PDA

View Full Version : நீ என்னில்...



farhan mohamed
18-01-2007, 07:26 AM
நீ நடக்கும் சாலையிலே
அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
பாதம் பதித்த ஓர் இடம் நானும்
பதிக்க மாட்டேனா? என்று

நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
சுவாசக் காற்றை நான்
சுவாசிக்க மாட்டேனா? என்று

நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
நான் அலைகிறேன் என் கண்ணில்
நீ தெரியமாட்டாயா? என்று


நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
யோசிக்கிறேன்
என்றும் உன்னில் - நான்
பதிய மாட்டேனா? என்று...

மன்மதன்
18-01-2007, 07:30 AM
அழகான ஆரம்பம். எழுத எழுத மெருகேறும். கடைசியில் இருக்கும் எழுத்துபிழையை சரி செய்வீராக.

ஆதவா
18-01-2007, 07:52 AM
முதலில் ஒரு சொட்டு!!! அழகிய காதல் கவிதைக்கு!! அடுத்தது ஒரு குட்டு!! அதை கொஞ்சமாகவே கொடுத்ததற்கு :D :D

நீ நடக்கும் சாலையிலே
அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
பாதம் பதித்த ஓர் இடம் நானும்
பதிக்க மாட்டேனா? என்று

பர்ஹான்........ இங்கே உங்களை கவனிக்கிறேன்... அழகிய சிந்தனை,,, காதலியின் பாதம் பதித்த இடங்களை காதலன் இட விரும்புகின்றான்.. அற்புதம் பர்ஹான்.. ஓர் அருமையான கவிஞனுக்குண்டான சிந்தனை..

நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
சுவாசக் காற்றை நான்
சுவாசிக்க மாட்டேனா? என்று

முந்தையது போலத்தான் இதுவும். காதலியின் சுவடு பின்பற்ற நினைக்கும் காதலனின் கவிதை.... அழகுதான்.

நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
நான் அலைகிறேன் என் கண்ணில்
நீ தெரியமாட்டாயா? என்று


நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
யோசிக்கிறேன்
என்றும் உன்னில் - நான்
பதிய மாட்டேனா? என்று......

பதிவார்கள்........... உங்கள் காதலி உங்கள் கண்ணில் பதிவார்கள்... அற்புதம். இன்னும் கொஞ்சம் கவிதை வளர்த்தியிர்க்கலாமெனத் தோணுகிறது (:D ஏதாவது குறை சொல்லனும்ல:D )

வாழ்த்துக்கள்........... முதல் படி வெற்றிகரமாக ஏறியிருக்கிறீர்கள்,,,,

farhan mohamed
18-01-2007, 08:14 AM
ஆதவா

உங்கள் ஆலோசனைக்கு என்றும் என் நன்றிகள். உங்கள் விமர்சனம் அவசியம் நல்லதை விட விடும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் அத்துடன் எப்படி எழுதலாமென்றும் சொல்லித்தாறுங்கள்.
நண்பரே உங்கள் பதிவுகள் அருமை விமர்சனம் கூறுமளவுக்கு ஆற்றலில்லை

அறிஞர்
18-01-2007, 02:11 PM
காதல் வயம் அகப்பட்ட இளைஞனின்...
அழகான வரிகள்.....

தன் கண்ணில் அகப்படும்
காதலியின் கண்களில் அகப்பட
போராட்டம் தான் எத்தனை.....

இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை...

அருமை... பர்கான்....

ஷீ-நிசி
18-01-2007, 02:24 PM
நீ நடக்கும் சாலையிலே
அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
பாதம் பதித்த ஓர் இடம் நானும்
பதிக்க மாட்டேனா? என்று

என்னைக் கவர்ந்த வரிகள்

மதுரகன்
18-01-2007, 04:01 PM
அற்புதம் பர்கான் உங்கள் கவிதைகள் முழுவதும் ஒருவித ஏக்கம் இழையோடியுள்ளதை பார்க்க முடிகின்றது...


நீ நடக்கும் சாலையிலே
அங்குமிங்கும் அலைகிறேன் - நீ
பாதம் பதித்த ஓர் இடம் நானும்
பதிக்க மாட்டேனா? என்று

நீ வசிக்கும் இடங்களிலெல்லாம்
அதிகமாக சுவாசிக்கிறேன் - உன்
சுவாசக் காற்றை நான்
சுவாசிக்க மாட்டேனா? என்று

நீ விழித்திருக்கும் நேரமெல்லாம்
நான் அலைகிறேன் என் கண்ணில்
நீ தெரியமாட்டாயா? என்று


நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்டும் போதெல்லாம் - நான்
யோசிக்கிறேன்
என்றும் உன்னில் - நான்
பதிய மாட்டேனா? என்று...


வார்த்தைகள் அற்புதம்
சிந்தனை அற்புதம்

நானும் இதுபோல் கவிதை எழுதியுள்ளேன்...
என் தவிப்புகள்1,தவிப்புகள் 2 வாசித்து கருத்து கூறினால் மகிழ்வேன்...

வாழத்துக்கள்...வளருங்கள்...

நம்பிகோபாலன்
18-01-2007, 08:25 PM
காதலியின் பாததிற்கும்,சுவாசத்திற்க்கும், பார்வைக்கும் அறுமையான ஏக்கத்தை சொல்லி கவிதையை அசத்திவிட்டிற்கள்

Narathar
19-01-2007, 01:04 AM
காதலில் நன்றாகவே அனுபவப்பட்டுள்ளீர்கள்...............
உங்கள் கவிதையில் அது நன்றாக தெரிகிறது

farhan mohamed
19-01-2007, 04:17 AM
அனைத்து நண்பர்களின் ஆதரவுக்கும்
என்நன்றிகள்.
முக்கியமாகஆதவா,மதுரகன்,ஷீநிசி,அறிஞர்,நாரதர்,நம்பிகோபாலன் போன்றவர்களுக்கு நன்றிகள்.உங்கள் விமர்சனம் தான் என்னை மேலும் மேலும் சில படைப்புகளை வழங்க ஊக்கமளிக்கிறது.

இளசு
19-01-2007, 04:30 AM
20களில் இந்நிலையை கடக்காதவர்கள்
எதையோ நிச்சயம் இழந்தவர்கள்..

பாராட்டுகள் பர்ஹான்..