PDA

View Full Version : இயற்கையின் இன்னொரு நிலவிடம் இனிய வேண்டுக



ஆதவா
18-01-2007, 06:34 AM
சில நேரங்களில்
இயற்கையும் தவறிழைக்கும்
பாவம்
இங்குள்ளவர்களின் நிலை
அதற்கெப்படித் தெரியும்?

மூன்றாம் பிறையை மறைத்த
இன்னொரு நிலவே!
அணைந்த நெருப்புக்கு
அணைந்த வாயு ஊட்டுகிறாய்

ஆழங்களற்ற மலைகளும்
உயரங்களற்ற கடல்களும்
இதோ
இங்கூறும் எறும்புக்கு
ஆகாரமாக சபி!
அல்லது
அதுவே எங்கள்
மரணத்திற்கு காரணமாக
சாபத்தை விதி!!

முலைப் பாலாய்
மழை அனுப்பி
இழைக்கிறாய் தீமை!
எங்களின் உறிஞ்சல்கள்
இங்கே பத்தாது!!
அதற்கென தருகுவாய்
வத்தாது!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

இயற்கையின் இன்னொரு
நிலவிடம் கேட்பது
கவலைப் பனிகளை உருக்கிவிடாதே
இல்லையென்றாலும் உருக்கிவிடாதே!!

அறிஞர்
18-01-2007, 04:58 PM
ஆதவன்... படிக்க அழகாக இருக்கிறது... பாதி புரிகிறது.

குறுகிய விளக்கம் கொடுங்களேன்... எங்களை போன்றவர்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

ஆதவா
18-01-2007, 05:13 PM
ஆதவன்... படிக்க அழகாக இருக்கிறது... பாதி புரிகிறது.

குறுகிய விளக்கம் கொடுங்களேன்... எங்களை போன்றவர்கள் தெளிவாக புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

நன்றி அறிஞரே! இது இயற்கையிடம் (உதாரணத்திற்கு சூரியன்) வேண்டுகோள் விடுப்பதாக எழுதியிருக்கிறேன்.

ஆழங்களற்ற மலைகளும்
உயரங்களற்ற கடல்களும்
இதோ
இங்கூறும் எறும்புக்கு
ஆகாரமாக சபி!
அல்லது
அதுவே எங்கள்
மரணத்திற்கு காரணமாக
சாபத்தை விதி!!

ஒன்று கொடு.. அல்லது கெடு. என்பது போல கருத்து. நமக்கு சில தீமைகள் சூரியனையோ அல்லது வானத்தையோ மையமாக வைத்தே வருகிறது.. தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையைக் கிள்ளும் சூரியனிடம் கொஞ்சம் மாற்றம் கொண்டுவர வேண்டினேன்... அவ்வளவதான்......

மதுரகன்
18-01-2007, 05:44 PM
பின்னிக்கட்டுகிறீர்கள் ஆதவா...
அற்புதம் அற்புதம்...
வாழத்துக்கள்...

பொய்யாக சொல்லவில்லை நானும் இது போன்ற சிந்தனைகளுடனும் எண்ணங்களுடனும் இருப்பவன்...

விரைவில் இதுபோன்ற எனது படைப்புகளையும் எதிர்பார்க்கலாம்..


சில நேரங்களில்
இயற்கையும் தவறிழைக்கும்
பாவம்
இங்குள்ளவர்களின் நிலை
அதற்கெப்படித் தெரியும்?

மூன்றாம் பிறையை மறைத்த
இன்னொரு நிலவே!
அணைந்த நெருப்புக்கு
அணைந்த வாயு ஊட்டுகிறாய்

ஆழங்களற்ற மலைகளும்
உயரங்களற்ற கடல்களும்
இதோ
இங்கூறும் எறும்புக்கு
ஆகாரமாக சபி!
அல்லது
அதுவே எங்கள்
மரணத்திற்கு காரணமாக
சாபத்தை விதி!!

முலைப் பாலாய்
மழை அனுப்பி
இழைக்கிறாய் தீமை!
எங்களின் உறிஞ்சல்கள்
இங்கே பத்தாது!!
அதற்கென தருகுவாய்
வத்தாது!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

இயற்கையின் இன்னொரு
நிலவிடம் கேட்பது
கவலைப் பனிகளை உருக்கிவிடாதே
இல்லையென்றாலும் உருக்கிவிடாதே!!

முழுவதற்கும் சேர்த்து விமர்சனம் எழுதுகின்றேன்...

நீங்கள் இயற்கையை சாடுகிறீர்கள் மனிதர்களின் ஏக்கங்களை புரிந்து கொள்ளுமாறு...

கேட்கவில்லையோ இயற்கைக்கு என்றேயெண்ணி ஒருகணம் வேண்டுகோள் விதிக்கிறீர்கள்....

இதுவெல்லாம் ஏற்கனவே பலரால் செய்யப்பட்டவையே
ஆனால் இயற்கை கேளாதிருக்கவில்லை என உணர்ந்ததும் அலட்சியமோ என்றெண்ணி பொங்கிவிட்டீர்கள் புதுமை புதுமை அது....

யாரும் இயற்கையை சவாலிட்டு நான் பார்த்ததில்லை...
உன்னால் முடிந்தால் வாழ்த்தி வாழவிடு அன்றில் வீழ்த்தி விடு என...

அற்புதம்
முயன்றுபாருங்கள்.... முன்னேறுங்கள்..

ஆதவா
18-01-2007, 05:48 PM
நன்றி மது..... விமர்சனத்தில் என்னை பின்னுக்குத் தள்ளுகிறீர்கள்

ஷீ-நிசி
19-01-2007, 03:26 AM
ஆதவா உங்கள் கவிதைகளின் வார்த்தைகள் எல்லாம் அழகாகவே அமைகின்றன.

உதாரணம்:

'இங்கூறும் எறும்புக்கு'

'முலைப் பாலாய் மழை அனுப்பி இழைக்கிறாய் தீமை!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

ஆனால் எனக்கு புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.. மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் உடனடியாக. ஆனால் எனக்கு கடினமாக இருக்கிறது.. என் போன்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக உங்கள் கவிதைக்கு முன்பாக அடைப்புக்குறியில் நீங்கள் எழுதும் கவிதைக்கு சிறு விளக்கமொன்றை அளித்திடுங்கள். இது என் வேண்டுகோள்.

ஆதவா
19-01-2007, 07:35 AM
ஆதவா உங்கள் கவிதைகளின் வார்த்தைகள் எல்லாம் அழகாகவே அமைகின்றன.

உதாரணம்:

'இங்கூறும் எறும்புக்கு'

'முலைப் பாலாய் மழை அனுப்பி இழைக்கிறாய் தீமை!

பிணிகளும் அச்சமும்
இந்நிலையில்
மேன்மைக்கு ஒப்பாகும்
உன் விழிகளின்
கதிர் படாது போனால்
பூமியே இங்கு தப்பாகும்!

ஆனால் எனக்கு புரிந்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.. மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் உடனடியாக. ஆனால் எனக்கு கடினமாக இருக்கிறது.. என் போன்றவர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக உங்கள் கவிதைக்கு முன்பாக அடைப்புக்குறியில் நீங்கள் எழுதும் கவிதைக்கு சிறு விளக்கமொன்றை அளித்திடுங்கள். இது என் வேண்டுகோள்.

நண்பரே மிக்க நன்றி...... நீங்கள் புரிந்து கொள்ள முடியாமல் போன வரிகளை மட்டும் சொல்லுங்களேன்.. நிவர்த்தி செய்கிறேன்.. அதோடு நீங்கள் இரண்டு முறை படித்தீர்களேயானால் புரிந்துவிடுமென்று நினைக்கிறேன்.
அதோடு, என் கவிதைக்கு நானே விளக்கம் என்பது சற்று மிகை யென்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் அது எனக்கு நானே விமர்சனம் செய்ததுபோல...... இருப்பினும் சில கடினமாக ஏதாவது அமைந்தால் நிச்சயம் விளக்கிவிடுகிறேன்....
உங்கள் ஆதரவு என்றும் தொடர வேண்டும்

ஆதவன்

இளசு
20-01-2007, 09:59 PM
நெஞ்சம் மாறிவிடு
பிள்ளையை வாழவிடு

என்றார் நாகத்திடம் நாவுக்கரசர்..

இறைவா நீ ஆணையிடு
என்றார் ஒரு நாயகி

சூரியனை உதிக்காதே
என்றாள் ஒரு பத்தினி..

இவர்கள் எல்லாம் தனிமனிதருக்காக ..

ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக
ஓங்கி இங்கே ஒரு குரல்...

கெஞ்சல், கோரிக்கையாக அல்ல..
கட்டளை, பேச்சுவார்த்தையாக..

பூமியரை முழுமையாய் அவரிஷ்டம் போல் வாழவிடு..
இழுபறி, இன்றுண்டு நாளையில்லை என்ற ரேஷன் கடை நிர்வாகம்போல் என்றால்..
போய்விடு முழுதாய்.. சாமி ஆளை விடு.. என்பதாய்..

ஆதவனை இன்னொரு நிலவென தகுதியிறக்கம் செய்து அழைக்க
ஆதவாவால் மட்டுமே முடியும்..

பாராட்டுகள்.

Narathar
21-01-2007, 01:27 AM
எனக்கு இப்படிக்கவிதைகளை பாராட்ட மட்டுமே தெரியும்................

leomohan
21-01-2007, 05:38 AM
அருமை ஆதவன். உங்கள் கவிதைகளில் புதமை தெரிகிறது. ஏக்கம் தெரிகிறது. பரிதவிப்பு தெரிகிறது.

மதுரகன்
21-01-2007, 06:01 PM
நாரதரே கருத்து தெரிவிப்பதைவிடுத்து களத்தில் இறங்குங்கள்..
நீங்கள் நல்ல கடிஞர் மன்னிக்கவும் கவிஞராகலாம்...