஸ்திரேலியா. ஆனால் நான் எனது வீட்டு போனில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நேரடியாக எனது Rogers போனில் பேச 10 சதம் தான் செலவு. நேரடி போன் லைனில் தெளிவும் கூட.

இந்த இலவச சேவை மூலம் இரண்டு சதம்தான் இலாபம், அத்தோடு தெளிவும் குறைவு. எனவே ஏன் இந்த கஷ்டமெல்லாம் என்பதுதான் எனது அபிப்பராயம். இலவசம் எனில் PC to PC, Yahoo Messenger or MSN Messenger மூலம்தான். மற்றைய எல்லாம் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வழி

அறிஞர்
29-01-2007, 03:31 PM
தகவல்களுக்கு நன்றி குருதேவ்....

புதிய தகவல்கள் கிடைக்கும்பொழுது கொடுங்கள்...

தாங்கள் பெற்ற இன்பம்
இவ்வையகம் பெறட்டும்.

குஹப்ரியன்
29-01-2007, 03:44 PM
ஸ்கைப் தெள்ளத்தெளிவாக உள்ளது, வழமையாக VOIP தொலைப்பேசிகளில் வருவதுப்போல் கால இழுவை எதும் இல்லை. யாஹூவில் தெளிவாக இருந்தாலும் கால இழுவை உள்ளது. குளோப்7 ஸ்கைப் அளவு சிறந்தது மற்றும் கட்டணமும் மிகக்குறைவு (குறிப்பாக ஹாங்காங்குக்கும், கனடாவுக்கும் நிமிடத்திற்கு 25 காசுகள் மட்டுமே)

மதுரகன்
29-01-2007, 05:13 PM
மன்னிக்கவும் முகவரி தவறாக கொடுத்துவிட்டேன்...
இந்த முகவரியை பார்வையிடவும் www.freecall.com
(முதல் கொடுத்தது -www.freecalls.com)

Gurudev
29-01-2007, 09:27 PM
ஸ்கைப் தெள்ளத்தெளிவாக உள்ளது, வழமையாக VOIP தொலைப்பேசிகளில் வருவதுப்போல் கால இழுவை எதும் இல்லை. யாஹூவில் தெளிவாக இருந்தாலும் கால இழுவை உள்ளது. குளோப்7 ஸ்கைப் அளவு சிறந்தது மற்றும் கட்டணமும் மிகக்குறைவு (குறிப்பாக ஹாங்காங்குக்கும், கனடாவுக்கும் நிமிடத்திற்கு 25 காசுகள் மட்டுமே)

"குறிப்பாக ஹாங்காங்குக்கும், கனடாவுக்கும் நிமிடத்திற்கு 25 காசுகள் மட்டுமே" என்கிறீர்கள் எந்த நாட்டிலிருந்து என்பதை குறிப்பிட மறந்துவிட்டீர்கள். காசு என்பது எந்த நாட்டு காசு என நாம் ஊகிக்க வேண்டியுள்ளது.
யாராவது இலவசமாக தந்தால் வேண்டாம் என்று இல்லை. பயனடைய வேண்டியதுதான் என்பதில் எனக்கும் சம்மதம்.

தமிழ்பித்தன்
30-01-2007, 02:13 AM
ஐயா குருதேவ் அவர்களே இது phone to phone கிடையாது pc to phone ஆகும் ஆகவே எந்த நாட்டிலிருந்து கதைத்தாலும் ஆதெ கட்டணம் தான் இதே இழையில் தானே மேலே விளக்கியுள்ளேன்.

மனோஜ்
30-01-2007, 08:10 AM
மன்னிக்கவும் முகவரி தவறாக கொடுத்துவிட்டேன்...
இந்த முகவரியை பார்வையிடவும் www.freecall.com
(முதல் கொடுத்தது -www.freecalls.com)
மதுரகன் இந்த இதிலும் சவுதியிலிருந்து அழைப்பதாலே என்னவே
ரிசார்ச் செய்யவும் என்று வந்து விட்டது:rolleyes:

பார்போம் யார் தான் இதற்கு தீர்வு கூறுகிறார்கள் என்று...

Gurudev
31-01-2007, 06:29 PM
அப்படியெதுவும் இல்லை மனோ..
முதலில் நீங்கள் அந்த பைலை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்..
பின்னர் உங்கள் பெயர் வீட்டு தொலைபேசி எண் போன்றவற்றை பதிவிட்டபின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்த அழையுங்கள்..
நான் அழைத்து பார்த்துவிட்டேன் வேலைசெய்கிறது...

அடுத்து எந்தெந்த நாடுகளுக்கு இலவசம் எனறு அவர்கள் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள்...

Freecall.com

மனோஜ் கூறுவதிலும் உண்மையுண்டு. நான் இந்த Freecall மென்பொருளை இறக்கி நிறுவி பார்த்தேன். அழகான இடை முகப்பு; ஓசை தெளிவு நன்று; பாவனைக்கு இலேசு. போன் நம்பரை ரைப் செய்துவிட்டு Enter கீயை தட்டியவுடன் ring பண்ணுகிறது. மாறாக டயல் பாட் இல் உள்ள இலக்கங்களை கிளிக் செய்துவிட்டு பச்சை நிற டயல் பட்டனை கிளிக் பண்ண Ring பண்ணுகிறது. அதுமட்டுமல்ல Call பண்ணுகிற ஒவ்வொரு இலக்கத்தையும் பட்டியல் இடுகிறது, பிழையான இலக்கங்களை அழைத்தால் Invalid Number என கூறுகிறது, Your Party did not answer your call என்கிற விபரங்களையும் தருகிறது. ஆனால் விளம்பரப்படுத்துகிறபடி இலவசம் என்று இல்லை.

எனது முதல் முயற்சி தோல்வி. பின் Help ஐ படித்து அதிக விபரம் அறிந்துகொண்டு லண்டனுக்கு செய்த இரண்டாவது முயற்சி பலனை தந்தது. பேசிக்கொண்டு இருக்கும்போது சரியாக 5 நிமிடத்தில் தொடர்பு அறுந்து போனது. Redial பண்ணி மீண்டும் தொடர்பு கொண்டு பேசியபோது மீண்டும் 5 நிமிடத்தில் தொடர்பற்று போனது. மூன்றாவது முறையாகவும் 5 நிமிடம் மாத்திரம்பேசினேன். இப்படி 5 நிமிடத்திற்கு ஒரு தடவை தொடர்பு அற்றுபோகிறது. இந்நிலையில் History பட்டனை கிளிக்பண்ணி பார்த்தபோது The maximum free calls has been reached என்றது, More information ஐ கிளிக் பண்ணியபோது கீழ் காணும் செய்தி காணப்பட்டது. சிறிது பணம் வைப்பில் இட சொல்கிறது

You have reached the maximum number of free trial calls (30)

Now it's time to upgrade your FreeCall account and make UNLIMITED calls to our free* destinations. All you have to do is make a small credit deposit. Your deposit will remain intact as long as you call the free* destinations.
You can use your credit if you want to call destinations that are not free, for instance mobile phones.
Just sign in to your account using your username and password. If you do not have a username, please download the FreeCall application to create one. (30)

இன்னொரு இடத்தில் இப்படி சொல்கிறது

Free* calls with FreeCall

Not only can you call your online friends for free, FreeCall also offers free* calls to any regular land-line in various popular destinations (see panel).

To counter misuse of our network we have limited these free* calls for our trial users. If you want to enjoy longer free* calls to these destinations, just top up your account by buying credit.

FreeCall Freedays
Buying credit entitles you to 90 Freedays (unless stated otherwise). This means you can call all countries marked as "Free" in our rates list for a period of 90 days at no costs. When the 90 days are over, the normal rate will be charged for these destinations. You can get more Freedays by topping up your account with credit.

வைப்பிலிட்டாலும் 90 நாட்களுக்குத்தான் இலவசமாம். பின்பு அமெரிக்காவிற்கு எனது நண்பர் ஒருவருக்கு அழைப்பு எடுத்தேன். Ring போகிறது ஆனால் மறுமொழி இல்லை. The other party did not answer your call என செய்தி காட்டப்பட்டது. உடனே போன் லைனில் தொடர்பு கொண்டேன். தொடர்பு ஏற்பட்டது. கேட்டபோது இதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் Ring வரவில்லை என்றார். அடுத்து Australia விற்கு ஒருவருக்கு அழைப்பு எடுத்தேன். அந்நேரம் அவர்களுக்கு இரவு 10.30 மணி. அந்த அழைப்பிற்கும் The other party did not answer your call என்ற பதில்தான் கிடைத்தது.


இணையத்தில் 95 வீதமான கம்பனிகளும் பணம் சம்பாதிக்கவே முயால்கின்றன. Free என்கிற வார்த்தை கடலில் போடப்பட்ட தூண்டிலில் சொருகப்பட்ட இறால். சில கம்பனிகள் (SourceForge.Net போல) மாத்திரம் இலாப நோக்கற்று செயல் படுகின்றன.

ஆனால் yahoo, hotmail, skype, Freecall போன்ற எல்லா கம்பனிகளும் கணனியிலிருந்து கணனிக்கு இலவசமாக இணைப்பு தருகின்றன என்பது உண்மை. அது அக்கம்பனிக்கு செலவை ஏற்படுத்தாது. ஆனால் Land phone க்கு இணைப்பை கொடுக்கும்போது போன் கம்பனிக்கு பணம் செலுத்தப்பட்டாக வேண்டும். அல்லது அவர்கள் சில போன் லயின்களை குத்தகைக்கு எடுத்து பின் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும். இது நீண்டகாலத்தில் கட்டுப்படியாகாது. எனவேதான் இவர்கள் Free என்ற சொல்லைக்காட்டி எம்மை வளைத்து போடப்பார்க்கிறார்கள்.

சரி Freecall கம்பனி கேட்பதுபோல் பணத்தை வைப்பிலிட்டு அவர்கள் முலம் Call எடுப்பது எப்படி என்று பார்த்தேன். நாம் வெளிநாட்டு அழைப்பு எடுப்பது அதிகமாக இலங்கை மற்றும் இந்தியாவிற்குத்தான். இக்கம்பனியின் கட்டண பட்டியலின்படி இலங்கைக்கு கனடா பணதில் 15 சதம். ஆனால் போன்காட் பாவிக்கும்போது 12 சதம் சிலவேளைகளில் 10 சதமும் முடிகிறது.

எனது அனுபவங்களையும் கருத்தையும் எழுதியுள்ளேன். யாருக்கும் எதிராகவோ மாறாகவோ அல்ல.

அறிஞர்
31-01-2007, 06:34 PM
கூடுதல் தகவலுக்கு நன்றி.. குருதேவ்....

இலவச போர்வையில் பலரை சிக்கவைக்க எல்ல இடங்களிலும் மாயங்கள்.

ஆதவா
31-01-2007, 06:34 PM
விபரங்கள் தெளிவாக இட்டமைக்கு நன்றி குரு....

மனோஜ்
01-02-2007, 07:39 AM
குறுதேவ் அவர்கலே மிக நன்றி நான் இந்தியாவிற்கு மட்டும் தான் முயற்சி செய்தேன் அனால் நீங்கள் எல்லா நாட்டிற்கும் முயற்சி செய்துபார்த்திருக்கிறிர்கள் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

ஷீ-நிசி
01-02-2007, 08:02 AM
அனைவருக்கும் பயன்படும்படியான விளக்கம் நண்பர் குருதேவ் அவர்களே!

மதுரகன்
01-02-2007, 03:30 PM
ஆமாம் குருதேவ் நானும் அனுபவப்பட்டுவிட்டேன்....
குறிப்பிட்ட அளவு மட்டுமே இலவசமாம்...
ஆனால் ஒன்று மில்லாத நிலைக்கு இது பரவாயில்லையே...

நீங்கள் பல user பெயர்களில் செல்லவழியுள்ளதே...

மனோஜ்
01-02-2007, 07:29 PM
மதுரகன் இதன் மூலம் இந்திய அழைக்க வாய்ப்பு எதாவது தென்பட்டால் மறக்காமல் இங்கு கூறவும் எப்படி என்று

குஹப்ரியன்
06-02-2007, 03:20 PM
குரு, நான் சொன்னது இந்திய நாணயத்தில் கால் ரூபாய்(25 பைசா). அமெரிக்க சென்ட் 0.57

rjau
04-03-2007, 11:57 AM
இந்த தளத்துக்கு சென்று பருங்கள் http://www.voipstunt.com/en/index.html