PDA

View Full Version : லண்டன் கதை



farhan mohamed
22-01-2007, 05:19 AM
நானும் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

இது ஒரு பெரிய சம்பவமெனினும் சுருக்கமாக தருகிறேன்.அதாவது நாங்கள் ஒரே வயதைச் சேர்ந்த நான்கு பேர் (எமது சொந்தத்திலேயே) லண்டன் போக தயாரானோம்.அதுவும் இன்னுமொரு ஒன்று விட்ட சகோதரன் தான் எம்மை அனுப்புவதாக கூறினார்.நாமும் நம்பி பணம் எல்லாம் கட்டி போகத்தயாரனோம்.தூதரகம் போகாமல் வீசா ஏற்பாடு செய்வோம் என்ரெல்லாம் கூறினார்.இதெல்லாம் நாம் நம்பக்காரணம் அவர் சகோதரன் லண்டனில் இருப்பதால் தான்.
பின்பு நாம் ஆங்கிலம் நன்றாக தெரியவேண்டுமென்று கூறி ஆங்கிலம் படிக்கச் சொன்னார். நாமும் அவ்வாறே இன்னும் ஒருமாதம் ஆங்கிலம் கற்றோம்.இருந்தாலும் அனுப்புவதாகத் தெரியவில்லை ஒவ்வொரு காரணம் சொல்லிக்கொண்டே இருந்தார்.:confused:

farhan mohamed
22-01-2007, 05:39 AM
பின்பு பணமும் கட்டிவிட்டதால் எம் பெற்றோர் அவசரப் படுத்தினர்.இதெல்லாம் இப்படியிருக்க நாம் கொடுத்த பணத்திற்கு ஒவ்வொரு புது வாகனம் வாங்கிக்கொண்டே இருந்தார்.மேலும் நாம் நால்வர் போகப்போவதாக கூறி முன்தொகைப் பணமும் கடவுச்சீட்டையும் பலரிடம் வாங்கியிருந்தார்.இவையனைத்துக்கும் உறுதுணையாக அவர் பொற்றோரும் இருந்தனர்.என் தந்தையின் சகோதரன் என்பதால் நாம் அவர்களை முழுமையாக நம்பினோம்.இதில் பணம் கட்டியதில் ஒரு மகா கில்லாடியும் மாட்டிக்கொண்டார்.அவரைப் பற்றி கூறவிரும்பவில்லை. இது இப்படியிருக்க நாம் லண்டன் போவதாய் ஒரு தினத்தையும் சொன்னார்.அதற்கேற்ற எற்பாடுகளையும் செய்தோம்.

ஆனால் அவர் எமது கடவுச்சீட்டையோ,வீசாவையோ யாரிடமும் காட்டவில்லை.அவரும் எம்முடன் வருகிறார் என்றும் கூறியதால் நாம் எதையும் கேட்கவில்லை.

guna
22-01-2007, 06:13 AM
பிறகு?

farhan mohamed
22-01-2007, 06:44 AM
பிறகு நாம் அனைவரின் வீட்டார்களுடனும் விமான நிலையம் போனோம். அங்கு வைத்து எம்மை அழைத்துக்கொண்டு அவர் உள்ளே போவதாகவும் ஒருவரும் உள்ளே வரத்தேவையில்லை என்றும் பார்வையாளர்கள் மண்டபத்துக்கு போகும்படியும் கூறிவிட்டார்.அவரின் பெற்றோரும் வந்திருந்தனர்.அப்போதுதான் எம்மிடம் கூறினார் நாம் இப்போது போவதில்லை இன்னும் இரண்டு நாட்களில் தான் போவோம் வீசாவில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.பின்பு நாம் சரி வீட்டாரிடம் கூறி இரண்டு நாளில் போவோம் என்றோம்.அதற்கவர் இல்லை இன்று போகவில்லையென்றால் பிரச்சினை என்று நாங்கள் விடுதியில் தங்கி நாளை மறுநாள் கண்டிப்பாக போவோம் என்றார். நாங்களும் சரி எப்படியும் போவதுதானே என்று உடன்பட்டோம்.

வீட்டார்கள் விமானநிலையத்திலிருந்து போகமுன்பே நாம் விடுதியொன்றுக்கு போய்விட்டோம்.அப்படியே அடுத்தநாள் அடுத்த நாள் என்று சில காலம் தள்ளிவிட்டார்.அதற்கிடையில் இவர் லண்டனில் இருந்து போவதாக வீட்டிற்கும் போய்வந்தார்.ஊரில் மாத்திரமல்லாமல் பக்கத்து ஊர்களில் இருந்தும் பலர் இவரிடம் பணம் கொடுத்திருந்தனர்.காரணம் நால்வர் போய்விட்டனர் என்பதனால்.நாமும் வீட்டிற்கு லண்டனில் இருந்து கதைப்பது போல தொலைபேசியில் கதைத்தோம். பணமும் அனுப்பினோம்.அவரே கொண்டுபோய் கொடுத்தார்.நாம் அனுப்பியதென்று.கடைசியில் ஏழு மாதம் கழித்து வீட்டாருக்கு மாட்டிவிட்டோம்.

gragavan
22-01-2007, 07:14 AM
அடடா! எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார் அவர். கொடுமை. பெருங்கொடுமை.

ஷீ-நிசி
22-01-2007, 07:33 AM
அவரே கொண்டுபோய் கொடுத்தார்.நாம் அனுப்பியதென்று.கடைசியில் ஏழு மாதம் கழித்து வீட்டாருக்கு மாட்டிவிட்டோம்.

அவ்வளவுதானா??? அதற்கு பின் என்ன ஆனது??

farhan mohamed
22-01-2007, 10:33 AM
அதன் பிறகு அவர் எம் பெற்றோரிடம் மன்னிப்புக்கேட்டு எப்படியாவது அனுப்புவேன் என்று அவகாசம் கேட்டார்.ஆனால் எம் பெற்றோர் இணங்கவில்லை.சிலர் காவல்துரையினரிடம் பிடித்துக் கொடுப்போம் என்றனர். ஆனால் சொந்தம் என்ற காரணத்தினால் பொற்றோர் பணம் திருப்பித்தருவார் என்ற நம்பிக்கையில் விட்டனர்.
ஆனால் அவர் திருப்பிக் கொடுக்கமுடியாதளவு பணம் பலரிடம் வாங்கியிருந்தார்.கடைசியில் சிலரது பணங்கள் கொடுக்கப் பட்டன. அவரிடம் இருந்த பல வாகனங்களையும் விற்று சிலரதுகடன்கள் மட்டுமே தீர்க்கப்பட்டன.எமக்கும் கட்டியபணத்தில் பாதியே கிடைத்தது.ஏனைய கடன்களுக்கு அவரது லண்டனில் உள்ள சகோதரன் பணம் அனுப்பிக்கொண்டிருகிறார்.

ஷீ-நிசி
22-01-2007, 10:42 AM
எந்த தைரியத்தில் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை

farhan mohamed
22-01-2007, 10:48 AM
எங்களாலும் இன்னும் புரிந்துகொள்ளமுடியாத உண்மை.

இளசு
23-01-2007, 12:12 AM
பகிர்ந்தமைக்கு நன்றி பர்ஹான்..

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை...

யோபு சரவணன்கள், சுரானாக்கள், உங்கள் 'உறவினர்' போன்றோர்
இருக்கத்தான்...பெருக்கத்தான் செய்வார்கள்.

நாம் ஆசைப்படும்போதே ஒரு எத்தன் உற்சாகமாகிவிடுகிறான்.

Narathar
23-01-2007, 01:37 AM
உண்மை பர்கான்...................
ஆனால் வழிய வந்து ஏமாறுவதற்கென்றே ஒரு கூட்டம் நம்மூரில் இருக்கின்றது..............
லீவுக்கு ஊருக்கு போனால் நம்மையே ஏஜன்சிக்காரனாக்கப்பார்க்கின்றார்கள்...

farhan mohamed
23-01-2007, 04:13 AM
அது உண்மைதான் நாரதரே

மனோஜ்
23-01-2007, 08:06 AM
முகமத் எகதையூம் இதுதான்

எனக்கும் லண்டன் செல்ல வேன்டும் என்ற அசை
என் அம்மா வின் தோழியின் மகன் லண்டனில் இருந்தார் எனவே அவர்களிடம் கேட்டேம் அவரும் லண்டன் செல்ல தனது மகனிடம் கூறி எற்பாடு செய்வதாக சென்னார் அடுத்த மாதம் எங்கள் வீட்டிற்கு வந்து 1 லட்சம் உடன் வேன்டும் என்றும் இன்னும் 3 மாதத்தில் சென்று விடலாம் என்று கூறினார்கள் அது என் தங்கையின் திருமன நேரம் எங்களிடம் பணம் இல்லாத சூழ்நிலை அப்படி இருந்தும் எனது தந்தை எப்படியே பணத்தை கடன் வாங்கி அந்த 1 லட்சத்தை கொடுத்து விட்டார்கள் பின்னர் எனது தங்கையின் திருமணம் முடிந்து 3 மாதம் நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை அது வரை அவர்களும் ஒன்றும் கூறவில்லை காரணம் எனது அம்மா வின் உற்ற தோழி என்பதால் தான்
எமற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் 6 மாதம் ஆகியூம் இதோ வந்துவிடும் என்று கூறிவந்தார்கள் 2005 கிருஸ்மஸ் முன் நீங்கள் லன்டன் இருப்பீர்கள் உடன் 1 லட்சம் வேன்டும் என்றார்கள் மீன்டும் அவர்கள் மீது உள்ள நம்பிக்கையில் 1லட்சத்தை கடன் பெற்று எனது தந்தை அவர்களிடம் கொடுத்தார்கள் இந்தா வந்து விடும் இந்தா வந்து விடும் என்று எதிர் பார்த்து 6 மாதம் ஆனது ஓன்றும் நடந்த பாடில்லை கேட்டால் எல்லாம் எற்பாடு செய்து கொன்டிருக்கிறோம் கொஞ்சம் பொறுங்கள் என்ற பதில்தான் எப்பொழுதும் இது நடக்காது என்ற முடிவுக்கு வந்தோம் எனது தங்கையில் கனவர் ரிராவல்ஸ்ல் பணிபுரிவதால் அவருக்கு தொரிந்த நண்பர் ஒருவர் முலம் சவுதியில் பணியிருப்பதாக கூறினார் அதற்கு எற்பாடு செய்யுங்கள் என்று கூறினோம் உடன் அவர் எற்பாடு செய்து 2006 7 மாதம் சவுதிக்கு வந்து விட்டேன் ஆனால் லண்டன் அழைந்து செல்லவும் இல்லை பணம் திருப்பி தறவும் இல்லை இப்போழது கேட்டால் எங்கள் மீது புகார் நான் எல்லாம் எற்பாடு செய்து விட்டேன் நீங்கள் ஏன் ஆவசபட்டு வெறு இடத்திற்க சென்றீர்கள் என்று கூறிவருகிறார்கள் சரி பணத்தை கொடுங்கள் என்றால் பணம் செலவாகிவிட்டது இந்த ஏற்பாட்டில் மீதி 1லட்சம் மட்டும் தரமுடியும் என்று கூறுகிறார்கள் ஆனால் இன்னும் அந்த 1லட்சத்தையூம் தரவில்லை

நண்பர்களே தயவுசெய்து ஏமாறாதிர்கள் அவசரபட்டு பணத்தை கொடுக்காதிர்கள்....

farhan mohamed
23-01-2007, 08:17 AM
உண்மை நண்பரே இந்தக்காலம் நம்பிக்கை வைத்தால் வெறும் ஏமாற்றம் தான்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.இருந்தாலும் நாம் ஏமாரக்காரணம் சொந்தம் என்ற நம்பிக்கைதான். மற்றவர்களுக்கு பாடமாவதை விட எமக்கு அனுபவமாவது இருக்குமே.

ஷீ-நிசி
23-01-2007, 08:22 AM
இனியும் தெளிவாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

farhan mohamed
23-01-2007, 08:32 AM
நிச்சயம் நண்பரே.எதையும் முற்றிலும் ஆராய்ந்துதான் செய்யவேண்டியுள்ளது.

அறிஞர்
23-01-2007, 03:16 PM
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் காட்டில் மழைதான்...

நல்ல பாடம் பர்ஹான்.... பலருக்கு உபயோகமாக இருக்கும்..

அறிஞர்
23-01-2007, 03:18 PM
மனோஜின் பாடமும் பலருக்கு உபயோகமாக இருக்கும்... தெரிந்தவர்கள் தான் சுலபமாக ஏமாற்றுகிறார்கள்... இது மாதிரியான ஆட்களுக்கு பாடம் புகட்டவேண்டும்.

ஓவியா
23-01-2007, 03:39 PM
எனது வருத்தங்கள்