PDA

View Full Version : சிறந்த பாடல்/கவிதைகளுக்கான போட்டி

இராசகுமாரன்
21-01-2007, 06:59 AM
இனிய தமிழ் நெஞ்சங்களே...!!

தைப் பொங்கலை சுவைத்த கையோடு இன்னொரு இனிமையான செய்தி.. நமது மன்றத்தில் நாளுக்கு நாள் புதிய கவிஞர்களின் தோற்றம் கூடிக் கொண்டே போகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம். கவிஞர்களுக்கு ஆகாரமே ஊக்கம் தான், ஆனால் பல வேலைகள் காரணமாக நமது உறுப்பினர்கள் பலரால் அவ்வப்போது வந்து கருத்துக்கள் பதித்து ஊக்கப் படுத்த முடிவதில்லை (என்னையும் சேர்த்து தான்) அதனால், இந்த வருடம் முதல், மாதம் தோறும் சிறந்த கவிதைகளுக்கு போட்டி நடத்த தமிழ் மன்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.

இந்த மாதம் முதல் நிர்வாக பணியில் புதியவர்கள் சேர்க்கப் படுகிறார்கள், அவர்களுக்கு தகுந்த பொறுப்புகள் கொடுக்கப் படுகின்றன. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இளசு-விடம் ஒப்படைத்துள்ளேன், இன்னும் ஒரு சில நாட்களில் அதை அறிவிப்பார். அதில் இந்த போட்டிகளை நடத்தவும் ஒருவரை தனியாக நியமிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளேன்.

போட்டியில் கலந்து கொள்ள, கவிதைக்கான தகுதி பின்வருமாறு:

1) சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும்
2) சரியான (தமிழ் யூனிகோட்) எழுத்துருவில் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
3) குறைந்தது 10 வரிகளாவது (அல்லது 25 வார்த்தைகள்) இருந்தல் வேண்டும்.

மூன்றாவது விதிமுறை; குறைந்தது எத்தனை வரிகள் இருக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்?

இது பற்றிய உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன. உங்கள் ஆலோசனைப் படி, போட்டியின் விதிமுறைகள் வகுக்கப் படும்.

நன்றி..

மனோஜ்
21-01-2007, 07:32 AM
அறுமையான வாய்ப்பு
மன்றத்திற்கு நன்றி

ஷீ-நிசி
21-01-2007, 07:34 AM
நல்ல முயற்சி நிர்வாகி அவர்களே...

மூன்றாவது விதிமுறையை மாற்றவேண்டியது இல்லை என்று கருதுகிறேன்.. சரியாகவே இருப்பதாய் தோன்றுகிறது.

இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

farhan mohamed
21-01-2007, 07:52 AM
இதன் மூலம் தரமான படைப்புகள் எமக்கு விருந்தளிக்குமென நினைக்கிறேன். நல்ல முயற்சி.வளரட்டும்.

மன்மதன்
21-01-2007, 08:20 AM
நல்ல செய்தி. கவிஞர்களுக்கு கண்டிப்பாக ஊக்கமளிக்கும்..

paarthiban
21-01-2007, 09:37 AM
பாராட்டுக்கள். நல்ல முயற்சி.

leomohan
21-01-2007, 09:56 AM
அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

பிச்சி
21-01-2007, 10:29 AM
நல்ல தொடக்கம்,... நான் கூட நினைத்தேன். என் போன்றவர்களூக்கு ஓர் ஊக்கம்..........................................

ஓவியா
21-01-2007, 12:11 PM
அருமையான ஆலோசனை,

அனைவருக்கும் விருப்பம் என்றால் நல்லதுதான்.

போட்டி என்றாலே மனக்கசப்பு எற்ப்பட வாய்ப்புண்டு,
போட்டி நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

எல்லா கவிதைகளுமே சிறப்பாக உல்ல பட்சத்தில், யாருக்கு ஓட்டு போடுவது என்று குழம்பிப்போய் விடுவேனே :eek: :eek: ?
ஓ நாந்தான் லீவுலே இருக்கேனே, அப்பாடா தப்பிச்சேன்டா :D

அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஆதவா
21-01-2007, 12:37 PM
அருமையான ஆலோசனை,

அனைவருக்கும் விருப்பம் என்றால் நல்லதுதான்.

போட்டி என்றாலே மனக்கசப்பு எற்ப்பட வாய்ப்புண்டு,
போட்டி நல்ல விதமாக நடைபெற வாழ்த்துக்கள்.

எல்லா கவிதைகளுமே சிறப்பாக உல்ல பட்சத்தில், யாருக்கு ஓட்டு போடுவது என்று குழம்பிப்போய் விடுவேனே :eek: :eek: ?
ஓ நாந்தான் லீவுலே இருக்கேனே, அப்பாடா தப்பிச்சேன்டா :D

அனைத்து கவிஞர்களுக்கும், வாழ்த்துக்கள்

ஓட்டு போடாதவங்களை பொடாவில போடனும்

ஆதவா
21-01-2007, 12:44 PM
மன்றத்தில் அங்கத்தவன் என்ற உரிமையில் இதை எழுதுகிறேன்..

ஜனவரி மாதம் முடிந்தவுடன், ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதைகளையும் வரிசைப் படுத்தி (குறிஞ்சி மன்றத்தில்) ஓட்டெடுப்பில் வைக்கப் படும். அவற்றில் அதிக வாக்குகள் பெறும் கவிதை அந்த மாதத்தின் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப் படும். அதன் படைப்பாளி சிறப்பிக்கப் படுவார்.

போட்டிக்கென்று ஒரு தலைப்பு அல்லது போட்டிக்காக கவிதை எழுதுங்களேன் என்று அறிவிப்புகள் இருந்தால் நலமென்று நினைக்கிறேன்
ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதையும் வரிசைபடுத்தினீர்களேயானால் 100 கவிதைகளைத் தாண்டிவிடும்
அனைத்தையும் படித்து ஓட்டு போட நம் மக்களால் முடியாது ,
அப்படி நீங்களாகவே ஜனவரியில் வந்த சிறப்பான கவிதையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் படைப்பவர்கள் ஊக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது
நம் கவிஞர்கள் தோன்றியதை எழுதுபவர்கள்... அவர்களிடம் போட்டியென்றால் இன்னும் அழகாக எழுதிக் கொடுப்பார்கள்..இது என் கருத்து மட்டுமே! இதனால் நிர்வாகிகளின் விதிகளை நான் குறை சொல்வதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். ஏதுமறியா சிறியவனின் ஆலோசனை என்று நினைத்துக் கொள்ளலாம்...

ஓவியா
21-01-2007, 12:52 PM

ஆமாம் ஆதவா,

அருமையான ஆலோசனைதான்

வழிமொழிகிறேன்.

இராசகுமாரன்
21-01-2007, 04:42 PM
ஜனவரியில் வெளிவந்த அனைத்து கவிதையும் வரிசைபடுத்தினீர்களேயானால் 100 கவிதைகளைத் தாண்டிவிடும் அனைத்தையும் படித்து ஓட்டு போட நம் மக்களால் முடியாது ,

அப்படி நீங்களாகவே ஜனவரியில் வந்த சிறப்பான கவிதையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் படைப்பவர்கள் ஊக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது

நண்பர் ஆதவனே,

உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி..!!

இதை நானும் யோசித்தேன், போட்டி நடத்த வரிசைப் படுத்துவதிலும் நேரம் அதிகம் செலவாகும்.

நிச்சயம் நாங்கள் தேர்வு செய்யும் பணியில் நுழைய மாட்டோம்.

தலைப்பு கொடுத்து கவிதை எழுதக் கூறினால், கவிஞர்கள் கற்பனையை கட்டிப் போட்டதாகிவிடுமே என்ற அச்சம் தான். இருந்தாலும், யோசித்து ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவெடுப்போம்.

நன்றி...

ஓவியா
09-02-2007, 07:23 PM
ஆதவா, பிச்சு மற்றும் பிரங்களின் உங்களின் குடியரசு கவிதை எங்கே?

அடுத்த போட்டியில் அவசியம் கலந்துக்கொள்ளவும் நண்பர்களே

அன்பான வேண்டுகோள் :)

அறிஞர்
09-02-2007, 07:28 PM
நிர்வாகி, ஆதவனின் யோசனைப்படி... தலைப்பில் அல்லது படம் பார்த்து கவிதை சொல் என்ற அடிப்படையில் கவிதை போட்டி தொடங்குகிறது.

முதல் போட்டி - குடியரசு தின கவிதை. ஒரு சிலரே கொடுத்தனர்.

இரண்டாம் போட்டி- காதல் கவிதை (படம் பார்த்து)

உறுப்பினர்களின் பங்களிப்பை கண்டு.. இரு வாரத்திற்கு ஒரு போட்டி நடத்தலாம் என எண்ணுகிறோம்.

ஆதவா
10-02-2007, 02:37 AM
ஆதவா, பிச்சு மற்றும் பிரங்களின் உங்களின் குடியரசு கவிதை எங்கே?

அடுத்த போட்டியில் அவசியம் கலந்துக்கொள்ளவும் நண்பர்களே

அன்பான வேண்டுகோள் :)

மறக்காமல் கலந்துகொள்கிறேனக்கா!!:)

அறிஞர் அவர்களுக்கு..... குடியரசு கவிதைக்கு ரெண்டு மூன்று கவிதைகள் எழுதி வைத்திருந்தேன்.. ஆனால் எனக்கே அது பிடிக்கவில்லை... அதனால் அனுப்பாமல் விட்டுவிட்டேன். எனக்கு கூட வருத்தம்தான். என்ன செய்ய? இனி எந்த ஒரு போட்டியையும் விடுவதாக இல்லை......... இப்போது காதல் போட்டியா போச்சுதா? நிறைய நண்பர்கள் கலந்து கொள்வார்கள்......