PDA

View Full Version : மே 1..



rambal
30-04-2003, 05:04 PM
மே 1..

முதலாளிகளுக்கு..
அடிமைகளுக்கு
அளிக்கப்பட்ட ஓய்வுதினம்..

தொழிலாளிக்கு..
அடிமைகள் என்பதை
நினைவுபடுத்தும் தினம்..

எந்திரங்களுக்கு..
அப்பாடா..
இன்று ஒரு நாள் ஓய்வு..

மந்திரிகளுக்கு..
உழைப்பாளர் சிலைக்கு
ஒரு மாலை செலவு..

கம்யூனிஸ்ட்களுக்கு..
மைக்பிடித்து
பேச ஒரு வாய்ப்பு..

சராசரிகளுக்கு..
கூடுதலாய்
ஒரு அரசு விடுமுறை...

சேட்டிலைட்களுக்கு..
சிறப்புக்கொண்டாட்டமும்..
இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாகவும்..

வேறென்ன இருக்கிறது
பெரிதாய்
இந்த மே ஒன்றில்...

பாரதி
30-04-2003, 05:36 PM
அன்பு ராம்பால்...

உங்கள் கவிதைக் கருவில் இருந்து மாறுபடுகிறேன்.

ஒரு வேளை உங்களுக்கு ஏமாற்றத்திலும், வெறுப்பிலும் வந்த கவிதையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கவிதையாய் பார்க்க மகிழ்ச்சி.
கருத்தைப் பார்க்க கஷ்டம்.

பாரதி

lavanya
30-04-2003, 11:50 PM
அப்படி இல்லை பாரதி அவர்களே....
உழைப்பாளர் தினத்தைப் பற்றி ராம்பால் ஒரு கோணத்தில் அலசியிருக்கிறார்
அவ்வளவே.... நல்லது மட்டுமே கவிதையில் சொல்ல வேண்டும் என்பதில்லை....
ராம்பாலின் பார்வையில் இந்த தினத்தை அலசியுள்ளார் ..... பாராட்டுவோம்
உண்மை சில நேரங்களில் சுடும்....

Mano.G.
01-05-2003, 01:52 AM
பாராட்டுகள் நண்பரே
மே தினத்தை ஒரு விடுமுறை நாளாக
கருதி நீங்கள் தெரிவித்த கருத்துக்கள்
அருமை.

மனோ.ஜி

gans5001
01-05-2003, 02:31 AM
வேறென்ன இருக்கிறது
பெரிதாய்
இந்த மே ஒன்றில்...


இது கோபத்தில் வந்த சர்லியசக் கவிதை. மே ஒன்று மட்டுமல்ல.. பல விஷேஷ தினங்கள் கூட தொலைக்காட்சிக்கு முன்னால் ஒருநாளாய்தான் தொலைந்து போய்விடுகின்றன என்ற ஆதங்கமே கவிதை காட்டும் மறைபொருள்.

madhuraikumaran
01-05-2003, 03:37 AM
எதிர்மறையாய்ச் சொல்லி உங்கள் மனவலியை அழகாய் வெளிப்படுத்தி விட்டீர்கள் !

poo
01-05-2003, 08:12 AM
நாணயத்தின் இருபக்கமும்...

எளிதாய் தப்பிவிட்டார் கவிஞர்..

Narathar
02-05-2003, 05:36 AM
மாறுபட்ட கவிதை
மாறுபட்ட கருத்துக்கள்
.................................................!!