PDA

View Full Version : கிரிக்கெட் - இந்தியா Vs மேற்கு இந்திய தீவுகள&



பரஞ்சோதி
21-01-2007, 04:19 AM
இன்று தொடங்கிய ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகளும் மோதுகின்றன.

முதலில் பேட் செய்யும் இந்தியா இதுவரை 22 ஓவரில் 134 ரன்கள், விக்கெட் இழப்பின்றி, கங்குலியும், கம்பீரும் 50 ரன்களை தாண்டி விளையாடி கொண்டிருக்கிறார்கள்.

பரஞ்சோதி
21-01-2007, 05:33 AM
இன்று விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து ஆட்டத்தை ரசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

38 ஓவரில் 219 ரன்கள், 2 விக்கெட் இழப்பு. கம்பீர் 69, சச்சின் 31 அவுட். தாதா 98 நாட் அவுட்.

மன்மதன்
21-01-2007, 09:16 AM
தாதா நல்ல ஆட்டம் போட்டிருக்கிறார். 98ல் ரன் அவுட்.. பாவம்.. இந்த மேட்சிலாவது இந்தியா ஜெயிக்கும் என நம்புகிறேன்..

அறிஞர்
22-01-2007, 02:11 PM
நாக்பூர், ஜன.22: மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய கங்குலி 98 ரன் விளாசினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சந்தர்பால் போராடி அடித்த சதம் வீணானது.
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையே முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் லாரா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி 16 மாத இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அவருடன் இணைந்து கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்.
கங்குலியின் ஆக்ரோஷமான அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை பரவசப்படுத்தியது. மிகச் சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரை சதத்தை பூர்த்தி செய்தனர். டேரன் பாவெல் வீசிய பந்தை ஏறிச் சென்று சிக்சருக்கு தூக்கிய கங்குலி, ஒருநாள் போட்டிகளில் தனது 61வது அரை சதத்தை அடித்தார். கடந்த 9 மாதங்களில் இந்தியா முதல் முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. கம்பீர் 69 ரன் (75பந்து, 10 பவுண்டரி) எடுத்து கேல் பந்துவீச்சில் சாமுவேல்சிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.
சச்சின் 31 ரன் எடுத்து கேல் பந்துவீச்சில் எல்பி டபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார். சச்சின், கங்குலி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். நிச்சயம் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குலி 98 ரன் எடுத்து (110 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
கேப்டன் திராவிட், டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் குவித்தது. அரைசதம் விளாசிய இருவரும் கடைசி 11.5 ஓவரில் 119 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. டோனி 62 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), திராவிட் 54 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து 50 ஓவரில் 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. கேல் 52 ரன் (46 பந்து, 10 பவுண்டரி) எடுத்து ஹர்பஜன் பந்தில் திராவிட் வசம் பிடிபட்டார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், சிறப்பாக விளையாடிய சந்தர்பால் சதம் அடித்தார்.
50 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்தது. சந்தர்பால் 149 ரன் (136 பந்து, 16 பவுண்டரி, 3 சிக்சர்), டெய்லர் 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சந்தர்பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
-நன்றி தினகரன்.

Mathu
22-01-2007, 04:48 PM
தாதா டைகர் கை ஓங்கிட்டு வருது ஏதோ பசங்க ஜெயிச்சா சரி

;) :D ;)

அறிஞர்
22-01-2007, 04:56 PM
தாதா டைகர் கை ஓங்கிட்டு வருது ஏதோ பசங்க ஜெயிச்சா சரி

;) :D ;)
மது தொடர்ந்து மன்றம் வந்தா.. டைகர் நல்லா விளையாடுவாராம்.....

பசங்க பதிலடி கொடுக்கட்டும்.. 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்லவேண்டும்.

மதுரகன்
22-01-2007, 05:14 PM
இலங்கையில் இருப்பினும் நானும் ஓர் இந்திய வெறியனே..
எங்கள் வாசகம்
"We're not Supporting India
We're Breathing India"
நாங்கள் இந்தியாவை போசிக்கவில்லை
இந்தியாவை சுவாசிக்கிறோம்"

உதயா
23-01-2007, 04:28 AM
UAE ல் இந்த ஆட்டங்களை பார்க்க ஏதாவது வழி இருக்கிறதா?

அறிஞர்
23-01-2007, 12:30 PM
இலங்கையில் இருப்பினும் நானும் ஓர் இந்திய வெறியனே..
எங்கள் வாசகம்
"We're not Supporting India
We're Breathing India"
நாங்கள் இந்தியாவை போசிக்கவில்லை
இந்தியாவை சுவாசிக்கிறோம்" தங்களின் கருத்து அருமை. இரு நாடுகளும்.. சகோதரர்கள் போன்றவர்கள்... தங்களை போன்றே.. அனைவரும் இரு நாட்டையும் மதிக்கிறோம்...

மதுரகன்
23-01-2007, 05:08 PM
நன்றி அறிஞரே...

மன்மதன்
23-01-2007, 06:32 PM
UAE ல் இந்த ஆட்டங்களை பார்க்க ஏதாவது வழி இருக்கிறதா?

ஜீவாவிடம் கேட்கலாம். ஜீவா ஓடி வாங்க..;)

மன்மதன்
23-01-2007, 06:34 PM
முதல் ஆட்டம் இந்தியர்கள் கண்ணுக்கு விருந்தாக அமையாததால், உச்சநீதி மன்றத்தில் முறையிட்டு, இப்பொழுது இரண்டாவது ஆட்டத்திலிருந்து DD தொலைக்காட்சி 7 நிமிட தாமத இடைவெளி விட்டு நேரடி ஒளிபரப்பு பண்ண அனுமதி பெற்றுள்ளனர்.

அறிஞர்
23-01-2007, 07:02 PM
முதல் ஆட்டம் இந்தியர்கள் கண்ணுக்கு விருந்தாக அமையாததால், உச்சநீதி மன்றத்தில் முறையிட்டு, இப்பொழுது இரண்டாவது ஆட்டத்திலிருந்து DD தொலைக்காட்சி 7 நிமிட தாமத இடைவெளி விட்டு நேரடி ஒளிபரப்பு பண்ண அனுமதி பெற்றுள்ளனர்.
இது என்ன புது செய்தி.. 7 நிமிட இடைவெளி விட்டு ஓட்டினால்.. விலை கொடுத்து ஒளிபரப்பு உரிமை வாங்கிய நிறுவனத்திற்கு பாதிப்பு வராதா... :confused: :confused: :confused:

மன்மதன்
23-01-2007, 07:47 PM
இது என்ன புது செய்தி.. 7 நிமிட இடைவெளி விட்டு ஓட்டினால்.. விலை கொடுத்து ஒளிபரப்பு உரிமை வாங்கிய நிறுவனத்திற்கு பாதிப்பு வராதா... :confused: :confused: :confused:

அதற்குத்தானே 7 நிமிட இடைவெளி... அதுவும் அந்த நிறுவனத்திற்கு காசு கொடுத்துதான் வாங்கி இருப்பார்கள்..(எந்த டிவி அது நியோவா??)

பரஞ்சோதி
24-01-2007, 04:24 AM
பிசிசிஐ வியாபார நோக்கம் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. கொள்ளை கொள்ளையாக சம்பாதிக்க வேண்டியது, அப்புறம் வரி விலக்கு கேட்க வேண்டியது.

என்னவே எதோ, இந்தியாவில் நடக்கும் அனைத்து விளையாடு நிகழ்ச்சிகளும் டிடி வழியாக இந்திய மக்களுக்கு இலவசமாக காட்டப்பட வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்.

விளையாட்டு துறை வளர வேண்டும், வளர வேண்டும் என்று கூப்பாடு போடுவது ஒரு பக்கம், மறுபக்கம் இப்படி பணம் சம்பாதிக்க முயல்வது கொடுமையான ஒன்று.

ஒவ்வொருமுறையும் கோர்ட் போய் ஒளிபரப்பு அனுமதி வாங்குவது, அசிங்கமாக இருக்குது.

ஆக கோர்ட் முடிவான தீர்ப்பு வழங்க வேண்டும், அதே போல் மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கும் போதே டிடிக்கு கொடுப்பதை பற்றி தெரிந்து வைத்து பின்னரே பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

மன்மதன்
24-01-2007, 05:56 AM
சரியாக சொன்னாய் நண்பா..

ஆதவா
24-01-2007, 08:29 AM
றெண்டாவது மேட்சு............. இந்தியா பேட்டிங்கு. 17 க்கு 1..... தாதா நிக்கிறாரு.. இளந்தலை அவுட்டு.............

ஆதவா
24-01-2007, 08:44 AM
தாதா அவுட்டு.........13க்கே பூட்டாரு...........

ஷீ-நிசி
24-01-2007, 08:55 AM
35 க்கு மூனு......

ஷீ-நிசி
24-01-2007, 08:56 AM
சச்சினுக்கு முட்ட

ஷீ-நிசி
24-01-2007, 08:57 AM
நல்லா விளையாடும்போது சேனல் தெரியாது. சேனல் தெரிஞ்சா பசங்க சொதப்புவானுங்க. இந்திய மக்கள் நேரம் அப்படி..

அறிஞர்
24-01-2007, 12:08 PM
189 - இந்தியா....

தினேஷ் கார்த்திக் -63

அறிஞர்
24-01-2007, 12:23 PM
மேற்கு இந்தியா 5/1 (1.1 ஓவர்)

அறிஞர்
24-01-2007, 01:37 PM
43/3 (18 ஓவர்) - மேற்கு இந்தியா..

சற்று முயன்றால் இந்தியா வெற்றி பெறலாம்.. தொடர்ந்து விக்கெட்டுக்களை சாய்க்கவேண்டும்.

மன்மதன்
24-01-2007, 01:46 PM
இந்தியா வெற்றி பெரும் என நம்புவோமாக....

அறிஞர்
24-01-2007, 02:00 PM
பிராவோ 6, 4 அடித்து நொறுக்குகிறார். 79/3 (25.1 ஓவர்)... அவர் விக்கெட்டை எடுத்தால் வழியுண்டு

அறிஞர்
24-01-2007, 02:14 PM
89/5 பிராவோ அவுட்.... சந்தர்பால் மட்டும் நிலைத்து ஆடுகிறார்....

ஷீ-நிசி
24-01-2007, 02:20 PM
90/5 27 ov

அறிஞர்
24-01-2007, 03:19 PM
48 பந்து 37 ஓட்டம் வேண்டும்.... மேற்கு இந்தியா வெற்றி பெற....

சந்தர்பால் விக்கெட் விழுந்தால் இந்தியாவிற்கு வாய்ப்பு உண்டு

ஆதவா
24-01-2007, 03:26 PM
பசங்க ஏதோ ஆடறாங்க........... 35 பாலுக்கு 35 எடுக்கனும்

அறிஞர்
24-01-2007, 03:34 PM
163/8

27 பால் 27 ரன்.... பந்துவீச்சில் ஏதாவது அதிசயம் நிகழவேண்டும்.

அறிஞர்
24-01-2007, 03:45 PM
166/9 20 பால் 24 ரன்...

இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம்...

சந்தர்பால் ஆடுவது... பயத்தை தருகிறது

அறிஞர்
24-01-2007, 03:51 PM
11 பால் 21 ரன்.. இந்தியா.... வெற்றி பெறுமா...

அறிஞர்
24-01-2007, 03:52 PM
இந்தியா 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

மதுரகன்
24-01-2007, 03:53 PM
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு...

ஆதவா
24-01-2007, 03:55 PM
அய்யய்யோ!!! ஜெயிச்சிட்டாங்களா?

மதுரகன்
24-01-2007, 03:58 PM
ஏன் ஆதவா நம்பமுடியலையா..?

அறிஞர்
24-01-2007, 03:59 PM
எப்படி நம்புறது.. எளிதான ரன்கள் 189 ரன் எடுக்க முடியவில்லை.....

இலங்கை அணி போல்.. உள்நாட்டில் முதலையாக உருவெடுக்கிறது இந்தியா...

ஆதவா
24-01-2007, 04:09 PM
சேச்சே! அதெல்லாம் காரணமில்லைபா!! நம்மாளுங்க ஒன்னு ஜெயிச்சாலே ஒம்பது ஜெயிச்சதா கணக்கெடுத்துக்குவாங்க.... இப்ப ரெண்டு சேர்ந்திருச்சே!!!

ஷீ-நிசி
24-01-2007, 04:12 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

அறிஞர்
24-01-2007, 04:27 PM
சேச்சே! அதெல்லாம் காரணமில்லைபா!! நம்மாளுங்க ஒன்னு ஜெயிச்சாலே ஒம்பது ஜெயிச்சதா கணக்கெடுத்துக்குவாங்க.... இப்ப ரெண்டு சேர்ந்திருச்சே!!!
இன்னும் ரெண்டு ஜெயிச்சா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
24-01-2007, 04:30 PM
உலோக கோப்பை நமக்குத்தான்/..........

ஷீ-நிசி
24-01-2007, 04:34 PM
இன்னும் ரெண்டு ஜெயிச்சா... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆசை படலாம் அறிஞரே, இப்படி பேராசை படக்கூடாது.. நீங்க நினைக்கிற அளவிற்கு ட்ராவிட் நினைப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

மதி
25-01-2007, 02:38 AM
நேற்று இதை "பேக் டு த ஃப்யூச்சர்" பட பாணியில் பார்த்தோம். சில மணி நேரங்கள் "7 நிமிடம்" தாமதமாக வாழ்ந்தோம். திரில் போய்விட கூடாதென்பதற்காக. ஆனாலும் பல முறை பொறுக்க முடியாமல் ஏதாவது செய்தி தொலைக்காட்சிக்கு மாற்றி மேற்கு இந்திய தீவினரின் விக்கெட் நிலையை அறிந்து கைதட்ட காத்திருந்தோம்.

சும்மா சொல்லக் கூடாது. இந்த அனுபவமும் ஒரு தினுசு தான்..

மதி
25-01-2007, 02:40 AM
அட மறந்துட்டேன்...
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்..
குறிப்பாக தினேஷ் கார்த்திக் திறமையாக விளையாடினார்.

இரு ஆட்டங்களிலும் சந்தர்பாலின் அற்புத ஆட்டத்திற்கு பலன் கிடைக்காமல் போனது வருத்தமே..!

அறிஞர்
25-01-2007, 12:41 PM
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு ஒரு செய்தி...

போட்டி முடிந்தவுடன்.. போட்டியை காண.... ஒரு தளம்

http://www.livecricket365.com/onlinecricket.html

அறிஞர்
25-01-2007, 12:43 PM
நேற்று இதை "பேக் டு த ஃப்யூச்சர்" பட பாணியில் பார்த்தோம். சில மணி நேரங்கள் "7 நிமிடம்" தாமதமாக வாழ்ந்தோம். திரில் போய்விட கூடாதென்பதற்காக. ஆனாலும் பல முறை பொறுக்க முடியாமல் ஏதாவது செய்தி தொலைக்காட்சிக்கு மாற்றி மேற்கு இந்திய தீவினரின் விக்கெட் நிலையை அறிந்து கைதட்ட காத்திருந்தோம்.

சும்மா சொல்லக் கூடாது. இந்த அனுபவமும் ஒரு தினுசு தான்..
சிறு வயதில் டீவி ஒரு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது... கோளாறு வந்துவிடும்.. உடனே அடுத்தவீதியில் உள்ள வீட்டுக்கு சென்று... அங்கு ஸ்கோர் பார்க்க ஓடுவோம்...

அதே மாதிரி 7 நிமிட திரில் அனுபவம்... கேட்க நன்றாக இருக்கிறது.

ஷீ-நிசி
25-01-2007, 02:21 PM
சிறு வயதில் டீவி ஒரு வீட்டில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது... கோளாறு வந்துவிடும்.. உடனே அடுத்தவீதியில் உள்ள வீட்டுக்கு சென்று... அங்கு ஸ்கோர் பார்க்க ஓடுவோம்...

அதே மாதிரி 7 நிமிட திரில் அனுபவம்... கேட்க நன்றாக இருக்கிறது.

நான் கடைசி மூன்று ஓவர்களை த்ரில்லாக பார்த்தேன். net பக்கம் வரவே இல்லை. ரொம்ப intresting -ஆக இருந்தது.

அறிஞர்
25-01-2007, 02:51 PM
நான் கடைசி மூன்று ஓவர்களை த்ரில்லாக பார்த்தேன். net பக்கம் வரவே இல்லை. ரொம்ப intresting -ஆக இருந்தது.
இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால்... இன்னும் விறுவிறுப்பு அதிகமாகியிருக்கும்... இந்தியாவின் வெற்றியும் கேள்விக்குறியாகி இருக்கும்.

Narathar
26-01-2007, 12:19 AM
இலங்கையில் இருப்பினும் நானும் ஓர் இந்திய வெறியனே..
எங்கள் வாசகம்
"We're not Supporting India
We're Breathing India"
நாங்கள் இந்தியாவை போசிக்கவில்லை
இந்தியாவை சுவாசிக்கிறோம்"

அப்போ இலங்கை Vs இந்தியான்னா?

ஆதவா
26-01-2007, 02:05 AM
அப்போ இலங்கை Vs இந்தியான்னா?
கலக மைந்தரே!!! ஏதோ இலங்கையிலிர்ந்து மோசமாக ஆடும் இந்தியர்களையும் ரசிக்க ஓர் இதயம் ஒருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தால்.....

அறிஞர்
26-01-2007, 02:22 PM
அடுத்த போட்டி சென்னையில்.... யார் யார் பார்க்க செல்கிறீர்கள்....

மணியா... போட்டி கண்டு..... கட்டுரை கொடுங்கள்..

மன்மதன்
26-01-2007, 06:09 PM
அடுத்த போட்டி சென்னையில்.... யார் யார் பார்க்க செல்கிறீர்கள்....

மணியா... போட்டி கண்டு..... கட்டுரை கொடுங்கள்..

நான் செல்கிறேன்..

தோனி , கங்குலி நீக்கப்பட்டிருக்கிறார்கள்.. ஷேவாக் இல்லை.. ஸ்டார் டீம் இல்லாதது வருத்தமே..

அறிஞர்
26-01-2007, 07:02 PM
நான் செல்கிறேன்..

தோனி , கங்குலி நீக்கப்பட்டிருக்கிறார்கள்.. ஷேவாக் இல்லை.. ஸ்டார் டீம் இல்லாதது வருத்தமே..
வாழ்த்துக்கள் மன்மதா...
எனக்கும் போட்டியை நேரில் சென்று பார்க்க ஆசை...... அடுத்த முறை இந்தியா வரும்பொழுது.... செல்ல வேண்டும்......

தோனி, கங்குலியுடன்... ஹர்பஜன், ஜாகீர் கான் ஓய்வெடுப்பார்கள் என எண்ணுகிறேன்.

ஆதவா
27-01-2007, 03:24 PM
வெற்றியை நோக்கி வெ. இண்டீஸ்...... மண்ணைக் கவ்வ தயாராகிறார்கள் இந்திய அணியினர்.....

250 க்கு 4........லாரா வெற்றியை தாரா மல் போவா ரா?

tamil81
27-01-2007, 04:07 PM
வெ. இண்டீஸ்.. வெற்றி பெற்று விட்டது

மதுரகன்
27-01-2007, 04:21 PM
அப்போ இலங்கை Vs இந்தியான்னா?


அட நாரதரே வெறியன் என்று சொன்ன போதே யோசிக்க வேண்டாமா..
16 வயதில் கூட இந்திய அணியை தப்பாக கூறிய ஒருவனை அடித்து இருக்கிறேன்..

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்..
நான் பார்ப்பது இந்தியா விளையாடும் போட்டிகளை மாத்திரமே..

ஏன் தெரியுமா...
இந்தியா அல்லாத மற்றய ஒரு அணிக்கு ஆதரவளிக்க வேண்டுமே(போட்டியை பார்க்கும்போது) என்பதற்காக...

:) :) :)

ஆதவா
27-01-2007, 04:47 PM
முதல் வெற்றி பெற்ற வெ. இ க்கு பாராட்டுக்கள்....

அறிஞர்
29-01-2007, 03:54 PM
இந்தியாவுக்கு இந்த அடி... தேவையா......

அருமையான தொடக்கம் 10 ஓவரில் 95 ரன்... 34 ஓவரில் 232/3.

400 தான் வெற்றி இலக்கோ என எண்ணிய நிலையில், இப்படி கவிழ்த்துவிட்டனர்..

மன்மதா!!! நேரில் போட்டியை கண்டுக் களித்த உம் விமர்சனம் என்ன?///

ஷீ-நிசி
29-01-2007, 04:00 PM
இந்த போட்டி அநியாயம் அறிஞரே..
உத்தப்பா ஆடின ஆட்டம் அப்பப்பா... என்னா ஸ்டைலீஷ் ஆட்டம்.. வேறு எந்த அணியாக இருந்தாலும் 400 கண்டிப்பாக தொட்டிருப்ப்பார்கள்.. 269 எடுத்தபோதே நினைத்து விட்டேன். இந்தியாவிற்கு தோல்வி உறுதியென்று...

அறிஞர்
29-01-2007, 06:29 PM
இந்த போட்டி அநியாயம் அறிஞரே..
உத்தப்பா ஆடின ஆட்டம் அப்பப்பா... என்னா ஸ்டைலீஷ் ஆட்டம்.. வேறு எந்த அணியாக இருந்தாலும் 400 கண்டிப்பாக தொட்டிருப்ப்பார்கள்.. 269 எடுத்தபோதே நினைத்து விட்டேன். இந்தியாவிற்கு தோல்வி உறுதியென்று...
உத்தப்பா நிலைத்து ஆடி.. சேவாக் திரும்பாமல் தடுத்தால் சரிதான்....

யுவராஜ்.. வந்து.. ஒன்னும் செய்யவில்லை.....

நம்மாளுங்களுக்கு 2 ஆட்டம் வெற்றி பெற்றவுடனே.. மிதப்பு......

இந்நிலை மாறனும்.

மன்மதன்
29-01-2007, 06:32 PM
மன்மதா!!! நேரில் போட்டியை கண்டுக் களித்த உம் விமர்சனம் என்ன?///


நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=170878#post170878) கொடுத்திருக்கிறேன் நண்பரே..

அறிஞர்
30-01-2007, 03:25 PM
நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=170878#post170878) கொடுத்திருக்கிறேன் நண்பரே..
நன்றி அன்பரே... நாளை ஆட்டத்தில்... பலத்தோடு இறங்கும் இந்திய அணி வெற்றி பெறுமா...

ஷீ-நிசி
30-01-2007, 04:08 PM
உத்தப்பா, கங்குலி- தொடக்கம்

3-ட்ராவிட்
4-சச்சின்
5-யுவ்ராஜ்
6-தோனி
7-பதான்
8-அகார்கர்
9. ரொமேஷ் பவார்
10-ஹர்.சிங்
11-ஜாகீர்


இந்த அணி இருந்தால்... நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என்று எண்ணுகிறேன்..

முதலில் பேட் செய்தால் 300 குறையாமல் எடுத்திட வேண்டும்.

இரண்டாவது பேட் செய்தால்
நம்ம பவுலர்கள் கையில் தான் உள்ளது போட்டி..

பார்க்கலாம் நாளை..

அறிஞர்
30-01-2007, 04:18 PM
பதான் வருவாரா என்ன....

வந்து சாதிக்கனும்.. சும்மா வரக்கூடாது..

மன்மதன்
30-01-2007, 05:37 PM
சென்னையில் இந்த செட் பிளேயர்களை இறக்கி விட்டிருக்கலாம். சென்னை என்றாலே இளக்காரம் ஆகிவிட்டது போல..

ஷீ-நிசி
30-01-2007, 05:44 PM
சென்னையில் இந்த செட் பிளேயர்களை இறக்கி விட்டிருக்கலாம். சென்னை என்றாலே இளக்காரம் ஆகிவிட்டது போல..


தோற்றாலும் எதிரணிக்கு தோள் கொடுத்திடும் ரசிகர்கள் சென்னையில் மட்டும்தான் காணமுடியும். (ஒருவேளை அந்த எண்ணமாகவும் இருந்திருக்கலாம்)

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 1998-ல், சச்சின் முதுகு வலியோடு ஆடியும் கடைசி 12 ரன் எடுக்க முடியாமல் தோல்வி பறிபோனது. வெற்றி பெற்ற பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை வலம் வந்தார்கள். சென்னை ரசிகர்கள் எப்படி வரவேற்றார்கள் தெரியுமா? ஒவ்வொருவரும் இருக்கையை விட்டு எழுந்து பா. வீரர்கள் மைதானத்தை சுற்றி முடிக்கும் வரை கரங்களை தட்டிக்கொண்டே இருந்தார்கள். நம்ம 'C' மற்றும் 'D' ஸ்டேண்டு ரசிகர்கள் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம்.