PDA

View Full Version : வாய்ஸ் சாட்டிங் செய்வது குறித்து உதவி



nonin
19-01-2007, 10:56 AM
நண்பர்களே! கூகுள் டாக்,யாஹூ மெஸஞ்சர்.ஸ்கைபீ என என்னவோ சொல்கிறார்களே அதெல்லாம் எனது கணிணியிலும் உள்ளது. உபயோகபடுத்ததான் தெரியவில்லை. நெடுநாட்களுக்கு முன்பே ஹெட்போன் வித் மைக் வாங்கி மேலுறை கூட பிரிக்கப்படாமல் மூலையில் தூங்குகிறது.அதன் தூக்கத்தை எழுப்பிவிட அதை கணிணியில் எப்படி பொருத்துவது? மற்ற கணிணிகளுடன் தொடர்புகொண்டு வாய்ஸ் சாட்டிங் செய்வதெவ்வாறு? என்று விளக்கி கூறினால் பயனடைவேன்.

ஷீ-நிசி
19-01-2007, 02:57 PM
எல்லாத்தையும் உங்களுக்கு load பண்ணி கொடுத்தது யாரு??

ஹெட்போன் வித் மைக் வாங்கி மேலுறை கூட பிரிக்கப்படாமல் மூலையில் தூங்குகிறது

கணிப்பொறி பக்கம் போறதே இல்லையோ? பாட்டு கூட கேட்கமாட்டீர்களா?

சரி முதலில் ஹெட்போன் கவரை பிரிங்க..
உங்க cpu முன்னாடியோ அல்லது பின்னாடியோ ஹெட்போன் சொருகுவதற்கு வெளிர் பச்சை நிறத்தில் ஒரு point இருக்கும். அதில் ஹெட்போன் பின்னை சொருகுங்கள். பின் ஏதாவது mp3 பாடல் play பண்ணுங்கள். சத்தம் வரவில்லையென்றால்; நீங்கள் sound driver install பண்ணவேண்டும். computer service நபர் யாரையாகிலும் அழைத்து driver install பண்ணுங்கள். உங்களால் பாடல் கேட்கமுடிந்தால் யாஹூ மெசஞ்சர் open செய்து உங்கள் யாஹூ user name password கொடுத்து உள்சென்று ஏதாகிலும் chat room செல்லுங்கள். அங்கே speaker on என்று இருக்கும். அதை click செய்தால் பச்சை கலரில் sound bar ஏறி ஏறி இறங்கும். இப்போது மற்ற chat உறுப்பினர்கள் பேசிக்கொள்வதை நீங்கள் கேட்க முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றங்கள் இருக்கும். நீங்களே கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். பின் எளிதில் மறக்கமாட்டீர்கள்.

nonin
23-01-2007, 03:05 AM
நன்றி ஷி நிசி, நீங்கள் சொன்னது போல் ஹெட்போனை அதற்க்குரிய பாயிண்ட்டில் சொருகி mp3 ப்ளே செய்தால் ஸ்பீக்கரில்தான் பாட்டு கேட்கிறது.ஸ்பீக்கரில் பாட்டு கேட்டாலும் ஹெட்போனுக்கென தனியாக sound driver இன்ஸ்டால் செய்யவேண்டுமா?

ஷீ-நிசி
23-01-2007, 09:10 AM
நன்றி ஷி நிசி, நீங்கள் சொன்னது போல் ஹெட்போனை அதற்க்குரிய பாயிண்ட்டில் சொருகி mp3 ப்ளே செய்தால் ஸ்பீக்கரில்தான் பாட்டு கேட்கிறது.ஸ்பீக்கரில் பாட்டு கேட்டாலும் ஹெட்போனுக்கென தனியாக sound driver இன்ஸ்டால் செய்யவேண்டுமா?

system tray ல volume icon இருக்கும் அதைக் click பன்னா ஒரு விண்டோ open ஆகும்.. அதுல எல்லா sound bar-யும் full வரைக்கும் வச்சி முயற்சி பன்னுங்க.

ksenthil
24-01-2007, 05:22 PM
பொக்கற்பிசியில் தமிழ் எழுத்துருவை எப்படி install செய்வது? நான் C# மொழியை உபயோகிக்கிறேன்.அது ttf or unicode ஆகவும் இருக்கலாம்.