PDA

View Full Version : தமிழ்பதிப்பு, தமிழ் மின்னஞ்சல் குறித்து ħ



nonin
19-01-2007, 04:30 AM
நண்பர்களே, நான் தற்ப்போது ஈ-கலப்பை உதவியுடன் பதிப்புகள் செய்து வருகிறேன்.இதில் ஆல்ட் 1 கீ தமிழிலிருந்து ஆங்கிலத்திற்க்கு எனத்தெறியும். ஆல்ட் 2 கீ யிலிருந்துதான் ( முரசு அஞ்சல்)தமிழ் பதிப்பிக்கிறேன். ஆல்ட் 3 கீ யூனிகோடு என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனல் அதை பயன் படுத்தும் பொழுது எழுத்துக்கள் குழப்ப குறீயீடுகளாக வருகின்றது. அந்த கீயின் பயன்பாடுகள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? முரசு அஞ்சல் போலவே தட்டச்சு செய்ய முடியுமா? எனவும் ஜி மெயில்,யாஹூ,ஹாட்மெயில் போன்ற மின்னஞ்சல்களில் தமிழ அஞ்சல்கள் அனுப்ப இயலுமா? இயலுமெனில் நம் கணிணியில் செட்டிங்ஸ் எவ்வாறு செய்வது? அதை பெறுபவரோ அல்லது நமக்கு அதுபோல் தமிழ் அஞ்சல் வந்தாலோ அதை தெளிவாக பெறுவதெவ்வாறு? எனவும் தயவுசெய்து உதவுமாறு கேட்கிறேன்.

ஷீ-நிசி
19-01-2007, 05:05 AM
சில திருத்தங்கள்

ALT+1 = ஆங்கிலத்தில் பதித்திட
ALT+2 = UNICODE தமிழில் பதித்திட. இதற்கு எழுத்துருக்கள் எதுவும்
தேவையில்லை
ALT+3 = இதுவும் தமிழில் பதித்திடத்தான். ஆனால் TSCu எனப்படும் எழுத்துருக்களை நம் கணிணியில் நிறுவ வேண்டும்

நீங்கள் word-ல் சென்று alt+3 அழுத்திவிட்டு ammaa என்று டைப் செய்தால் எழுத்துகள் symbol போன்று தெரியும். இப்போது அதை செலக்ட் செய்து TSCu எழுத்துருவுக்கு மாற்றிப்பாருங்கள். அம்மா என்று தெரியவரும்.. TSCu Font இல்லையென்றால் சரியாக தெரியாது.

TSCu Font zip attatch செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து முயற்சித்துப் பாருங்கள்

nonin
19-01-2007, 10:41 AM
நன்றி ஷி-நிசி. எனது கணிணியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.நீங்கள் குறிப்பிட்டதை போலெ எழுத்துருமாற்றம் செய்ததில் தமிழ் தெரிகிறது. இது நமக்கு எந்தவிதத்தில் உதவியானது?

Gurudev
19-01-2007, 10:46 AM
மேலதிகமாக இதே பக்கத்தில் "யூனிகோடு தமிழ் டைப் செய்ய" என்ற தலையங்கதின் கீழ் உள்ள பதிவு 3 ஐ பார்க்கவும்

ஷீ-நிசி
19-01-2007, 02:24 PM
unicode எழுத்துருவிற்கு முன்பு TSCu Font உபயோகித்துதான் தமிழில் பதிக்க முடியும். சில தமிழ் வெப்தளங்கள் பார்த்திட அவர்கள் கொடுக்கும் எழுத்துருவை நாம் நம் கணிணியில் நிறுவவேண்டும். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்கு unicode-ன் பயன் மிகப்பெரியது. unicode எப்படி கண்டுபிடிக்கப்பட்டது, என்று எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராகிலும் விளக்கவும்.

Gurudev
19-01-2007, 04:51 PM
unicode சம்பந்தமான பல கட்டுரைகள் இங்கே தமிழில் உள்ளது. வாசிக்கவும்.

http://www.ezilnila.com/uni_kadduraikal.htm

nonin
20-01-2007, 03:56 AM
கட்டுரைகளை பார்த்தேன். நன்றி குருதேவ், விளக்கத்திற்க்கு நன்றி ஷி-நிசி.