PDA

View Full Version : மோகனின் கவிதைகள்leomohan
21-01-2007, 07:57 PM
மோகனின் கவிதைகள்என் காதலியும் என் கல்லறையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018) ( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=2) 3 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=3) ... Last Page (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7018&page=4))
ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978) ( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6978&page=2))
போர் வெறி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6995)
போர் முடிந்ததின் அறிகுறி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6996)
பெண்ணே உன் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040)( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7040&page=2))
சிறிய விஷயங்கள் தந்த பெரிய இன்பங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039)( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7039&page=2))
நீரோடை தெளிந்தது! கவிதை - மோகன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7007)
இரு குழந்தைகள் - இரண்டு பாகங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7017)

leomohan
21-01-2007, 07:57 PM
கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது
சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்ட கறை மறைந்தது
பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான்
துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது

leomohan
21-01-2007, 07:58 PM
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான்
அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான்
அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான்
அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா

leomohan
21-01-2007, 07:58 PM
ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது
ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார்
கோவிலுக்கு போனால் நீ ஆத்திக நாய் - பகுத்தறிவு எனக்கு
சாய்பாபாவுக்கு பாராட்டு விழா நேரமாச்சு போக

leomohan
21-01-2007, 07:59 PM
அண்ணி சீரியலில் அம்பிகா எதிர்த்தவீட்டு ராமோட ஓடிப்போயிட்டா
சித்தி சீரியலில் சிந்துஜா ரவியை வெச்சிருக்கா
மலர்கள் சீரியலில் மாளவிகா மதனோட கள்ளத் தொடர்பு
கொஞ்சம் ரிக்கார்ட் பண்ணுங்க சுமங்கலி பூஜைக்கு நேரமாச்சு

leomohan
21-01-2007, 07:59 PM
கதை எழுதுவாரு அண்ணாதுரை, வசனம் எழுதுவாரு கலைஞரு
ராஜபாட்டைக்கு ஒரு எம்ஜிஆர், ஹீரோயினியா ஜெயலலிதா
நகைச்சுவை நடிகரு நம்ம சோ, ரீலிஸ் பண்றவரு வீரப்பன்
ஸ்டைலுவுட விசயகாந்து, சே, கூத்தா போச்சுடோய் அரசியலு

leomohan
21-01-2007, 07:59 PM
ஓட்டுப் போட்டு உதை வாங்கி ஓடிவந்து
நாட்டு வெடிகுண்டை வைத்து நாட்டுப்பற்றை காட்டி
நாலு நாள் ஆஸ்பத்திரியில் அவதி பட்டு
மறுதேர்தல் அறிவிப்பை பார்த்து காயத்தை தடவிக்கொண்டேன்

leomohan
21-01-2007, 07:59 PM
பசிக்கிறது சாப்பாடு போடுங்கய்யா சொன்னவனை ஒன்னும் இல்லைப்பா என்று சொல்லி ஓட்டினேன்
கடைதெரு போகும் வழியில் ஆட்டோக்காரனிடம் 5 ரூபாய்கக்கு அரை மணி சண்டை போட்டேன்
ஓட்டலில் சர்வர் கொண்ட வந்த பில்லை டிப்ஸ் மிச்சப்படுத்த எடுத்து சென்று கல்லாவில் பணம் கட்டினேன்
ஓடிச்சென்று போத்தீஸில் கைக்குட்டையை அவன் போட்ட 150 விலைக்கு பேரம் பேசாமல் வாங்கி வந்தேன்

leomohan
21-01-2007, 08:00 PM
திமுகவை சாடினேன் அதிமுகவை ஏசினேன்
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசவு செய்தேன்
பொறுப்பற்ற மந்திரிகளை பொரிந்து தள்ளினேன்
தேர்தல் நாளு லீவு தானே என்று படுத்து தூங்கினேன்

leomohan
21-01-2007, 08:00 PM
11 மணி காட்சியில் அவளை பார்த்தேன் 3 மணி காட்சியில் காதல் சொன்னேன்
7 மணி காட்சியில் கலியாணம் செய்தேன் 10 மணி காட்சியில் குழந்தையும் பெற்றேன்
தெரியாமல் தொலைகாட்சி இயக்குனரிடம் என் கதையை சொன்னேன்
ஈஸி சேரில் பேரப்பிள்ளைகளுடன் தினம் 9 மணி என் கதை பார்க்கிறேன்

leomohan
21-01-2007, 08:01 PM
குமுதத்திற்கு நமீதாவின் இடுப்பு மட்டும் கண்ணுக்கு படுகிறது
ஆனந்த விகடனோ கருணாநிதியின் மஞ்சள் துண்டை மட்டும் எடுக்கிறது
கல்கியோ பதினெட்டாம் நூற்றாண்டை விட்டு வெளியே வர மறுக்கிறது
திரும்பி வந்த கதைகளால் என் வீட்டு கொல்லைபுறம் பெருக்கிறது

ஆதவா
22-01-2007, 01:49 AM

நண்பரே@!! கவிதைகள் அருமை... அரசியலை ஓங்கி சம்மட்டியில் அடித்தது போல இருக்கிறது....

எங்கே குறையென்று தேட முடியாதப்பா!! மீண்டும் தொடருங்கள்.....
நமக்காக ஒரு கடைசி கவிதை எழுதியிருக்கிறீரே!!! அருமைப்பா!!! என் பழைய கவிதை ஒன்றூ..............

சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

leomohan
22-01-2007, 05:09 AM
சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

உங்கள் வரிகளும் அருமை ஆதவா.

guna
22-01-2007, 06:07 AM
தொடருங்கள் மோகன், விமர்சிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து படிப்பேன்,ரசிப்பேன்.

leomohan
22-01-2007, 09:17 AM
மட்டமான சாராயத்தை குடித்த வயிறு எரிந்து மல்லாக்கப்படுத்தேன்
சுருட்டு பீடியும் புகைத்து வாய் நாறிப்போனேன்
விளக்கு வைத்து தோரணம் கட்டி போஸ்டர் ஒட்டி பிசுபிசுத்துப்போன கைகள்
என் கைபட்டதும் டெட்டாலால் கழுவும் தலைவனுக்காக தீக்குளிக்க போகிறேன்

leomohan
22-01-2007, 09:18 AM
ராகுகாலம் பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி பரீட்சைக்காக
வழியில் இருந்த முருகன் கோயிலில் வணக்கம் போட்டு
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தாளில் ஓம் போட்டு
மதிப்பெண்ணை பார்த்தால், சே, சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தினாங்கப்பா

ஷீ-நிசி
22-01-2007, 09:32 AM
இருப்பக்கத்திலும் பார்த்துக்கொண்டிருக்கின்றன -என்
இமைகளிரண்டும் உங்கள் வரிகளை;
ஒவ்வொன்றும் ஓர் உள்ளர்த்தம் கொண்டு,
உணரவைக்கின்றன உங்கள் வலிகளை!

leomohan
22-01-2007, 09:37 AM
ஹா ஹா கவிதையில் வந்த கருத்துக்கு நன்றி.

ஆதவா
22-01-2007, 10:18 AM
அடா அடா அடா!!!! மன்றத்தில் அரசியலை நாசூக்காய் தாக்கும் கவிதையே!!!! இத்தனை நாள்தான் எங்கிருந்தாய்?????

அருமை அருமை..............

மதுரகன்
22-01-2007, 05:59 PM
அரசியல் நாசூக்கு இரு கவிதைகளையும் அவைகளின்
கவிதைகளையும் ரசித்தேன்..

leomohan
22-01-2007, 06:04 PM
நன்றி ஆதவன், மதுரகன்.

ஆதவா
22-01-2007, 06:15 PM
ராகுகாலம் பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி பரீட்சைக்காக
வழியில் இருந்த முருகன் கோயிலில் வணக்கம் போட்டு
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தாளில் ஓம் போட்டு
மதிப்பெண்ணை பார்த்தால், சே, சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தினாங்கப்பா

நண்பரே!!! கடைசி வரி இடிக்கிறதே...... விளக்குங்கள்.........

leomohan
22-01-2007, 06:35 PM
நண்பரே!!! கடைசி வரி இடிக்கிறதே...... விளக்குங்கள்.........

பரீட்சை ஊத்திக்கிச்சு. அதனால் திருத்தினவர் ராகுகாலத்தில் திருத்தினதா புலம்புறேன்

ஆதவா
23-01-2007, 12:44 AM
பரீட்சை ஊத்திக்கிச்சு. அதனால் திருத்தினவர் ராகுகாலத்தில் திருத்தினதா புலம்புறேன்

அதெல்லாம் சரிதான் ந்ண்பரே! புரிந்தது.... ஆனால்..........

ராகுகாலம் பார்த்து வீட்டிலிருந்து கிளம்பி பரீட்சைக்காக
வழியில் இருந்த முருகன் கோயிலில் வணக்கம் போட்டு
பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து தாளில் ஓம் போட்டு
மதிப்பெண்ணை பார்த்தால், சே, சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தினாங்கப்பா

மூன்று வரிகளில் பரீட்சைக்கு போவதைச் சொல்லிவிட்டு
நான்காவது வரியில் திடீரென பரீட்சை முடிவைச் சொல்லியிருக்கிறீர்களே!!1 நன்றாக கவனியுங்கள்...... அல்லது எனக்கு மட்டும் புரியாமலிருக்கக் கூடும்..........

ராகுகாலத்தைப் பார்த்து பரீட்சைக்குக் கிளம்பிச் செல்லும் வழியில் முருகனை வணங்கிவிட்டு பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்து எக்ஸாம் ஹாலில் உட்கார்ந்து தாளில் ஓம்போட்டு மதிப்பெண்ணைப் பார்த்தால், சரியான ராகுகாலத்தில் பேப்பர் திருத்தவில்லை.............. இந்த கவிதையின் விளக்கம்.................... தவறு நேர்ந்த இடத்தை பார்வையிடவும்

leomohan
23-01-2007, 09:27 AM
காங்கிரஸ் குடும்ப கட்சி அரசியலா கேவலம்
அதை எதிர்த்து நாம் செய்வோம் ஊர்வலம்
தெருத்தெருவாய் சேதியோடு நகர்வலம்
போராட்டத்திற்கு தலைவன் என் மகன் அம்பலம்

leomohan
23-01-2007, 09:27 AM
தமிழ் நம் மூச்சு தமிழ் நம் பேச்சு
Posterகளில் உள்ள ஹிந்தி ஆங்கிலத்தை அழிப்போம்
Boardகளில் உள்ள பிறமொழி மீது Paint அடிப்போம்
Wait a minute, ஒரு Phone Call பண்ணிக்கறேன்

leomohan
23-01-2007, 09:28 AM

நீங்கள் சொல்வது சரிதான் ஆதவா

Narathar
23-01-2007, 09:38 AM
தமிழ் நம் மூச்சு தமிழ் நம் பேச்சு
Posterகளில் உள்ள ஹிந்தி ஆங்கிலத்தை அழிப்போம்
Boardகளில் உள்ள பிறமொழி மீது Paint அடிப்போம்
Wait a minute, ஒரு Phone Call பண்ணிக்கறேன்

பொட்டிலடித்தால் போல் உள்ளது உங்கள் வார்த்தைகள்!
வாழ்த்துக்கள்....................

ஹிந்தி எதிர்ப்பு வெரும் அரசியல்தான்....................
அதில் வெற்றிகண்ட உங்களூர் அரசியல் வாதிகள், தங்கள் குழந்தைகளையே கான்வென்டில் படிக்க வைப்பதேன்?

leomohan
23-01-2007, 09:41 AM

அதுதான் மக்களை முட்டாளாகவே வைத்து ஓட்டு வாங்கும் சூழ்ச்சி. புத்திசாலிகள் பிழைக்கிறார்கள், முட்டாள்கள் ஓட்டுப்போட்டே இறக்கிறார்கள்.

ஷீ-நிசி
23-01-2007, 10:34 AM
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள ஊர்களின் அறிவிப்பு பலகைகளில் உள்ள ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்களில் எல்லாம் தார் பூசியிருந்தார்கள். உண்மையில் அது அழகான பச்சை கலரில் இருக்கும் போர்டுகள். இரவில் நன்றாக மின்னக்கூடியவை. எல்லா போர்டும் தார்பூசி அசிங்கமாக காட்சியளித்தன. இதில் கொடுமை என்னவென்றால் சில் போர்டுகளில் தமிழ் எழுத்துக்கள் கூட மறைக்கபட்டிருந்தன. நல்லா குடிச்சிட்டு இந்த வேலைய செய்திருப்பானுங்க. இப்போ கொஞ்சம் சுத்தம் பண்ணியிருக்காங்க.

leomohan
28-01-2007, 03:05 PM
அரை நிஜார் போட்ட ஏட்டு, கையில் கழியுடன் இன்ஸ்பெக்டர் ஐயா
அட்டை ஒன்று கையில் கட்டி, போக்குவரத்தை சரிசெய்ய அதிகாரி
பொட்டலத்தில் அரிசி, மாவு, ஆழாக்கில் எண்ணை, அரையனா அரிசி
அறிவியல், விஞ்ஞானம் இல்லை, மெய்ஞானம் அறிவு இயல்பாக 60களில்

leomohan
28-01-2007, 03:05 PM
அதிவேக வண்டியில் காவல், ஏ கே 47 போலீஸ் கையில்
தானாக விளக்கு மாற்றி, எண்கள் போடும் போக்குவரத்து சாதனம்
பாக்கெட்டுகளில் எண்ணை, சூப்பர் மார்கெட்டில் வாசம்
அறிவியல்-விஞ்ஞானம் உண்டும், இல்லை மெய்ஞானம் 2000ல்

tamil81
28-01-2007, 03:45 PM
காங்கிரஸ் குடும்ப கட்சி அரசியலா கேவலம்
அதை எதிர்த்து நாம் செய்வோம் ஊர்வலம்
தெருத்தெருவாய் சேதியோடு நகர்வலம்
போராட்டத்திற்கு தலைவன் என் மகன் அம்பலம்

அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு நூறு ஊத்து

சரிதானே நண்பரே

tamil81
28-01-2007, 03:47 PM
அண்ணி சீரியலில் அம்பிகா எதிர்த்தவீட்டு ராமோட ஓடிப்போயிட்டா
சித்தி சீரியலில் சிந்துஜா ரவியை வெச்சிருக்கா
மலர்கள் சீரியலில் மாளவிகா மதனோட கள்ளத் தொடர்பு
கொஞ்சம் ரிக்கார்ட் பண்ணுங்க சுமங்கலி பூஜைக்கு நேரமாச்சு

நச் கவிதை

மதுரகன்
28-01-2007, 03:51 PM
சமுதாயத்தை புரட்டிப்புரட்டிப்போடுகிறீர்கள்...
அப்பப்பா...
அத்தனை உண்மைகளும் நெருடுகின்றன..
வாழத்துக்கள் வெற்றிகரமாக தொடருங்கள்...

மனோஜ்
28-01-2007, 04:03 PM
தமிழ் நம் மூச்சு தமிழ் நம் பேச்சு
Posterகளில் உள்ள ஹிந்தி ஆங்கிலத்தை அழிப்போம்
Boardகளில் உள்ள பிறமொழி மீது Paint அடிப்போம்
Wait a minute, ஒரு Phone Call பண்ணிக்கறேன்

இதன் பாதிப்பு எனக்கு அதிகமாக உள்ளது
சவுதியில் வடஇந்தியர் அதிகம் உள்ளனர்
எனக்கு ஷந்தி தேரியாது என்றதும் என்ன படித்திருக்கிறீர்கள் என்றுகேட்பார்கள் இத்தனை படித்தும் ஷந்தி தேரியாதா என்பார்கள்
அவர்களுக்கு தேரியாது இந்தி தமிழ்நாட்டில் ஒரு பாடம் இல்லை என்று:angry:

leomohan
28-01-2007, 04:29 PM
அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு நூறு ஊத்து

சரிதானே நண்பரே

ஆஹா. ஆம்.

leomohan
28-01-2007, 04:30 PM
சமுதாயத்தை புரட்டிப்புரட்டிப்போடுகிறீர்கள்...
அப்பப்பா...
அத்தனை உண்மைகளும் நெருடுகின்றன..
வாழத்துக்கள் வெற்றிகரமாக தொடருங்கள்...

நன்றி மதுரகன். மனதில் பட்டதை பேசுவதும், எழுதுவதும் வழக்கம். இதனால் சில சங்கடங்களும் உண்டு. :)

leomohan
28-01-2007, 04:31 PM
இதன் பாதிப்பு எனக்கு அதிகமாக உள்ளது
சவுதியில் வடஇந்தியர் அதிகம் உள்ளனர்
எனக்கு ஷந்தி தேரியாது என்றதும் என்ன படித்திருக்கிறீர்கள் என்றுகேட்பார்கள் இத்தனை படித்தும் ஷந்தி தேரியாதா என்பார்கள்
அவர்களுக்கு தேரியாது இந்தி தமிழ்நாட்டில் ஒரு பாடம் இல்லை என்று:angry:

ஆம் நண்பரே. மலையாளத்துக்காரர்களும், ஆந்திராகாரர்களும் வந்தவுடன் மத்திய கிழக்கு நாட்டில் கால் ஊன்றி விடுகிறார்கள். நம் மக்கள் தான் ஹிந்தி கற்காமல் அல்லல் படுகிறது.

ஒரு சந்ததியையே அழித்த பெருமை நம் கழகங்களுக்கு போய் சேரும். அவர் மக்கள் ஹிந்தி கற்றுக் கொண்டு மத்தியில் மந்திரியாகிவிட்டார்கள்.

மதுரகன்
28-01-2007, 04:52 PM
நன்றி மதுரகன். மனதில் பட்டதை பேசுவதும், எழுதுவதும் வழக்கம். இதனால் சில சங்கடங்களும் உண்டு
அது உங்கள் சாமர்த்தியம் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வோரிடம் மட்டும் கருத்துக்களை கூறுங்கள் அப்போதுதாம் எதிர்ப்புகள் குறையும்...

leomohan
13-03-2007, 08:37 PM
அது உங்கள் சாமர்த்தியம் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வோரிடம் மட்டும் கருத்துக்களை கூறுங்கள் அப்போதுதாம் எதிர்ப்புகள் குறையும்...

அவசியம் மதுரகன்.

இளசு
13-03-2007, 08:52 PM
இன்றுதான் இத்திரியை முதலாய் ..முழுமையாய் வாசித்தேன்..மோகன்..

சுளீர்..சுளீர் எனச் சுடும் சாட்டையடிகள்..இக்கவிதைகள்..
சட்டென தன்மா(ம)னம் சிலிர்த்து எழுந்தாலும், மறுநொடி
வலித்த இடம் தடவிக்கொண்டு மீண்டும்
பழகிவிட்ட பழைய சாக்கடை தேடும் மனம் நமது..

தொடர்ந்து சொடுக்குங்கள்...
ஒருநாள் பழையன கழியலாம்..

தொடர்ந்து

leomohan
14-03-2007, 07:42 AM
நன்றி இளசு. உங்கள் விமர்சனம் கூட நால் வரி கவிதையாய் ஜொலிக்கிறது. நன்றி.

மன்மதன்
14-03-2007, 07:52 AM
அழகாய், நாசூக்காக, அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். ஆட்டோ வந்தாலும் வரும்...

leomohan
14-03-2007, 01:16 PM
அழகாய், நாசூக்காக, அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். ஆட்டோ வந்தாலும் வரும்...

:-).............................

அறிஞர்
14-03-2007, 06:55 PM
எல்லாவற்றையும் நானும் இன்று தான் படித்தேன்.. சமுதாய அவலங்களை அழகாக நாலு வரிகளில் அலசியுள்ளீர்கள்

leomohan
15-03-2007, 04:06 AM
எல்லாவற்றையும் நானும் இன்று தான் படித்தேன்.. சமுதாய அவலங்களை அழகாக நாலு வரிகளில் அலசியுள்ளீர்கள்

நன்றி அறிஞரே.

ஓவியா
28-04-2007, 10:49 PM
இன்றுதான் முழுவதும் படித்தேன். நல்ல அலசல்.

சமுதாய அவலங்களை பிச்சி பிச்சி காட்டிருக்கீங்க மோகன்.

மோகன்:
என் கனவு-உயர்வு தாழ்வற்ற சமூகம், சாதி-மத-இன-மொழி பேதமற்ற வலுவான பாரதம்

உங்கள் ஆசை நிறைவேர என் வாழ்த்துக்கள்.

leomohan
29-04-2007, 06:48 AM

நன்றி ஓவியா.

பரஞ்சோதி
29-04-2007, 07:10 AM
அனைத்தும் அட்டகாசமான கவிதைகள்.

சமுதாய சீர்க்கெட்டை இதை விட தெளிவாக சொல்ல முடியாது.

வாழ்த்துகள் மோகன்.

leomohan
29-04-2007, 07:12 AM
அனைத்தும் அட்டகாசமான கவிதைகள்.

சமுதாய சீர்க்கெட்டை இதை விட தெளிவாக சொல்ல முடியாது.

வாழ்த்துகள் மோகன்.

நன்றி பரம்ஸ்.

இதயம்
31-05-2007, 10:16 AM
தற்செயலாக இந்த பகுதியில் உலவிய போது இந்த திரியில் நுழைய நேர்ந்தது. படிக்க ஆரம்பித்த போது தான் ஒரு வைரத்தை கூழாங்கல் என்று நினைத்து காணாமல் விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. மோகனின் பதிவுகளை படித்த வகையில் அவருடைய சிந்தனைகளும், அனுபவங்களும் நமக்கு பல விஷயங்களை அறியச்செய்திருக்கின்றன.

குறிப்பாக இந்த கவிதை திரியைப் பொறுத்த மட்டில் கவிதைக்கான இலக்கணங்கள் என்னவோ மிகக்குறைவு தான். ஆனால், அந்த குறை எதுவும் தெரியா வண்ணம் அவர் எண்ணத்தில் விளைந்த முத்துக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அவர் படைப்புகளுக்கு மாலையாய் மாறி கௌரவப்படுத்துகிறது. ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு வகையான ரசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதற்கு அவரின் வார்த்தை கையாடல் பெரிதும் உதவி செய்திருக்கிறது. ஒரு சார்புமுடைமையாக இல்லாமல் தராசு போல் நடுநிலைமையுடன் சொன்னது மோகனை இந்திய குடிமக்களின் பிரதிநிதியாக காட்டுகிறது.

அநாகரீக அரசியல், சமூக காழ்ப்புணர்ச்சி, சமுதாய மூடப்பழக்க வழக்கங்கள் என்று அவர் தொட்டிருக்கும் எல்லா விஷயங்களும் இன்று நம் தேசத்தை அரித்துக்கொண்டிருக்கும் அழிவு கரையான்கள். இதென்னவோ எனக்கு கவிதையாக தெரியவில்லை. இந்த சமுதாயத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கும் இன்னொரு திருக்குறளாக தெரிகிறது.

ஒரு சிறந்த இந்திய குடிமகனுக்கு பாராட்டுக்கள்..!!

சிவா.ஜி
31-05-2007, 10:39 AM
உண்மையிலேயே என்னை நானே கடிந்துகொண்டேன். எப்படி இத்தனை நாள் இந்த அற்புதமான படைப்புகளை பார்க்காமல் இருந்துவிட்டேன் என்று.அப்பட்டமான உண்மைகள், ஆடம்பரமில்லா வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் மோகன். இந்த அவலங்களையெல்லாம் பார்த்து அடிதடியிலெல்லாம் இறங்கியிருக்கிறேன். ஆனால் என்னை பைத்தியக்காரனாய் பார்த்தவர்கள்தான் அதிகம். யாரொ எக்கேடோ கெட்டு போகிறார்கள் நமக்கென்ன என்ற மனப்பான்மை மாறவேண்டும் தட்டிக்கேட்காத எந்த தப்பும் திருத்தப்பட்டதாக தெரியவில்லை. துஷ்டனைக்கண்டால் தூர விலகுவதை விட தட்டிக்கேட்பது நல்லது. மிக அருமையான கருத்துக்கள் பாராட்டுக்கள்.

leomohan
31-05-2007, 01:22 PM

மிக்க நன்றி இதயம் அவர்களே. மனதை நெகிழ செய்தது தங்கள் கருத்து.

leomohan
31-05-2007, 01:23 PM
உண்மையிலேயே என்னை நானே கடிந்துகொண்டேன். எப்படி இத்தனை நாள் இந்த அற்புதமான படைப்புகளை பார்க்காமல் இருந்துவிட்டேன் என்று.அப்பட்டமான உண்மைகள், ஆடம்பரமில்லா வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் மோகன். இந்த அவலங்களையெல்லாம் பார்த்து அடிதடியிலெல்லாம் இறங்கியிருக்கிறேன். ஆனால் என்னை பைத்தியக்காரனாய் பார்த்தவர்கள்தான் அதிகம். யாரொ எக்கேடோ கெட்டு போகிறார்கள் நமக்கென்ன என்ற மனப்பான்மை மாறவேண்டும் தட்டிக்கேட்காத எந்த தப்பும் திருத்தப்பட்டதாக தெரியவில்லை. துஷ்டனைக்கண்டால் தூர விலகுவதை விட தட்டிக்கேட்பது நல்லது. மிக அருமையான கருத்துக்கள் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி சிவா அவர்களே.