PDA

View Full Version : எக்ஸ்புளோரரை பூட்ட இயலுமா?



nonin
20-01-2007, 05:16 AM
நண்பர்களே, வீட்டிலிருக்கும் மற்றவர் வலைத்தளங்களுக்கு செல்வதை தடுக்க IE மற்றும் பயர் பாக்ஸ் ல் பாஸ்வேர்ட் கொடுத்து பூட்ட இயலுமா? அல்லது வேறேதாவது வழிகள் உள்ளனவா?

leomohan
20-01-2007, 05:29 AM
நண்பர்களே, வீட்டிலிருக்கும் மற்றவர் வலைத்தளங்களுக்கு செல்வதை தடுக்க IE மற்றும் பயர் பாக்ஸ் ல் பாஸ்வேர்ட் கொடுத்து பூட்ட இயலுமா? அல்லது வேறேதாவது வழிகள் உள்ளனவா?

நீங்கள் Internet Options, Content, Content Advisor சென்று ஒரு கடவுச் சொல் அமைத்தால், எந்த தளத்திற்கு போவதற்கு முன் கடவுச் சொல் கேட்கும்.

Gurudev
20-01-2007, 11:51 AM
Administrator Account ல் நின்றுகொண்டு எவர் Browsing செய்யக்கூடாதோ அவருடைய Profile ஐ திறந்து Internet Connections ஐ Disable செய்துவிடலாம். அல்லது
Local Area Network (Lan)Settings பெட்டிக்கு போய் Use a Proxy Server for your Lan என்பதை Enable பண்ணிவிட்டு அதற்குரிய் IP Adress ஐ 00.00.0.0 என மாற்றி விடுங்கள். Port நம்பரை வெற்றிடமாக விடுங்கள். அல்லது

Registry editting செய்ய வேண்டும் அது இடரானது. முதலில் இவ்விரண்டையும் செய்து பாருங்கள்

விகடன்
29-03-2007, 05:23 PM
ஏனையா உமக்கு இந்த சுய நலம்?
உம்மைப்போலத்தானே மற்றவர்களும் ஏதாவது தேவைக்காக வலையத்தினுள் செல்ல விளைவர்.

ஏதோ சிந்தித்து செயற்படுங்கள்.
உன்னைப்போல் பிறரையும் நேசி என்று யாரோ ஒருவர் சொன்னது இதற்குந்தான் பொருந்தும்!

leomohan
29-03-2007, 05:27 PM
நண்பர்களே, வீட்டிலிருக்கும் மற்றவர் வலைத்தளங்களுக்கு செல்வதை தடுக்க IE மற்றும் பயர் பாக்ஸ் ல் பாஸ்வேர்ட் கொடுத்து பூட்ட இயலுமா? அல்லது வேறேதாவது வழிகள் உள்ளனவா?

அல்லது இந்த மென்பொருள் உபயோகியுங்கள்.

http://www.toplang.com/internetlock.htm

அறிஞர்
29-03-2007, 07:41 PM
தகவலுக்கு நன்றி மோகன்...

poo
30-03-2007, 08:12 AM
எம்.எஸ். வேர்டில் டாக்குமெண்ட் லாக் ஆகி, எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லல. எல்லா கோப்புகளும் திறக்கின்றன.. படிக்க முடிகிறது. ஆனால் கர்சரை கிளிக்கினால் டாக்குமெண்ட் லாக் ஆகி இருப்பதால் நீங்கள் திருத்தம் செய்ய முடியாது என்கிறது. புது பக்கங்களிலும் இதே. எந்த ஒரு மெனுவும் ஆக்டிவேட் ஆனதாய் தெரியவில்லை. (பைல், view- தவிர்த்து.). எப்படி இதை சரி செய்வது?

poo
30-03-2007, 08:14 AM
தங்களது இணையத்தை பூட்டுவது தொடர்பான தகவலுக்கு நன்றி மோகன். எங்கள் கணனியின் content advisor - password யாரோ போட்டுவிட்டனர். எப்படி விடுவிப்பது. ரெஜிஸ்ட்ரி மாற்றம் செய்ய வேண்டுமென்கிறான் நண்பன். எப்படி?!