PDA

View Full Version : மானுடனுக்கு எங்கேப் புரியப் போகிறது?



lenram80
18-01-2007, 01:01 AM
புதிதாய் ஒருவனைப் பார்த்தால்
'டேய், கோமாளியைப் பாருங்கள்!'
எனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்!
'அவை குரைக்கின்றன!' - என்கிறோம்
அதை புரியாத நாம் !

'கா...கா..., கீ...கீ..., கூ...கூ...'
'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்?'
எனக் காலங்காலமாய் கேட்கின்றன
காக்காக்களும், கிளிகளும், குயில்களும்!
வெட்கம்!
தமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை!

இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து
'அய்யோ - அய்யோ' என்று கிளை அசைத்து
அலறுகின்றன அத்தனை மரங்களும்!
'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்!

உடல் முழுதும் துளைத்து, வந்த புண்ணில் வலியே இன்னும் அடங்கவில்லை!
அதற்குள் ஒவ்வொரு புண்ணிலும் விரலை வைத்து அழுத்துவதால்
வலி தாங்க முடியாமல் கத்துகிறது - அந்த புல்லாங்குழல்.
இது புரியாமல், "Nothing but wind"* என்கிறோம்!

ஜெனரல் டயர்* என்னும் சலூன் சலைக்காமல் தடுக்கும் போதும்
வளரத் துடிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளாம்
வெட்டுப்பட்டு நிலத்தில் வீழும் அந்த விடு'தலை' வீரர்களை
"சீ... முடி" என்று ஒதுக்கி வைக்கிறோம்!

பாரம் முழுதும் ஏற்றி, காதுக்குள் கம்பியை விட்டுத் திருகி,
கொம்பைப் பிடித்து ஆட்டி, அதன் காலையும் மிதிப்பதால்
புகை பிடித்துக் கொண்டே, கலைக்க கலைக்க ஒடுகிறது அந்த காளை மாடு!
தண்ணீரை மட்டும் காட்டிவிட்டு, அரக்க மனிதன்
அறக்கப் பறக்க ஒட்டுகிறான் தார் ரோட்டிலே!
"வாகனம்" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே?

பெரிய மரங்களை,அரிய பறவைகளை, சிறிய விலங்குகளை,கரிய வாகனங்களை
புரியவில்லை என்றால் கூட பரவாயில்லை!
மனிதனையே மனிதனுக்குப் புரியவில்லையே!
சண்டை சச்சரவுகளுடன் போகிறது எங்கடா இந்த சமுதாயம்?
சமாதானம் மலருமா? சொல்லுடா வெங்காயம்!!!


விளக்கம்:
Nothing but wind* - இளையராஜாவின் புல்லாங்குழல் இசைத் தொகுப்பு.
ஜெனரல் டயர்* - ஜாலியன்வாலாபாக் படுகொலை நடத்திய ஆங்கில காவல் அதிகாரி

ஆதவா
18-01-2007, 03:02 AM
முதலாவதாக, லெனினுக்கு ஒரு சொட்டு,,,,,,,,, அழகு கவிதை பதிப்பதினால் ,, அடுத்து ஒரு குட்டு.... நிறைய கொடுக்காமல் போவது...

புதிதாய் ஒருவனைப் பார்த்தால்
'டேய், கோமாளியைப் பாருங்கள்!'
எனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்!
'அவை குரைக்கின்றன!' - என்கிறோம்
அதை புரியாத நாம் !

நல்ல சிந்தனை... நாய்களின் பாஷையில் நாம் கோமாளிகளாவே இருந்திருக்க முடியும். ஒரு நன்றியுள்ள பிராணி, நன்றியற்ற பிராணியை அவ்வாறு எண்ணுவதில் தவறேதுமில்லை. புரியாமல் போவதும் மனிதத்தின் இயையு,

'கா...கா..., கீ...கீ..., கூ...கூ...'
'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்?'
எனக் காலங்காலமாய் கேட்கின்றன
காக்காக்களும், கிளிகளும், குயில்களும்!
வெட்கம்!
தமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை!

காக்களின் பாஷைகளில் அதுவே அதிகம்ந்தான். எனக்கு இன்னொரு கோணத்தில் இந்த பொருள் விளங்குகிறது. அதாவது, அடுத்த எழுத்துக்காக பட்சிகளே ஏங்கும்போது, தமிழன், தமிழைத் தொலைக்கிறானே!
வெட்கம் என்ற ஒரு வார்த்தையிலேயே தமிழனின் வெட்கம் குத்துப் பாட்டு லெவலுக்கு போய்விட்டது.

இங்கே நடக்கும் அநியாயங்களை பார்த்து
'அய்யோ - அய்யோ' என்று கிளை அசைத்து
அலறுகின்றன அத்தனை மரங்களும்!
'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்!

முன்னமே சொன்னதுபோல, புரியாமல் போவதும் மனித இயைபு. புரிந்தும் புரியாமல் போவதும் அஃதே. அநியாயங்களைக் கண்டு கதறியும் நமக்கு உதவி செய்யும் மரங்களைப் போல கூட மனிதனில்லை..

உடல் முழுதும் துளைத்து, வந்த புண்ணில் வலியே இன்னும் அடங்கவில்லை!
அதற்குள் ஒவ்வொரு புண்ணிலும் விரலை வைத்து அழுத்துவதால்
வலி தாங்க முடியாமல் கத்துகிறது - அந்த புல்லாங்குழல்.
இது புரியாமல், "Nothing but wind"* என்கிறோம்!

இது டாப்: புல்லாங்குழலுக்கு அருமையான ஒப்பிடல், கண்ணில் வந்து மறைந்து போகிறது புல்லாங்குழலின் அழுகை..... ஆம் நண்பரே! அதன் சப்தம் கூட மென்மையிலும் மென்மை. அழுகிற புல்லாங்குழலும் மனிதனால் தவறாகவே விமர்சிக்கப்படுகிறது. அருமையான ஒப்பு. தேவையான இடத்தில்தான் ஆங்கிலம் கலக்கப் பட்டிருக்கிறது; தவறேதுமில்லை./

ஜெனரல் டயர்* என்னும் சலூன் சலைக்காமல் தடுக்கும் போதும்
வளரத் துடிக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளாம்
வெட்டுப்பட்டு நிலத்தில் வீழும் அந்த விடு'தலை' வீரர்களை
"சீ... முடி" என்று ஒதுக்கி வைக்கிறோம்!

இரண்டுமுறை படிக்கவேண்டியிருந்தது. முடிகளை நாம் என்ன செய்யமுடியும் லெனின். முடிந்தவரை முடிகளை வெட்டிவிடவே முனைகிறோம்.. முடிந்துபோனவர்களை முடிகளாக இங்கே முடிந்துகொள்ளலாம் எனக் கொள்ளலாம். விடுதலை வீரர்கள் அருமை.

பாரம் முழுதும் ஏற்றி, காதுக்குள் கம்பியை விட்டுத் திருகி,
கொம்பைப் பிடித்து ஆட்டி, அதன் காலையும் மிதிப்பதால்
புகை பிடித்துக் கொண்டே, கலைக்க கலைக்க ஒடுகிறது அந்த காளை மாடு!
தண்ணீரை மட்டும் காட்டிவிட்டு, அரக்க மனிதன்
அறக்கப் பறக்க ஒட்டுகிறான் தார் ரோட்டிலே!
"வாகனம்" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே?

காதுக்குள் கம்பி, புகைப் பிடிப்பது, நீங்கள் சிறுவயதில் மாடு ஓட்டுபவரா? விளக்கம் அருமை/ தண்ணீர் மட்டுமல்ல கொஞ்சம் வைக்கோலையும்தான் காட்டுகிறான்.
இரக்கமில்லாத மனிதர்களை கொஞ்சம் அஃறிணைப் பொருள்களோடு ஒப்பிட்டு சாட்டை யடிக்கிறீர். உங்கள் பாடல்களில் காதல், காமம், ஆகிய எல்லாமே சுளீர் சுளீரென சமூகத்தை ஏசுகிறது. தொடருங்கள்.

விளக்கம்:
Nothing but wind* - இளையராஜாவின் புல்லாங்குழல் இசைத் தொகுப்பு.
ஜெனரல் டயர்* - ஜாலியன்வாலாபாக் படுகொலை நடத்திய ஆங்கில காவல் அதிகாரி

விளக்கத்திற்கு நன்றி: தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்........

pradeepkt
18-01-2007, 05:55 AM
உடல் முழுவதும் துளைத்த புண்கள்... வலிதாங்க முடியாது அலறும் குழல். ஆயினும் புண்கள் வழியே காற்று வருட அது எழுப்பும் ஆசுவாசக் குரலே குழலிசை என்று கொள்ளலாமா???

எப்படியாயினும் வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துகள்.

பென்ஸ்
18-01-2007, 06:52 AM
புதிதாய் ஒருவனைப் பார்த்தால்
'டேய், கோமாளியைப் பாருங்கள்!'
எனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்!
'அவை குரைக்கின்றன!' - என்கிறோம்
அதை புரியாத நாம் !

நண்பா....
விக்கி (ப்ரியன்) நடுநிசி நாய்கள் என்று ஒரு கவிதை எழுதி இருந்தார்....
அந்த கவிதையிலையே பதிலும் தந்து இருந்தாற்....

அதில் வழக்கம் போல் இளசுவும் பஞ்ச் டயலக் கொடுத்து இருந்தார்... சுட்டி கீழே வாசியுங்கள்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6033


'கா...கா..., கீ...கீ..., கூ...கூ...'
'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்?'
......................
'காற்று அடிக்கிறது' - என்கிறோம் நாம்!
.........................................
இது புரியாமல், "Nothing but wind"* என்கிறோம்!
............................
"சீ... முடி" என்று ஒதுக்கி வைக்கிறோம்!
................................
"வாகனம்" படும் இந்தப் பாடு, புரியலையா இந்த பாட்டிலே?


அராய்ந்து கொள்வது...
அர்த்தபடுத்து கொள்வது.....
எது பிரச்சினையை தீர்க்கும்..!!!???

பொய் கவிதைக்கு அழகுதான்...
மெய் பேரழகன்றோ..!!!!

துளையிட்ட வண்டே அறிந்திருக்கவில்லை
தான்டி செல்லும் காற்று எவ்வாறு அறியும்
இது இசையென்று...!!!
( புல்லாங்குழல் ------நன்றி: ப்ரியன் -) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6877)

காலில் இருக்கும் வரைதான் செருப்புக்கு அழகு
தலையில் இருக்கும் வரைதான் முடிக்கும் அழகு...
வீட்டில் இருப்பதும் வீதிக்கு வந்து விட்டால்
வேறு பெயர்தான்....



உடல் முழுவதும் துளைத்த புண்கள்... வலிதாங்க முடியாது அலறும் குழல். ஆயினும் புண்கள் வழியே காற்று வருட அது எழுப்பும் ஆசுவாசக் குரலே குழலிசை என்று கொள்ளலாமா???

எப்படியாயினும் வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துகள்.

இதற்க்கும் ப்ரியனின் ஒரு கவிதையை நான் சுட்டலாமா பிரதீப்...
இசையாக (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6877)------நன்றி: ப்ரியன் -)

lenram80
19-01-2007, 12:40 AM
கவிதை ரசித்தவர்களே! என் நன்றியை புசித்தவர்களே!
நான் இந்த கவிதையை சரியாக முடிக்கவில்லை என்று எண்ணியதால், கடைசி ஸ்டன்சாவை சேர்த்துள்ளேன்.

அறிஞர்
19-01-2007, 04:22 PM
மானுடனை சாடி ஒரு வித்தியாசமான சிந்தனை.....

அருமையான கவிதை அன்பரே...

பெரிய மரங்களை,அரிய பறவைகளை, சிறிய விலங்குகளை,கரிய வாகனங்களை
புரியவில்லை என்றால் கூட பரவாயில்லை!
மனிதனையே மனிதனுக்குப் புரியவில்லையே!
சண்டை சச்சரவுகளுடன் போகிறது எங்கடா இந்த சமுதாயம்?
சமாதானம் மலருமா? சொல்லுடா வெங்காயம்!!!

கடைசி வரிகளில் வீரியம் அதிகமாக தெரிகிறதோ......

இன்னும் எழுதுங்கள்...

மதுரகன்
19-01-2007, 04:30 PM
தற்போதுதாம் வாசித்தேன் லெனின் அருமையாய் எழுதியுள்ளீர்கள்.....


'கா...கா..., கீ...கீ..., கூ...கூ...'
'அடுத்த எழுத்து என்னவென்று கூறுங்கள்?'
எனக் காலங்காலமாய் கேட்கின்றன
காக்காக்களும், கிளிகளும், குயில்களும்!
வெட்கம்!
தமிழனுக்குக் கூட அதன் தகைப்புப் புரியவில்லை

நகைச்சுவையுடன் கூடிய ஒரு சாடல்
இடையிடையே சில நெருடல்கள்...

அற்புதம் வாழ்த்துக்கள்
முயன்றுபாருங்கள் முன்னேறுங்கள்

இளசு
20-01-2007, 10:20 PM
பாராட்டுகள் லெனின்..

ஊடாடும் நகைச்சுவை

ஜாலியன் வாலாபாக் - சலூன்
புகை பிடிக்கும் மாடு..

வளமான கற்பனை..

சகமனிதர், சக உயிர்கள்..
புரிந்து மதித்து நடக்காமல்
மிதித்து ஓடும் பரபர மனிதர் முகத்தில்
மிதித்து உமிழ்கிறது இக்கவிதை...

------------------------

ஆதர்சக்கவி ஆதவா, இனிய பென்ஸ் விமர்சனங்கள்..

முன்னவரின் ' முடி'ச்சொல்லலங்காரம்..
அடுத்தவரின் மெய்யே பேரழகென்ற சிலாகிப்பு..

ஏனோ என் நெஞ்சில் இனிய சாரல்
இவற்றை வாசிக்கும்போது..

-----------------------------------

இனிய பென்ஸ்

அறிவியல் கட்டுரைகளுக்கு ரெஃபரன்ஸ் கொடுப்பதுபோல்
பொருத்தமான முன்பதிவுகளை நீங்கள் தொடுக்கும் அழகுக்கு
நான் பரம ரசிகன்...

leomohan
21-01-2007, 05:13 AM
புதிதாய் ஒருவனைப் பார்த்தால்
'டேய், கோமாளியைப் பாருங்கள்!'
எனச் சொல்லிச் சிரிக்கின்றன நாய்கள்!
'அவை குரைக்கின்றன!' - என்கிறோம்
அதை புரியாத நாம் !



நிதர்சனமான உண்மை. அருமையான observation. வித்தியாசமான presentation.