PDA

View Full Version : மீதமின்றி தின்று விட்டோம்..



ஆதவா
18-01-2007, 06:24 AM
உலக உருண்டையை சுக்கலாக்கினோம்
வாழும் உயிர்களைத் தீர்த்தோம்
நிலவை சுட்டுத் தள்ளினோம்
நஷத்திரங்களும் அஃதே

சூரியனைக் கரைத்துக் குடித்தோம்
அவனொளி இருட்டாக்கினோம்
காரிருள் படைத்த வானை
இப்போது மென்று பசியடக்கினோம்

அண்ட பேரண்டங்கள் குடித்தோம்
பால்வளிகள் அனைத்தோடும்
உண்ட இவையனைத்தும்
எமக்கு அடங்க வில்லை

ஏதுமற்ற வானை
ஏன் பார்க்கவேண்டும்?
சூதுஅற்ற எம்மைப் போல்
பசியடங்கா தவர் பலர்

வாதமிட்ட ஏது பயன்-இங்கே
கேட்பார் எவருமில்லை.
மீதமின்றி தின்றுவிட்டோம்
எம் உடலையும் சேர்த்து...

அறிஞர்
18-01-2007, 05:02 PM
அருமையான சாடல்...... கவிதை....
---
பாரதியாரின் வரிகள் இங்கு ரிங்காரமிடுகின்றன.........
----
இன்றைய உலகில்.... எல்லா வளங்களையும் அழித்து தின்றுவிட்டு.... நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம்....... - இதைப்பற்றி தானே கூறுகிறீர்கள், என் எண்ணம் சரிதானே ஆதவா...

கவிஞர்கள் படித்தும் பதில் கூறாததால் ஒரு ஐயம்.

ஆதவா
18-01-2007, 05:06 PM
ஆம் அறிஞரே... நம்மை நாமே அழித்துக்கொண்டிருப்பதைத் தான் அவ்வாறு எழுதியிருக்கிறேன்....
நன்றி அறிஞரே@!

மதுரகன்
18-01-2007, 05:17 PM
அற்புதம் ஆதவா
மீதமின்றி தின்று விட்டோம்..

நெஞ்சில் ஓர் மகாகவி ஓடிக்கொண்டிருக்கிறார்...

உலக உருண்டையை சுக்கலாக்கினோம்
வாழும் உயிர்களைத் தீர்த்தோம்
நிலவை சுட்டுத் தள்ளினோம்
நஷத்திரங்களும் அஃதே

வித்தியாசமான சிந்தனைகள் ஆனால் கருத்து வியக்கவைக்கின்றது...


சூரியனைக் கரைத்துக் குடித்தோம்
அவனொளி இருட்டாக்கினோம்
காரிருள் படைத்த வானை
இப்போது மென்று பசியடக்கினோம்

இவ்வளவு தூரம் தீர்த்தபின்னும் அடங்கவில்லையோ கொடூரப்பசி..

அண்ட பேரண்டங்கள் குடித்தோம்
பால்வளிகள் அனைத்தோடும்
உண்ட இவையனைத்தும்
எமக்கு அடங்க வில்லை


நிறைய சிங்திக்க வைக்கிறீர்கள் ஒரு புரட்சியாளன் போல..

ஏதுமற்ற வானை
ஏன் பார்க்கவேண்டும்?
சூதுஅற்ற எம்மைப் போல்
பசியடங்கா தவர் பலர்

இறுதியில் நடக்கப்போவது அதுதான்...
அதற்கு முதலே நாம் அழிய வேண்டுமென இறைவனைப்பிரார்த்திப்போம்

வாதமிட்ட ஏது பயன்-இங்கே
கேட்பார் எவருமில்லை.
மீதமின்றி தின்றுவிட்டோம்
எம் உடலையும் சேர்த்து...

இது போன்ற முற்போக்கு கவிதைகள் தமிழில் நிறையத்தேவை
அள்ளி இறையுங்கள் ஆதவா...
வாழ்த்துக்கள்...
முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்

ஆதவா
18-01-2007, 05:30 PM
நிச்சயமாக மது...........நன்றி மிக நீண்ட விமர்சனத்திற்கு........... கற்புற்ற காமக் கவிதையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி எழுதியிருக்கிறேன் பார்த்தீர்களா?

ஷீ-நிசி
19-01-2007, 02:51 AM
எதனால் இந்தக் கவிதை? கவிதை எழுதக் காரணம்? மையப் பொருள்?

விளக்குங்கள்.. புரியவில்லை அதனால்தான்

இளசு
19-01-2007, 04:18 AM
ஆதவா

நீங்கள் வந்த நாளிலிருந்து உங்கள் படைப்புகளாலும்
மன்றத்தில் காட்டும் உண்மையான ஈர்ப்பாலும்
அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துவிட்டீர்கள்.

நெஞ்சார்ந்த பாராட்டுகள்...


------------------------------------------

பழகிய ரௌத்ரம் தெறிக்கும் சொற்கள்..
சூழல் ஆர்வலர்களின் கவலையை
ஆழமான , வீரிய பிரம்மாண்ட வரிகளால்
அழகிய கவிதையாக்கிய ஆளுமைக்கு வந்தனம்..

ஆதவா
19-01-2007, 06:58 AM
எதனால் இந்தக் கவிதை? கவிதை எழுதக் காரணம்? மையப் பொருள்?

விளக்குங்கள்.. புரியவில்லை அதனால்தான்

ஷீ.. அறிஞர் எழுதிய பதில்தான்.........

இன்றைய உலகில்.... எல்லா வளங்களையும் அழித்து தின்றுவிட்டு.... நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம்.......

ஆதவா
19-01-2007, 06:58 AM
நன்றி இளசு அவர்களுக்கு.