PDA

View Full Version : புது ஆத்திசுடிமனோஜ்
17-01-2007, 04:35 PM
புது ஆத்திசுடி

அ அன்பு
ஆ ஆவல்
இ இரக்கம்
ஈ ஈகை
உ உருக்கம்
ஊ ஊக்கம்
எ எல்லாம்
ஏ ஏணி படியாக வைத்து
ஐ ஐய்யமின்றி
ஒ ஒருமனதுடன்
ஓ ஓய்வேடு உழைத்தால்
ஓள ஓளஷதமாய் வெற்றி கிடைக்கும்

ஓ ஓயாமல் என்று வைத்தேன் ஓய்வுஇருந்தால் தான் நல்லது இல்லையா நன்பர்களே
எப்படி புது ஆத்திசுடி ?

leomohan
17-01-2007, 05:21 PM
நல்ல முயற்சி. தொடருங்கள்.

மனோஜ்
17-01-2007, 05:40 PM
நன்றி Leomohan ஆவாகளே

இளசு
17-01-2007, 08:12 PM
ஆத்திச்சூடியில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வரி - கட்டளையாய்..
இங்கே பன்னிரண்டு எழுத்துகளையும் சுருட்டி ஒரு வரிக்குள்..


புதிய முயற்சிக்கு பாராட்டுகள் மனோஜ்..

pradeepkt
18-01-2007, 05:45 AM
நல்ல முயற்சி மனோஜ்.
தொடர்ந்து அரங்கேற்றுங்கள் உங்கள் பதிவுகளை!!!

மனோஜ்
18-01-2007, 06:42 AM
இளசு அவர்களுக்கும் பிரதிப் அவர்களுக்கும் நன்றி

பரஞ்சோதி
18-01-2007, 06:57 AM
எளிமையாக சொல்லியிருக்கீங்க, இதை என் 2 வயது மகளுக்கு சொல்லி கொடுக்க ஏதுவாக இருக்கிறது. மிக்க நன்றி.

ஆதவா
18-01-2007, 07:01 AM
அருமை அருமை..........

ஏதோ என்னால் முடிந்தது......

அரை குறை பெண்களிடம்
ஆதிக்கம் செலுத்தவா?
இயல்பானவர்களிடம்
ஈயென இளிக்கவா?
உடை வாளெடுத்து
ஊரை விரட்டவா?
எதுகை கலந்து
ஏளனம் செய்யவா?
ஐந்து பெண்களைப் பார்க்கவா? அல்லது
ஒழுக்கத்தை நிதம்
ஓம்பும் உன்னை மட்டும் பார்க்கவா?
அவ்விதமே பார்த்தால்
அக்கணம் உயிர் விடுவதா?

எதைச் செய்ய நான் இதில்?

மனோஜ்
18-01-2007, 07:32 AM
பரம்ஸ் அவர்களே நன்றி எழதிய ஆசிரியரை செல்ல மறக்காதிர்கள்
ஆதாவா அவர்களே நீங்கள் கூறிய கருத்தில்
ஒரு நல்ல மனிதனுக்கு ஓத்து வராது என்று நினைக்கிறோன்
மற்றபடி உங்கள் தீர்மானம் ...

மன்மதன்
18-01-2007, 07:39 AM
புதிய ஆத்திசூடி அருமை மனோஜ். தொடர்ந்து நிறைய எழுதுங்க.

மனோஜ்
18-01-2007, 07:53 AM
மன் மதன் அவர்களே வாழ்த்துக்கு நன்றி

1+1=2
அன்பு + ஆத்துமா =மனிதன்
1+2=3
மனிதன் + இறைவன் =ஆத்மிகம் அல்லது உலகம்

ஆதவா
18-01-2007, 07:56 AM
பரம்ஸ் அவர்களே நன்றி எழதிய ஆசிரியரை செல்ல மறக்காதிர்கள்
ஆதாவா அவர்களே நீங்கள் கூறிய கருத்தில்
ஒரு நல்ல மனிதனுக்கு ஓத்து வராது என்று நினைக்கிறோன்
மற்றபடி உங்கள் தீர்மானம் ...

இருக்கலாம்.... அதனால் தான் கடைசி வரியில் எதைச் செய்ய என்று எழுதிவிட்டேன்...........
ஏதோ அச்சமயம் அகரம் முதல் ஔகரம்வரை எழுத முற்பட்டு சீக்கிரமாக எழுதியது.............

மனோஜ்
18-01-2007, 08:04 AM
அவசர காரனுக்கு புத்திமட்டு என்ற பழமொழி உன்மை தானனே ஆதவா அவர்களே உங்களை அல்ல

pradeepkt
19-01-2007, 06:23 AM
அருமை அருமை..........

ஏதோ என்னால் முடிந்தது......

அரை குறை பெண்களிடம்
ஆதிக்கம் செலுத்தவா?
இயல்பானவர்களிடம்
ஈயென இளிக்கவா?
உடை வாளெடுத்து
ஊரை விரட்டவா?
எதுகை கலந்து
ஏளனம் செய்யவா?
ஐந்து பெண்களைப் பார்க்கவா? அல்லது
ஒழுக்கத்தை நிதம்
ஓம்பும் உன்னை மட்டும் பார்க்கவா?
அவ்விதமே பார்த்தால்
அக்கணம் உயிர் விடுவதா?

எதைச் செய்ய நான் இதில்?
ம்ம்ம்ம்... சூப்பர்!!!

ஆதவா
19-01-2007, 06:44 AM
நன்றிங்க பிரதீப்பு!!

மனோஜ்
19-01-2007, 12:23 PM
கவிதை கவிதை தான் ஆதவா அவருக்கு எனது வாழ்தும் உன்டு
என்ன பிரதிப் சரிதானே

ஷீ-நிசி
19-01-2007, 02:42 PM
அவசர காரனுக்கு புத்திமட்டு என்ற பழமொழி உன்மை தானனே ஆதவா அவர்களே உங்களை அல்ல

இது தான் வஞ்சப்புகழ்ச்சி அணியா நண்பரே

மனோஜ்
19-01-2007, 04:16 PM
ஐய்ஐய்யே அப்படி இல்ல
உன்மையில் வாழ்த்தினேன்

மனோஜ்
21-01-2007, 07:00 AM
க கல்வியில் சிறந்திட


கா காலங்கள் மாறிட


கி கிருஸ்து இயேசுவுக்குள்


கீ கீழ்படிந்து


கு குறைவுகள் நீக்கி


கூ கூற்றுகள் மாற்றி


கெ கெட்டுபொகும் உலகில்


கே கேடுகள் நீக்கி உன்னை


கை கைகெடுத்து


கொ கொடுமுடியாய்


கோ கோட்டையாய்


கௌ கௌசகராய் இருந்து வழிநடத்த இயேசு உன்னை அழைக்கிறார்


கல்வியில் சிறந்திட உனது கெட்ட காலங்கள் மாறிட நீ கிருஸ்து இயேசுவுக்குள்
கீழ்படிந்து உன் குறைவுகள் அனைத்தையூம் இயேசுவிடம் அறிக்கை செய்தால்
உன் மேல் சமூகம் வைத்திருக்கும் தவறான கூற்றுகள் அனைத்தையும் மாற்றி
இந்த கெட்டுபொகும் உலகில் உனக்கு வரும் கேடுகள் அனைத்தையூம் நீக்கி
ஊன்னை கைகெடுத்து தூக்கி உன்னை கொடுமுடியாய் அதாவது உயவானவனாய் வைத்து உனக்கு அவர் கோட்டையாகவும் கௌசகராய் அதாவது
ஆசிரியராய் இருந்து உன்னை வழிநடத்த இயேசு உன்னை அழைக்கிறார் அவருக்கு செவிகொடுக்க நீ தாயாரா ?

விகடன்
11-02-2007, 04:34 PM
பறவாயில்லையே!

நாகரீக ஔவைப்பாட்டன் இருக்கிறாரே!

ஓவியா
28-04-2007, 10:28 PM
புது ஆத்திசுடி

அ அன்பு
ஆ ஆவல்
இ இரக்கம்
ஈ ஈகை
உ உருக்கம்
ஊ ஊக்கம்
எ எல்லாம்
ஏ ஏணி படியாக வைத்து
ஐ ஐய்யமின்றி
ஒ ஒருமனதுடன்
ஓ ஓய்வேடு உழைத்தால்
ஓள ஓளஷதமாய் வெற்றி கிடைக்கும்

ஓ ஓயாமல் என்று வைத்தேன் ஓய்வு இருந்தால் தான் நல்லது இல்லையா நன்பர்களே, எப்படி புது ஆத்திசுடி ?

பின்னிட்டீங்க மனோஜ்

அசத்தலாக இருக்கு. நீங்களும் எழுத்துலகில் ஒருனாள் சாதனையாலர்தான்.

வாழ்த்துக்கள்.

சக்தி
30-04-2007, 06:09 PM
அருமை மிக நன்று. கற்பனை என்றும் கைக்கு அடங்காதவை. அவற்றை கட்டுப்படுத்த நினைக்கக்கூடாது

அமரன்
18-05-2007, 04:34 PM
புதிய ஆத்திசூடி அருமை . சிறுகக்கூறி சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

leomohan
20-05-2007, 07:22 AM
க கல்வியில் சிறந்திட


கா காலங்கள் மாறிட


கி கிருஸ்து இயேசுவுக்குள்


கீ கீழ்படிந்து


கு குறைவுகள் நீக்கி


கூ கூற்றுகள் மாற்றி


கெ கெட்டுபொகும் உலகில்


கே கேடுகள் நீக்கி உன்னை


கை கைகெடுத்து


கொ கொடுமுடியாய்


கோ கோட்டையாய்


கௌ கௌசகராய் இருந்து வழிநடத்த இயேசு உன்னை அழைக்கிறார்


?

சீரிய எண்ணங்கள். நல்ல முயற்சி. வாழ்த்துகள் மனோஜ்.

leomohan
20-05-2007, 07:24 AM
இது போன்று நானும் முன்பொரு முறை முயற்சி செய்தேன்.

அது இந்த திரியில் உள்ளது

நவீன ஆத்திச் சூடி - மோகன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7008) ( 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7008) 2 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7008&page=2))

எனக்கு திருக்குறளை இன்றைய மக்கள் புரிந்து கொள்ளமாறு எளிமையான தமிழில் எழுத ஆசை. ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்தால் செய்யலாம்.

அறத்துப்பால் எனக்கு வசதி. மற்ற இரண்டிலும் அவ்வளவு ஆழமான பரிட்சயம் இல்லை.

ஷீ-நிசி
20-05-2007, 09:41 AM
க, கா, கி, கீ ல... கவிதை அருமை நண்பரே! தொடருங்கள்!

சூரியன்
20-05-2007, 09:50 AM
ஆத்திச்சூடி மிக அருமை தொடரட்டும் உம் நல் முயற்சி!

மனோஜ்
20-05-2007, 09:52 AM
மிக்க நன்றி
ஓவியா
ரோஜா
அமரன்
மோகன் சார்
ஷீ
மிக்கி

lolluvathiyar
20-05-2007, 10:11 AM
அ - அல்பமாக வேண்டாம்
ஆ - ஆனவம் வேண்டாம்
இ - இனவெறி வேண்டாம்
ஈ - ஈனப்புத்தி வேண்டாம்
உ - உபத்திரவாதம் வேண்டாம்
ஊ - ஊடல் வேண்டாம்
எ - எரிச்சல் வேண்டாம்
ஏ- ஏக்கம் வேண்டாம்
ஐ - ஐயம் வேண்டாம்

ஒ - ?
ஓ - ?
ஔ -?
இதை நிரப்ப உதவுங்கள் நன்பர்களே

சூரியன்
20-05-2007, 10:42 AM
யோசித்து நிரப்பரேன் வாத்தியாரே அது வரைக்கும் போய் வேலை இருந்தா
பாருங்க

leomohan
20-05-2007, 11:04 AM
அ - அல்பமாக வேண்டாம்
ஆ - ஆனவம் வேண்டாம்
இ - இனவெறி வேண்டாம்
ஈ - ஈனப்புத்தி வேண்டாம்
உ - உபத்திரவாதம் வேண்டாம்
ஊ - ஊடல் வேண்டாம்
எ - எரிச்சல் வேண்டாம்
ஏ- ஏக்கம் வேண்டாம்
ஐ - ஐயம் வேண்டாம்

ஒ - ?
ஓ - ?
ஔ -?
இதை நிரப்ப உதவுங்கள் நன்பர்களே

ஒ - ஒரே மதம் - மனிதத்துவம்
ஓ - ஓர் ரத்தம் மனிதர் எவராயினும்
ஔ - ஔவை சொல் படி நட