PDA

View Full Version : நான் நீ என்பதால்...



farhan mohamed
18-01-2007, 05:13 AM
உன் பெயரை நீ எழுதுவதைவிட
நானே எழுதுகிறேன் - உன் பெயரை
உன் வீட்டார் உச்சரிப்பதைவிட
நானே அதிகமாக உச்சரிக்கிறேன் - உன்னை
நீ நேசிப்பதைவிட நானே நேசிக்கிறேன் - ஆனாலும்
நான் உன்னை நேசிப்பதைவிட என்னை நேசிக்கிறேன் - ஏனெனில் நான் நீ என்பதால்...:cool:


உலகை வியப்பாய் இத்தனை அழகா? என
காதலித்துப்பார்:p

ஆதவா
18-01-2007, 05:32 AM
உன் பெயரை நீ எழுதுவதைவிட
நானே எழுதுகிறேன் - உன் பெயரை
உன் வீட்டார் உச்சரிப்பதைவிட
நானே அதிகமாக உச்சரிக்கிறேன் - உன்னை
நீ நேசிப்பதைவிட நானே நேசிக்கிறேன் - ஆனாலும்
நான் உன்னை நேசிப்பதைவிட என்னை நேசிக்கிறேன் - ஏனெனில் நான் நீ என்பதால்...

நான் நீ என்பதால் என்று அழகான தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.... நான்கு வரிகளில் அழகிய கவிதைகளோடு.........

காதலி அல்லது காதலன் பெயரும் முகமும் நினைவும் காதலனுக்கோ அல்லது காதலிக்கோ அடிக்கடி வாராமல் போய்விடில் அது காதலில்லை.
பறவைச் சிறகுகளின் ஒலி கேட்டால் கூட காதல் ஞாபகம் கண்களில் தெரிந்துவிடும். சிறு ஒளியும் காதலியின்/காதலனின் கண்களில் எழும் கரு போல நம் மனதிற்குள் தோன்றும்.
கடைசியாக, உன்னை நேசிப்பதைவிட என்னை நேசிக்கிறேன். என்பது அழகு..
காதலுக்கு அழகு இரு விழிகள். இரு விழிகளும் உள்ள இடம் என் இதயம் என்று ஆணித்தரமாக அழுத்திச் சொல்ல இன்னும் கொஞ்சம் முயலுங்கள்...
உங்கள் கண்களிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் அழகான கவிஞன்...

வாழ்த்துக்கள்.

farhan mohamed
18-01-2007, 06:01 AM
ஆதவா நன்றி
கவிதை எழுதத் தெரியவில்லை
இருந்தும் முயற்சிக்கிறேன்
விமர்சித்து ஆலோசனை வழங்கவும்

ஆதவா
18-01-2007, 06:13 AM
நண்பரே நீங்கள் கவிதை நன்றாகவே எழுதுகிறீர்கள்..... இன்னும் முயலவேண்டும்......... நீங்கள் முதல் படிக்கட்டில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்தடுத்து முன்னேற கைப்பிடியாக தமிழ்மன்றத்தை நினைத்து படியேறுங்கள்,,,,
நீங்களாவது அழகாக எழுதுகிறீர்கள். நான் மிக மோசமாக கவிதை எழுதி இங்கே வந்து நிறைய பேரிடம் குட்டு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் இரண்டு படிகள் ஏறி வந்தேன்... இன்னும் கண்ணுக்குத் தெரியவில்லை படிகளின் முடிவு..... உங்கள் கண்களில் தெரியலாம்... காட்சிகளை வெளியே கொண்டுவாருங்கள். கவிதை யாருக்குத்தான் எழுதத்தெரிகிறது? நீங்கள் மட்டும் விதிவிலக்கல்ல......
முயற்சி திருவினையாக்கும் என்பது அறிந்திருப்பீர்கள், இனி வரும் கவிதைகளை நான் மிக ஆவலோடு எதிர்பார்ப்பேன். தொடர்ந்து இடுங்கள்... என்றாவது நீங்கள் மன்றத்தின் தூணாகி தோளில் சுமக்கும் காலம் வரும்......... உங்களோடு நானும் இணைந்துவிடுவேன்.
இங்கே உங்கள் கவிதைகளைப் படிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பின்னூட்டமிட போதிய அவகாசம் இல்லாமல் போய்விடுவதால் எதுவும் சொல்லாமல் போகிறார்கள்.. பின்னூட்டங்களைவிட நமக்கு பார்வையாளர்கள்தான் முக்கியம். அந்தவகையில் தொடர்ந்து இட்டு நிறைய நண்பர்களைப் பெறுங்கள்

பரஞ்சோதி
18-01-2007, 06:45 AM
நல்ல காதல் கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.

பழக பழக தான் சித்திரம் வரும், எழுத எழுத தான் கவிதைகள் வரும்.

மன்மதன்
18-01-2007, 07:42 AM
நல்ல கவிதைக்கு கடைசியில் அந்த ஸ்மைலி எதற்கு நண்பரே?

farhan mohamed
18-01-2007, 07:45 AM
நன்றி நண்பர் பரம்ஸ்
என்றும் ஒத்துழைக்கவும்

மதுரகன்
18-01-2007, 04:42 PM
ஆதவாவின் கூற்று மிகச்சரி பர்கான்..
முயற்சிசெய்யுங்கள்...முன்னேறுங்கள்....

அறிஞர்
18-01-2007, 04:51 PM
"உன்னை நினைத்தே
நான் நீயாக மாறிவிட்டேன்"

அழகாக எழுதுகிறீர்கள்..

சித்திரமும் கைப்பழக்கம்......

எழுத எழுத சிறந்த கவிஞராகிவிடுவீர்கள்....