PDA

View Full Version : உயிரோசை கேட்க செவிகொடு.

nonin
19-01-2007, 05:10 AM
ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?
நெடுநாள் பெருமூச்சு உனக்கு!

உன்னைகொஞ்சுவதற்க்கு - நான்
தமிழை கெஞ்சவேண்டும்.
வார்த்தைகள் என்னிடம் இல்லை!

ப்ரியசகி!
உயிரின் நெகிழ்வை உணர்த்த
சொற்கள் மலிவான ஊடகங்கள்
என
விளங்கவில்லையா உனக்கு?

எனது
தொண்டைகுழியிலிருந்து
எழும் ஒலியதிர்வுகளால்
நித்தம் உன் செவிகளில்
சத்தமிடுவது - நம்
மெல்லிய உணர்வுகளுக்குள் புகும்
வன்முறையல்லவா?

நேசமே நானாகி விட்டபின்னர்
"நான் உன்னை நேசிக்கிறேன்" ல்
உள்ள முட்டாள்தனத்தை
இன்னும் நீ ரசிக்கிறாயா?

மனித ஓசை எனும் அமிலம்
ஊறி திளைக்கிறது பூமி!

செல்லரித்து கரைகிறது
பேசப்படும் பொருள்...

ஆம் -
காதலை பேச பேச
காதல் காணாமல் போகிறது

மொழியின் கரத்தில்
மௌன ஆடை பறிக்கப்பட்டு
அம்மணமாய் உறவுகள்
ஆங்காங்கே திரிகின்றன!

இனி...
என்னுடன்
வார்த்தைகளுக்காய்
ஊடல் கொள்ளும்பொழுது -
ஓர்முறை
என் கண்களின் வழியே
உயிரில் இறங்கி வா!

அங்கு
உன் இருப்பால்
என் நொடிகள்
பரவசம் பெறுவதை
நீ
உணரக்கூடும்.

ஆதவா
19-01-2007, 07:25 AM
முதலில் தலைப்பு எனக்கு விளங்கவில்லை.... உயிரோசை என்றால் தமிழைப்பற்றியதா? உவமையில்லாமலா? அல்லது வேறு
காதல் பற்றியதா?

ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?
நெடுநாள் பெருமூச்சு உனக்கு!
உன்னைகொஞ்சுவதற்க்கு - நான்
தமிழை கெஞ்சவேண்டும்.

அடுத்து........ காதலி கேட்பதுபோலவும் காதலன் பதிலளிப்பது போலவும் நடை ஆரம்பிக்கிறீர்கள். ஒரு ஒரு இடைவெளி
விட்டிருக்கலாம்.
கொஞ்சுவதற்கு கெஞ்ச என்ற வரிகள் ரசிக்கத்தக்கனவாய்

வார்த்தைகள் என்னிடம் இல்லை!
ப்ரியசகி!
உயிரின் நெகிழ்வை உணர்த்த
சொற்கள் மலிவான ஊடகங்கள்
என
விளங்கவில்லையா உனக்கு?

அப்படியே பதில் கவிதையாக இறங்கி வருகிறீர்கள்.

உயிரின் நெகிழ்வை உணர்த்த
சொற்கள் மலிவான ஊடகங்கள்
என
விளங்கவில்லையா உனக்கு?

இந்த வரிகளை சற்று விளக்குங்கள்............... நெகிழ்வு என்றால் உருக்கம்... அதாவது உருகு அல்லது உருகியதால் குறையு
என்ற அர்த்தம் வருகிறது... உயிரின் உருக்கத்தை உணர்த்தும் சொற்கள் மிகக் குறைவான ஊடகம். அப்படித்தானே!! ஆயினும்
எனக்கு விளங்கவில்லை.

எனது
தொண்டைகுழியிலிருந்து
எழும் ஒலியதிர்வுகளால்
நித்தம் உன் செவிகளில்
சத்தமிடுவது - நம்
மெல்லிய உணர்வுகளுக்குள் புகும்
வன்முறையல்லவா?

தொண்டையிலிருந்து வெளியே வரும் ஒலி..... அதாவது பேச்சு. அழகிய உவமை. அதை அப்படியே மெல்லிய உணர்வுகளுக்குள்
திணிப்பது வன்முறைதான் காதலில்...... அழகிய வரிகள்

நேசமே நானாகி விட்டபின்னர்
"நான் உன்னை நேசிக்கிறேன்" ல்
உள்ள முட்டாள்தனத்தை
இன்னும் நீ ரசிக்கிறாயா?

கவிஞரே உங்கள் ஆரம்பம்தான் கொஞ்சம் இடறு செய்கிறது. போகப்போக வெளுக்கிறீர், அவள் அதையும் ரசிக்கத்தான்
வேண்டும்.... காதலி எதையும் மறப்பதில்லை.

மனித ஓசை எனும் அமிலம்
ஊறி திளைக்கிறது பூமி!
செல்லரித்து கரைகிறது
பேசப்படும் பொருள்...
ஆம் -
காதலை பேச பேச
காதல் காணாமல் போகிறது

காதலுக்கா இதை நீங்கள் எழுதலாம். தவறே கிடையாது. ஓசை என்ற அமிலம் நீங்கினால் பூமி கற்பக விருட்சமாகிவிடும்.
காதலால் நிரம்பி வழியும்... அமிலங்கள் தீர்ந்து போய் அமிர்தம் ஆகிவிடும். இல்லையா?

மொழியின் கரத்தில்
மௌன ஆடை பறிக்கப்பட்டு
அம்மணமாய் உறவுகள்
ஆங்காங்கே திரிகின்றன!

சிந்தனைகள் ஒரு மேகம் போல.... வடிவங்கள் பலவாறு வந்து போகும் நிலையில்லா பயணம்......... ஆனால் மேகமின்றி
மழையேது.......... உங்களுக்கும் அப்படித்தான். அம்மண உறவுகள் அப்படிப்பட்ட வார்த்தைதான். இதை ஏதாவது சமூக நலக்
கருத்துள்ள கவிதைகளில் எழுதினீர்களேயானால் அதைவிட உயர்ந்தது ஏதாகிலுமிருக்குமா?

இனி...
என்னுடன்
வார்த்தைகளுக்காய்
ஊடல் கொள்ளும்பொழுது -
ஓர்முறை
என் கண்களின் வழியே
உயிரில் இறங்கி வா!

இன்னும் வார்த்தைகளோடுண்டான ஊடல் இன்னும் உங்களைவிட்டு போகவில்லை. கண்களில் வழியே உயிரில்.... (விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த ..... பாடல் நினைவுக்கு வருகிறது)

அங்கு
உன் இருப்பால்
என் நொடிகள்
பரவசம் பெறுவதை
நீ
உணரக்கூடும்

இதெல்லாம் சரிதான். நீங்கள் சொன்னவந்த கருத்து ஒட்டாமல் விலகிச் செல்லுகிறது. இந்த நல்ல கவிதைக்கு முன்னும் பின்னும் இடறாக இருக்கிற வரிகளை நீக்கினாலே போதும்.. அல்லது இரண்டு வரிகளைப் போட்டு முடித்தாலே முடிவுக்கு வரும்.......... (இது என் கருத்து மட்டுமே)

மொத்தத்தில் அழகான காதல் கவிதை சற்று வித்தியாசமாய் வார்த்தைகளை வம்புக்கிழுத்து எழுதப்பட்டுள்ளது.

nonin
19-01-2007, 10:25 AM
ப்ரிய ஆதவன், இது உவமை இல்லாதொரு கவிதை(யென நான் கருதுவது). உயிரோசை என்பது தன் உயிரில்(ஆணாகினும்,பெண்ணாகினும்) உண்டாகும் அல்லது தன் உயிரில் இழையோடும் பாசத்தை,காதலை,அன்பை வார்த்தைகளில்லாமல் உயிரை உயிரால் உணர்வது. இதில் வேறு எதையும் உருவகப்படுத்தவில்லை.

உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை.இது முந்தய வரிகளின் முடிவை, வரும் வரிகளில் தாங்கள் சேர்த்துகொண்டதால் வந்த குழப்பம்.
வார்த்தைகள் என்னிடம் இல்லை (முந்தைய வரிகள்)
ப்ரியசகி! (அடுத்த முதல் வரி) காண்க உங்கள் பதிப்பு.
தற்ப்போது இது முழுமையான வரிபோல் தோற்றம் தந்து காதலன் காதலியிடம்(ஆனால் நான் மனதில் இருத்தி எழுதியது கணவன்.மனைவி)
சொல்வதுபோல் பாவித்துக்கொண்டீர்கள் என நினைக்கீறேன்.

உயிரின் நெகிழ்வை உணர்த்த
சொற்கள் மலிவான ஊடகங்கள்
என
விளங்கவில்லையா உனக்கு
அன்பரே! நெகிழ்வு என்பதற்க்கு உருகுதல் என அர்த்தம் வருவது உண்மைதான்.ஆனால் உருகுதல் என்பதற்க்கு மீண்டும் குறைதல் என அர்த்தத்ற்க்கு அர்த்தம் கண்டு அனர்த்தம் கொண்டுவிட்டீர்கள்.
காதலாகி கசிந்துருகி எனும் மாணிக்கவாசகரின் வரிகளுக்கு பொருள் அதுவல்லவே? அன்பு,காதலினால் உயிரின் இளக்கமான(semisolid) தன்மையைதான் இங்கு நெகிழ்வு என குறிக்கிறேன்.

மொழியின் கரத்தில்
மௌன ஆடை பறிக்கப்பட்டு
அம்மணமாய் உறவுகள்
ஆங்காங்கே திரிகின்றன
உறவுகளுக்குள் அல்லது சொந்தங்களுக்குள் எழும் வாக்குவாதங்கள் எல்லை மீறி அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களினால் சீர்கெட்டு சின்னாபின்னமாய், ஒருவருக்கு ஒருவர் காணசகியாமல்(தெருவில் நிர்வாணபிச்சைக்காரனை பார்க்க சகிப்பறோ?)முகத்தை திருப்பிக்கொள்வதைதான் அம்மணமாய் உறவுகள் திரிவதாய் எழுதியுள்ளேன்.

மொத்ததில் சொல்லவந்தது யாதெனில் கவியரசர் வரிகள் இன்னும் தெளிவாய் விளக்கிவிடும்.

சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை.

ஆதவா
19-01-2007, 11:56 AM
ப்ரிய ஆதவன், இது உவமை இல்லாதொரு கவிதை(யென நான் கருதுவது). உயிரோசை என்பது தன் உயிரில்(ஆணாகினும்,பெண்ணாகினும்) உண்டாகும் அல்லது தன் உயிரில் இழையோடும் பாசத்தை,காதலை,அன்பை வார்த்தைகளில்லாமல் உயிரை உயிரால் உணர்வது. இதில் வேறு எதையும் உருவகப்படுத்தவில்லை.

உருவகமில்லாத கவிதை இது என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்? ஆங்காங்கே சுற்றித் திரிகிறதே! உயிரை உயிரால் உணர்வது உயிரோசை என்று நீங்கள் நினைத்தது எங்களுக்கு தெரியாதல்லவா?

உயிர் + ஓசை = உயிரோசை.
உயிர் + உயிரால் உணர்வது = ?????

மன்ற நண்பர்கள்தான் இதற்கு உதவி செய்யவேண்டும்.

உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை.இது முந்தய வரிகளின் முடிவை, வரும் வரிகளில் தாங்கள் சேர்த்துகொண்டதால் வந்த குழப்பம்.
வார்த்தைகள் என்னிடம் இல்லை (முந்தைய வரிகள்)
ப்ரியசகி! (அடுத்த முதல் வரி) காண்க உங்கள் பதிப்பு.
தற்ப்போது இது முழுமையான வரிபோல் தோற்றம் தந்து காதலன் காதலியிடம்(ஆனால் நான் மனதில் இருத்தி எழுதியது கணவன்.மனைவி)
சொல்வதுபோல் பாவித்துக்கொண்டீர்கள் என நினைக்கீறேன்.

நண்பரே அது திருத்தப்படும்போது ஏற்பட்ட பிழையே அன்றி அதைவைத்து நான் சொல்லவில்லை. உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால் உங்கள் வரிகளையே நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?

நான் சுட்டிக் குட்டியது இந்த வரிகள்தாம்.

அன்பரே! நெகிழ்வு என்பதற்க்கு உருகுதல் என அர்த்தம் வருவது உண்மைதான்.ஆனால் உருகுதல் என்பதற்க்கு மீண்டும் குறைதல் என அர்த்தத்ற்க்கு அர்த்தம் கண்டு அனர்த்தம் கொண்டுவிட்டீர்கள்.
காதலாகி கசிந்துருகி எனும் மாணிக்கவாசகரின் வரிகளுக்கு பொருள் அதுவல்லவே? அன்பு,காதலினால் உயிரின் இளக்கமான(semisolid) தன்மையைதான் இங்கு நெகிழ்வு என குறிக்கிறேன்.

உங்கள் மேன்மையான விளக்கம் இங்கே இன்னும் எனக்குப் புரியவில்லை.. எனக்கு இன்னும் அனுபவம் போதாது என்று நினைக்கிறேன். அதேசமயம் நெகிழ்தல் என்பது உருகுதல் என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்......... குறைதல் என்ற அர்த்தமும் உண்டு என்றும் சுட்டியிருக்கிறேன்.. கவனிக்க.

நெகிழ்வு என்றால் உருக்கம்... அதாவது உருகு அல்லது உருகியதால் குறையு
என்ற அர்த்தம் வருகிறது...

மொழியின் கரத்தில்
மௌன ஆடை பறிக்கப்பட்டு
அம்மணமாய் உறவுகள்
ஆங்காங்கே திரிகின்றன

அன்பரே இந்த வரிகள் அருமையாக இருப்பதையே சுட்டியுள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் எனக்குத் தேவையில்லை.

சிந்தனைகள் ஒரு மேகம் போல.... வடிவங்கள் பலவாறு வந்து போகும் நிலையில்லா பயணம்......... ஆனால் மேகமின்றி
மழையேது.......... உங்களுக்கும் அப்படித்தான். அம்மண உறவுகள் அப்படிப்பட்ட வார்த்தைதான். இதை ஏதாவது சமூக நலக்
கருத்துள்ள கவிதைகளில் எழுதினீர்களேயானால் அதைவிட உயர்ந்தது ஏதாகிலுமிருக்குமா?

இந்த வரிகள் நான் முந்தி எழுதியது. மீண்டும் கவனமாகப் படித்தீர்களானால் உங்களுக்கே புரியும். இல்லையென்றாலும்

மேகங்களைப் போலத்தான் சிந்தனைகள்... பல வடிவங்களில் வந்து வந்து போகும்... ஆனால் அவை அழகான மழையை விட்டுத்தந்து போகும் (அதாவது வார்த்தை,அம்மணம் என்ற வார்த்தை) உங்கள் சிந்தனைகள் பல்வேறு வடிவங்களில் இருப்பதையே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

உங்கள் பதில் எதிர்பார்த்து................:)

அறிஞர்
19-01-2007, 04:09 PM
ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?
நெடுநாள் பெருமூச்சு உனக்கு! .

ஏங்கும் ஆதங்கத்திற்கு.. அழகான பதில்கள்....

ப்ரியசகி!
உயிரின் நெகிழ்வை உணர்த்த
சொற்கள் மலிவான ஊடகங்கள்
என
விளங்கவில்லையா உனக்கு?.

நேசமே நானாகி விட்டபின்னர்
"நான் உன்னை நேசிக்கிறேன்" ல்
உள்ள முட்டாள்தனத்தை
இன்னும் நீ ரசிக்கிறாயா?

இதை நினைத்தால், பலர் மக்களை... மலிவான சொற்களால் ஏமாற்றுவது.. தான் நினைவுக்கு வருகிறது. அமெரிக்கர்கள் தங்கள் உறவுகளுடன் அதிகம் உபயோகிப்பது... "நான் உன்னை நேசிக்கிறேன்". ஆனால் பலரின் வாழ்க்கையில் அது உதட்டளவில் தான் இருக்கிறது.

மனித ஓசை எனும் அமிலம்
ஊறி திளைக்கிறது பூமி!

செல்லரித்து கரைகிறது
பேசப்படும் பொருள்...

ஆம் -
காதலை பேச பேச
காதல் காணாமல் போகிறது. பேசி பேசி.... பல இடங்களில் காணமல் போகிறது....

முடிவில் சொல்லாமல் முடித்த வரிகள்.. தானாய் பேசிவிடுகிறதோ....

மதுரகன்
19-01-2007, 05:25 PM
முதலில் கவிதைக்கு ஒரு ஓ

எனது
தொண்டைகுழியிலிருந்து
எழும் ஒலியதிர்வுகளால்
நித்தம் உன் செவிகளில்
சத்தமிடுவது - நம்
மெல்லிய உணர்வுகளுக்குள் புகும்
வன்முறையல்லவா?

அருமையான வரிகள்..
அடுத்து ஆதவாவுக்குதான் என் வாக்கு
இங்கு எத்தனையோ உருவகங்கள் ஓடித்திரிவதை மறுக்கமுடியாது...

முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்...

இளசு
20-01-2007, 10:40 PM
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
- இது கண்ணதாசன் சொன்னது..

'பென்ணிடம் காதல் என்பது ஓட்டுநர் உரிமம் போன்றது..
தவணை தவறாமல் ' சொல்லி' புதுப்பித்துக்கொள்ளவேண்டும்'
- இன்றைய நுகர்வோர் சொல்வது..

'துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா'
- இதைவிட சிறந்த துதி உண்டா?

பேச்சால் மலிவாகிக் கரைவது உண்மை..
ஆனால் எதிர்பார்ப்பு எதிர்பாலரிடம் இவ்விதம்தான் என்றால்
'சொல்லாமல் இருப்பதன் ' மகத்துவத்தைச் சொல்லிப் புரியவைக்கலாம்..
சொல்லியும் 'கேட்கவில்லை ' என்றால்
அறிஞரின் அமெரிக்க முறையில் அடிக்கடி ஐலவ்யூ..சொல்லிவிட வேண்டியதுதான்.. நீங்க என்ன சொல்றீங்க நானின்?

நேசமே நானாகி விட்டபின்னர்
"நான் உன்னை நேசிக்கிறேன்" - தேவையா?

இதைச் சொன்னால் எந்தக்காதலியும் ம(நெ)கிழ்வது நிச்சயம்..
என்ன.. அடிக்கடி சொல்லவேண்டும்..அவ்வளவுதான்..

கொஞ்சம் 'நிச்சயமற்ற' தன்மை.. பெண்மையின் அடையாளம்..
கொஞ்சி, சீராட்டி, மீண்டும் மீண்டும் ஊர்ஜிதப்படுத்த விழையும் மனம்.
மாதந்தோறும் மாறி மாறி வளர்ந்து தேயும் ஹார்மோன்களின் ஓடுதளம்.
தாய்மை,வயதேற்றம் என வாசம் குறைந்ததோ என மறுகும் மலர்வனம்
பெண்ணைக் காதலிக்க பெண்மனம் வேண்டுபவற்றை
பெண்ணின் கோணத்தில் நின்று புரிந்து வழங்குவதில்
பெரிதாய்த் தவறொன்றும் இல்லைதானே???!!!!

nonin
21-01-2007, 03:58 AM
வாங்க இளசு, நீங்க சொல்றாப்ல சொல்லாமல் இருப்பதின் மகத்துவத்தை சொல்லி புரியவைக்கும்( ரொம்ப அழகா சாரத்தை ஒரு வரியில் தேக்கிட்டீங்க) முயற்சிதான் இது. ஆதவன்கிட்ட இதுக்குத்தான் போராடிகிட்டிருக்கேன்.கணவன் அழகா இந்திய தத்துவத்தை சொல்றான்.மனைவிக்கு வார்த்தைதான் அளவுகோல்ன்னா இருக்கவே இருக்கு அமெரிக்க யதார்த்தம். இறங்கிடவேண்டியதுதான்.

nonin
21-01-2007, 04:03 AM
ப்ரிய ஆதவன், இது உவமை இல்லாதொரு கவிதை(யென நான் கருதுவது). உயிரோசை என்பது தன் உயிரில்(ஆணாகினும்,பெண்ணாகினும்) உண்டாகும் அல்லது தன் உயிரில் இழையோடும் பாசத்தை,காதலை,அன்பை வார்த்தைகளில்லாமல் உயிரை உயிரால் உணர்வது. இதில் வேறு எதையும் உருவகப்படுத்தவில்லை.

உருவகமில்லாத கவிதை இது என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்? ஆங்காங்கே சுற்றித் திரிகிறதே! உயிரை உயிரால் உணர்வது உயிரோசை என்று நீங்கள் நினைத்தது எங்களுக்கு தெரியாதல்லவா?

உயிர் + ஓசை = உயிரோசை.
உயிர் + உயிரால் உணர்வது = ?????

மன்ற நண்பர்கள்தான் இதற்கு உதவி செய்யவேண்டும்.

உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை.இது முந்தய வரிகளின் முடிவை, வரும் வரிகளில் தாங்கள் சேர்த்துகொண்டதால் வந்த குழப்பம்.
வார்த்தைகள் என்னிடம் இல்லை (முந்தைய வரிகள்)
ப்ரியசகி! (அடுத்த முதல் வரி) காண்க உங்கள் பதிப்பு.
தற்ப்போது இது முழுமையான வரிபோல் தோற்றம் தந்து காதலன் காதலியிடம்(ஆனால் நான் மனதில் இருத்தி எழுதியது கணவன்.மனைவி)
சொல்வதுபோல் பாவித்துக்கொண்டீர்கள் என நினைக்கீறேன்.

நண்பரே அது திருத்தப்படும்போது ஏற்பட்ட பிழையே அன்றி அதைவைத்து நான் சொல்லவில்லை. உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால் உங்கள் வரிகளையே நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?

நான் சுட்டிக் குட்டியது இந்த வரிகள்தாம்.

அன்பரே! நெகிழ்வு என்பதற்க்கு உருகுதல் என அர்த்தம் வருவது உண்மைதான்.ஆனால் உருகுதல் என்பதற்க்கு மீண்டும் குறைதல் என அர்த்தத்ற்க்கு அர்த்தம் கண்டு அனர்த்தம் கொண்டுவிட்டீர்கள்.
காதலாகி கசிந்துருகி எனும் மாணிக்கவாசகரின் வரிகளுக்கு பொருள் அதுவல்லவே? அன்பு,காதலினால் உயிரின் இளக்கமான(semisolid) தன்மையைதான் இங்கு நெகிழ்வு என குறிக்கிறேன்.

உங்கள் மேன்மையான விளக்கம் இங்கே இன்னும் எனக்குப் புரியவில்லை.. எனக்கு இன்னும் அனுபவம் போதாது என்று நினைக்கிறேன். அதேசமயம் நெகிழ்தல் என்பது உருகுதல் என்றுதான் நான் எழுதியிருக்கிறேன்......... குறைதல் என்ற அர்த்தமும் உண்டு என்றும் சுட்டியிருக்கிறேன்.. கவனிக்க.

நெகிழ்வு என்றால் உருக்கம்... அதாவது உருகு அல்லது உருகியதால் குறையு
என்ற அர்த்தம் வருகிறது...

மொழியின் கரத்தில்
மௌன ஆடை பறிக்கப்பட்டு
அம்மணமாய் உறவுகள்
ஆங்காங்கே திரிகின்றன

அன்பரே இந்த வரிகள் அருமையாக இருப்பதையே சுட்டியுள்ளேன். இதற்கு மேலும் விளக்கம் எனக்குத் தேவையில்லை.

சிந்தனைகள் ஒரு மேகம் போல.... வடிவங்கள் பலவாறு வந்து போகும் நிலையில்லா பயணம்......... ஆனால் மேகமின்றி
மழையேது.......... உங்களுக்கும் அப்படித்தான். அம்மண உறவுகள் அப்படிப்பட்ட வார்த்தைதான். இதை ஏதாவது சமூக நலக்
கருத்துள்ள கவிதைகளில் எழுதினீர்களேயானால் அதைவிட உயர்ந்தது ஏதாகிலுமிருக்குமா?

இந்த வரிகள் நான் முந்தி எழுதியது. மீண்டும் கவனமாகப் படித்தீர்களானால் உங்களுக்கே புரியும். இல்லையென்றாலும்

மேகங்களைப் போலத்தான் சிந்தனைகள்... பல வடிவங்களில் வந்து வந்து போகும்... ஆனால் அவை அழகான மழையை விட்டுத்தந்து போகும் (அதாவது வார்த்தை,அம்மணம் என்ற வார்த்தை) உங்கள் சிந்தனைகள் பல்வேறு வடிவங்களில் இருப்பதையே சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

உங்கள் பதில் எதிர்பார்த்து................:)

முதலில், உருவககவிதை என்று இதில் என்ன இருக்கிறது? மொத்தகவிதையாக்கத்தின் மையமும், சொல்லவந்ததின் சாரத்தை
கவிதையில் சொல்லப்பட்டுள்ளதை சாராத வேரொரு பொருளில் உணர்த்துவது உருவகம். இந்த கவிதை பொருத்தமட்டில்
தலைவன், தலைவி சொல்லவந்த கருத்து அனைத்தும் நேரடியான பொருள்கொள்ளும்படியே உள்ளது.
வெறும் மனித ஓசை எனும் அமிலம், மொழியின் கரம், மௌன ஆடை இதையெல்லாம் வைத்து இது உருவககவிதை என்பதா?
உயிரோசை எனில் புரியவில்லை என்றீர்கள். உயிரை உயிரால் உணர தெரிந்தவர்களுக்கு கேட்கும் ஓசை என்றேன்.
இப்பொழுது உயிர் + உயிர் = ????? . கவிதையில் கணித சமன்பாடு எதற்க்கு? நண்பரே என்னைக்கேட்ப்பின் காதலில்
உயிர் + உயிர் = ஓருயிர், காமத்தில் உயிர் + உயிர் = இளந்தளிர்.

ஆதவன், படைப்பு என்பது எதுவாயினும் அது சமகாலத்தவர் புரிந்து கொள்ளதக்க அளவில் இருக்கவேண்டும். இன்றைக்கு
நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் மானிடர்க்கு வேண்டுமெனில் வார்த்தைகளில், கவிதை வரிகளில் வழக்கு இருக்கலாம்.
என்னதான் வார்த்தை அலங்காரங்கள்,சொற்கட்டுகள்,வீரிய பிரவாகங்கள்,எதுகை மோனைகள்யிருப்பினும் படிப்பவர்க்கு
புரியவில்லையெனில், பிணத்தை சிங்காரித்து மணமேடையில் இருத்தியது போல. நாம் நமக்கு மட்டும் அறியத்தக்க அளவில்
படைத்தால் அந்தரங்கத்தில் அதை ரசித்துகொள்ள வேண்டுமேயன்றி அரங்கத்தில் அதை பார்வைக்கு வைக்கவேண்டிய
அவசியமென்ன? ஓவ்வொரு கவிதையையும் படைத்துவிட்டு அதற்க்கு தனியாக கோனார் உரை போட்டு கொண்டு இருப்பது
வேதனையானது.அறிவுஜீவிகளுக்கு மட்டுமே புரிந்து பாமரனுக்கு பெப்பே காட்டும் படைப்புகள் அனைத்தும் படைப்பாளியின்
தோல்வியே.

இந்த கவிதையை முதல் முறை படிப்பவர் புரிந்துக்கொள்ள இயலாத அளவுக்கு கடினமாக உள்ளதா? என இனி படித்து
பின்னூட்டமிடும் மன்றநண்பர்கள்தான் எனக்கு தெளியவைக்க வேண்டும்.அப்படி கடியதெனில் அது நிச்சயம் என் தோல்வியே.
இனி என் கவிதையை இன்னும் எளிமையாக்குவேன்.ஏனெனில் கவிதையை படித்தும் பொருளறியாமல் கவிஞனை விளக்கம்
சொல்ல கேட்க தன் கவிதையை தானே விளக்குவதை போன்றொரு பரிதாபம் வேறில்லை என்பது எனக்கு தெறியும்.

ஆதவா
21-01-2007, 04:19 AM
நண்பரே!!!

மொத்த கவிதையும் உருவகமாக நான் சொல்லவில்லை... ஆங்காங்கே திரிகிறது என்று சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை..
உரையாடல் நடையில் வரிகள் துவக்கபடவில்லை. என்று சொன்ன நீங்கள், நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வில்லை
ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க? இது உங்கள் கவிதையின் முதல் வரி.... இது உரையாடல் இல்லையா?
கவிதையோடு இது ஒத்துப் போகிறதா?
மீண்டும் தலைவி இதுபோல கேள்வி எழுப்பி தலைவனிடம் கேட்கிறாளா?
உயிரை உயிரால் உணர தெரிந்தவர்களுக்கு கேட்கும் ஓசை உயிரோசைதான். ஒத்துக் கொள்கிறேன்... அதை எந்த விதத்திலும் நீங்கள் முன்னம் குறிப்பிடவில்லை.
புரியாத கவிதை என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை..... அதேபோல் புரியாத கவிதை என்று எதுவுமில்லை.... வேண்டுமானால் எளிமை என்று பொருள் வைத்துக் கொள்ளலாம்..
அதேபோல் உங்களின் இந்த கவிதை எளிமையாக அழகாக இருக்கும்போது இன்னும் எளிமைப் படுத்துவது வரவேற்க்கத்தக்கது ஆயினும் இவ்வகை கவிதையையும் படைப்பதில் என்ன இடர் இருக்கிறது?
என் ஒருவனுக்கு விளங்காமல் போனதினால் மொத்த கவிதையும் குறையாகாது.... நானொன்னும் கவியரசன் இல்லை.
கணித சமன்பாடு போடவில்லையே!! க் + அ = க என்று படிக்கும் நீங்கள் உயிர் + ஓசை = உயிரோசை என்று படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? இது தமிழிலேயே இருக்கிறது

ஆதவா
21-01-2007, 04:21 AM
ஏதாவது தவறு நேர்ந்திருந்தாலும் மன்னியுங்கள்........... அதேசமயம் எனக்கு மனதில் பட்டதைச் சொன்னதையும் என்னால் மறுக்க முடியாது

nonin
22-01-2007, 08:09 AM
அன்பு ஆதவன், மன்னிப்பெல்லாம் மிக அதிகம். உங்கள் பார்வையை பதிவிட்டிருக்கிறீர்கள்.எனது கருத்தும் அது போலவே.

மொத்த கவிதையும் உருவகமாக நான் சொல்லவில்லை... ஆங்காங்கே திரிகிறது என்று சொன்னதை நீங்கள் கவனிக்கவில்லை

மீண்டும் அழுத்தமாக அதையேதான் வலியுறுத்துகிறேன்.என் கவிதைக்காக மட்டுமல்ல, எது உருவககவிதை?என்ற வகைப்பாட்டின் நிலைப்பாட்டில் உள்ள எனது நிச்சயதன்மைக்காகவும்தான். எதையுமே உருவகப்படுத்தி நான் எழுதாதபோது, மொத்தகவிதையும் சொல்லவில்லை ஆங்காங்கே திரிகிறது என கூறுகிறீர்கள்.எங்கே திரிகிறது? என்ன திரிகிறது? என உங்கள் பழைய பதிவை பார்த்தால் உயிரோசை யை தவிர எதுவும் காணக்கிடைக்கவில்லை.இதற்க்குதான் மனிதஓசை அமிலம்,மொழியின் கரம் மௌனஆடை என இவற்றையும் சேர்த்து பதில் அளித்திருந்தேன்.
உவமை இல்லாதொரு கவி இல்லை. உவமைகளை எல்லாம் உருவகங்கள் என்று மறுத்து வாதிட்டால் நான் என்ன செய்ய? மன்றத்தில் தமிழ் இலக்கணம் கற்றறிந்த நண்பர்கள் தங்களுக்கு பதில் கூறட்டும்.
ஏங்க?

என்னை கொஞ்சுவதில்லை நீங்க? இது உங்கள் கவிதையின் முதல் வரி.... இது உரையாடல் இல்லையா?
கவிதையோடு இது ஒத்துப் போகிறதா?
மீண்டும் தலைவி இதுபோல கேள்வி எழுப்பி தலைவனிடம் கேட்கிறாளா?

காதலி: "ஏங்க என்னை கொஞ்சுவதில்லை நீங்க"
காதலன்: ----- ----- ----- --------

இப்படியா கவிதை துவக்கப்பட்டுள்ளது? இது போல எழுத கவிதை வடிவத்தை தேர்ந்தெடுத்திருக்கமாட்டேன். நாடகம் போதும்.
ஏங்க?
என்னை கொஞ்சுவதில்லை நீங்க?
நெடுநாள் பெருமூச்சு உனக்கு!

கணவன், மனைவியின் வார்த்தைகளிலேயே அவள் ஆதங்கத்தை நினைவுகொள்வதை போல துவக்கப்பட்டுள்ள வரிகளில் உரையாடல் எங்கிருந்து உங்களுக்கு தெரிந்தது?

அடுத்து வரும் வரிகளுக்கு ஆதாரமே முதல் வரும் வரிகள்தான் எனும் பொழுது அவை கவிதைக்கு ஒத்துவராமல் போகுமா?
தலைவியின் உரையாடல் போன்றோரு வரிகள் மொத்தகவிதையிலே இல்லை எனும்பொழுது மீண்டும் கேள்வி??????? நீங்கள் இங்கே என்ன சொல்லவருகிறீர்கள் எனப்புரியவில்லை.

உயிரை உயிரால் உணர தெரிந்தவர்களுக்கு கேட்கும் ஓசை உயிரோசைதான். ஒத்துக் கொள்கிறேன்... அதை எந்த விதத்திலும் நீங்கள் முன்னம் குறிப்பிடவில்லை

உயிரை உயிரால் உணர்வது உயிரோசை என்று நீங்கள் நினைத்தது எங்களுக்கு தெரியாதல்லவா?
உயிரோசை என்பது தமிழை குறிக்கிறீர்களா? என நீங்கள் கேட்ட பதிவிற்க்கு நான் அந்த வார்த்தையை விளக்கி பதிலளித்த பின் அடுத்த பதிவில் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டு அளித்த உங்கள் பதிவின் வார்த்தைதான் மேலே உள்ள வரிகள்.

கணித சமன்பாடு போடவில்லையே!! க் + அ = க என்று படிக்கும் நீங்கள் உயிர் + ஓசை = உயிரோசை என்று படிப்பதில் என்ன தவறு இருக்கிறது? இது தமிழிலேயே இருக்கிறது

உயிரோசை என்ற வார்த்தையே உயிர் மற்றும் ஓசையிலிருந்து வருவதுதான்.அதிலொன்றும் எனக்கு வழக்கு இல்லை. உயிர் + உயிர் = ?????? இந்த விளங்காத கணிதசமன்பாடிற்க்குதான் காதலிலும் காமத்திலும் விளைவதை பதிலாய் அளித்திருந்தேன்.
எதுவிருப்பினும், எனை பட்டை தீட்டிக்கொள்ள உதவிய உங்கள் பதிவுகளுக்கு நன்றி.

ஆதவா
22-01-2007, 08:41 AM
பிர்ய நாணின்,

உருவகம் என்றால் என்ன? ஒரு பொருளை வேறொரு பொருளுக்கு ஒப்ப உருவகப் படுத்துவது அப்படித்தானே!! இதில்தவறு இருந்தால் நான் சொன்னது தவறாகவே இருக்கும்..
தவறில்லாத பட்சத்தில் மீண்டும் உங்கள் கவிதையை பாருங்கள்.. அல்லது இலக்கணம் அறிந்தவர்களிடம் கேளுங்கள்...
உவமைக்கும் உருவகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று நானறியேன்.... அதனால் அங்கே சற்று தவறு நேர நான் எழுதியிருக்கலாம்...
ஆனால் நீங்கள் எனக்குச் சொல்லவேண்டியது உவமைக்கும் உருவகத்திற்கும் உள்ள வித்தியாசம்.........
என்னை கொஞ்சுவதில்லை நீங்க? என்னோட முதல் விமர்சனத்தினைப் பாருங்கள்.... ஒரு இடைவெளி விட்டு எழுதச் சொல்லியிருப்பேன்... உங்கள் தவறு அங்கே இருக்கிறது... இதை என்னால் ஆணித்தரமாக சொல்லமுடியும்..
தலைவியின் உரையாடல் போன்றோரு வரிகள் மொத்தகவிதையிலே இல்லை எனும்பொழுது மீண்டும் கேள்வி??????? நீங்கள் இங்கே என்ன சொல்லவருகிறீர்கள் எனப்புரியவில்லை. முதல் வரிகளுக்கு இடைவெளி விட்டு படித்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியும் அல்லது மன்றத்தில் திறமையான கவிஞர்களிடம் கேளுங்கள்
மீண்டும் நான் கேட்பது.... உயிரோசை என்று எந்த விதத்திலும் முன்னமே நீங்கள் குறிப்பிடவில்லை எனது விமர்சனத்திற்கு பதிலளிக்கையில்........
உயிரோசை என்பது தன் உயிரில்(ஆணாகினும்,பெண்ணாகினும்) உண்டாகும் அல்லது தன் உயிரில் இழையோடும் பாசத்தை,காதலை,அன்பை வார்த்தைகளில்லாமல் உயிரைஉயிரால் உணர்வது என்று சொன்ன நீங்கள், நான் மீண்டும் கேட்ட பிறகே உயிரை உயிரால் உணர தெரிந்தவர்களுக்கு கேட்கும் ஓசை என்றேன் என்று கூறியிருக்கிறீர்கள்....
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
உயிர் + உயிர் = ?????? இப்படியொரு சமன்பாடு நான்கேட்கவே இல்லை... மீண்டும் எனது பதிவை நன்றாக படியுங்கள்..பட்டை தீட்ட உதவியதாகச் சொன்னதிற்கு நன்றி........... ஆனால், விமர்சனம் என்பது அவ்வளவு எளியதல்ல நானின்... பார்த்தீர்களா எத்தனை விளக்கம்.... கவனமில்லை என்றால் இப்படித்தான்... உங்கள் கவிதையில் என் விளக்கத்திற்கு நீங்கள் கேட்ட கேள்விகளினால் எனக்கு இன்னும் அனுபவம் கூடியுள்ளது..... வெறுமனே விமர்சனம் அழகாய் இருக்கிறது என்று சொல்லாத உங்களுக்கு நான் சொல்வது...... கிரேட்..................

விமர்சனத்தில் வாதிடும் போதும் கவனம் தேவை......... அடுத்தடுத்து கவிதைகள் இடுங்கள், விமர்சனம் இடுகிறேன்.. அதை நீங்கள் விமர்சியுங்கள்... அனுபவம் கூடும். அதேசமயம்

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள்....

nonin
23-01-2007, 02:56 AM
ஆதவன்,
உவமைக்கும் உருவகத்திற்கும் என்ன வித்தியாசம் என்று நானறியேன்.... அதனால் அங்கே சற்று தவறு நேர நான் எழுதியிருக்கலாம்

நன்றி, சற்று தவறு இல்லை. மொத்த தவறும் அங்குதான். உவமையும் உருவகமும் நிச்சயம் ஒன்று அல்ல.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக முன்னமே பதிவிட்டுள்ளேன்.
முதலில், உருவககவிதை என்று இதில் என்ன இருக்கிறது? மொத்தகவிதையாக்கத்தின் மையமும், சொல்லவந்ததின் சாரத்தை
கவிதையில் சொல்லப்பட்டுள்ளதை சாராத வேரொரு பொருளில் உணர்த்துவது உருவகம். இந்த கவிதை பொருத்தமட்டில்
தலைவன், தலைவி சொல்லவந்த கருத்து அனைத்தும் நேரடியான பொருள்கொள்ளும்படியே உள்ளது.
வெறும் மனித ஓசை எனும் அமிலம், மொழியின் கரம், மௌன ஆடை இதையெல்லாம் வைத்து இது உருவககவிதை என்பதா?

இதன் அர்த்தம் உவமை வார்த்தைகள் உருவககவியாகா.

ஓரு இடைவெளிதான் உங்கள் புரிதலுக்கு உள்ள தடையெனில், மற்றவர் அப்படி எதும் கருத்துதெரிவிக்காத நிலையிலும் அந்த இடைவெளியை இடுவதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.உங்கள் புரிதலுக்கு உட்பட்டஇதில் கவிதையின் அல்லது கவியின் குற்றம் ஓன்றுமில்லை.

உயிரை உயிரால் உணர்வது உயிரோசை என்று நீங்கள் நினைத்தது எங்களுக்கு தெரியாதல்லவா? என்று நீங்களே ஓப்புக்கொண்டபிறகு
உயிரோசை என்பது தன் உயிரில்(ஆணாகினும்,பெண்ணாகினும்) உண்டாகும் அல்லது தன் உயிரில் இழையோடும் பாசத்தை,காதலை,அன்பை வார்த்தைகளில்லாமல் உயிரைஉயிரால் உணர்வது என்று சொன்ன நீங்கள், நான் மீண்டும் கேட்ட பிறகே உயிரை உயிரால் உணர தெரிந்தவர்களுக்கு கேட்கும் ஓசை என்றேன் என்று கூறியிருக்கிறீர்கள்....
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?இதற்க்கெல்லாம் மீண்டும் மீண்டும் நான் சொன்னதையே திருப்பி சொல்ல,நீங்கள் அதையே மீண்டும் குழப்ப ,இது ஆக்கபூர்வமான விமர்சனம் என்பதை கடந்து வறட்டு விவாதமாக மாறத்துவங்குவதை விரும்பவில்லை. படைப்புகளுக்கு தேவை விமர்சனமேயன்றி, வாதம் செய்யத்துவங்கி மெல்ல மெல்ல அவரவர் வாதங்களின் மேலுள்ள பிடிவாதமாய் உருமாற தேவையில்லை.கவிதை படைக்கும் சிந்தனையில் சிறகு விரித்தால் பொழுது நலமாகும்.
இனி என் கவிதைகளுக்கு தங்களின் விமர்சனத்தை வரவேற்ப்பேன்.சுட்டப்படும் பிழைகளின் நிஜத்தை உணர்ந்தால் திருத்திக்கொள்வேன்.கவிதையில் புரியாத (கவனிக்கவும்; கவிதையே புரியாத அல்ல) வார்த்தைகளுக்கு ஏதெனும் விளக்கம் தேவையென கோரினால் பதிவிடுவேன்.மற்றபடி விமர்சனம் விவாதமாய், விவாதம் வாதமாய்,வாதம் பிடிவாதமாய் தரம் தேய்வதை விட ஆக்கபூர்வமான பணிகள் மன்றத்தில் உங்களுக்கும் எனக்கும் உண்டு.
அடுத்த படைப்பில் சந்திப்போம்.