PDA

View Full Version : தோல்விகள்!



farhan mohamed
17-01-2007, 07:58 AM
:mad: வெண்மதியும்
மாதத்தில்
அரைப் பகுதி
மறைவது - உன்னுடன்
போட்டியிட
முடியாதென்றோ??#


பூக்கள் உன்
மென்மையாலும் - பூமி
உன்
பொறுமையாலும் - இசை
உன்
இனிய மொழியாலும் - நதிகள்
உன்
தூய்மையாலும் மட்டுமா
தேவதைகள்
உன் அழகாலும் தோற்று விடுவர்
ஏன் அந்த வெண்மதியும் - உன்
அமைதியான பிரகாசத்தால்
தோற்றுவிடுமே....

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
17-01-2007, 01:21 PM
இது (காதல்) தோல்வி போலத் தெரிகிறது. காதலியைக் கண்டு அனைத்தும் தோல்வியுருமாறு செய்திருக்கிறீர்கள்........
வரி அமைப்புகள் சற்று சீர் படுத்தினால் போதும்.......... அருமையான கவிதை இது........ வாழ்த்துக்கள்.

farhan mohamed
17-01-2007, 01:49 PM
ஆதவா உங்கள் ஒவ்வொரு
விமர்சனத்தையும் படிப்பினையாகக்
கொண்டு திருத்த முயல்கிறேன்.

எப்பொழுதும் எனக்கு
இவ்வாறான விமர்சனங்களை
வழங்கினால் எம்மாலும்
சில படைப்புக்களை
வழங்க முடியும்
கட்டாயம் அனைத்து
நண்பர்களும் என் ஆக்கங்களுக்கு
விமர்சனம் எழுதவும்
எழுதிய அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன் பர்ஹான்

அறிஞர்
17-01-2007, 04:04 PM
ஆதவா உங்கள் ஒவ்வொரு
விமர்சனத்தையும் படிப்பினையாகக்
கொண்டு திருத்த முயல்கிறேன்.

எப்பொழுதும் எனக்கு
இவ்வாறான விமர்சனங்களை
வழங்கினால் எம்மாலும்
சில படைப்புக்களை
வழங்க முடியும்
கட்டாயம் அனைத்து
நண்பர்களும் என் ஆக்கங்களுக்கு
விமர்சனம் எழுதவும்
எழுதிய அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன் பர்ஹான்
ஆதவன் முன்னவர், சிறந்த படைப்பாளி...

இன்னும் பலர் கருத்துக்கூறுவோர். காத்திருங்கள்.

சிலர் கருத்துக்கள் கூற முன் வாராதது... தவறாக கருட்த்து கூறிவிடுவோமோ என்ற எண்ணத்தால்.....

தங்களின் பதிவுகள் தொடரட்டும்.

அறிஞர்
17-01-2007, 04:05 PM
நிலவு, பூக்கள், பூமி, இசை, நதி... என இயற்கையை தோற்கடிக்கும் காதலி உங்கள் வசமிருந்தால் பெரிய வெற்றி தான்......

மதுரகன்
17-01-2007, 04:09 PM
அற்புதம் பர்கான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றியை சுவைத்து விட்டீர்கள்..

வரிகளின் கையாளல் அற்புதம்...

வெண்மதியும்
மாதத்தில்
அரைப் பகுதி
மறைவது - உன்னுடன்
போட்டியிட
முடியாதென்றோ??#

புதுக்கவிஞனுக்குரிய தகுதிகள் அனைத்தும் உம்மிடம் உள...
வாழ்த்துக்கள் முன்னேறுங்கள்..

ஷீ-நிசி
17-01-2007, 04:17 PM
கவிதை அருமை நண்பரே