PDA

View Full Version : என்ன உலகமிது?



ஆதவா
22-01-2007, 04:00 PM
நண்பர்களே வேலை நிமித்தமாக மன்றம் அவ்வளவாக வரமுடியாமலும் சிலர் கவிதைகளுக்கு விமர்சனம் எழுத முடியாமலும் நேரிட்டது.... மன்னிக்கவும்...

இந்த கவிதை என் எண்ணத்தில் திடீரென்று உதித்ததும் அப்படியே எழுதினேன்.. (மோகன் கவிதைகளின் தாக்கம்) வேலை வந்ததும் விட்டு விட்டேன்.... பாதியில் எழுதி மீண்டும் தொடங்க என்னால் இயலவில்லை.....

கவிதை வார்த்தைகள் உங்கள் மனதை நோகுமானால் கவிதையை பண்பட்டவர் பகுதிக்கோ அல்லது கவிதையை முழுவதுமாக அழித்துவிடவோ உங்களுக்கு உரிமை உண்டு....... ஆனால் எண்ணத்தில் உதித்ததை என்னால் மன்றத்தில் கொண்டுவராமல் இருக்க முடியவில்லை... மன்னிக்கவும்... கவிதையை படிக்கவும்..

சிருங்கார பவுடர் பூசிக்கொண்டு
அகோரப் பற்களின் நகைப்பில்
தெருப்பெண்களை நசிக்கிறார்கள்
அடங்கலில்லா காழ்புணர்வு கையில்
கொட்டமடிக்க, காமம் மிகுதியிலே
தாயும் நசுங்குகிறாள் இவர்களின்
புளுத்துப் போன மூளையினால்


நானிருக்கிறேன் கவர்ச்சிக்கென
ஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து
சூனியம் செய்கிறார்கள்
வெந்தும் வேகாத நடிகைகள்
என்றாவது ஒருநாள் குடிக்காமல்
இருந்துவிட்டு, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய
கூளைத் தன்மையுள்ள கூனிகள்


பாட்டிலிலே குடி குடியைக் கெடுக்கும்
குடித்தபின் குடி கொடையைக் கொடுக்கும்
நாசமும் நாய்பிறப்பும் குடியிலே மூழ்கி போகிறது
தாலியும் தன் பெண் டாட்டியும் அடகிலே போகிறது
போலியும் புளுகும் தண்ணீரிலே
வேசிப் பொழப்பு கண்களிலே
வெறும் பேச்சுக்கு வாழும் பண்டாரங்கள்


பொறுத்துப் போய் தனியார் ஆசுபத்திரிக்கு
போனால், டாக்டரோ
வெறுத்துப் போய் நோயாளியைப் பார்த்து
லட்சம் கொண்டுவா என்பான்
கறுத்துப் போன இவன் வாயில்
நாம் கொடுத்தும் சாவான் நோயாளி
அறுத்துப் போகாது போகிறோம்
அவன் பிறப்பு உரிமையை
ஊனமுற்ற பிணமாய் உட்காருவான் ஈஸி சேரில்
கொழுத்துப்போன கிழட்டுக் கழுதைகள்


மொட்டையடித்து மூளியாக்கி
பொட்டைப் பயல்கள் காரில் போவார்கள்
துட்டை எடுத்து ஏழைக்குத் தரா நீசர்கள்
விட்டைத் தின்னும் பன்றிகள்
எங்காவது ஷாப்பிங் சென்றால்
துட்டு இறைப்பார்கள் தண்ணீராய்
கொட்டமடிக்கும் புலையர்கள்*


என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!

எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!





* புலையர்கள் என்றால் கீழ்சாதி..... ஜாதியைக் குறிப்பிடவில்லை..........

இளசு
22-01-2007, 11:10 PM
கவனி,
உள்வாங்கு,
கருத்து கொள்,
சொல்லத்தக்கதை/ சொல்லியாக வேண்டியதைக் கருவாக்கு,
மொழி செதுக்கி கவிதையாக/படைப்பாக உருவாக்கு

- சமூகப் பிரக்ஞை உள்ள படைப்பாளிகளின்
படைப்புகள் கடந்துவரும் படிகள் இவை.

நல்லவற்றைச் சிலாகித்துப் பெருக்க விழைதல் ஒரு விதம்..
அல்லவற்றைச் செருப்பாலடித்து விரட்ட விழைதல் மறுவிதம்..

கட்டியை அறுக்கும்போது
சீழும் நிணமும் கருங்குருதியும் சேர்ந்த
வீச்சமும் அருவருப்பும் விரவத்தான் செய்யும்..


ரணசிகிச்சை செய்யும் ஆதவாவின் மனவன்மைக்குப் பாராட்டுகள்..

ஆனால் - அழிந்து போவதல்ல இதன் விடை..

நாளை அடுப்பில் வேகப்போகும் அடுக்களை வெங்காயமும்
சோலை முளை விட்டு இன்று சொல்லும் சேதி உண்டு..

இறுதிவரை விதிக்கப்பட்ட கடமையைச் செய்..

சங்குகள் சேர்ந்து தொடர்ச்சியாய் ஊத
என்றாவது விடிந்துதானே ஆகவேண்டும்?

Narathar
23-01-2007, 01:07 AM
ஆதவா..............

உங்களைப்போன்ற ஒவ்வொருவரது கோபப்பொரிகளூம் ஒரு நாளில் பெரு நெருப்பாகாதா?? என்று ஏங்குபவர்களில் நானும் ஒருவன்..............

நீங்கள் செத்துப்போகலாம் என்கின்றீர்கள்........

ஆனால் நாங்கள் எல்லோருமே செத்து செத்து வாழ்கின்றோம்!

ஆதவா
23-01-2007, 05:55 AM
கவனி,
உள்வாங்கு,
.........................................................
இறுதிவரை விதிக்கப்பட்ட கடமையைச் செய்..

............................................
என்றாவது விடிந்துதானே ஆகவேண்டும்?

நீங்கள் சொன்னது உண்மைதான்......... என்றாலும் எதுவும் செய்யாமல் ஒரு பிண்டமாக இருப்பதற்கு அழிந்துபோவது மேல் என்று கருதுகிறேன்.....

நன்றி,...........

ஆதவா
23-01-2007, 05:58 AM
ஆதவா..............

உங்களைப்போன்ற ஒவ்வொருவரது கோபப்பொரிகளூம் ஒரு நாளில் பெரு நெருப்பாகாதா?? என்று ஏங்குபவர்களில் நானும் ஒருவன்..............

நீங்கள் செத்துப்போகலாம் என்கின்றீர்கள்........

ஆனால் நாங்கள் எல்லோருமே செத்து செத்து வாழ்கின்றோம்!

நாரதரே!! உண்மை அதுதான்.................. இளசு அண்ணன் அதையே வலியுறுத்தினார்..........

என் கருத்து........ செத்து செத்து வாழ்வது என்பது முழுவாழ்கை அல்ல... முழுவதுமாய் அனுபவத்து வாழுவது வாழ்க்கை அல்ல......... எனக்கு முழுவாழ்க்கை கிடைக்கவேண்டும் அல்லது.. செத்துப் போகவேண்டும்.......... (கவிதைக்குப்பா!! என் வாழ்க்கை திருப்திதான்... ஆனால் என்ன செய்ய சமூகம் இப்படி இருப்பதைப் பார்த்து ஒரு பிண்டமாகவே இருக்கிறேன்..... சாக துணிவில்லாமல்.... அதுதான் உண்மை. அது செய்தேன் இது செய்தேன் என்பது விளம்பரம்... எது செய்தாய் என்பது உண்மை. )

மதுரகன்
23-01-2007, 04:33 PM
சுருக்கமாச்சொன்னால் பல வார்த்தைகள் ஆழமாக நெருடுகின்றன..
இதோ

என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!

எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!


அற்புதமான சிந்தனைகள்..
வாழ்த்துகிறேன் ஆதவா..
சிந்தனைகளை தொலைத்துவிடாதிருக்க..

ஆதவா
23-01-2007, 04:35 PM
சுருக்கமாச்சொன்னால் பல வார்த்தைகள் ஆழமாக நெருடுகின்றதன..
இதோ


அறுபுதமான சிந்தனைகள்..
வாழ்த்துகிறேன் ஆதவா..
சிந்தனைகளை தொலைத்துவிடாதிருக்க..

நன்றிகள் கோடி மது...

ஓவியா
23-01-2007, 04:37 PM
என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!
எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!


ஆதவா இந்த கடைசி வரிகள் மிகவும் சிறப்புக அமைந்துல்லது...

வேட்டையாடும் வர்க்கத்தில் பிறந்து மானுக்காக அழும் சிங்கத்தின் சிந்தனை ரொம்ப அருமை

தங்களின் சிந்தனையே தணி பாணிதான்

மீண்டும் ஒரு அருமையான சமூக சிந்தனை

பாராட்டுகிறேன்

ஆதவா
23-01-2007, 04:39 PM
என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!
எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!


ஆதவா இந்த கடைசி வரிகள் மிகவும் சிறப்புக அமைந்துல்லது...

வேட்டையாடும் வர்க்கத்தில் பிறந்து மானுக்காக அழும் சிங்கத்தின் சிந்தனை ரொம்ப அருமை

தங்களின் சிந்தனையே தணி பாணிதான்

மீண்டும் ஒரு அருமையான சமூக சிந்தனை

பாராட்டுகிறேன்

மோதிரக்கைத் தட்டு.............பா ராட்டு,,,,,,,,,,,,,,,, கேட்டு.................. ஆதவா நீ.......... ஆதவனையே எட்டு.........

அறிஞர்
23-01-2007, 04:43 PM
ஆதவனின் ஆதங்கம் கவி வரிகளில் தெறிக்கிறது....



நானிருக்கிறேன் கவர்ச்சிக்கென

ஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து
சூனியம் செய்கிறார்கள்
வெந்தும் வேகாத நடிகைகள்
என்றாவது ஒருநாள் குடிக்காமல்
இருந்துவிட்டு, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய
கூளைத் தன்மையுள்ள கூனிகள்
சாடல் அருமை.. பல நடிகைகளின் உண்மையான நிலை என்னவோ...



பாட்டிலிலே குடி குடியைக் கெடுக்கும்
குடித்தபின் குடி கொடையைக் கொடுக்கும்
நாசமும் நாய்பிறப்பும் குடியிலே மூழ்கி போகிறது
தாலியும் தன் பெண் டாட்டியும் அடகிலே போகிறது
போலியும் புளுகும் தண்ணீரிலே
வேசிப் பொழப்பு கண்களிலே
வெறும் பேச்சுக்கு வாழும் பண்டாரங்கள்


பல குடிமக்களின் வீட்டின் நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... கடைசி இரு வரிகள் சூடாக தெறிக்கிறது...


மொட்டையடித்து மூளியாக்கி
பொட்டைப் பயல்கள் காரில் போவார்கள்
துட்டை எடுத்து ஏழைக்குத் தரா நீசர்கள்
விட்டைத் தின்னும் பன்றிகள்
எங்காவது ஷாப்பிங் சென்றால்
துட்டு இறைப்பார்கள் தண்ணீராய்
கொட்டமடிக்கும் புலையர்கள்*
தானத்தின் மேன்மையறியாத புலையர்கள் பற்றிய சாடிய வரிகளை கண்டு திருந்துவார்களா...



என்ன உலகமிது?
பெண்களை எல்லாம் வேசியென
நினைக்கும் கழுதை கூட்டத்தில்
நானும் பிறந்திருக்கிறேனே!!! கழுதையாய்,,,,
காமம் தலைக்கேற தங்கை விற்ற
மாமன் பிறந்த கூட்டத்தில் பிறந்திருக்கிறேனே!!

எண்ணி எண்ணி அழுவதை விட.... அழிந்துவிடலாமே!!!!!

உலகத்தின் அவல நிலை இப்படியாக உள்ளது... வருத்தமே....

இந்த உலகம் மாறவேண்டும் என்றே வேண்டுகிறேன்.

ஆதவா
23-01-2007, 04:50 PM
மிக்க நன்றி அறிஞரே... சொல்வன்மைக்கு தனிமடலுண்டு என நினைத்து எழுதினேன்.. வரவேற்புகள் என் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டன...

பென்ஸ்
05-02-2007, 04:21 PM
ஆதவா...
சமுதாயத்திலும், நம்மிலும் கண்டு கண்டு வெந்து மட்டும் போகும் நாம், காலத்தில் ஓட்டத்தில் மட்டும் வேகமாய் போய் கொண்டிருப்பதால் பல நேரமும் நின்று "மாற்று" நிலையை பார்ப்பது இல்லை....
மனதில் இருக்கும் சில புண்ணை ஆற வைக்கவே விரும்புகிறோம்...
சீளெடுக்கும் போது வரும் வேதனைகளையோ, நாற்றத்தையோ ஏற்றுகொள்வது கிடையாது...
"மனிதன் வந்த பிறகுதான் சமுதாயம் வந்தது, சமுதாயம் வந்த பிறகு மனிதர்கள் வரவில்லை.." வசீகரா படத்தில் இருந்து ஒரு பஞ்ச் டயலாக்... ஆனால் இந்த சமுதாயம் இல்லாத மனிதத்தை நம்மால் ஏற்றுகொள்ளமுடியுமா.....
கட்டுபாடுகள் இல்லாத சமுதாயம் நன்றாக இருக்குமா....
சமுதாயத்தையோ, அதில் இருக்கும் விஷயங்களையோ நாம் பார்க்கும் விதம் தான் இந்த கோபத்திற்க்கு காரணம்....
நான் மன்றத்தில் UNFORGIVEN (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6018)என்று ஒரு கவிதை எழுதி இருந்தேன்... அதில் இளசுவின் பதிலை பாருங்கள்....
ஆதவா.. இது இன்னும் ரொம்ப "சென்சிடிவ்" ஆனா விஷயம்... நாம் நேரில் சந்திக்கும் போது இதை பற்றி கண்டிப்பாக பேசுவோம்..... இல்லையென்றால் , நேரம் கிடைக்கும் போது பெரிய பதிவா போட்டு விவாதிக்கலாம்...

ஷீ-நிசி
05-02-2007, 04:29 PM
எல்லாரும் மிக அழகாக விமர்சித்துவிட்டார்கள் ஆதவா.. நான் சொல்ல ஏதுண்டு..

நானிருக்கிறேன் கவர்ச்சிக்கென
ஆளாளுக்கு உடைத் தள்ளுபடி செய்து
சூனியம் செய்கிறார்கள்
வெந்தும் வேகாத நடிகைகள்
என்றாவது ஒருநாள் குடிக்காமல்
இருந்துவிட்டு, எய்ட்ஸ் குழந்தைகளுக்கு
இனிப்பு வழங்குவார்கள் தொடை தெரிய
கூளைத் தன்மையுள்ள கூனிகள்

இந்த வரிகள் அறைந்திடும் சிலர் கன்னங்களை....

ஆதவா
05-02-2007, 04:33 PM
ஆதவா...
சமுதாயத்திலும், நம்மிலும் கண்டு கண்டு வெந்து மட்டும் போகும் நாம், காலத்தில் ஓட்டத்தில் மட்டும் வேகமாய் போய் கொண்டிருப்பதால் பல நாம் பார்க்கும் விதம் தான் இந்த கோபத்திற்க்கு காரணம்....
நான் மன்றத்தில் UNFORGIVEN (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6018)என்று ஒரு கவிதை எழுதி இருந்தேன்... அதில் இளசுவின் பதிலை பாருங்கள்....
ஆதவா.. இது இன்னும் ரொம்ப "சென்சிடிவ்" ஆனா விஷயம்... நாம் நேரில் சந்திக்கும் போது இதை பற்றி கண்டிப்பாக பேசுவோம்..... இல்லையென்றால் , நேரம் கிடைக்கும் போது பெரிய பதிவா போட்டு விவாதிக்கலாம்...

படித்தேன். அருமையான மொழியாக்கம்.

நான் முன்பே சொன்னதுமாதிரி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? கவிதை எழுதுவதைத் தவிர.... சீழ் எடுக்கும்போது உதவத்தான் நினைக்கிறேன். ஆனால் எனக்கும் அல்லவா புண் இருக்கிறது..! சுயநலம் இங்கே தலைவிரித்து ஆடும். சமுதாயத்தைப் பார்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு துணில்லை எனக்கும்..

மனதை புதைத்து
கொண்டு நீங்கள் அங்கே....
மரணத்தை வெற்றியாய் கொண்டு
நான் புதைந்து இங்கே...
சுதந்திரமாய்.......

இந்த வரிகளைப் மட்டும் பாருங்கள்... கொதிதெழுந்து போய் அடக்க நினைத்து அடங்காமல் புதைந்து ஆனால் முகமூடியைக் கிழித்து வெற்றீகரமாக செத்து............ என்னால் இதுமட்டுமே செய்யமுடியும்....

கண்டிப்பாக ஒருநாள் நாம் சந்திப்போம் இவ்விஷயங்களைப் பற்றி சிந்திப்போம்........

ஆதவா
05-02-2007, 04:38 PM
மிக்க நன்றி ஷீ! உண்மை அதுதான்..... ஷில்பா விவகாரமே எடுத்துக்கொள்ளுங்கள்.. என் மனதில் உள்ளவற்றையெல்லாம் அங்கே பார்த்துவிட்டேன்.. சில நடிகைகளின் பொய்மையான சிரிப்புகளுக்கு பாவம் அந்த குழந்தைகள் என்ன செய்வார்கள்?