PDA

View Full Version : தபூ சங்கர் கவிதை படித்து இருக்கிறீகளா?



tamil81
20-01-2007, 05:12 PM
அழகான் பொருட்களெள்ளாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன-உன்னை
நினைவுபடுத்துகின்ற எல்லாமெ
அழகாத்தான் இருக்கின்றன்
-தபூசங்கர்

ஐந்து மணிக்கு வருவதாய் நீ
சொன்னதிலிருந்து ஐந்து மணிக்காகக்
காத்திருந்தேன். ஐந்து மணிவந்ததும்
உனக்காக காத்திருந்தேன்.நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேனா
காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேனா

ஆதவா
20-01-2007, 05:42 PM
அருமைதான்.... தபூவின் காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் சொட்டும் ஆனந்தக் கண்ணீர்............. வளர்த்துங்கள்.

ஷீ-நிசி
20-01-2007, 06:08 PM
தபூ சங்கரின் கவிதைகள் நான் படித்திருக்கிறேன். ஒவ்வொன்றுமே அழகு..
நான் அவரின் ரசிகன்.. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் நான்கு வரிகளில்தான் இருக்கும். ஆனாலும் நான்கும் 'நச்' என்று இருக்கும்

tamil81
21-01-2007, 01:04 PM
உன்னிடம் எந்தக் கெட்டப் பழக்கமும்
கிடையாதென்பது எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும் வருத்தமாய் இருக்கிறது,நான்
சொல்லி நீ விட ஒரு கெட்டப் பழக்கம் கூட
இல்லையே உன்னிடம்.
----------------------------------------------------

நான் எதுகேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே....வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய் ?

omnlog03
21-01-2007, 02:05 PM
Very nice....

ஓவியா
21-01-2007, 02:09 PM
தபூ சங்கரின் கவிதைகளை நான் படித்ததில்லை,

அருமை

தொடருங்கள்

tamil81
27-01-2007, 04:22 PM
முதன் முறையாக ஒருமுறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது......... ஏன்
என்று கேட்டாய்,அதெல்லாம் எனக்குத்
தெரியாது ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை
அது உன் மடியாயிற்று அவ்வளவுதான்
-----------------------------------------

உன் நினைவுகளே
வாழ்க்கை என்றான பிறகு
நீ தொடுதூரத்தில்
இருந்தாலென்ன
தொலை தூரத்தில் இருந்தால் என்ன ?

ஆதவா
27-01-2007, 05:19 PM
அருமை தமிழ்.... நெறைய குடுங்கள்

மதுரகன்
27-01-2007, 05:34 PM
அற்புதம்
இதற்கு முன் நானும் தபூவின் கவிதைகள் படித்ததில்லை..

பென்ஸ்
27-01-2007, 06:24 PM
அழகான் பொருட்களெள்ளாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன-உன்னை
நினைவுபடுத்துகின்ற எல்லாமெ
அழகாத்தான் இருக்கின்றன்
-தபூசங்கர்


தமிழ்....
கவனித்தீர்களா... !!!???
உரைநடை போல்..
எளிமையாக..
இனிமையாக...

அவர் கவிதைகள் வாசிக்கும் போது, கவிதை இத்தனை எளிமையாக இருக்க முடியுமா என்று சந்தேகம் வரும்..

தொடர்ந்து கொடுங்கள்... நாங்களும் ருசிக்கிறோம்...

tamil81
28-01-2007, 02:54 AM
உன்னைக் கேலி
பேசுபவனையெல்லாம்
முறைத்து பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாக் கூட
பார்க்க மறுக்கிறாயே
-------------------------------
நேரம் போவது
தெரியாமல்
உன்னோடு
பேசி கொண்டிருக்கயில்
ஒரேயொரு
கவலையெனக்கு
இந்த நேரம்
ஏன் போகிறது
என்று

ஓவியா
28-01-2007, 09:50 AM
அருமையான பதிவுகள்

அத்தனைத்தும் தித்திக்கும் தேன்

தொடருங்கள் தமிழ்

ஓவியன்
05-02-2007, 05:42 AM
ஆமாம் ஆனந்த விகடனில் இலவச இணைப்பாக வந்த காதல் விகடனில், தபூவின் கவிதைகளை வெளியிட்டிருந்தார்கள்.

தெளிவான நடையும் எளிமையான வ்ரியும் தபூவின் சிறப்பியல்புகள்!

ஓவியன்
05-02-2007, 05:53 AM
தபூ சங்கரின் வரிகளில் எனக்குப் பிடித்த ஒரு சில வரிகளை இங்கே தருகின்றேன்,

"ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது|
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!"

சாதாரண விடயங்களை காதல் பித்துடன் அவர் தரும் பாணி உண்மையிலேயே அழகானது, அபாரமானது!

ஓவியன்
05-02-2007, 05:58 AM
கவிதை போன்ற அதே நடையில் தபூ சங்கர் படைத்த கதைகளைப் படித்ததுண்டா?

இல்லாவிட்டால் ஒருமுறை தேடிப் படித்துப் பாருங்கள்!

அனைத்தும் அழகோ அழகு!

மன்மதன்
05-02-2007, 07:09 AM
கூடிய விரைவில் அவரின் காதல் கவிதை தொகுப்பு வெளிவரவிருக்கிறது.

ஷீ-நிசி
05-02-2007, 09:15 AM
கூடிய விரைவில் அவரின் காதல் கவிதை தொகுப்பு வெளிவரவிருக்கிறது.

நண்பரே, ஏற்கெனவே அவரின் பல்வேறு தொடுப்புகள் வெளியாகியுள்ளன. நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?

pradeepkt
05-02-2007, 11:14 AM
தபூ சங்கர்... சும்மா ரசனை சொட்டச் சொட்ட எழுதுவார். ஆனந்த விகடனில் அப்போது நான் அந்த இணைப்புக்கு ரசிகன்.

ஆனால் எப்பவுமே தரையில் என்ன இருக்கிறதென்று பார்க்காமல் மேகக் கூட்டத்தின் நடுவில் உலாவுவதை மட்டுமே விரும்புவார். ஒரு காதல் சினிமா பார்த்த பாதிப்பு அவர் கவிதைகள் படித்தாலே கிடைக்கும்.

ஓவியன்
15-02-2007, 09:58 AM
தபூ சங்கர்... சும்மா ரசனை சொட்டச் சொட்ட எழுதுவார். ஆனந்த விகடனில் அப்போது நான் அந்த இணைப்புக்கு ரசிகன்.

ஆனால் எப்பவுமே தரையில் என்ன இருக்கிறதென்று பார்க்காமல் மேகக் கூட்டத்தின் நடுவில் உலாவுவதை மட்டுமே விரும்புவார். ஒரு காதல் சினிமா பார்த்த பாதிப்பு அவர் கவிதைகள் படித்தாலே கிடைக்கும்.

முற்றிலும் உண்மை, அவரின் வரிகள் எனக்கு அவ்வாறான அனுபவ்ங்களைத் தந்ததுண்டு. காதலில் வெற்றி பெற்றவர் போன்றும் காதலியை தனக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமானவள் போன்றும் அவர் எழுதும் பாங்கு ரசிக்கத் தக்கது.

raj6272
21-02-2007, 10:24 AM
தபூ சங்கரின் கவிதைகளை விகடனில் படித்திருக்கிறேன், மனிதர் காதலை விட்டு வேறு சப்ஜெக்டுக்கு போக மாட்டார், ஆனால் தொடர்ந்து காதலைப்பற்றியே அருமையாக கவிதைகள் படைக்கிறார்.

அறிஞர்
21-02-2007, 03:11 PM
விகடனின் அவர் பதிப்புக்கள் வந்த பொழுது... பிரபலமானது.

மன்மதன் அவரை சந்தித்திருக்கிறார் என எண்ணுகிறேன்...

சே-தாசன்
22-02-2007, 10:08 AM
அருமையான கவிதைகள் எழுதுவார். இலகுவான நடை. அவரது வாசகர் பட்டாளத்தில் நானும் ஒருவன்.

மதுரகன்
16-05-2007, 06:25 PM
எனக்கு தெரிந்த தபூவின் கவிதைகள் சிலவற்றை இங்கு பதிக்கிறேன்..

மதுரகன்
16-05-2007, 06:32 PM
கமுக்கமாய் காதலி


சின்ன வயதில்... உன்னிடம் இருந்து எதையாவது நான் பிடுங்கினால்,
அழுதுகொண்டே ஓடிப்போய் என் அம்மாவிடம் புகார் சொல்வாயே,
அது மாதிரி இப்போதும் நான் உன் இதயத்தைப் பிடுங்கிக்கொண்டதை
என் அம்மாவிடம் சொல்வாயா? என்றேன்.
சேச்சே! ?டேய் அவளோடதை அவளிடமே கொடுத்து விடு!?
என்று அப்போ சொல்வது மாதிரியே இப்போதும் உன் அம்மா
சொல்லிவிட்டால்? என்றாய் அழகு காட்டி.

கண்டிப்பா அப்படித்தான் சொல்வேன்!
என்று திடீரென கதவுக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தார் என் அம்மா.

அய்யய்யோ... அம்மா எல்லாத்தையும் கேட்டுட்டாங்க!
என்றாய் அதிர்ச்சியோடு!

எத்தனை நாளா நடக்குது இந்தக் கதை? ம்!?
என அம்மா மிரட்ட, இல்ல... வந்து... என்று தடுமாறினாய்.

என்ன... என் பையனைக் காதலிக்கிறியா?
என்றார் அம்மா குரல் உயர்த்தி.

அய்யய்யோ... எனக்குத் தெரியா தும்மா... எங்கிட்ட இப்பதான் சொன்னா!?
என்று நான் சொன்னதைக் கேட்டதும், உன் கண்களில்
கோபமும் கண்ணீரும் போட்டி போட்டு வெடிக்கப் பார்த்தன.

டேய்! போதும்டா உன் விளையாட்டு...
பாவம், அழுதுடப் போறா!? என்றார் அம்மா.

இவளா பாவம்? இப்ப நீங்க மட்டும் இல்லைனு வெச்சுக்கோங்க...
அப்படியே இந்நேரம் பாய்ஞ்சு வந்து என் தலை யைப் புடிச்சி பத்ரகாளி
மாதிரி ஆட்டியிருப்பா! என்றேன்.

ம்... அதெல்லாம்கூட செய்வியா நீ? என்று உன்னை அதட்டிய அம்மா,
இப்ப அப்படி செய்யணும் போல இருக்கா? என்று சிரித்தார்.

ம்! என்று தலையாட்டிய அதே வேகத்தில், இல்லே... என்பது போலத்
தலையாட்டினாய் நீ.
என்ன வேணாலும் செய்துக்க. இனிமே இவன் உன் பிள்ளை! என்று
என்னை உனக்குத் தத்துக் கொடுத்து விட்டு உள்ளே போய்விட்டார்
அம்மா. அய்... அப்ப அம்மாவுக்கு ஓ.கே-வா? என்று துள்ளிக்
குதித்தாய்.
அவங்களுக்கு எப்பவோ ஓ.கே! நான்தான் சும்மா உங்கிட்ட கலாட்டா பண்ணச் சொன்னேன் என்றேன்.
உன்னை..? என்று அருகே வந்த உன்னிடம், இப்போ நீ என்கிட்ட
வந்தேன்னா, நான் உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தம்
கொடுத்துடுவேன் என்று மிரட்டினேன்.
ஜகா வாங்கிய நீ, உன் தலையைப் பிடிச்சு உலுக்குற அளவுக்கு
உன்மேல எனக்குக் கோபம் இல்லையே என்றாய்.

ஆனால்... உன்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்குற அளவுக்கு
உன்மேல எனக்குக் காதல் இருக்கே என்றேன்.
வாடா... எந்த ஊரு நீ... விட்டா மைக் செட் கட்டி ஊருக்கே சொல்லச்
சொல்லுவ போலிருக்கே. இதெல்லாம் கமுக்கமா செய்யணும்டா என்றாய்.
கமுக்கமாவா... அப்படின்னா? என்றேன் புரியாத மாதிரி.
இப்படி என்று என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிப்போனாய்!

என் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.
அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!

தபூ சங்கர்

மதுரகன்
16-05-2007, 06:32 PM
உங்கள் விமர்சனங்களையும் எழுதுங்கள்...

நானும் தேடிக்கண்டுபிடித்து கொடுக்கிறேன்...

இதயம்
17-05-2007, 08:00 AM
தபூ சங்கரின் கவிதைகள் கவிதைமயமான காதல் அனுபவங்கள், காதல் மயமான கவிதை அனுபவங்கள். எல்லாக்காதல்களும், காதலர்களும் ஒன்றுதானோ என்று எண்ணுமளவுக்கு இவர் குறிப்பிடும் சம்பவங்கள், வார்த்தைகள் நம்மோடு ஒன்றும். அதுவே ஒரு தனிச்சுவையாக இருக்கும். இந்த இளைஞருக்கு காதல் மேல் பற்று குறையாததால் காதல் கவிதைகளை மட்டும் எழுதுகிறார். காதல் உள்ளவரை இவர் கவிதைகளும் இனிக்கும்..!!

மதுரகன்
17-05-2007, 04:43 PM
இதோ அடுத்த கவிதை

மதுரகன்
17-05-2007, 04:54 PM
வெட்கம்
வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல்,
பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன்.
பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும்,
அய்யோ... கையை விடுங்க. வெக்கமா இருக்கு என்று நெளிந்தாய்.
வலிக்குதுனு சொல்லு! அதிலே நியாயம் இருக்கு... வெக்கமாத்தானே
இருக்கு. அதுக்கு ஏன் கையை விடணும்?

ஆமா, வெட்கப்படறது உனக்குப் பிடிக்காதா? என்றேன்.
ம்ம்ம்... வெக்கப்பட எந்தப் பொண்ணுக்காவது புடிக்காம இருக்குமா?
என்றாய் வெட்கம் பொங்க.
பிடிச்சிருக்குன்னா, ஏன் விடச் சொல்லணும்?
அய்யோ... வெக்கமா இருக்கு. அப்படியே கையைப் பிடிச்சிட்டே
இருங்கனுதானே சொல்லணும் நீ! என்றேன்.
சிரித்து விலகிய நீ, அதெல்லாம் லூசுப் பொண்ணுதான் சொல்வா!
என்றாய்.

அப்போ நீ லூசு இல்லையா? என்றேன்.
உங்கள... என்று என்னை அடிக்க ஓடி வந்த உன் கையை மறுபடியும்
பிடித்தேன். சிணுங்கிச் சிரித்துச் சிணுங்கி, வெட்க கீதம் பாட
ஆரம்பித்தாய்.
சொல்லு! அய்யோ வெக்கமா இருக்கு..
அப்படியே பிடிச்சுக்கோங்க!னு சொல்லு! என்றேன்,
உன் காதோரமாக.
அய்யோ... காலங்காத்தால இந்த ராட்சசன்கிட்ட மாட்டிக் கிட்டேனே...
யாராவது வந்து என்னைக் காப்பாத்துங்களேன்! என்று கத்தினாய்...

என்னைத் தவிர வேறு யாருக்கும் கேட்காத குரலில்!
அய்யோ இந்தப் பொண்ணு என் கையைப் பிடிச்சு வம்பு
பண்றாளே! திடீரென உலகத்துக்கே கேட்கும்படியாக நான் கத்தினேன். பயந்து விலகிய நீ, ச்சீ... பொறுக்கிடா நீ!
என்றாய் குறும்பான எரிச்சல் குரலில்.

ஆமாம்! பொறுக்கியிலும் பொறுக்கி... ஒண்ணாம் நம்பர் பொறுக்கி! அதனால்தான் இந்த உலகத்தையே கலவரப்படுத்திய படித் திரிகிற ஆயிரக்கணக்கான தேவதைகளில் இருந்து, ஒண்ணாம் நம்பர்
தேவதையான உன்னைப் பொறுக்கி எடுக்க முடிந்தது என்னால்!
என்றேன்.
இப்போது நீ சொன்னாய். டேய், லூசாடா நீ?


வெட்கவியல்!

எப்போதாவது உன்னிடம்
ஏதாவது நான் கேட்பது,
பெற வேண்டும்
என்றல்ல
ம்ஹம் என்று
உதடு பிதுக்கி
சிணுங்கல் கவிதை
சிந்துவாயே...
ஆசை ஆசையாய்
அதை
வாசிக்கத்தான்!
ஊர்வலம் போக
அம்மன் தேர் ஏறியது
பரவசமாயினர் பக்தர்கள்
ஊருக்குப் போக
நீ கார் ஏறினாய்
பாவமானேன் நான்.
சாலையில் எப்போதும்
வலப் புறமாகச் செல்லும்
வாகனங்களைப் போல
நான் எப்போதும்
உன் நிழல் புறமாகவே நடக்கிறேன்...
எப்போதும் உன் நிழல்
என் மீது விழவேண்டும் என்பதற்காக.
இரு விழிகளில்
ஒரு பார்வையைப் போல
நம் இரு இதயத்திற்கும்
ஒரே காதல்தான்.

தபூ சங்கர்

சாராகுமார்
31-08-2007, 01:41 PM
ஆனந்த விகடனில் சில தபூ சங்கர் கவிதை படித்துள்ளேன்.இப்போது மன்றத்தில் படிப்பது மகிழ்ச்சி.

அரசன்
03-09-2007, 02:12 PM
நான் இதுவரை தபுவின் கவிதைகளை படித்ததில்லை. இப்போது மன்றத்தில்தான் படிக்கிறேன். படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது. இருக்கும் கவிதைகளை எல்லாம் தெரிந்தவர்கள் கொடுங்களேன்.

தங்கவேல்
05-09-2007, 12:02 PM
உணர்ச்சிகளோடு விளையாடும் கவிதைகள் புனைபவர் தபூ சங்கர்... அனைத்தும் கற்கண்டுகள்...

ஜெயாஸ்தா
05-09-2007, 12:11 PM
கடினாமான வார்த்தைகளைப் போட்டு மிரட்டாமல் எளிய உரைநடை வடிவாய் கவிதைகள் அனைத்தும் இருக்கிறது. படித்தவுடன் தெளிவாக புரிகிறது. இன்றுதான் இவரின் கவிதைகளை படிக்கிறேன்.

muthuvel
25-01-2010, 02:41 PM
அழகான் பொருட்களெள்ளாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன-உன்னை
நினைவுபடுத்துகின்ற எல்லாமெ
அழகாத்தான் இருக்கின்றன்
-தபூசங்கர்

ஐந்து மணிக்கு வருவதாய் நீ
சொன்னதிலிருந்து ஐந்து மணிக்காகக்
காத்திருந்தேன். ஐந்து மணிவந்ததும்
உனக்காக காத்திருந்தேன்.நான் காதலிக்க ஆரம்பித்திருக்கிறேனா
காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேனா



என் கைகடிகாரம் சரியாக ஓடவில்லை ,
அவளுக்காக காத்திருந்தபோது ,
ஒரு மணி என்பது அறுபது நிமிடமாக ,
அவளோடு இருந்தபோது ,
ஒரு மணி என்பது ஆறு நொடியாக ..