PDA

View Full Version : கனவே கலையாதே!!



farhan mohamed
17-01-2007, 07:29 AM
;) காணவில்லை
உன்னை
நேரில் தான் - ஏன்
கனவில் கூட
தாமதிக்காமல்
செல்கிறாய்



நானும் நீயும்
நிம்மதியாய்
உறவாடலாம் - அன்பே
வந்து விடு
நீ கனவில்..
கனவைக் கேட்கிறேன்
கனவே கலையாதே

யாரும் இல்லா
புது இடம்
சென்றிடலாம்
வந்து விடு
கனவில் ..

கனவைக் கேட்கிறேன்
கனவே கலையாதே!!

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
17-01-2007, 01:24 PM
பர்ஹான்.... இது என்னோட கருத்து........ கவிதையை கொஞ்சம் வளர்த்தியிருக்கலாமெனத் தோன்றுகிறது. கொஞ்சம் சீக்கிரமாகவே கவிதையை முடித்ததுபோல இருக்கிறது...........
எனினும் உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த படைப்பாளி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறான்.......... தொடருங்கள்....

மதுரகன்
17-01-2007, 04:00 PM
கொஞ்சம் கொஞசமாக வார்த்தைகளை மெருகேற்றிக்காண்பிக்கிறீர்கள்...

ஏன்
கனவில் கூட
தாமதிக்காமல்
செல்கிறாய்

இந்த வார்த்தைகள் அற்புதம்...
தொடருங்கள் வெற்றி நிச்சயம்...

அறிஞர்
17-01-2007, 04:44 PM
நேரில் பெறாத சந்தோசத்தை கனவில் பெற்றிடலாம்.

அந்த சந்தோசத்தை அதிகம் பெற்றுவிடுவீர் என கனவுக்கு பொறாமையோ என்னவோ...

அருமை இன்னும் தொடருங்கள்...
---------
கனவில் காதலி.. என புதுத்தலைப்பில் தொடர்ந்து கொடுங்கள்

இளசு
17-01-2007, 08:31 PM
ஃப்ர்ஹான்,

நிதர்சனக்காதலர்கள்
இரவை விடியாதே என்பதும்
சேவலைக் கூவாதே என்பதும்..

கற்பனைக்காதலர்கள்
கனவே கலையாதே என்பதும்
கனவுக்கு வண்ணமுண்டு என்பதும்

நித்திய ஆசைகள்..


பாராட்டுகள்..



...........
உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த படைப்பாளி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறான்.......... தொடருங்கள்....

முன்பு ராம்பால், நண்பன், கண்ஸ் போன்றவர்கள்
விமர்சனம் தருவார்களா என ஏங்கிய காலம்..

இன்று இனிய பென்ஸ், ஆதவா, ஷீ-நிசி போன்றவர்களின்'
ஆழமான, விரிவான விமர்சனங்களைக் காணும்போது
மீண்டும் கவிதை எழுத எனக்கும் ஆசை பிறக்கிறது..

ஆதவா-வின் இப்பணியை வெகுவாய் சிலாகிக்கிறேன்..