PDA

View Full Version : பெண்விடுதலை - பிச்சை பொருளல்ல.



nonin
19-01-2007, 04:07 AM
தினம் தினம் விடியலில்
எத்தனை பூ மலர்கள்!
கணம் தோறும் மொட்டு விட்டு
காவியமாய் இதழ் விரிக்கும் - நேற்று
சிறு முளயாய் இருந்ததுதான்
சில்லென்று மொட்டவிழ்க்கும்.
நிறம்நிறமாய் கண்பறித்து
மணம்மணமாய் சுகம் பரப்பும்.

பூத்த மலர் அத்தனைக்கும்
பூமியில் சுகமில்லை - பெண்மை
காத்த மலர் சில உண்டு
கற்பு கதைகளுக்கோர் பஞ்சமில்லை.

அலை அழித்த மண் எழுத்தாய்
நலங்கெட்ட மலர்களிலே........

கரம் படாமலே கட்டு குலைகின்ற மலர்கள் சில,
தெருவோரம் வீசப்பட்டு காலடியில் அழிகின்ற மலர்கள் சில,
பூ மணம் எங்கும் பரவி நின்ற போதும்
பொன்விரல்கள் தீண்டாது தீயில் கருகி விழும் சில மலர்கள்,

பார்ப்பதற்க்கு போதை தரும்
பருவத்தை கடந்தபின் - வாசனையின்றி, வண்ணமுமின்றி
வெறும் கூடாய் பட்டு விழும் பல மலர்கள்,

பாவப்பட்ட மலர்கள், பாழ்பட்ட மலர்கள் - மானிட
தேகசுகம் கூட தீண்டாத மலர்கள்,
சேதப்பட்ட மலர்கள், சிறைப்பட்ட மலர்கள் - சிலர்
மோகப்படும் பொழுதெல்லாம் முகர்கின்ற மலர்கள்

என
விதவிதமாய் ரணமான மலர்கள் இங்கு
இத்தனைக்கும் தீர்வு சொல்ல
எத்தனிக்கும் பித்தனல்ல நான்!

சமூகத்தின் சரிபாதியின் சதை மட்டும் நேசிக்கபடுமெனின்,
சாக்காடு பூமியிதில் சரித்திரம் எங்கு வாழும்?

ஓர் நாள் -

பத்தினி சுகம் வேண்டி பரிதவிக்கும் காலம் வரும் - ஆண் சாதி
சத்திய தேவனவன் சந்நிதியில் ஓலமிடும்!

பெண் எனில் போகம் என்றே
சாண் மகனுக்கும் சாற்றுவார் இங்கே.
சக உயிர் எனும் புரிதல் இன்றி
யுகயுகமாய் மாயும் பெண் மானுடம்.

இன்னும் எத்தனைகாலம் கவியெழுதும் கருப்பொருளாய் இக்கொடுமை?

பெண்விடுதலை தருவார் என
பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றால்
விடிந்துவிடும் என்று நம்பியிருந்தோர் - மேலும்
இடுப்பொடிந்து போனதுதான் மீதம்.

தன் சக்தி தானுனர்ந்து
பெண் தெய்வம், நல்லாள், பொறையுடையாள் எனும்
பொன் விலங்கு தனையுடைத்து,
ரத்தசொந்தங்கள், பெற்றபிள்ளைகள் - இன்னும்
கட்டிய கணவன் முன்னும்
தன் இருப்பின் தனித்துவத்தை உணர்த்தி வாழ்ந்தால்...

பின்னும் சிலகாலம் பிறகேனும்
சின்னஞ்சிறியதாய் ஓர் ஓளிப்புள்ளி வடிவில்
நம்பிக்கை ஓங்கி வரும்.

இளசு
19-01-2007, 04:27 AM
நானின்

வாழ்த்துகள்..

50 க்கு 33?
அதுக்கே ஜவ்வ்வ்வ்வாய்....இழுத்தபடி... ஒத்தி வைப்புகள்...

ஐயாயிரம் ஆண்டுகால நோய்..
ஐம்பது ஆண்டு சிகிச்சை..
மெல்ல இனி நிலை மாறும்?

குறியீடுகளாய்...
இலங்கை, இத்தாலி, இந்தியா இங்கிலாந்து...
இரண்டு ஆண்டுகளில் ஹிலாரி?

ஆதவா
19-01-2007, 08:05 AM
நானின்... இது உங்க கவிதை தானே!! கொஞ்சம் சந்தேகம்தான்........ அப்படி அருமையாக இருக்கிறது.. பெண் விடுதலைக் கவிதைகள் நிறைய கண்டு இருக்கிறேன். வித்தியாசமாக அழகாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.......... நானெல்லாம் வெட்க வேண்டும் இதைப் படிப்பதற்கே.

தினம் தினம் விடியலில்
எத்தனை பூ மலர்கள்!
கணம் தோறும் மொட்டு விட்டு
காவியமாய் இதழ் விரிக்கும் -
நேற்று
சிறு முளயாய் இருந்ததுதான்
சில்லென்று மொட்டவிழ்க்கும்.
நிறம்நிறமாய் கண்பறித்து
மணம்மணமாய் சுகம் பரப்பும்.

முதலில் சபாஷ்.......... மலர்களே பெண்கள்தாம்.. அதை அப்படிஏ பறிக்காமல் தந்திருக்கிறீர்கள். வார்த்தையமைப்பும் பிரமாதம். மலருக்கும் பெண்ணுக்கும் எத்தனை எத்தனை ஒற்றுமைகள்..

பூத்த மலர் அத்தனைக்கும்
பூமியில் சுகமில்லை - பெண்மை
காத்த மலர் சில உண்டு
கற்பு கதைகளுக்கோர்
பஞ்சமில்லை.

ஆம். நண்பரே!! பூவிங்கே எதுதான் நிலையானது? பெண்மைகாத்த மலரென்பது ஆண்களைத்தானா?

அலை அழித்த மண் எழுத்தாய்
நலங்கெட்ட மலர்களிலே........
கரம் படாமலே கட்டு குலைகின்ற
மலர்கள் சில,
தெருவோரம் வீசப்பட்டு காலடியில்
அழிகின்ற மலர்கள் சில,
பூ மணம் எங்கும் பரவி நின்ற
போதும்
பொன்விரல்கள் தீண்டாது தீயில்
கருகி விழும் சில மலர்கள்,

உருவகம் மலரை வைத்து அருமையாக சூடப்பட்டிருக்கிறது. பெண்கள் எப்படியெல்லாம் போகிறார்கள் என்பது கண்ணுக்கு முன்பு தெரிகிறது.

பார்ப்பதற்க்கு போதை தரும்
பருவத்தை கடந்தபின் -
வாசனையின்றி, வண்ணமுமின்றி
வெறும் கூடாய் பட்டு விழும் பல
மலர்கள்,

பாவப்பட்ட மலர்கள், பாழ்பட்ட
மலர்கள் - மானிட
தேகசுகம் கூட தீண்டாத மலர்கள்,
சேதப்பட்ட மலர்கள், சிறைப்பட்ட
மலர்கள் - சிலர்
மோகப்படும் பொழுதெல்லாம்
முகர்கின்ற மலர்கள்

எதுகைகள் இருந்தும் இல்லாதது போலத் தோற்றமளிக்கிறது மிக அருமை.///. அதிலும் மோகப்படும் பொழுதெல்லாம் முகர்கின்ற மலர்கள் மிக அருமை...... டாப்.........

என
விதவிதமாய் ரணமான மலர்கள்
இங்கு
இத்தனைக்கும் தீர்வு சொல்ல
எத்தனிக்கும் பித்தனல்ல நான்!

ஹ ஹஹ...... உங்கள் வேலை கவிதையில் தீர்வு சொல்வதுதானே!! ஹ ஹ

சமூகத்தின் சரிபாதியின் சதை
மட்டும் நேசிக்கபடுமெனின்,
சாக்காடு பூமியிதில் சரித்திரம்
எங்கு வாழும்?

சாட்டையடி..........( இதற்குமேலும் சொல்ல வார்த்தைகளுண்டா?)

ஓர் நாள் -
பத்தினி சுகம் வேண்டி பரிதவிக்கும்
காலம் வரும் - ஆண் சாதி
சத்திய தேவனவன் சந்நிதியில்
ஓலமிடும்!
பெண் எனில் போகம் என்றே
சாண் மகனுக்கும் சாற்றுவார்
இங்கே.
சக உயிர் எனும் புரிதல் இன்றி
யுகயுகமாய் மாயும் பெண்மானிடம்.

போகமா? யோகமா?
சாண்மகன் என்பது வயிற்றிலிருக்கும் குழந்தை என்று நினைக்கிறேன். (மன்றத்திலிருப்பவர்கள் உதவுங்கள்)
சான்மகன் என்பது அறிஞன் மகன்.............
அதேபோல் மாயும் என்பது மறையும் என்று பொருள். ஒருவேளை பாயும் என்று போட்டிருக்கலாம்
கருத்து விளங்கவில்லை வார்த்தைப் பிழையால்

இன்னும் எத்தனைகாலம்
கவியெழுதும் கருப்பொருளாய்
இக்கொடுமை?
ஆமாமாம்... இனி கவிதை பிறக்கக் கூடாது பெண் விடுதலைக்காக
பெண்விடுதலை தருவார் என
பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றால்
விடிந்துவிடும் என்று நம்பியிருந்தோர்
- மேலும்
இடுப்பொடிந்து போனதுதான் மீதம்.

நல்ல நயமான வரிகள்... மன்றத்திலிருக்கும் நண்பர்கள் கட்டாயம் வந்து படிக்கவேண்டிய வரிகள்.

தன் சக்தி தானுனர்ந்து
பெண் தெய்வம், நல்லாள்,
பொறையுடையாள் எனும்
பொன் விலங்கு தனையுடைத்து,
ரத்தசொந்தங்கள், பெற்றபிள்ளைகள்
- இன்னும்
கட்டிய கணவன் முன்னும்
தன் இருப்பின் தனித்துவத்தை
உணர்த்தி வாழ்ந்தால்...
பின்னும் சிலகாலம் பிறகேனும்
சின்னஞ்சிறியதாய் ஓர் ஓளிப்புள்ளி
வடிவில்
நம்பிக்கை ஓங்கி வரும்

மீண்டுமொரு பாரதியின் பார்வை......... பெண்விடுதலை என்பது இன்று காணாமல் போகிறது அன்பரே! மெல்ல மெல்ல ஆண்விடுதலை என்ற நிலைமை வந்துவிடும். நீங்கள் சொன்ன சிறு ஒளிப் புள்ளி........... இன்று பெரியதாகவே இருக்கிறது.
இன்னும் ஒளி வீசவேண்டும்...........
மன்றத்திலிருக்கும் நண்பர்கள் கட்டாயம் வந்து படிக்கவேண்டிய கவிதை.........................

ஷீ-நிசி
19-01-2007, 08:17 AM
மூன்றாவது முறைப் படித்தபின்தான்
மூளைக்கு எட்டியது
முத்தான வரிகளின்
சத்தான கருத்துக்கள்!

நானெல்லாம் வெட்க வேண்டும் இதைப் படிப்பதற்கே.
ஆதவன் அவைக்காக உளறியது
என்றது என் மனமது
கவிதை படிக்குமுன்

நானெல்லாம் வெட்க வேண்டும் இதைப் படிப்பதற்கே.
என்றது என் மனமது
கவிதை படித்தபின்.

இன்னும் எத்தனைகாலம்
கவியெழுதும் கருப்பொருளாய்
இக்கொடுமை?

nonin
19-01-2007, 09:22 AM
நானின்... இது உங்க கவிதை தானே!! கொஞ்சம் சந்தேகம்தான்

அன்பு ஆதவன், நிச்சயமாய் எனது குழந்தைதான். இதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.



பெண்மை காத்த மலர் எனில் ஆண்வர்க்கம் தேளாய் கொட்டினாலும் தீயாய் சுட்டெறிப்பினும் புன்னகை பூத்த முகத்தோடு கொடுமைகளை,ஆதிக்கத்தை எதிர்க்காமல் ஏற்று கொள்பவளை உத்தமி, பத்தினி, பெண்மைக்கு அணிகலன் அவள் என்றெல்லாம் மாய மயக்குவார்த்தைகளை சூட்டியவுடன் தாங்கள் பெண்மைக்குறிய குணங்களை காத்துவிட்டதாய் ஏமாறும் பூவையர்.

பெண் எனில் போகம் என்றே
சாண் மகனுக்கும் சாற்றுவார் இங்கேபெண் என்பவள் போகம்(கலவி)த்திற்க்கு மட்டும்தான் என சாண் மகனுக்கும்(வளரும் பிள்ளை பருவம்)சாற்றுவார்(சொல்லுதல்)போல் சிறுவயதிலிருந்தே பெண்ணை,பெண்மையை,அவளின் உணர்வுகளை மதிக்க ஆண்மகனுக்கு சொல்லித்தரப்படுவதில்லை.

சக உயிர் எனும் புரிதல் இன்றி
யுகம் யுகமாய் மாயும் பெண் மானிடம்.

காலம் காலமாய் மாயும்(மறைந்து ஒழியும்)பெண் மானுடம்(மனிதரில் பெண் இனம்) மானுடம் - மானிடம் என தவறாக இடப்பட்டுள்ளது. திருத்திவிடுகிறேன்.

இன்று வேலைவாய்ப்புகள் நகரத்து பெண்களுக்கு வளமாக உள்ளதால் பெண் தனித்துவம் என்பது சாத்தியமான தோற்றம் ஓர் மாயைதான். வேலை செய்யும் குடும்பபெண்களுக்கு ஆதிக்கம்,அடக்குமுறை எல்லாம் வேறொரு ரூபத்தில் தன் கோரப்பல்லை காட்டிகொண்டு இருக்கிறது.கிராமத்து பெண்களை பொருத்த அளவில் பெரிய மாற்றம் காணப்பட்டதாய் தெரியவில்லை.போகவேண்டிய தூரம் அதிகம்தான் எனினும் நம்பிக்கை நான் இழக்கவில்லை.
நன்றி தங்கள் மனமுவந்த பாராட்டுக்களுக்கு.

ஆதவா
19-01-2007, 12:08 PM
மானிடம் என்று இருந்ததால் அது மான் (Deer) என்று நினைத்துவிட்டேன்...

சாண்மகன் என்பது வளரும் பிள்ளையா? மிக்க நன்றி இந்த வார்த்தைக்கு.. அழகாய் எழுதியிருக்கிறீர்கள் ///////////// வாழ்த்துக்கள்

Narathar
19-01-2007, 12:23 PM
கொடுத்துப்பாருங்கள்- விடுதலை..........
கொடுத்த பின் கேற்க வேண்டியிருக்கும்
நீங்கள் விடுதலை..................

என்று என் நண்பன் ஒருவன் எழுதிய கவி வரிகள் ஞாபகம் வருகிறது உங்கள் கவிதையை வாசிக்கும் போது....

நாராயணா!!!!!

அறிஞர்
19-01-2007, 01:01 PM
வெகு சிறப்பாக இருக்கிறது.. நானின்....

பெண்கள் - ஆண்வர்க்கத்தின் கொடுமைகளுக்கிடையே... புன்னகை பூத்த மலர்கள்...

திருமணத்திற்கு முன் பெண்களுக்கு பாடம் எடுக்கப்படுகிறது (கணவன் மனம் கோணாமல் நடக்கவேண்டுமென)... ஆனால் ஆணுக்கு?????

பெண்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்.... ஆணுக்கு இணையாக விடுதலையோடு.. உலாவும் காலம் வேண்டும்...
--------
நாரதரின் வரிகள் ஒரு ஆண்மகனாக சிந்திக்க வைக்கிறது.

மதுரகன்
19-01-2007, 05:53 PM
அலை அழித்த மண் எழுத்தாய்
நலங்கெட்ட மலர்களிலே........

கரம் படாமலே கட்டு குலைகின்ற மலர்கள் சில,
தெருவோரம் வீசப்பட்டு காலடியில் அழிகின்ற மலர்கள் சில,
பூ மணம் எங்கும் பரவி நின்ற போதும்
பொன்விரல்கள் தீண்டாது தீயில் கருகி விழும் சில மலர்கள்,

பார்ப்பதற்க்கு போதை தரும்
பருவத்தை கடந்தபின் - வாசனையின்றி, வண்ணமுமின்றி
வெறும் கூடாய் பட்டு விழும் பல மலர்கள்,

பாவப்பட்ட மலர்கள், பாழ்பட்ட மலர்கள் - மானிட
தேகசுகம் கூட தீண்டாத மலர்கள்,
சேதப்பட்ட மலர்கள், சிறைப்பட்ட மலர்கள் - சிலர்
மோகப்படும் பொழுதெல்லாம் முகர்கின்ற மலர்கள்


அற்புதம் நானின்
பெண்களை மலர்களுக்கு உருவகித்து
மலர்களினை வகைப்படுத்தி அவர்கள் துயரம் உரைக்கிறீர்கள்..

நல்ல முற்போக்கான சிந்தனைகள்..
முற்போக்கு வாதிகள் பலர் எமது சமுதாயத்திற்கு தேவை
அணிதிரளுங்கள்...

மீண்டும் வாழ்த்துக்கள்...

முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்...

Narathar
21-01-2007, 12:34 AM
நாரதரின் வரிகள் ஒரு ஆண்மகனாக சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்க வைப்பதே நம் வேலை...............

leomohan
21-01-2007, 05:34 AM
இன்னும் எத்தனைகாலம் கவியெழுதும் கருப்பொருளாய் இக்கொடுமை?

பெண்விடுதலை தருவார் என
பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றால்
விடிந்துவிடும் என்று நம்பியிருந்தோர் - மேலும்
இடுப்பொடிந்து போனதுதான் மீதம்.

தன் சக்தி தானுனர்ந்து
பெண் தெய்வம், நல்லாள், பொறையுடையாள் எனும்
பொன் விலங்கு தனையுடைத்து,
ரத்தசொந்தங்கள், பெற்றபிள்ளைகள் - இன்னும்
கட்டிய கணவன் முன்னும்
தன் இருப்பின் தனித்துவத்தை உணர்த்தி வாழ்ந்தால்...

பின்னும் சிலகாலம் பிறகேனும்
சின்னஞ்சிறியதாய் ஓர் ஓளிப்புள்ளி வடிவில்
நம்பிக்கை ஓங்கி வரும்.

ஆழமான அழுத்தமான கவிதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இன்றைய தேதியில் குறைந்த பட்சம் நகரம், மாநகரங்களில் பெண் விடுதலை கேட்கும் அளவுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். என்னை பொருத்தவரை பெண்கள் வீக்கர் செக்ஸ் இல்லை. ஆண்களை வீக் ஆக்கும் செக்ஸ். பெண்கள் தாய், சகோதரி, மனைவி, மகள் என்று ஆணின் பலவீனமாக மாறுகிறாள். அது மட்டும் அல்ல சமுதாயத்தில் நடக்கும் திருட்டு, புரட்டு, வன்முறை இவையெல்லாமே யாரோ ஒரு பெண்ணை சந்தோஷப்படுத்த தான். ஆக woman is the central focus to all growth and destruction in a society

ஓவியா
21-01-2007, 12:41 PM
அன்பு நோனின்,
சிறப்பான கவிதைக்கு ஒரு பாரட்டுக்கள்.
மிகவும் அருமையாய் இருகின்றது.

பெண்களை அழகு பொருட்களாக மட்டும் பார்க்கும் கண்களில், அவர்களை உணர்ச்சி பொருட்களாக பார்த்தமைக்கு தலை வணங்குகிறேன்.....

பாரதியின் எண்ணங்கள் வளரட்டும்

வாழ்த்துக்கள்...

nonin
22-01-2007, 06:44 AM
நன்றி ஓவியா. எனது பெயராக இங்கு குறிப்பிடபடுவது நான் இன் (non in) பெயர் விளக்கம் பற்றி அறிய தயைசெய்து அறிமுகபகுதியில் என் பதிவை பார்க்கவும்

gragavan
22-01-2007, 07:48 AM
பெண் விடுதலையை யாரும் தரமுடியாது. அவர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிலமை மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் முழுமையாக மாற வேண்டும். மாறும் என்று நம்புகிறேன்.