PDA

View Full Version : வேடந்தாங்கல் போட்ட மாறுவேடம்!!!lenram80
22-01-2007, 09:52 PM
அடி! வேடந்தாங்கல் போட்ட மாறுவேடமே!
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரியே!
சிரிப்பால் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டமே!

தமிழுக்குப் பிறந்த தமயந்தியே!
80 -க்கு முன்னால் வரை தமிழ் - கன்னித் தமிழ்!
நீ பிறந்த பின்பு -
தமிழ் ஆனது தாயாய் அனைவருக்கும்!
'மாமி'யானது எனக்கு மட்டும்!

நீ ஆடை கட்டி வந்த ஒரு நிலவா?

ஒரே ஒரு நிலவோடு உன்னை ஒப்பிட்டால்
அது வஞ்சப் புகழ்ச்சி!
பிறகென்ன!
பிரபஞ்ச நிலாக்களே மாநாடு நடத்தி
அதன் மகாராணி - நீ என்ற பிறகு
ஒரே ஒரு நிலவோடு உன்னை ஒப்பிட்டால்
அது வஞ்சப் புகழ்ச்சி தானே!

வள்ளுவனின் நெறிமுறைகள்!
கம்பனின் கற்பனைகள்!
ரவி வர்மாவின் ஓவியங்கள்!
பாரதியின் கவிதைகள்!
காந்தியின் அஹிம்சா!
மழலையின் சிரிப்பு!
பூக்களின் அழகு!
மான்களின் துள்ளல்!
குயிலின் குரல்!
கொஞ்சம் நுனி மூக்கு கோபம்!
சொன்னவை அனைத்தையும்
சோதனைக் குழாயில் போட்டு
சொர்க்கத்தில் வைத்து
98.6 F-ல் ஆராய்ந்த போது
அவதரித்தவளே!

உன் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு
மேகம் எட்டிப் பார்த்தது!
'நம்மை விடுத்து பூமியில் யார் மழை பெய்வது?' என்று!
மேகத்தை ஏமாற்றிய மேகலையே!
நீ என் வாழ்க்கை துணையானால் தேவலையே!

இளசு
22-01-2007, 10:09 PM
தலைப்பு வரி புதுமையான அசத்தலென்றால்
தமிழ்-மகளைக் காதலித்த உறவால்
தமிழை மாமியாக்க விழைந்த துணிச்சலுக்கு பாராட்டுகள்.. லெனின்..


அழகுப்பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்றே அர்த்தம் - வைரமுத்து..
அழகுத்தமிழ் என்று அர்த்தம் - நம்ம லெனின்..

Narathar
23-01-2007, 01:12 AM
ஆதவாவின் அணல் தெரிக்கும் கவிதையை வாசித்துவந்த எனக்கு......
இதமூட்டியது உங்கள் கவிதை..............
இப்படியும் எழுதலாம்............
அப்படியும் எழுதலாம்......................

என்னால் வாசிக்க மட்டுமே செய்யலாம்!!!! நாராயணா!!

கட்டுப்பாட்டாளர்களே........
கவிப்பகுதியின் கடைசி நாளை சொல்லுங்கள்!
அன்று நான் ஒரு கவி எழுத வேண்டும்

மதுரகன்
23-01-2007, 04:36 PM
நாரதரே நொடிக்கு நொடி வாயைத்திறந்து "நாராயணா" எனும் கவிதையை உதிர்க்கிறீர்கள்தானே தனியாகவேறு ஏன்..

மதுரகன்
23-01-2007, 04:37 PM
நண்பர் லெனின் அவர்களே..
ஒவ்வொரு பரிணாமத்திலும் கவிதை எழுதிவரும் உங்களது புதிய பரிணாமமோ இது..
வியக்கவைக்கிறது..
வித்தியாசமான நடை..
வாழ்த்துக்கள்..

leomohan
23-01-2007, 04:39 PM
வித்தியாசமான தலைப்பு, கவிதை, தொடரும் லெனின்.

ஆதவா
23-01-2007, 04:58 PM
அடி! வேடந்தாங்கல் போட்ட மாறுவேடமே!
சொர்க்கத்துக்குச் சொந்தக்காரியே!
சிரிப்பால் பூத்துக் குலுங்கும் சிங்காரத் தோட்டமே!

முதலில் ஒரு சபாஷ்............. தமிழ் மகள் காதல்......... வித்தியாசம் மெருகேறிவருகிறது கவிதைகளில்...

தமிழுக்குப் பிறந்த தமயந்தியே!
80 -க்கு முன்னால் வரை தமிழ் - கன்னித் தமிழ்!
நீ பிறந்த பின்பு -
தமிழ் ஆனது தாயாய் அனைவருக்கும்!
'மாமி'யானது எனக்கு மட்டும்!

தமிழ்மகளை காதலிக்கும் உமக்கு மாமி ஆனது என்று சொன்ன வரிகள் ஒரு இச்""""

நீ ஆடை கட்டி வந்த ஒரு நிலவா?

ஒரே ஒரு நிலவோடு உன்னை ஒப்பிட்டால்
அது வஞ்சப் புகழ்ச்சி!
பிறகென்ன!
பிரபஞ்ச நிலாக்களே மாநாடு நடத்தி
அதன் மகாராணி - நீ என்ற பிறகு
ஒரே ஒரு நிலவோடு உன்னை ஒப்பிட்டால்
அது வஞ்சப் புகழ்ச்சி தானே!

ஆமாமாம்.. வஞ்சமேதான்..

வள்ளுவனின் நெறிமுறைகள்!
கம்பனின் கற்பனைகள்!
ரவி வர்மாவின் ஓவியங்கள்!
பாரதியின் கவிதைகள்!
காந்தியின் அஹிம்சா!
மழலையின் சிரிப்பு!
பூக்களின் அழகு!
மான்களின் துள்ளல்!
குயிலின் குரல்!
கொஞ்சம் நுனி மூக்கு கோபம்!
சொன்னவை அனைத்தையும்
சோதனைக் குழாயில் போட்டு
சொர்க்கத்தில் வைத்து
98.6 F-ல் ஆராய்ந்த போது
அவதரித்தவளே!

அடுக்கி வைத்த காய்கறிகளை வேகவைத்து சுவைத்ததுபோல எழுத்துக்களின் ஆக்கம் அருமையாக இருந்தது.. கடைசி வரிகள் நச்"""

உன் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு
மேகம் எட்டிப் பார்த்தது!
'நம்மை விடுத்து பூமியில் யார் மழை பெய்வது?' என்று!
மேகத்தை ஏமாற்றிய மேகலையே!
நீ என் வாழ்க்கை துணையானால் தேவலையே!

வருணனை...... வருணனை வைத்து... சபாஷ் லெனின்.. கவிதைகள் சிலருக்கு கைகளில் வரும். சிலருக்கு நாக்கிலே வரும்............ சிலருக்கு உள்ளத்திலே வரும்..... உமக்கு எங்கே இருந்து வருகிறதென்பதே தெரியவில்லை.............

வாழ்த்துக்கள்

Narathar
26-01-2007, 12:10 AM
நாரதரே நொடிக்கு நொடி வாயைத்திறந்து "நாராயணா" எனும் கவிதையை உதிர்க்கிறீர்கள்தானே தனியாகவேறு ஏன்..

அப்படியா.......................
அது உங்களுக்கு கவிதையாகவா படுகிறது?
அப்பாட எனது கவிதையையும் ரசிக்க ஒரு ரசிகர் கிடைத்தாரே......

பிச்சி
26-01-2007, 07:18 AM
கவிதை அருமையா இருக்கிறது.

lenram80
27-01-2007, 06:30 PM
என்னோடு வேடந்தாங்கலுக்கு வந்த அத்தனை பேருக்கும் நன்றி

aren
28-01-2007, 04:43 AM
தமிழையே மாமி என்று உங்களை கூப்பிடவைத்த,
மேகத்தையே எட்டி பார்க்கவைத்த அந்த பேரழிகி உங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வர என் வாழ்த்துக்கள்.

கவிதை புதுமையாக இருக்கிறது, அதில் கொஞ்சம் துணிச்சலும் தெரிகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
28-01-2007, 10:19 AM
லேனின்

ரொம்ப துணிச்சல்தான் உங்களுக்கு

கவிதை தூள்'பா

பாராட்டுக்கள்

ஷீ-நிசி
28-01-2007, 10:43 AM
தமிழுக்குப் பிறந்த தமயந்தியே!
80 -க்கு முன்னால் வரை தமிழ் - கன்னித் தமிழ்!
நீ பிறந்த பின்பு -
தமிழ் ஆனது தாயாய் அனைவருக்கும்!
'மாமி'யானது எனக்கு மட்டும்!மேகத்தை ஏமாற்றிய மேகலையே!
நீ என் வாழ்க்கை துணையானால் தேவலையே!

சபாஷ் லெனின்.... அட்டகாசமான வரிகள்....

மதுரகன்
28-01-2007, 04:47 PM
அப்படியா.......................
அது உங்களுக்கு கவிதையாகவா படுகிறது?
அப்பாட எனது கவிதையையும் ரசிக்க ஒரு ரசிகர் கிடைத்தாரே...
வேறு என்ன செய்வது இப்படி ஏதாவது கூறினால்தானே நாம் தப்பிக்க முடியும்... :D :D :D