PDA

View Full Version : நால்வரிக் கவிதைகள்Pages : [1] 2

ஆதவா
19-01-2007, 04:33 PM
நால்வரிக் கவிதைகள்................

காதல், காமம், சோகம், , ஆசை, இகழ்ச்சி, வாழ்த்து... என்று எந்த சுவைப் படைப்பாயிருந்தாலும் இங்கே கொடுங்களேன்......


கவிதை நான்கு அல்லது ஐந்துவரிக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
ஹைக்கூக்கள் கூட இடம் பெறலாம்
ஒரு வரிக்குள் கூட எழுதலாம்.எனது பங்கிற்கு நான் ஆரம்பிக்கிறேன்..........

விழிகள் பேசுமாம் காதலர்களுக்கு
எனக்குமில்லை; உனக்குமில்லை
விழிகள்

இப்படியே தொடருங்கள்................

ஆதவா
19-01-2007, 04:35 PM
நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?

ஆதவா
19-01-2007, 04:35 PM
நான் ஒவ்வொரு முறையும்
தோல்வியுரும் போதெல்லாம்
உன்னையே நினைத்துக் கொள்வேன்
என் வெற்றிக்கு
மிக அருகாமையில் நீ

ஷீ-நிசி
19-01-2007, 04:36 PM
அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான்..
"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!

ஆதவா
19-01-2007, 04:36 PM
உனது சிரிப்பலைகள்
எனது இதய வாசலைத் தட்டுகிறது,
திறப்பதா? அல்லது
தீர்ப்பதா?

ஆதவா
19-01-2007, 04:37 PM
அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான்..
"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!


நெத்தியடி

ஆதவா
19-01-2007, 04:42 PM
உன் கோபங்கள்
பல நரம்புகளைத் தூண்டிவிடும்
என் ஆசையைக் கூடவா?

ஆதவா
19-01-2007, 04:44 PM
தென்றல் தீண்டிவிடுமாம் காதலர்களூக்கு
நானுமில்லை; நீயுமில்லை;
வெற்றிடம்

ஆதவா
19-01-2007, 04:46 PM
இனியாவது உன்
இனிய கொலுசுகளோடு
ஓடு!
உன் காலடியிலாவது கிடக்கிறேன்

ஆதவா
19-01-2007, 04:47 PM
மழை

எப்பொழுதாவது
கதவுகள் திறக்குமென
காத்திருக்கும் விழிகள்

ஆதவா
19-01-2007, 04:48 PM
பொக்கை வாய் கிழவன்
பிறந்த நாட்டிலே
பொக்ரான் குண்டு

ஷீ-நிசி
19-01-2007, 04:49 PM
காலையில் தலை நிறைய
பூக்களுடன் சென்றவள்
மாலையில் வீடு திரும்பினாள்
வெறும் கூடையுடன்

"பூக்காரி"

ஆதவா
19-01-2007, 04:49 PM
கையில் பிடித்தேன்
இறைவனின் சிறுநீர்

ஆதவா
19-01-2007, 04:50 PM
மங்கையர் யாவரும்
ஓவியர்தாம்
வாசற்படி கோலம்

ஆதவா
19-01-2007, 04:52 PM
மெல்லத் திறந்த வானிலே
தெள்ளத் தெரிந்து போனேனே!!

ஆதவா
19-01-2007, 04:53 PM
ஓங்கியடித்த பணக் காற்றிலும்
வீங்கியழு மிந்த குழந்தை

ஆதவா
19-01-2007, 04:54 PM
செய்த தவறுகள் நினைவுகள் நினைக்கும்
எய்த பொருளினி உள.

ஆதவா
19-01-2007, 04:55 PM
தயவு செய்து
வானத்தைப் பார்
உனக்காக நான்
தேய்ந்து கொண்டிருக்கிறேன்

ஆதவா
19-01-2007, 04:56 PM
உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
மூடாமல் காத்திருக்கிறது..

ஆதவா
19-01-2007, 04:58 PM
நண்பர்களே! இதுமாதிரி நீங்களும் எழுதுங்கள்......

இன்றோடு
இதுபோதுமென
நின்றோடும் ஆதவன்....................

மதுரகன்
19-01-2007, 04:59 PM
காதல் என்பது சுவாசம்
எப்படி நான் அதை நிறுத்த...?

ஆதவா
20-01-2007, 05:45 PM
அழகுதான் மது.........

ஆதவா
20-01-2007, 05:46 PM
மான மொழுகுஞ் சிறு நீர்குழல்
போன நீரென வேணாது..

ஆதவா
20-01-2007, 05:47 PM
கண்களின் குருட்டுத்தன்மை
காதலில் தெரிகிறது
பார்வையின் குருட்டுத்தன்மை
காமத்தில் தெரிகிறது..

ஆதவா
20-01-2007, 05:49 PM
பிழையின்றி வாழ்வேது?
குழைவின்றி காதலேது?

ஆதவா
20-01-2007, 05:50 PM
கையில்* அரிக்கும் காசுக்கா
எயிட்சு பெண்களைப் பார்க்கவேணும்?

கையில் - வேறர்தமுள்ளது.. யோசிக்க.

ஆதவா
20-01-2007, 05:53 PM
அம்மா!

(ஒற்றை வார்த்தைக்கவிதை)

ஆதவா
20-01-2007, 05:53 PM
எனக்குத் தெரிந்த வரை
நீ என் உயிர்
உனக்குத் தெரிந்த வரை
நான் உனக்கு மயிர்........

ஆதவா
20-01-2007, 05:55 PM
குருட்டு வாசனையில்
இருட்டு கூட பகல்தாம்

ஆதவா
20-01-2007, 05:59 PM
காதல் எழுதினேன் இதயத்தில்
காயம் எழுதினாய் ஓர் சதயத்தில்

மதுரகன்
20-01-2007, 06:02 PM
காணும் இடமெங்கும் கடவுள்
கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

ஆதவா
20-01-2007, 06:05 PM
இருவரிகளாய்
இவ் விருள் நீளுமென
இங்கே நினைத்தேனே!
இனியவளாய்க் கெடுத்தாய்
இருள் போச்சுதுடி!!!

மதுரகன்
20-01-2007, 06:09 PM
வேற்று மொழிச்சொற்களுக்கு "க்கு" போட்டுப்போட்டே சக்கையாகிப்போன தமிழ்..

மதுரகன்
20-01-2007, 06:13 PM
சிற்பிகள் இன்னமும் கல்லெறிந்துகொண்டே இருப்பதால்
கற்கள் இன்னமும் கற்களாகவே இருக்கின்றன...

ஆதவா
20-01-2007, 06:25 PM
நால்வரிக் கவிதை
நாமே
நிரப்புகிறோமே!
நால்வர் இருந்தால்
நலந்தானே!!

மனோஜ்
20-01-2007, 06:53 PM
எழத்துக்கள் இனைந்தால் வார்த்தை
வார்த்தை இனைந்தால் வரிகள்
வரிகள் இனைந்தால் கவிதை
கவிதை இனைந்தால் ....
மதுகரன் ஆதவா
இது எப்படி?

இளசு
20-01-2007, 08:03 PM
நண்பர்களே! இதுமாதிரி நீங்களும் எழுதுங்கள்......

இன்றோடு
இதுபோதுமென
நின்றோடும் ஆதவன்....................

இன்று போனாலும்
மன்ற விடியலுக்கு
மறுபடி வருவான்
மனஞ்சோராதவன்...


நல்ல தொடருக்கு பாராட்டுகள் ஆதவா..

பல சுவையானவை..
சில சுமார் வகை..
அந்த உயிர்....யிர் - ஊஹூம் வகை..

இளசு
20-01-2007, 08:07 PM
அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான்..
"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!

சுளீர் ஷீ-நிசி..


எச்சில் காவியால்
எழுத்துகள் மறைந்தன:
இங்கே துப்பாதீர்

---------------------

ஒலிபெருக்கியில்
உரக்கக் கத்தினார்:
அமைதி.. அமைதி..!!

இளசு
20-01-2007, 08:14 PM
இருமி இருமி வெளியே
எடுக்க முடியா கபம் அகற்ற
எடுத்துப் பற்ற வைத்தேன்
இன்னொரு சிகரெட் ___:mad:

farhan mohamed
21-01-2007, 06:34 AM
பக்கங்கள் பல எழுதலாம் - சளிக்காமல்
மணித்தியாலங்கள் பல பேசலாம் -வெறுக்காமல்
நாட்கள் பல பாடலாம் - ஓயாமல்

" உன்னைப் பற்றி ":p

மனோஜ்
21-01-2007, 06:46 AM
மாற்றம் அது மாறிகொன்டுதான் இருக்கும்
மாற்றத்தை யாராலும் மாற்றமுடியாது
மாற்ற நினைப்பவர் மாறிபொவார்

leomohan
21-01-2007, 06:51 AM
இருமி இருமி வெளியே
எடுக்க முடியா கபம் அகற்ற
எடுத்துப் பற்ற வைத்தேன்
இன்னொரு சிகரெட் ___:mad:

சடாரென்று அடித்தது.

leomohan
21-01-2007, 06:53 AM
ஓட்டுப் போட்டு உதை வாங்கி ஓடிவந்து
நாட்டு வெடிகுண்டை வைத்து நாட்டுப்பற்றை காட்டி
நாலு நாள் ஆஸ்பத்திரியில் அவதி பட்டு
மறுதேர்தல் அறிவிப்பை பார்த்து காயத்தை தடவிக்கொண்டேன்

leomohan
21-01-2007, 06:57 AM
கலர் டிவி கண்டதும் பசித்த வயிறு மறந்தது
சமத்துவ பொங்கலில் உடம்பில் பட்டி கறை மறைந்தது
பள்ளிகள் இணையத்தில் இணைய பேரன் கலாம் ஆனான்
துண்டுபிடி குடித்த உதடுகள் 555க்கு ஏங்க, சே என்ன ஆட்சி இது

leomohan
21-01-2007, 06:59 AM
அம்மா யாரென்று தமிழனை கேட்டால் ஜெ என்கிறான்
அப்பா யாரென்று தமிழனை கேட்டால் கருணாநிதி என்கிறான்
அண்ணன் யாரென்று தமிழனை கேட்டால் வைகோ என்கிறான்
அரசியல்வாதிகள் குடும்பமாக நிற்க நீ அநாதையானாயே தமிழா

leomohan
21-01-2007, 07:02 AM
ஆங்கிலம் பேசினால் பாவம் சும்மாவிடாது
ஹிந்தி பேசினால் கடவுள் உன்னை தண்டிப்பார்
கோவிலுக்கு போனால் நீ ஆத்திக நாய் - பகுத்தறிவு எனக்கு
சாய்பாபாவுக்கு பாராட்டு விழா நேரமாச்சு போக

leomohan
21-01-2007, 07:06 AM
பக்கங்கள் பல எழுதலாம் - சளிக்காமல்
மணித்தியாலங்கள் பல பேசலாம் -வெறுக்காமல்
நாட்கள் பல பாடலாம் - ஓயாமல்

" உன்னைப் பற்றி ":p

சளிக்காமலா சலிக்காமலா

சளி - விக்ஸ் :)

farhan mohamed
21-01-2007, 07:22 AM
சலிக்காமல்தான் திருத்தியமைக்கு நன்றி

farhan mohamed
21-01-2007, 07:36 AM
இன்று உறுதிகொள்கிறேன் இனி அவளைப்பார்க்க மாட்டேனென்று
சென்ற மாதத்தைப்போல

farhan mohamed
21-01-2007, 07:39 AM
என்னையும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது
உன்னையும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது - ஆனால் நம்மைத்தான் யாருக்கும் பிடிக்கவில்லை.

ஷீ-நிசி
21-01-2007, 07:40 AM
நன்றி இளசு அவர்களே

ஷீ-நிசி
21-01-2007, 07:43 AM
வாசலில் இருந்த சிறிய பிச்சைக்காரனிடம்
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு
பையில் இருக்கும் ஆயிரம் ரூபாயை
சரிபார்த்துக்கொண்டேன்....

உள்ளே இருக்கும் பெரிய.....
அதிகாரிக்கு கொடுப்பதற்கு!

மன்மதன்
21-01-2007, 08:32 AM
அனைவருமே அருமையாக எழுதுகிறீர்கள்.

மடிக்கணிணியை
மடித்து வைத்த
பிறகுதான் தோணுகிறது
புது கவிதை..

இளசு
21-01-2007, 10:52 AM
பாராட்டுகள் அனைவருக்கும்..

குறிப்பாய் சமூகப்பார்வை, அக்கறை, கோபம் கொப்பளிக்கும்
மோகனின் நால்வரி சாட்டை சொடுக்கல்கள் அருமை..

------------------------------


பதினோரு ஹோமகுண்டங்கள் -
பன்னிரண்டு வேதியர்கள் ஒவ்வொன்றிலும்..
தினசரியில் படித்ததில் எனக்குப் பிடித்தது
தீப்பிடிக்காத உலோகப் பந்தல்!

ஆதவா
21-01-2007, 10:57 AM
அனைவரும்
அழகாய் எழுதியிருக்கிறீர்கள்
அருமை
அருமை........

ஷீ-நிசி
21-01-2007, 11:45 AM
அனைவரும்
அழகாய் எழுதியிருக்கிறீர்கள்
அருமை
அருமை........

கவிதை எழுதாமல், உங்கள்
கருத்துகளையே கவிதையாக்கி
கண நேரத்தில் எங்கள்
கண்களுக்கு விருந்தாக்குகிறீர்களே ஆதவா!!

leomohan
21-01-2007, 11:48 AM
பாராட்டுகள் அனைவருக்கும்..

குறிப்பாய் சமூகப்பார்வை, அக்கறை, கோபம் கொப்பளிக்கும்
மோகனின் நால்வரி சாட்டை சொடுக்கல்கள் அருமை..

------------------------------


பதினோரு ஹோமகுண்டங்கள் -
பன்னிரண்டு வேதியர்கள் ஒவ்வொன்றிலும்..
தினசரியில் படித்ததில் எனக்குப் பிடித்தது
தீப்பிடிக்காத உலோகப் பந்தல்!


அருமை.

மிக்க நன்றி இளசு.

மதுரகன்
21-01-2007, 05:05 PM
அமைதியாய் இருப்பதைப்பற்றி
சண்டையிட்டுக்கொண்டார்கள்..

மதுரகன்
21-01-2007, 05:06 PM
சத்தியமாக உன்னைப்பிடிக்கவில்லையென எத்தனையோமுறை
நீ சொல்லியும் உன்னையே வட்டமிடும் என்னிதயம்...

மதுரகன்
21-01-2007, 05:08 PM
வைரமுத்துவின் கவிதை
"காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த உன் சேலைத்தலைப்பை
பிடித்து இடுப்பில் சொருகிக்கொண்டாய் அவ்வளவுதான்
காற்று நின்றுவிட்டது"

மதுரகன்
21-01-2007, 05:11 PM
சிலவேளைகளில் நானும் இந்தத்தென்றலும் அமைதியாக இருந்திருக்கக்கூடும் உன்னைக்கண்டிராவிடின்..

மதுரகன்
21-01-2007, 05:15 PM
"தீக்குச்சியோட என்னடா விளையாட்டு
கொண்டாடா இங்க"
எங்களுடைய அப்துல்கலாம்கள்
விளையாட்டாகவே வெடிக்கவைக்கப்படுகிறார்கள்...

மதுரகன்
21-01-2007, 05:18 PM
காலை மதியம் இரவு மூன்று வேளையும் என்னருகில் நீ
உன்னை சாப்பாட்டிற்கு முன்னால் சேர்த்துக்கொள்வதா
சாப்பாட்டிற்கு பின்னால் சேர்த்துக்கொள்வதா...

ஓவியா
21-01-2007, 05:35 PM
மன்றத்தில் கவிதை மலர்கள் பூத்து குலுங்குகின்றன :)

ஆதவா, ஷீ-நிசி, மதுரகன், மனோஜ், இளசு, பர்கான், மோகன்
அனைவரின் குட்டி கவிதைகளும் படு ஜோர்

அனைத்து பதிவையும் ரசித்தேன்

சும்மா பூந்து விளையாடுறீங்களே :D :D

பாராட்டுக்கள் மக்களே

மதுரகன்
21-01-2007, 05:52 PM
நன்றி ஓவியா ஆதரவைத்தொடருங்கள்..

ஆதவா
22-01-2007, 01:51 AM
சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

ஷீ-நிசி
22-01-2007, 02:42 AM
சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைக்கு
அமிர்தமாகின்றன
எனது வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

சரியா சொன்னீங்க ஆதவா...

ஆதவா
22-01-2007, 04:08 AM
சரியா சொன்னீங்க ஆதவா...

நம் மன்றத்தின்ன் சார்பாக அதை சில மாற்றத்துடன்........

சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைகளுக்கு
அமிர்தமாகின்றன
எங்களின் வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,

farhan mohamed
22-01-2007, 03:40 PM
அனைத்துமே மறக்கின்றன
என்னிலிருந்து
உன் நினைவுகளைத்தவிர

farhan mohamed
22-01-2007, 03:43 PM
உன்னைக்காதலித்த பின் தான் தெரிந்தது
என் இதயம் இத்தனை பொறுமையானதென்று

farhan mohamed
22-01-2007, 03:46 PM
உன் எண்ணங்கள் என்றும் என்னில் சுவையானதால் எந்த உணவும் சுவைக்கின்றது

மதுரகன்
22-01-2007, 03:55 PM
நீ தேனிகளால் நுககரப்பட்டு கற்பிழக்கப்படாத ரோஜா

ஆதவா
22-01-2007, 04:05 PM
பாதியது மிச்சமின்றி குடிக்க
மீதியது மிச்சமின்றி கிடைக்குமா?

அறிஞர்
22-01-2007, 04:20 PM
உன்னைக்காதலித்த பின் தான் தெரிந்தது
என் இதயம் இத்தனை பொறுமையானதென்று
உங்கள் பொறுமையை சோதிக்க.... ஒரு காதல் ... அருமை...

அறிஞர்
22-01-2007, 04:23 PM
நம் மன்றத்தின்ன் சார்பாக அதை சில மாற்றத்துடன்........

சிலரது எச்சில்கள்
பத்திரிக்கைகளுக்கு
அமிர்தமாகின்றன
எங்களின் வியர்வைகள்
வீணாகிப் போகின்றன,,,,,,,,,,
வியர்வைகள்... வீணாகும் பொழுது.. வருத்தம் தான்....
வியர்வைகளுக்குரிய பலன் வரும் பொழுது... மிக்க மகிழ்ச்சி உண்டே....

மகிழ்ச்சியான காலத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்....

அறிஞர்
22-01-2007, 04:24 PM
பாதியது மிச்சமின்றி குடிக்க
மீதியது மிச்சமின்றி கிடைக்குமா?
இருப்பது பாதி.. அதையும் மிச்சமின்றி குடித்தால்... மீதி பாதி எங்கிருந்து வரும்....

கொஞ்சம் குழப்பும் வரிகள்.. :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
22-01-2007, 04:32 PM
இருப்பது பாதி.. அதையும் மிச்சமின்றி குடித்தால்... மீதி பாதி எங்கிருந்து வரும்....

கொஞ்சம் குழப்பும் வரிகள்.. :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞரே!!

பாதியது மிச்சமின்றி குடிக்க
மீதியது மிச்சமின்றி கிடைக்குமா?

ஒரு கோப்பையில் பாதி தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.... அதை மிச்சமின்றி குடித்து விட்டீர்கள்.... மீதி இருப்பது என்ன? கோப்பை தானே!!!!! அதைத்தான் சொல்லியிருக்கிறேன்...

இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது....
என் ஒரு உதாரணம்... தண்ணீர் என்பது நல்ல மனிதர்கள்.... கோப்பை என்பது நல்ல குணங்கள்...

இருக்கு பாதி நல்ல மனிதர்களும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்
மீதி இருக்கும் நல்ல குணங்களாவது கிட்டுமா? இருக்குமா?

( இது என் எண்னம்.. ஏதாவது தவறு இருந்தால் சுட்டவும்.. )

அறிஞர்
22-01-2007, 04:47 PM
இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது....
என் ஒரு உதாரணம்... தண்ணீர் என்பது நல்ல மனிதர்கள்.... கோப்பை என்பது நல்ல குணங்கள்...

இருக்கு பாதி நல்ல மனிதர்களும் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்
மீதி இருக்கும் நல்ல குணங்களாவது கிட்டுமா? இருக்குமா?

( இது என் எண்னம்.. ஏதாவது தவறு இருந்தால் சுட்டவும்.. ) தங்களின் எண்ணம் சிறப்பாக இருக்கிறது.....

தவறுகளை... சுட்டும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை. அதை சுட்ட பெண்ஸு வருவார் என எண்ணுகிறேன்.

ஆதவா
22-01-2007, 04:53 PM
தங்களின் எண்ணம் சிறப்பாக இருக்கிறது.....

தவறுகளை... சுட்டும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை. அதை சுட்ட பெண்ஸு வருவார் என எண்ணுகிறேன்.

நன்றி அறிஞரே!!

மதுரகன்
22-01-2007, 05:26 PM
கேட்டது:
செருப்பை பார்க்கையில் நீங்கள் அதை அணிந்திருப்பவன் கால்களைப்பார்க்கிறீர்கள்
நான் அதை செய்தவனின் கைகளைப்பார்க்கிறேன்...

மதுரகன்
22-01-2007, 05:27 PM
தேனை விட முட்களைக்கொண்டிருப்பதையே
எங்களுடைய பூக்கள் அதிகம் விரும்புகின்றன..

மதுரகன்
22-01-2007, 05:28 PM
கேட்டது:
சயனைடு சுவை சாப்பிட்டவர்க்கே
தெரியும் காதல்..

மதுரகன்
22-01-2007, 05:29 PM
ஊர்க்காவல் தெய்வம் மாடசாமி
கோயில் வாசலில் பூட்டு

மதுரகன்
22-01-2007, 05:30 PM
நா.முத்துக்குமார்:
குழந்தை மண்ணைத்தின்கிறதா?
பாவம் அதன் அம்மாவின் சமையல் அப்படி..

மதுரகன்
22-01-2007, 05:33 PM
வா என்று வரவேற்கத்தான் உங்களில் யாருக்கும் வாயெழவில்லை
போ என்று புறந்தள்ள உங்கள் வீட்டு நாய்க்கும் உரிமையுண்டு..

மதுரகன்
22-01-2007, 05:35 PM
குருடனுக்குத்தான் இவ்வுலகம் சுவர்க்கபுரி
செவிடனுக்குத்தான் இவ்வுலகம் சிந்தனா சதுக்கம்
வாய்பேச மாட்டாதவன்தான் இவ்வுலகின் சிறந்த பேச்சாளன்
உணர்வற்றவனுக்குத்தான் இவ்வுலகம் தேனிலும் இனியது..

மதுரகன்
22-01-2007, 05:37 PM
பிராணிகள் வதை தடுப்புச்சங்கத்தின் வாசலில்
காவலுக்கு கட்டிப்போடப்பட்டிருந்த நாய்...

மதுரகன்
22-01-2007, 05:38 PM
அருகிலிருந்த ரோஜாவிடம் தன் காதலை சொல்லியது செம்பருத்தி
ரோஜா சொன்னது "நான் இப்போதெல்லாம் பெண்களை விரும்புவதில்லை.."

farhan mohamed
23-01-2007, 05:02 AM
உச்சரிக்கப்படாத வார்த்தைக்குள் ஒளிந்துகிடக்கிறது
காதல்

leomohan
23-01-2007, 05:22 AM
அருகிலிருந்த ரோஜாவிடம் தன் காதலை சொல்லியது செம்பருத்தி
ரோஜா சொன்னது "நான் இப்போதெல்லாம் பெண்களை விரும்புவதில்லை.."

அட கஷ்ட காலமே. பிரான்ஸ் நாடா.

leomohan
23-01-2007, 05:22 AM
குருடனுக்குத்தான் இவ்வுலகம் சுவர்க்கபுரி
செவிடனுக்குத்தான் இவ்வுலகம் சிந்தனா சதுக்கம்
வாய்பேச மாட்டாதவன்தான் இவ்வுலகின் சிறந்த பேச்சாளன்
உணர்வற்றவனுக்குத்தான் இவ்வுலகம் தேனிலும் இனியது..

அருமையான வரிகள். ரசித்தேன்.

ஆதவா
23-01-2007, 05:48 AM
அட கஷ்ட காலமே. பிரான்ஸ் நாடா.

அண்ணே!!!!

farhan mohamed
23-01-2007, 06:04 AM
உன்னைப்பார்க்காத நாட்கள்
நிறைய உண்டு - ஆனால்
உன்னை நினையாத நாளில்லை

farhan mohamed
23-01-2007, 06:07 AM
உனைப்போன்ற பெண்ணை உனக்கு காதலிக்க
முடியாததால்
பொண்ணே! உன்னைப்பார்த்து நான்
பரிதவிக்கிறேன் - எனைப்பார்த்து பெறுமை கொள்கிறேன்.

farhan mohamed
23-01-2007, 06:09 AM
நம் காதல் என்றும் இனிக்கிறது
இதயங்கள் மட்டும் சங்கமித்ததாலோ?

farhan mohamed
23-01-2007, 06:16 AM
என் மனதை வென்ற
பெண்ணே!
ஆயிரம் கவிதைகள் எழுதினாலும்
முழுமையாகச் சொல்லிவிட முடியாது
" உன்னைப்பற்றி "

ஆதவா
23-01-2007, 06:41 AM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அருமை முகமத்......

farhan mohamed
23-01-2007, 08:03 AM
கொஞ்சலாய் ஒரு கெஞ்சல்
கெஞ்சலாய் ஒரு கொஞ்சல்
காதலில் மட்டுமே !!

மதுரகன்
23-01-2007, 04:08 PM
உலக மொழிகள் யாவற்றுக்குமிடையே ஓர் ஒலிம்பிக்
அங்கு தமிழுக்கு ஒரு வெண்கலப்பதக்கமாயினும் கிடைக்கவில்லை
ஏனெனில் தமிழ் அங்கு போட்டிகளில் கலந்து கொள்ளவே இல்லை
சிறுபிள்ளைகளின் கேளிக்கை தாய் கைகட்டி வேடிக்கை பார்க்கிறாள்...

மதுரகன்
23-01-2007, 04:12 PM
மனித நேயம் அதிகம் கொண்டது
அமெரிக்காவா? அமெரிக்க ஜனாதிபதியா? அமெரிக்க மக்களா?
மும்முனைப்பட்டிமன்றம் நடுவர் ஈராக்கிய பிரதமர்..
இதுதான் இன்றையதீர்ப்பு "எவ்வாறிருப்பினும் மனிதநேயமற்றவர்கள் ஈராக்கிய மக்களே.."

மதுரகன்
23-01-2007, 04:12 PM
மோதிப்பார்த்தால்தான் தெரியும் இரும்பின் வலிமையும்
அல்லாவிட்டால் பஞ்சும் அதுவும் ஒன்றுதான்..

மதுரகன்
23-01-2007, 04:15 PM
அறிஞர்களே சமூகம் உங்களை மதிக்கின்றதா..
அது அறிவிலிகள் என்ற தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் உள்ளவரை மாத்திரமே.
சமூகத்தில் உள்ள அறிவிலிகள் அகற்றப்பட்டால் உங்கள் சிறப்பெல்லாம் செருப்பின் கீழே..

மதுரகன்
23-01-2007, 04:18 PM
'மேலே' என்ற சொல் தனித்து உருவாவதில்லை
'கீழே' தோன்றிதாலேயே மேலே தோன்றியது
ஒன்றின்றி ஒன்றுக்கு அர்த்தமில்லை..
சப்தமின்றி அமைதியில்லை..

மதுரகன்
23-01-2007, 04:21 PM
கப்பலில் மூங்கில் பயிர்செய்து படடையுரித்து
கடதாசி தயாரிக்கிறான் ஜப்பானியன்
அந்தக்காகிதத்தையே விலைகொடுத்துவாங்கி
கப்பல்செய்து மீண்டும் தண்ணீரில் விடுகிறான் இங்கொருவன்..

Narathar
23-01-2007, 04:36 PM
கப்பலில் மூங்கில் பயிர்செய்து படடையுரித்து
கடதாசி தயாரிக்கிறான் ஜப்பானியன்
அந்தக்காகிதத்தையே விலைகொடுத்துவாங்கி
கப்பல்செய்து மீண்டும் தண்ணீரில் விடுகிறான் இங்கொருவன்..

யோசிக்க வைக்கும் கவிதை........................

மதுரகன்
23-01-2007, 04:45 PM
நன்றி நாரதரே தங்கள் விஜயம் ஆதவரின் இந்த திரியினுள்ளும் அடிக்கடி இடம்பெறவேண்டும்..

இளசு
23-01-2007, 11:45 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=169354#post169354


இந்தத்திரியில் ஆதவன் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்..அதற்கு

ஒரு பறவையின் பதில்..

பறக்க சிறகு மட்டுமே போதுமே.. பாழும் காலும் வேணுமா?
பாட்டன் முற்றக் குருணை கொத்த காலும் வேணும்..
இணைதேட, கூடுகட்ட, இளசுக்கு உணவு தேடியூட்ட
எதிரிவரின் பாய்ந்தோட இளைப்பறியா இறக்கையும் வேணும்..

மன்மதன்
24-01-2007, 06:31 AM
மனித நேயம் அதிகம் கொண்டது
அமெரிக்காவா? அமெரிக்க ஜனாதிபதியா? அமெரிக்க மக்களா?
மும்முனைப்பட்டிமன்றம் நடுவர் ஈராக்கிய பிரதமர்..
இதுதான் இன்றையதீர்ப்பு "எவ்வாறிருப்பினும் மனிதநேயமற்றவர்கள் ஈராக்கிய மக்களே.."

ரொம்பவே யோசிக்க வைத்தது..

farhan mohamed
24-01-2007, 01:31 PM
நினைத்து நினைத்துப்பார்க்கிறேன் - உன் முகம் தெரியவேயில்லை
நினைக்காமல் இருக்கநினைக்கிறேன் -
உன் முகம் மறக்கவேயில்லை ??!!

farhan mohamed
24-01-2007, 01:34 PM
யுகங்கள் மாறினாலும் மாறாதது
நம் காதல் என்றாய் - இரு
வ்ருடத்தில் மறந்ததேனடி??

அறிஞர்
24-01-2007, 01:43 PM
நினைத்து நினைத்துப்பார்க்கிறேன் - உன் முகம் தெரியவேயில்லை
நினைக்காமல் இருக்க நினைக்கிறேன் -
உன் முகம் மறக்கவேயில்லை ??!!
இது இயற்கைதான்...
எதை நினைக்க கூடாது என நினைக்கிறோமோ.. அது எப்பொழுதும் நினைவில் நிற்கும்,......

அறிஞர்
24-01-2007, 01:45 PM
யுகங்கள் மாறினாலும் மாறாதது
நம் காதல் என்றாய் - இரு
வருடத்தில் மறந்ததேனடி??
காதல் பருவத்தில் வரும் வார்த்தைகளுக்கு
தண்ணீரில் எழுதின எழுத்துக்களுக்கு சமம்....

அறிஞர்
24-01-2007, 01:45 PM
மோதிப்பார்த்தால்தான் தெரியும் இரும்பின் வலிமையும்
அல்லாவிட்டால் பஞ்சும் அதுவும் ஒன்றுதான்..
அதன் வலிமை தெரிய.. நம் வலிமைக்கு சோதனை :rolleyes: :rolleyes:

அறிஞர்
24-01-2007, 01:49 PM
கப்பலில் மூங்கில் பயிர்செய்து படடையுரித்து
கடதாசி தயாரிக்கிறான் ஜப்பானியன்
அந்தக்காகிதத்தையே விலைகொடுத்துவாங்கி
கப்பல்செய்து மீண்டும் தண்ணீரில் விடுகிறான் இங்கொருவன்..
இல்லாத ஒன்றிற்கு வடிவம் கொடுக்கிறான் ஒருவன்.
உள்ள ஒன்றை வீணடிக்க முயல்கிறான் மற்றொருவன்..

அழகாய் சிந்திக்க வைக்கும் வரிகள்...

மதுரகன்
24-01-2007, 04:55 PM
தாஜ்மஹாலின் அத்திவாரத்திற்காய் குழி ஒன்று
வெட்டியிருந்தேன் அவள் அதில் குப்பையை
கொட்டி மூடிவிட்டாள்...

மதுரகன்
24-01-2007, 04:56 PM
நான் என்றுமே கவிஞனாய் இருக்க எண்ணியதில்லை
யதார்த்தத்தை செப்பனிடும் ஓவியனாகவே என்னிக்கொள்கிறேன்..

ஷீ-நிசி
24-01-2007, 04:57 PM
தாஜ்மகாலின் அத்திவாரத்திற்காய் குழி ஒன்று
வெட்டியிருந்தேன் அவள் அதில் குப்பையை
கொட்டி மூடிவிட்டாள்...

ரகளையான கவிதை.. கொஞ்சம் எழுத்துபிழை சரி செய்யுங்கள்

மதுரகன்
24-01-2007, 04:59 PM
அவர் இருந்தகொண்டே தூங்கினார், ஊரெல்லாம் கூடிவழிபட்டுப்போனது அவரை..
அவனுக்கு சந்தேகம் அறிவதற்காய் அவரைநோக்கி அசையாதிருந்தான்..
பின் அவர் எழுந்துபோய்விட்டார் ஆனால்
அவன் அப்படியே இருந்தான்..

ஷீ-நிசி
24-01-2007, 05:00 PM
வழிந்துவிழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும் -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன....

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்.....

மதுரகன்
24-01-2007, 05:02 PM
ஷீ உங்கள் வார்த்தைகளும் அட்டகாசம் செய்கின்றன..
தொடருங்களேன்...

மதுரகன்
24-01-2007, 05:06 PM
என்றும் பருந்தாகமாட்டோம் என்று தெரிந்தும்
உயர உயரப்பறக்கத்தான் விரும்புகின்றது
ஊர்க்குருவியும்..

மதுரகன்
24-01-2007, 05:08 PM
கற்களாகத்தான் இன்றையகவிதைகள் எறியப்படுகின்றன
சமுதாயத்தின் மீது..

மதுரகன்
24-01-2007, 05:12 PM
எத்தனைதரம் சூடுகண்டாலும் அடுப்பங்கரையை நாடும்
பழக்கம் விடவில்லை பூனைக்கு
அடுப்படிச்சுவர் இடிந்தபின்பும்..

மதுரகன்
24-01-2007, 05:13 PM
குருடு :
கண்ணில்லாத இந்த உலகை கண்ணில்லாமலே பார்த்து ரசிப்பது.

பென்ஸ்
24-01-2007, 07:03 PM
நீர் விட்டு மீன்கள்
துடித்தே இறக்குமாம்
நீ விட்டு நான் மட்டும்
என்னிதயம் துடிக்குமா?

நீர்விட்டு
நிலம் வந்து
முதலைகண்ணீரா???

பென்ஸ்
24-01-2007, 07:07 PM
மழை

எப்பொழுதாவது
கதவுகள் திறக்குமென
காத்திருக்கும் விழிகள்
கறுப்பு சேலைகட்டி
ஒப்பாரி வைக்கிறாள் ஒருத்தி
நாளை ஆற்றோடு போகும்
என் வீட்டை நினைத்து..!!!

பென்ஸ்
24-01-2007, 07:15 PM
மங்கையர் யாவரும்
ஓவியர்தாம்
வாசற்படி கோலம்
நீ எதோ கிறுக்கி சென்று விட்டாய்
நெருங்கி பார்...
என்னைபோலவே - அதை
ஆயிரம் முறை சுற்றிவரும் எறும்புகள்

பென்ஸ்
24-01-2007, 07:22 PM
எனக்குத் தெரிந்த வரை
நீ என் உயிர்
உனக்குத் தெரிந்த வரை
நான் உனக்கு மயிர்........
அடுத்த்வர்கள்காதலை காதலை நாம் எடைபோடுவது தவறி என்பது என் கருத்து ஆதவா.... அது அவரவர் நிலையை பொறுத்தது...
காதல் ஆழமானதுதான்.... அது இருவழியாக இருக்குமானால்... இல்லையென்றால் அந்த உயிரையும் மயிராக எறிந்து செல்லுங்கள்...

பென்ஸ்
24-01-2007, 07:38 PM
பக்கங்கள் பல எழுதலாம் - சளிக்காமல்
மணித்தியாலங்கள் பல பேசலாம் -வெறுக்காமல்
நாட்கள் பல பாடலாம் - ஓயாமல்

" உன்னைப் பற்றி ":p

உன்னை பற்றி
ஓயாமல் நினைக்கிறேன்...
ஓயாமல் ...
நினைக்கிறேன்..
ஏன்..!!!

பென்ஸ்
24-01-2007, 10:44 PM
இன்று உறுதிகொள்கிறேன் இனி அவளைப்பார்க்க மாட்டேனென்று
சென்ற மாதத்தைப்போல
:) :) :) :) :)

பென்ஸ்
24-01-2007, 10:47 PM
என்னையும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது
உன்னையும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது - ஆனால் நம்மைத்தான் யாருக்கும் பிடிக்கவில்லை.
காதல் ..
உலக தாய் தந்தையருக்கு "எய்ட்ஸ்" மாதிரி எதோ கொடிய நோய்...:rolleyes: :rolleyes:

எங்கோ வாசித்த கவிதை போல் ஒரு உணர்வு....

பென்ஸ்
24-01-2007, 11:16 PM
ஊர்க்காவல் தெய்வம் மாடசாமி
கோயில் வாசலில் பூட்டு
நம்பிக்கைக்கு பூட்டு இட முடியுமா...???

தேனை விட முட்களைக்கொண்டிருப்பதையே
எங்களுடைய பூக்கள் அதிகம் விரும்புகின்றன..
மென்மையானவை எப்பவுமே அப்படிதான்....
குழந்தையும்... பசிக்கு அழும், பசி தீர்ந்தால் அரவனைப்புக்கு... அதுவும் பாதுகாப்புக்குதான்...
பெண்கள் ஒரு குழந்தையை போல மென்மையானவர்கள்... தன்னை குத்தாத முள் போதும் அவளுக்கு...

குனா: உங்க கவிதையை இங்க சொல்லுங்க... ரோஜாக்களே பூக்காதீர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7134)


கேட்டது:
சயனைடு சுவை சாப்பிட்டவர்க்கே
தெரியும் காதல்..

நறுக்....
மதுரகன்...
இதை எல்லாம் தொகுத்து வைத்துள்ளேன்.... அருமையாக உள்ளது....

பென்ஸ்
24-01-2007, 11:18 PM
கொஞ்சலாய் ஒரு கெஞ்சல்
கெஞ்சலாய் ஒரு கொஞ்சல்
காதலில் மட்டுமே !!
காதல் மட்டுமே மழலை மொழிக்கு இனையாய்....
அருமை...

farhan mohamed
25-01-2007, 05:33 AM
பெஞ்சமின் உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்.
ஒவ்வொருவரின் வரிகளையும் ஆராய்ந்து சிறந்த பின்னூட்டத்தை வழங்குகிறீர்கள்.பாராட்டுக்கள் நண்பா!!

ஆதவா
25-01-2007, 03:50 PM
அடுத்த்வர்கள்காதலை காதலை நாம் எடைபோடுவது தவறி என்பது என் கருத்து ஆதவா.... அது அவரவர் நிலையை பொறுத்தது...
காதல் ஆழமானதுதான்.... அது இருவழியாக இருக்குமானால்... இல்லையென்றால் அந்த உயிரையும் மயிராக எறிந்து செல்லுங்கள்...

நண்பரே இது அடுத்தவர்காதல் இல்லை.....

நீ எனக்கு உயிர்....நான் உனக்கு மயிர் என்பதற்கு சிறு விளக்கம்.....

மயிர் என்றால் ரோமம்.. முடி...... துச்சம்....

நீயெனக்கு உயிராகத்தெரிகிறாய். உனக்கு நான் துச்சமாகவே தெரிகிறேன்....

பிழையிர்ந்தால் பொறுத்தருள்க புதிய நிர்வாகமே!!!!

மதுரகன்
25-01-2007, 04:27 PM
நன்றி அனைவருடைய ஆதரவுக்கும் உங்கள் ஆதரவுகள் தொடர்ந்து தேவை
முதலில் இப்படி ஒரு சிறந்த முயற்சி எடுத்த ஆதவனை எல்லோரும் பாராட்டுங்களேன்...
நான் தனியாக பிரசுரித்த தொகுதிகளிலிருந்தும் சிறந்தன சிலவற்றை இங்கே அளிக்கிறேன்...

ஆதவா
25-01-2007, 04:33 PM
நன்றி அனைவருடைய ஆதரவுக்கும் உங்கள் ஆதரவுகள் தொடர்ந்து தேவை
முதலில் இப்படி ஒரு சிறந்த முயற்சி எடுத்த ஆதவனை எல்லோரும் பாராட்டுங்களேன்...
நான் தனியாக பிரசுரித்த தொகுதிகளிலிருந்தும் சிறந்தன சிலவற்றை இங்கே அளிக்கிறேன்...

அட!! மது.. நான் சும்மா ஏதாவது திரி கொளுத்தலாம்னு ஆரம்பிச்சேன்பா!!! நான் நிமிசத்துக்கு நிமிசம் நாலுவரியில கவிதை எழுதுவேன்.. அந்த நினைப்புத்தான்// நிறைய பேர் எழுத ஆரம்பிச்சதும் நான் கொஞ்சம் சுலோ ஆயிட்டேன்... நேரம் அமையட்டும்... பாராட்டெல்லாம் வேண்டாம்..............

மதுரகன்
25-01-2007, 04:34 PM
உன் நான்கெழுத்துப்பெயரிலிருந்து நிராகரிக்கப்பட்ட
அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன
மீதி 243 தமிழ் எழுத்துக்களும்...

மதுரகன்
25-01-2007, 04:36 PM
தாகமெடுத்தது உன்னை அருந்தினேன்
தாகத்தை தூண்டுவதற்காய்..

ஷீ-நிசி
25-01-2007, 04:36 PM
குருடர்களும்
சினிமா பார்க்கிறார்கள் -தங்கள்
கனவுத்திரையில்!

மதுரகன்
25-01-2007, 04:36 PM
ஏனடி என் இமைகள் இமைக்க மறுக்குதே
உன்னைக்கனவில் கண்டாலும்...

ஆதவா
25-01-2007, 04:38 PM
நண்பரே! அருமைதான்... பொதுவாக எனக்கு நான்கு வரிக்கவிதைகள் ஏனோ தெரியவில்லை.. காமக் கவிதையாகவே தோணுகிறது..... என் கற்புற்ற காமக் கவிதை பார்வையிடவும்........

மதுரகன்
25-01-2007, 04:38 PM
உன் கண்களைவிட சூரியன் மேல் எனக்கு
இரவிலாவது என்னை எரிப்பதை நிறுத்திக்கொள்வதால்..

மதுரகன்
25-01-2007, 04:39 PM
நிச்சயம் பார்வையிடுகிறேன் ஆதவா..

மதுரகன்
25-01-2007, 04:40 PM
உன் மூச்சுக்குள் அகப்பட்டு
மூச்சுத்திணறி இறந்துவிடத் தவிக்கிறேன்
ஏனடி சுவாசிக்கமறுக்கிறாய் என்னருகில்

ஷீ-நிசி
25-01-2007, 04:40 PM
உன் கண்களைவிட சூரியன் மேல் எனக்கு
இரவிலாவது என்னை எரிப்பதை நிறுத்திக்கொள்வதால்..

இதில் ஏதோ வார்த்தை விடுபட்டிருக்கிறது. கவனியுங்கள் நண்பரே!

மதுரகன்
25-01-2007, 04:47 PM
இல்லை நண்பரே எதுவும் விடுபடவில்லை
ஒரு புதிய நடையில் எழுதியிருந்தேன்... :)

ஆதவா
25-01-2007, 05:08 PM
குருடர்களும்
சினிமா பார்க்கிறார்கள் -தங்கள்
கனவுத்திரையில்!

ஆமாம் ஆமாம்!!!

மனோஜ்
25-01-2007, 05:19 PM
சிலறுக்கு மாற்றங்கள் வருவது மனதில்
மாறாமல் இருப்பது வாழ்வில்...

ஆதவா
25-01-2007, 05:48 PM
தயவு செய்து
வானத்தைப் பார்
உனக்காக நான்
தேய்ந்து கொண்டிருக்கிறேன்

ஆதவா
25-01-2007, 05:49 PM
உறக்கமில்லாத கனவுகளுடன்
மேக வண்ணத்தில் அலைகிறேன்
நிமிர்ந்து சற்றே இமை திற
உனக்காக ஒரு விழி
கண்மூடாமல் காத்திருக்கிறது.

ஆதவா
25-01-2007, 05:51 PM
என் கணகளிலிருந்து விழும்
ஒவ்வொரு பூவும்
கனியாகவே முற்படுகின்றன
காய்பருவம்
கண்ணுக்குத் தெரிவதில்லை

ஆதவா
25-01-2007, 05:53 PM
தங்கிய பறவையை துரத்தி விட்டு
தொங்கிய கப்பியில் கயிற்றை விட்டு
நங்கை இவள் கண் கிணற்றில் விட்டு
டங்"கென சத்தம் கிணற்றை விட்டு

ஆதவா
25-01-2007, 05:58 PM
நாச முறுதியிங்கு தன்னாசை ஆய்விடில்
தேச முறுதியிங்கு (அந்)ஆசை போய்விடில்

ஆதவா
25-01-2007, 05:59 PM
போதித்த சுவை உள்நின்னும் போது
பாதித்த விஷயம் படும் உதை.

ஆதவா
25-01-2007, 06:11 PM
ஊறு கவியிரண்டு தானாய்
சேரு மிங்கே

leomohan
25-01-2007, 06:12 PM
என் கணகளிலிருந்து விழும்
ஒவ்வொரு பூவும்
கனியாகவே முற்படுகின்றன
காய்பருவம்
கண்ணுக்குத் தெரிவதில்லை

அருமை. தொடருங்கள் நிஜமான நால்வரிக் கவிதைகளை.

leomohan
25-01-2007, 06:12 PM
தயவு செய்து
வானத்தைப் பார்
உனக்காக நான்
தேய்ந்து கொண்டிருக்கிறேன்


நிலா லெவலுக்கு உசந்திட்டீங்க போங்க.

ஆதவா
25-01-2007, 06:17 PM
அருமை. தொடருங்கள் நிஜமான நால்வரிக் கவிதைகளை.


நிலா லெவலுக்கு உசந்திட்டீங்க போங்க.

மோக முன் வார்த்தைக்கு
மேகமாய் நன்றி..........

ஆதவா
25-01-2007, 06:23 PM
விழி, கிழி, கழி
வழி கொழி, குழி
சுழி, உழி, மொழி
கவிதை எழுத முயன்றேன்
முடியவில்லை......

அறிஞர்
25-01-2007, 07:27 PM
:eek: :eek: :eek: :eek: :eek: :eek:
விழி, கிழி, கழி
வழி கொழி, குழி
சுழி, உழி, மொழி
கவிதை எழுத முயன்றேன்
முடியவில்லை......
:eek: :eek: :eek: இப்படி எங்களை முழிக்க வைச்சுட்டிங்க... :eek: :eek: :eek: :eek: :eek:

அறிஞர்
25-01-2007, 07:29 PM
போதித்த சுவை உள்நின்னும் போது
பாதித்த விஷயம் படும் உதை.
என்னது வாத்தியாரை சாடுற மாதிரி தெரியுது.....
:rolleyes: :rolleyes: :rolleyes:

ஓவியா
27-01-2007, 02:32 PM
அனைத்து கவிதைகளும் அற்புதம்

எதற்க்கு எப்படி விமற்சனம் எழுதுவது என்று குழம்பி விட்டேன்

இந்த பதிவு மிகவும் அருமையாய் செல்கிறது

கவிஞசர்களுக்கு பாராட்டுக்கள்

மதுரகன்
28-01-2007, 05:03 PM
பாராட்டுக்களுக்கு நன்றி ஓவியா...
இங்கு நீங்களும் எழுதலாமே...
:) :) :)

சே-தாசன்
29-01-2007, 02:58 AM
நீ நான் மறக்கவேண்டிய ஞாபகம்.

மனோஜ்
29-01-2007, 06:27 AM
மனதில் வட்டமிட்ட பெண்வன்டு
எனது பூவில் வட்டமிட முடியூமா
கடவுளே கருனை செய் என் வன்டு
பொன் வன்டாய் பூவினில் வாழு!!

பூ = குடும்பம்

மதுரகன்
29-01-2007, 05:16 PM
சாவு என்பது காதல் போலிருக்குமா....?

மதுரகன்
29-01-2007, 05:17 PM
நெருப்பு என்று தெரிந்தும் அதில் கைவைத்திருக்கிறாயா..?
காதலித்துப்பார் சுடாது.
விஷம் என்று தெரிந்தும் குடித்திருக்கிறாயா..?
காதலித்துப்பார்...

மதுரகன்
29-01-2007, 05:19 PM
இந்தப்பூவில் முள் இல்லை என்பது தெரிந்தும் ஏன் இவ்வளவு நாளாய்
காத்திருந்தேன் என்று தெரியவில்லை...

farhan
30-01-2007, 04:21 AM
பாராட்டுக்கள் மதுரகன் நால்வரிக்கவிதைகளுக்கு!!

அறிஞர்
30-01-2007, 02:51 PM
இந்தப்பூவில் முள் இல்லை என்பது தெரிந்தும் ஏன் இவ்வளவு நாளாய்
காத்திருந்தேன் என்று தெரியவில்லை...
முள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் அன்பரே..

அறிஞர்
30-01-2007, 02:52 PM
மனதில் வட்டமிட்ட பெண்வன்டு
எனது பூவில் வட்டமிட முடியூமா
கடவுளே கருனை செய் என் வன்டு
பொன் வன்டாய் பூவினில் வாழு!!

பூ = குடும்பம்
மனதில் வட்டமிடும்
பெண்வண்டுகள்..
பூவை அலங்கரித்தால்....
இன்பமே....

இன்னும் தொடருங்கள்..

மனோஜ்
30-01-2007, 03:00 PM
அறிஞரே
நான் வட்டமிட்ட வண்டு என்று தான் கூறினேன்
வண்டுகள் என்று கூறவில்லை
அது ஆபத்து அறிஞரே

அறிஞர்
30-01-2007, 03:14 PM
நெருப்பு என்று தெரிந்தும் அதில் கைவைத்திருக்கிறாயா..?
காதலித்துப்பார் சுடாது.
விஷம் என்று தெரிந்தும் குடித்திருக்கிறாயா..?
காதலித்துப்பார்...
காதலித்தால் எல்லா விஷப்பரிட்சையும்... சாதரணமாகிவிடும்...

அறிஞர்
30-01-2007, 03:14 PM
அறிஞரே
நான் வட்டமிட்ட வண்டு என்று தான் கூறினேன்
வண்டுகள் என்று கூறவில்லை
அது ஆபத்து அறிஞரே
சரி சரி.. வண்டு என எடுத்துக்கொள்வோம்.. :rolleyes: :rolleyes:

ஆதவா
30-01-2007, 03:45 PM
காதலித்தால் எல்லா விஷப்பரிட்சையும்... சாதரணமாகிவிடும்...

ஆமாம்...

அறிஞர்
30-01-2007, 03:49 PM
காதலித்தால் எல்லா விஷப்பரிட்சையும்... சாதரணமாகிவிடும்...


ஆமாம்...
ஆஹா வார்த்தையிலே.. ஜாலங்களை கண்டுபிடிக்கும் தம் திறமை சிறப்பு......

காதலித்தால்... எல்லாம் தெரியும்.... :rolleyes: :rolleyes: :rolleyes:

ஆதவா
30-01-2007, 04:02 PM
அறிவாய்! நீ! விடயங்கள்
அறிந்தபின் அறிவாய் மெய்
அறிவாயா இனியாவது அவை
அறிவிலி என்று?

அறிஞர்
30-01-2007, 04:19 PM
அறிவிலி அர்த்தம் மறந்துவிட்டது ஆதவா.. விளக்கமுடியுமா

ஆதவா
30-01-2007, 04:35 PM
அறிவாய்! நீ! விடயங்கள்
அறிந்தபின் அறிவாய் மெய்
அறிவாயா இனியாவது அவை
அறிவிலி என்று?

அறிஞரே!! முதலில் கடகட என்று எழுதிவிட்டேன்........ பின் யாராவது சொல்வார்களோ என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்.....

அறிவிலி என்றால் மெய்யல்ல என்று பொருள்.....

இதில் கவனிக்க வேண்டியது......

சில விஷயங்கள் நாம் மெய்யென்று அறிகிறோம்..... அதோடு அதில் மெய்யல்லாத பொய்யொன்று உள்ளதை மறந்துபோகிறோம்.
கண்ணால் காண்பதெல்லாம் மெய்யல்ல என்பதை உணர்த்துவதாய் கவிதை எழுதியிருக்கிறேன்......

pradeepkt
31-01-2007, 04:36 AM
ஆதவா, என் மனதிற்குப் பட்டதைச் சொல்கிறேன். எனவே வருத்தங்கள் வேண்டாம்!

உங்கள் கவிதையைப் படித்தேன். சில பல குழப்பங்கள் மிஞ்சின.

கண்ணால் (ஐம்புலன்களில் ஒன்று) காண்பது மெய்யல்ல என்பதை உணர்த்துவதாக நீங்கள் சொல்லியபின்னே அறிய முடிகிறது. விடயங்கள் அறிந்தபின் அறிவாய் மெய் என்ற வரி எனக்கு முழுமையான தேர்ந்த அறிவாகவே (தீர விசாரித்து அறிந்த) படுகிறது. இப்படித் தீர விசாரித்து அறிந்த மெய்க்குப் பின் என்ன பொய் இருக்க முடியும்? அப்படியே இருந்தால் தீர விசாரித்து அறிவதன் பயன் யாது? என்பதுதான் புரிபடவில்லை.

அறிவிலி என்ற சொல்லுக்கு அறிவில்லாதவர் என்பது மட்டுமே பொருள் (பால்ஸ் இ டிக்ஷனரியை இறக்கிக் கொள்ளுங்கள் http://www.ildc.gov.in/GIST/htm/dictionary.htm) . நீங்கள் மெய்யல்ல என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று கவிதையின் கருப்பொருளை வைத்துக் கண்டுகொள்ள இயலவில்லை.

மேலும் கவிதையின் நோக்கம் முடிந்த அளவு வாசகனைச் சேர வேண்டும். அத்துடன் ஏதேனும் சிக்கலான வடிவு இருப்பின் அது அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும், கவிதையின் நோக்கத்திற்கு அவனை இழுத்துச் செல்ல வேண்டும். இது என்னுடைய ஏதோ ஒரு பழைய கவிதைக்கு நம் மன்றத்து முன்னோடி "நண்பன்" கொடுத்த அறிவுரை.

மற்றபடி இன்னும் நிறைய எழுதுங்கள். படித்துப் பரவசப்பட நாம் காத்திருக்கிறோம்! நன்றி!

ஆதவா
31-01-2007, 02:41 PM
தவறுக்கு வருந்துகிறேன்..

அறிஞர்
31-01-2007, 03:14 PM
பிரதீப்புக்கு நண்பன் கொடுத்த அறிவுரை.. அனைவருக்கும் பொருந்தும்...

மதுரகன்
31-01-2007, 05:19 PM
முள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் அன்பரே..
பூ என குறிப்பிட்டது காதலியை
முள் எனக்குறிப்பிட்டது அவளிடம் இருப்பதாக கருதிய காதல்மேல் அல்லது என் மேல் இருந்த வெறுப்பு.
விளக்கம் போதுமா..

மதுரகன்
31-01-2007, 05:21 PM
என் உணர்வுகளின் சிலிர்ப்புகளுக்குள் புதைந்துகொண்டு
உணக்காக அவற்றை வார்த்தைகளில் கோர்த்தேன்
ஓரிரு கவிதைகளாக...

மதுரகன்
31-01-2007, 05:24 PM
நன்றி பர்கான் வாழ்த்துக்கு...

மதுரகன்
31-01-2007, 05:28 PM
உன் காற்கலங்கை ஒலி எனக்கு பிடித்திருப்பதை
அறிந்துமா அதை அகற்றினாய் அன்று..

மதுரகன்
31-01-2007, 05:29 PM
உன் பேச்சிலே நான் மனம் குளிர்வதை
எண்ணியா மெளனமாகிறாய் அருகில்...

மதுரகன்
31-01-2007, 05:31 PM
உன் அழகிய வதனம் என்மீது படுவதை
தடுக்கவா இடையடையே திரைபோடுகிறாய் இடையே

ஆதவா
31-01-2007, 05:41 PM
மது.... அருமையாக இருக்கிறது.......... நால்வரிக்கவிதைகள் இருவரிக்கவிதைகளாக ஜொலிக்கிறது

மதுரகன்
31-01-2007, 05:44 PM
வாழ்த்துக்கு நன்றி ஆதவா.. நீங்களும் தொடருங்களேன்..

மதுரகன்
31-01-2007, 05:45 PM
என் கற்பனை என்னும் கதவினுள் இதுவரை
எட்டியும் பார்க்காத அவள் முகம்
என் பேனாவின் நுனியினால் இதுவரை
எழுதியும் பார்க்கப்படாத அவள் பெயர்..

pradeepkt
01-02-2007, 05:08 AM
தவறுக்கு வருந்துகிறேன்..
இதற்கு அவசியமில்லை :D
தாங்கள் என் கருத்துகளைப் பரிசீலித்ததே மகிழ்ச்சி. நான் ஒன்றும் பெரிய கவிஞனில்லை. ஒரு சாதாரண வாசகனாக இருந்தே உங்கள் கவிதையைப் படித்தேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள், ஆதவா! பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன.

ஆதவா
01-02-2007, 04:41 PM
இதற்கு அவசியமில்லை :D
தாங்கள் என் கருத்துகளைப் பரிசீலித்ததே மகிழ்ச்சி. நான் ஒன்றும் பெரிய கவிஞனில்லை. ஒரு சாதாரண வாசகனாக இருந்தே உங்கள் கவிதையைப் படித்தேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள், ஆதவா! பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன.

நண்பரே! அவசியமிருக்கிறது நண்பரே! ஒரு கவிதை என்பது கருத்தைத் திணிப்பது.. அதில் தவறு இருக்கும் பஷத்தில் தட்டிக் கேட்பதும் மன்னிப்பு கேட்பது சகஜம்..
மன்னிப்பு கேட்பவன் மனிதன்
மன்னிப்பு கொடுப்பவன் மகா மனிதன்
அந்த வகையில் நான் கேட்டேன் நீங்கள் கொடுத்தீர்கள்////////

கவிதையைப் பொறுத்தவரை
என்னிடம் அகராதி இல்லை அதனால் அறிவிலி என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாமல் போனேன். இத்தனைக்கு சாதாரண வார்த்தைதான்.. மெய் என்பது அறிவு என்பது ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். வள்ளுவர்கூட மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லியிருக்கிறார் அல்லவா?
எழுதும்போது கடகட என்று எழுதிவிட்டேன். எனக்கும் அர்த்தம் உள்ளடங்கியது என்று திருப்தி பட்டுக்கொண்டே பதிவிட்டேன்.. ஆனால் தவறு நேர்ந்துவிட்டது...............மீண்டுமொரு முறை மன்னிப்பு கேட்கிறேன்....
(உள்மனது மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது...... காரணம் நானும் ஒரு சாதாரண மனிதன்.............)

அறிஞர்
01-02-2007, 06:58 PM
என் கற்பனை என்னும் கதவினுள் இதுவரை
எட்டியும் பார்க்காத அவள் முகம்
என் பேனாவின் நுனியினால் இதுவரை
எழுதியும் பார்க்கப்படாத அவள் பெயர்..
யாரவள்.....
தெரியாதவளுக்காக ஒரு கவிதையா...

மனோஜ்
01-02-2007, 07:20 PM
மாறும் உலகில் மாற அன்பில்
மாற்றம் வந்திடுமா உன்
மனதினில் நான் மாறாது
மகிழ்ந்திட உன் அன்பில்

அறிஞர்
02-02-2007, 04:37 PM
மாறும் உலகில் மாற அன்பில்
மாற்றம் வந்திடுமா உன்
மனதினில் நான் மாறாது
மகிழ்ந்திட உன் அன்பில்
உலகில் எல்லாம் மாறுகிறது...

காதலியின் மனதில் மாறா அன்பு கிட்டட்டும்...

ஷீ-நிசி
03-02-2007, 02:18 PM
அழுதபடி பிறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் சிரித்தபடி!
சிரித்தபடி இறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் அழுதபடி!

மயூ
03-02-2007, 02:32 PM
அத்தனையும் அருமை நண்பா!

மயூ
03-02-2007, 02:34 PM
யாரவள்.....
தெரியாதவளுக்காக ஒரு கவிதையா...
கண்டுக்காதீங்க அறிஞரே வயசுக் கோளாறு!
நீங்க அந்த வயசுதாண்டித் தானே வந்தனியள்!!!! :)

மயூ
03-02-2007, 02:34 PM
அழுதபடி பிறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் சிரித்தபடி!
சிரித்தபடி இறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் அழுதபடி!
உறவுகள் எப்போதும் புரியாத புதிர்தான்! :confused:

பிச்சி
03-02-2007, 04:13 PM
ரூபாய்த் தாள்களில்
ஒளிந்திருக்கும்
வாட்டர் மார்க்கைப் போல்
நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மேட்டர் தான் காதல்......... :)

மதுரகன்
03-02-2007, 04:29 PM
ரூபாய்த் தாள்களில்
ஒளிந்திருக்கும்
வாட்டர் மார்க்கைப் போல்
நம் உள்ளத்தில் ஒளிந்திருக்கும்
மேட்டர் தான் காதல்.........
வித்தியாசம்தான் ஆனாலும் இவ்வளவு கூடாது பிச்சி..

போகிற போக்கில் இப்படி எழுதுவீர்கள் போல..

"software இல் மறைந்திருக்கும் Bug போல..."
"Cookies இல் மறைந்திருக்கும் nuts போல.."

எப்படி என் ஆரம்பங்கள்..

மதுரகன்
03-02-2007, 04:37 PM
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா...
என்னை சாகாமல் செய்கின்ற சந்தோஷம் நீயா...
என் பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா..
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா..??

மதுரகன்
03-02-2007, 04:39 PM
நீ என்னை நிராகரித்துவிடப்போகிறாய் என்று
நிச்சயமாகத்தெரிந்து கொண்டபின்னர்தான் பெண்ணே
உறுதியாக நான் அந்த வேண்டுகோளைவிடுத்தேன்...

மதுரகன்
03-02-2007, 04:41 PM
காதல் உறுதியாக என்னை அழித்துவிடப்போகின்றது
என்று நிச்யமாக அறிந்தபின்னர்தான் பெண்ணே
நிறுத்தாமல் அந்த வழியில் தொடர்கிறேன்...

ஆதவா
03-02-2007, 04:43 PM
அழுதபடி பிறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் சிரித்தபடி!
சிரித்தபடி இறந்தேன்!
என்னைச் சுற்றிலும் உறவுகள் அழுதபடி!

இந்த கவிதை ஒரு சுழற்சி முறைக் கவிதை.....

நீ அழு நான் சிரிக்கிறேன்.... நான் சிரிக்கிறேன் நீ அழு...... இதுதான் சாரம். அதில் அர்த்தங்களைப் பதித்து எழுதுவது சிரமம்தான். உங்கள் சிந்தனை மிக மிக மிக மிக (அடிக்கறாங்கப்பா!! நிறுத்திக்கிறேன்) அருமை......:)

மதுரகன்
03-02-2007, 04:43 PM
இந்தக்கண்களிரண்டையும் யார் இத்தனை நாளாய்
பட்டினிபோட்டதோ இமைக்க இடைவெளிவிடாது
உன்னையே உண்கின்றனவே...

மதுரகன்
03-02-2007, 04:44 PM
இந்த நாசிகளிரண்டையும் யார் இன்றுவரை பூட்டி வைத்ததோ
ஒரேயடியாய் உன்னையே முகர்கின்றனவே..

ஆதவா
03-02-2007, 04:45 PM
காதல் உறுதியாக என்னை அழித்துவிடப்போகின்றது
என்று நிச்யமாக அறிந்தபின்னர்தான் பெண்ணே
நிறுத்தாமல் அந்த வழியில் தொடர்கிறேன்...


அண்ணா! என்னங்ணா!!! எப்டிங்ணா??

ஆதவா
03-02-2007, 04:46 PM
அட போங்கப்பா!! எல்லா கவிதையும் இப்படி அழகா எழுதினீங்கன்னா நான் எப்படி தனித்தனியா விமர்சிக்கிறது?

மதுரகன்
03-02-2007, 04:47 PM
என் கண்கள் உன்னைத்தேடுகின்றன என்று தெரிந்தும்
நீ உன்னை மறைத்துக்கொள்வாய்
ஆனால் உன் கண்கள் எதைத்தேடினாலும் என்னையே என்று
எண்ணி நான் என்னைக்காண்பிக்கிறேன்...

மயூ
04-02-2007, 10:23 AM
பெருங்கடலில் தத்தளித்தேன்
பாலைவனத்தில் தவித்திருந்தேன்..
நீ வரவில்லை என்றல்லவா எண்ணினேன்
கட்டுமரமாக, ஒட்டகமாகவும் வந்தவள் நீதானோ!

ஹி...ஹி... எல்லாரும் எழுதுறீங்க நானும் என்பாட்டுடுக்கு ஏதாவது ரைபண்ணலமுண்ணு!!!

மதுரகன்
04-02-2007, 04:11 PM
பெருங்கடலில் தத்தளித்தேன்
பாலைவனத்தில் தவித்திருந்தேன்..
நீ வரவில்லை என்றல்லவா எண்ணினேன்
கட்டுமரமாக, ஒட்டகமாகவும் வந்தவள் நீதானோ!
நல்லாத்தானே எழுதுகிறீர்கள் மயூ தொடரலாமே..

மதுரகன்
04-02-2007, 04:13 PM
இந்தக்கிறுக்கல்களுக்குள் புதைந்துகொண்டிருக்கும் இறுகிப்போன
என்னுடைய உணர்வுகளின் பிடியிலிருந்து என்னையும் உன்னையும் விடுதலை செய்துகொள்ள பெரிதாக நீ ஒன்றும் செய்துவிடத்
தேவையில்லை ஓர் புன்னகை போதுமடி...

மதுரகன்
04-02-2007, 04:15 PM
நான் உன் இதயத்தை நீண்ட கஷ்டத்திற்கு
பின்னரே கனியவைத்தேன்
நீ அதை வேறு எவனுக்கோ உண்ண
கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்....

மதுரகன்
04-02-2007, 04:21 PM
இந்த சின்னச்சின்ன தீப்பொறிகளை
உன்விழிகளுக்குள் எப்படி ஒளித்துக்கொண்டாய்
உன் வழிகளில் கொஞ்சம் அசந்தாலும்
குருடாகிவிடும் போலுள்ளது என் பார்வை..

மயூ
05-02-2007, 12:27 AM
நல்லாத்தானே எழுதுகிறீர்கள் மயூ தொடரலாமே..
அட.. சத்தியமாகவா? :eek:

பிச்சி
05-02-2007, 12:57 PM
வித்தியாசம்தான் ஆனாலும் இவ்வளவு கூடாது பிச்சி..

போகிற போக்கில் இப்படி எழுதுவீர்கள் போல..

"software இல் மறைந்திருக்கும் Bug போல..."
"Cookies இல் மறைந்திருக்கும் nuts போல.."

எப்படி என் ஆரம்பங்கள்..

:D :D :D :D :D :D

பிச்சி
05-02-2007, 12:58 PM
மதுரகன் உங்கள் கவிதைகள் அல்லாமே அருமையா இருக்கு. நல்ல புலமை உங்களிடம் இருக்கு.

மயூ
05-02-2007, 04:21 PM
மதுரகன் உங்கள் கவிதைகள் அல்லாமே அருமையா இருக்கு. நல்ல புலமை உங்களிடம் இருக்கு.
எதிர்கால மருத்துவர்
கவி சொல்லியே மருந்தில்லாமல் மருத்துவம் செய்துவிடப் போகின்றார் பாருங்கள். :D

maganesh
06-02-2007, 01:52 PM
உதடு பேசினால் கதையாம்
உள்ளம் பேசினால் கவியாம்
நீ பேசினால் காதலாம்
உண்மையா கண்மணியே?

மதுரகன்
06-02-2007, 04:51 PM
மதுரகன் உங்கள் கவிதைகள் அல்லாமே அருமையா இருக்கு. நல்ல புலமை உங்களிடம் இருக்கு
நன்றி பிச்சி ஆனால் உங்களை விடவா..?
:) :)

மதுரகன்
06-02-2007, 04:52 PM
எதிர்கால மருத்துவர்
கவி சொல்லியே மருந்தில்லாமல் மருத்துவம் செய்துவிடப் போகின்றார் பாருங்கள்.
வருத்தம் கூடாதிருந்தால் சரிதான்..

மதுரகன்
06-02-2007, 04:54 PM
உதடு பேசினால் கதையாம்
உள்ளம் பேசினால் கவியாம்
நீ பேசினால் காதலாம்
உண்மையா கண்மணியே?

வாழ்த்துக்கள் மயூரன் தொடருங்கள்..

அறிஞர்
06-02-2007, 09:44 PM
உதடு பேசினால் கதையாம்
உள்ளம் பேசினால் கவியாம்
நீ பேசினால் காதலாம்
உண்மையா கண்மணியே?
முதலில் பேசும் போது காதல் வெளிப்படும்..
போக போக... என்ன வெளிப்படுமோ...

அருமை மயூரன் தொடருங்கள்...

மீனாகுமார்
07-02-2007, 05:13 PM
உன் உள்ளங் கைச் சூட்டினிலே
என்னுள் ஆழப் புதைந்திருந்த துன்பமெலாம்
சூரியன் எழுப்பிய நீராவி போல
பொசுங்கிப் பறந்ததடி நெஞ்சம் குளிர்ந்ததடி
வா வந்தென்னை அணைத்துக் கொள்ளடி.

maganesh
07-02-2007, 05:24 PM
உன் உள்ளங் கைச் சூட்டினிலே
என்னுள் ஆழப் புதைந்திருந்த துன்பமெலாம்
சூரியன் எழுப்பிய நீராவி போல
பொசுங்கிப் பறந்ததடி நெஞ்சம் குளிர்ந்ததடி
வா வந்தென்னை அணைத்துக் கொள்ளடி
அருமையான கவி மீனகுமார். உள்ளங்கைச்சூட்டில் அப்படி என்றால் அவள் அணைக்கும்போது மொத்தமும் ஆவியாகி விடுமே.

மனோஜ்
07-02-2007, 06:05 PM
ஆவியானலும் பறவயி்ல்ல ஆணைச்சாபோதும் எனநினைக்கிறார் போல
அருமையான கவிதை மீனகுமார் அவர்களே

maganesh
07-02-2007, 06:25 PM
நட்டநடு இரவில் பூத்துக்குலுங்கிய
அழகு மலர்கள் மறுநாள் காலை
வாடாமல் ஆனால் முக வாட்டத்துடன்
இறைவன் மேனியில் அவனா கேட்டான்
எனக்கொரு மாலை தாருங்கள் என்று
நாமே கொடுதோம் எடுத்துக்கொள் என்று
உயிர்ப்பலி கொடுக்க தடைச்சட்டம்
மலர்களை கொல்ல ஏனிந்த நாட்டம்
நம் படைப்பை நாமே அழிப்போமா
அது நல்லதாக இருக்கும்போது
அவன் படைத்ததை அவனா கேட்டான்
அலங்கரப் பண்டமாக

maganesh
08-02-2007, 11:56 AM
என்னுள் நீ
உன்னுள் நான்
நம்முள் காதல்
நாமோ கல்லறைக்குள்.

thoorigai
08-02-2007, 12:14 PM
உனை நான் தேடி
உள்ளமும் வாடி
வயதேறி போனபின்
வந்தாயடி வஞ்சியே

pradeepkt
08-02-2007, 12:35 PM
என்னுள் நீ
உன்னுள் நான்
நம்முள் காதல்
நாமோ கல்லறைக்குள்.
அது சரி!!
நம்முள் காதல் இருந்ததனால்தான் கல்லறைக்குள் நாம் இருக்கிறோமா?

thoorigai
08-02-2007, 12:51 PM
உதடு பேசினால் கதையாம்
உள்ளம் பேசினால் கவியாம்
நீ பேசினால் காதலாம்
உண்மையா கண்மணியே?

அம்பு விழி கொண்ட பாவை
அன்பு மொழி பேசும் பார்வை
பேசுவதெல்லாம் காதலா
பேச மறந்தால் சாதலா

thoorigai
08-02-2007, 01:16 PM
நான்கு வரி கவிதை தன்னில்
ஞாலந்தன்னை அடக்கவெண்ணி
பேராசை கொண்ட மனம்
பேனா கையில் எடுக்குதே!

பென்ஸ்
08-02-2007, 01:28 PM
ஆதவன் இரவில் எட்டிபார்த்து செல்லுகையில்
பகலிலே பொளர்னமிகளின் ஊர்வலம்..
மன்றத்து தாமரைகளுக்கு
மணம் வீச பிச்சிகளும்...

பிச்சி
08-02-2007, 01:35 PM
ஆதவன் இரவில் எட்டிபார்த்து செல்லுகையில்
பகலிலே பொளர்னமிகளின் ஊர்வலம்..
மன்றத்து தாமரைகளுக்கு
மணம் வீச பிச்சிகளும்...

அட,,, என்னை இங்கே இழுக்கிறீங்க போல...

மிஞ்சி நான் என்னதான் எழுத முடியும்
பெஞ்சமின் அண்ணனைப் போல....:) :) :) :)

maganesh
08-02-2007, 04:05 PM
மலர்ந்த மலர் வாடலாம்
பச்சை இலை சருகாகலாம்
உதித்த பகலவன் மறையலாம்
இணைந்த இதயங்கள் பிரியலமா

மதுரகன்
08-02-2007, 04:27 PM
கேட்டது:
"கோயிலை நீ சுற்றினாய் பக்தியோடு..
உன்னை நான் சுற்றினேன் காதலோடு...
உன் அப்பன் உன்னை சுற்றினான் அரிவாளோடு.."

மதுரகன்
08-02-2007, 04:29 PM
குட்டி போடுகிறதோ இல்லையோ
புத்தகத்திற்குள் நிறைய கவதைகள் தருகின்றது
மயிலிறகு..

மீனாகுமார்
08-02-2007, 04:31 PM
கேட்டது:
"கோயிலை நீ சுற்றினாய் பக்தியோடு..
உன்னை நான் சுற்றினேன் காதலோடு...
உன் அப்பன் உன்னை சுற்றினான் அரிவாளோடு.."

ஏதேது... தலை தெறிக்க ஓடி வந்தே இந்த கவிதை எழுதிருப்பாரு போல.. ம்... அப்புறம் என்ன நடந்தது...

மதுரகன்
08-02-2007, 04:31 PM
இந்த சின்னஞ்சிறு முட்களை எங்கிருந்து
தேடிக்கொண்டாய் உன் வார்த்தைகளெல்லாம்
என் இதயத்தை குத்தி காயப்படுத்தி விடுகின்றனவே...

மதுரகன்
08-02-2007, 04:33 PM
அழகாகத்தானே சிரித்துக்கொண்டிருந்தாய் என்னைக்கண்ட
பின்னர் மாத்திரம் ஏனிந்த கடுப்பு சிரிப்பு
முறைப்பு பார்வை...
திட்டமிட்டுத்தானடி மாற்றுகின்றாய் உன் முகபாவங்களை..

மதுரகன்
08-02-2007, 04:36 PM
இந்தப்பக்கம் மட்டும் திரும்பிவிடாதே
பொசுங்கிவிடப்போகின்றது என்னிதயம்..
என்னைப்பார்த்து சிரிக்காதே
கலங்கிவிடப்போகின்றது என் சித்தம்..

maganesh
09-02-2007, 08:16 AM
இந்தப்பக்கம் மட்டும் திரும்பிவிடாதே
பொசுங்கிவிடப்போகின்றது என்னிதயம்..
என்னைப்பார்த்து சிரிக்காதே
கலங்கிவிடப்போகின்றது என் சித்தம்..
பெயரைப் போலவே தேன் மதுரத் தமிழ் கலந்து கவி படைத்துள்ளீர். க்திதிப்புக்கு குறைவில்லை. திகட்டவும் இல்லை.

பென்ஸ்
10-02-2007, 01:02 PM
அழகாகத்தானே சிரித்துக்கொண்டிருந்தாய் என்னைக்கண்ட
பின்னர் மாத்திரம் ஏனிந்த கடுப்பு சிரிப்பு
முறைப்பு பார்வை...
திட்டமிட்டுத்தானடி மாற்றுகின்றாய் உன் முகபாவங்களை..

அவள்
காதலிக்கிறாள் ...
மதுரகன்

பென்ஸ்
10-02-2007, 01:04 PM
இந்தப்பக்கம் மட்டும் திரும்பிவிடாதே
பொசுங்கிவிடப்போகின்றது என்னிதயம்..
என்னைப்பார்த்து சிரிக்காதே
கலங்கிவிடப்போகின்றது என் சித்தம்..

பார்க்காமல் போவதால் தானே உறந்து போகிறீர்???
சிரிக்கவில்லையென்றால் மொத்தம் கலங்கி போவீரே..!!!

பென்ஸ்
10-02-2007, 01:05 PM
இந்த சின்னஞ்சிறு முட்களை எங்கிருந்து
தேடிக்கொண்டாய் உன் வார்த்தைகளெல்லாம்
என் இதயத்தை குத்தி காயப்படுத்தி விடுகின்றனவே...

முள்ளிலாத பூவேது...???

ஆதவா
10-02-2007, 06:05 PM
ஆதவன் இரவில் எட்டிபார்த்து செல்லுகையில்
பகலிலே பொளர்னமிகளின் ஊர்வலம்..
மன்றத்து தாமரைகளுக்கு
மணம் வீச பிச்சிகளும்...

நண்பரே இது விளங்கவில்லையே??? விளக்கமுடியுமா?

ஆதவா
10-02-2007, 06:06 PM
நட்டநடு இரவில் பூத்துக்குலுங்கிய
அழகு மலர்கள் மறுநாள் காலை
வாடாமல் ஆனால் முக வாட்டத்துடன்
இறைவன் மேனியில் அவனா கேட்டான்
எனக்கொரு மாலை தாருங்கள் என்று
நாமே கொடுதோம் எடுத்துக்கொள் என்று
உயிர்ப்பலி கொடுக்க தடைச்சட்டம்
மலர்களை கொல்ல ஏனிந்த நாட்டம்
நம் படைப்பை நாமே அழிப்போமா
அது நல்லதாக இருக்கும்போது
அவன் படைத்ததை அவனா கேட்டான்
அலங்கரப் பண்டமாக

ஏம்பா!! நால்வரிக்கவிதைப்பா இது... பதிநால்வரிக் கவிதையில்ல...:D