PDA

View Full Version : கடி ஜோக்ஸ்

farhan mohamed
17-01-2007, 07:06 AM
:)

அப்பா:என்டா கம்பியூட்டர் வெடித்துவிட்டது?
மகன் : இல்லை அப்பா ஒரு சின்ன
வெடிகுண்டு ஒன்றை டவுன்லோட் செய்தேன் அதுதான்!!??:confused:

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
17-01-2007, 02:25 PM
பர்ஹான் எனக்கு புரியவில்லை........ போம்பு என்றால் என்ன?

Narathar
17-01-2007, 02:30 PM
பர்ஹான் எனக்கு புரியவில்லை........ போம்பு என்றால் என்ன?

போம்பை என்றால்................ சிங்களத்தில் வெடிகுண்டு என்று அர்த்தம்!!!!
BOMB: என்பதன் மொழியாக்கம் என்று நினைக்கின்றேன்
அது சரி பர்கான் நீங்கள் எந்த ஊர்?

farhan mohamed
17-01-2007, 03:08 PM
ஆதவா!
தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
வெடிகுண்டை தான் அப்படி சொல்லிவிட்டேன்.

என்றும் அன்புடன் பர்ஹான்

farhan mohamed
17-01-2007, 03:12 PM
நான் குருநாகல் மாவட்டத்தில்
கினியமை என்ற ஊர்.
நண்பரே நீங்கள் எந்த ஊர்?

ஆதவாவுக்கு பதிலளித்தமைக்கு நன்றி

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
17-01-2007, 03:26 PM
அட புரிந்துவிட்டது.... வர வர மன்றத்தில் கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டது.... நாரதரே கையில் இருக்கும் வாத்தியத்தில் ஒரு பாட்டு பாடினீர்களேயானால் யாவும் பறக்கும் என்பது எனது எண்ணம்..

farhan mohamed
17-01-2007, 03:38 PM
சொன்னது புரியலயே ஆதவா

ஆதவா
17-01-2007, 05:59 PM
அட புரியலீங்கலா!????!!1 உங்க கடி கொசுக்கடி மாதிரி இருக்கேன்னு சொன்னேங்க!!

pradeepkt
18-01-2007, 05:38 AM
நல்ல கடி... நல்ல வேளை போம்பைத் தரவிறக்கம் செய்தார். பாம்பைத் தரவிறக்கம் செய்திருந்தால் என்னாவது?

மன்மதன்
18-01-2007, 08:11 AM
செம கடி....தமிழிலேயே 'வெடிகுண்டு' என்று சொல்லியிருக்கலாம்.. நானும் பாம்பு என்றுதான் நினைத்தேன்..:D

farhan mohamed
20-01-2007, 12:46 PM
ஒருவன்: ஏன் ஜலதோசம் வருகிறது?
மற்றவன்:மூக்குக்குமேல இரண்டு ஐஸ் இருக்குதில்ல அதுதான்..
ஒருவன்:??...:confused:

மயூ
20-01-2007, 12:55 PM
நான் குருநாகல் மாவட்டத்தில்
கினியமை என்ற ஊர்.
நண்பரே நீங்கள் எந்த ஊர்?

ஆதவாவுக்கு பதிலளித்தமைக்கு நன்றி

என்றும் அன்புடன் பர்ஹான்
பர்ஹான் எங்கட ஊரில் இருந்து வந்திருக்கிறீங்க! சின்ன வயசில் இருந்தே குருநாகலா?

மயூ
20-01-2007, 12:57 PM
செம கடி....தமிழிலேயே 'வெடிகுண்டு' என்று சொல்லியிருக்கலாம்.. நானும் பாம்பு என்றுதான் நினைத்தேன்..:D
இலங்கை முஸ்லீம்கள் தம் பேச்சு வழக்கில் அவ்வாறுதான் பேசுவார்கள் இல்லையா பர்ஹான் :D. யாரையும் பார்த்துப் பயப்படாதீங்க யாம் இருக்கின்றோம்

farhan mohamed
20-01-2007, 01:45 PM
நண்பரே நீங்களும் குருநாகலா சின்னவயதிலிருந்து குருநாகலில் கினியமை எனும் ஊர்.நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு

அறிஞர்
20-01-2007, 03:52 PM
ஒருவன்: ஏன் ஜலதோசம் வருகிறது?
மற்றவன்:மூக்குக்குமேல இரண்டு ஐஸ் இருக்குதில்ல அதுதான்..
ஒருவன்:??...:confused:
ஐய்ஸ் (ice) இருந்தா... ஜல தோசம் பிடிக்காம என்ன பண்ணும்.....

கடிகள் தொடரட்டும்
--------
இலங்கை சொந்தங்களின் அன்பான பேச்சுக்கள்.... அருமையாக இருக்கிறது.. சொந்த ஊர்காரர்கள்.. நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள்

farhan mohamed
21-01-2007, 07:06 AM
பாலைவனத்தில் பேப்பர் கிழிச்சா பிரச்சினையில்லை. ஏன்டா ஒட்ட"கம்" இருக்குதானே..

மயூ
21-01-2007, 11:59 AM
எலிக்கு வால் ஏன் இருக்குதெண்டு யாராவது சொல்லுங்க பார்ப்பம்!

farhan mohamed
21-01-2007, 12:09 PM
சொன்னால்தான் தெரியும்ப்பா சொல்லுங்களேன்.

ஷீ-நிசி
21-01-2007, 12:12 PM
கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?

ஷீ-நிசி
21-01-2007, 12:13 PM
இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

ஷீ-நிசி
21-01-2007, 12:14 PM
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

ஷீ-நிசி
21-01-2007, 12:14 PM
சுவரொட்டி - தான்.

மயூ
21-01-2007, 12:22 PM
எலிக்கு வால் ஏன் இருக்குதெண்டு யாராவது சொல்லுங்க பார்ப்பம்!
செத்தா தூக்கிப் போடத்தான்:D :D :D

farhan mohamed
21-01-2007, 12:27 PM
சில மாணவர்கள்:

முதலாமவன்: எங்கள் அப்பா பெரிய வீரர் எப்படின்னா வீசிய கல்லை போய் விழும்முன்னே ஓடிப்போய் பிடித்திடுவாறு
இரண்டாமவன்:ப்பூ இதென்ன பெரியவிசயம் எங்கள் அப்பா அம்பை எய்து விட்டு இலக்கை அடையுமுன் சென்று பிடித்துவிடுவார்.(என்று கூறினான்)
அதற்கு
மூன்றாமவன்:இதெல்லாம் என்ன பெரிய விசயம் எங்கள் அப்பா ஐந்து மணிக்கு வேலைமுடிந்து மூன்று மணிக்கே வீடுவந்துவிடுவார்.

மயூ
21-01-2007, 12:40 PM

என்ன ஒரு கடமை கண்ணியம் கட்டுப்பாடு:D :D

farhan mohamed
25-01-2007, 05:26 AM
நான் சுவைத்தவை சில:

அவன்: நாம ஓடிப்போயிடலாமா?
அவள்: செருப்பு பிஞ்சிடும்.
அவன்: பரவாயில்ல போகும் போது தச்சுக்கலாம்.
####
டாக்டர்,என் கணவர் தூக்கத்துல என்ன திட்டுறாரு.
பின்ன முழிச்சுகிட்டு இருக்கிறப்போ திட்ட முடியாதே!!
####
நான் பாடினா கேட்டுட்டே இருக்கலாம்.
ஆமா எப்ப ஓடலாம்னு கேட்டுட்டேதான் இருப்பாங்க..

praveen
20-02-2007, 01:09 PM
நான் சுவைத்தவை சில:

அவன்: நாம ஓடிப்போயிடலாமா?
அவள்: செருப்பு பிஞ்சிடும்.
அவன்: பரவாயில்ல போகும் போது தச்சுக்கலாம்.

நல்ல சிரிப்பு.
அவன் அவளை கோயிலில் வைத்து இன்னும் ஒருமுறை கேட்டுப்பார்க்கலாம்.

அறிஞர்
20-02-2007, 01:28 PM
நான் சுவைத்தவை சில:

அவன்: நாம ஓடிப்போயிடலாமா?
அவள்: செருப்பு பிஞ்சிடும்.
அவன்: பரவாயில்ல போகும் போது தச்சுக்கலாம்.
####

நான் பாடினா கேட்டுட்டே இருக்கலாம்.
ஆமா எப்ப ஓடலாம்னு கேட்டுட்டேதான் இருப்பாங்க..
என்ன பர்ஹான்.. அனுபவம் பேசுதா.....

இன்னும் அனுபவங்கள் வரட்டும்...

அறிஞர்
20-02-2007, 01:28 PM
மூன்றாமவன்:இதெல்லாம் என்ன பெரிய விசயம் எங்கள் அப்பா ஐந்து மணிக்கு வேலைமுடிந்து மூன்று மணிக்கே வீடுவந்துவிடுவார்.
ரொம்பத் தெளிவு..... :rolleyes: :rolleyes: :rolleyes:

அமரன்
20-02-2007, 01:31 PM
நல்ல கடிகள்தான். படித்ததும் அதிகமாக வடியத் தொடங்கிவிட்டது இரத்தம்.

மனோஜ்
20-02-2007, 01:41 PM
ஷ:D ஷ:D ஷ:D
இன்னும் சிரிச்சுகிட்டே:D :D :D தொடருங்கள்

தாமரை
04-07-2007, 03:45 PM
நல்ல கடி... நல்ல வேளை போம்பைத் தரவிறக்கம் செய்தார். பாம்பைத் தரவிறக்கம் செய்திருந்தால் என்னாவது?

தரவிறக்கம் செய்தால் (தரத்தைக் குறைத்தால்) வெடிகுண்டு புஷ்வாணம் ஆகிவிடும்.. அப்போ புஷ் எனச் சீறும்.. அப்போ "பாம்" இற்கும், பாம்பிற்கும் வித்தியாசம் குறைச்சல்தான்..

தரவிறக்கம் என்றால் தரம் குறைத்தல் என்ற அர்த்தம் வருகிறதே.. பிரதீப் நீருமா இப்படி உபயோகிக்கிறீர்???

ஓவியன்
04-07-2007, 03:52 PM
ஹீ!
செல்வண்ணா நீங்கள் பிரதீப் அண்ணாவை மேற்கோள் காட்டப் போக, நான் அண்ணர் மீண்டும் கெட்டி மேளம் கொட்டி மன்றத்திற்கு திரும்பி விட்டாரென நினைத்து விட்டேன்.

தாமரை
04-07-2007, 03:59 PM
ஹீ!
செல்வண்ணா நீங்கள் பிரதீப் அண்ணாவை மேற்கோள் காட்டப் போக, நான் அண்ணர் மீண்டும் கெட்டி மேளம் கொட்டி மன்றத்திற்கு திரும்பி விட்டாரென நினைத்து விட்டேன்.

இது பிரதீப் போர்வையில் பிற தீய்ப்புகளுக்கு!!!

விகடன்
31-07-2007, 10:23 AM
நான் சுவைத்தவை சில:

அவன்: நாம ஓடிப்போயிடலாமா?
அவள்: செருப்பு பிஞ்சிடும்.
அவன்: பரவாயில்ல போகும் போது தச்சுக்கலாம்.
####
டாக்டர்,என் கணவர் தூக்கத்துல என்ன திட்டுறாரு.
பின்ன முழிச்சுகிட்டு இருக்கிறப்போ திட்ட முடியாதே!!
####
நான் பாடினா கேட்டுட்டே இருக்கலாம்.
ஆமா எப்ப ஓடலாம்னு கேட்டுட்டேதான் இருப்பாங்க..

சுவை எப்படீங்க இருந்திச்சு.
ஓரளவிற்கு முயற்சித்து சொல்லுங்கள் அன்பரே.

ஹெருப்பு சுடும் என்றால் விளங்கிக்கொள்ள முடியாதுதான் அதன் சூட்டை அனுபவிக்கும்(சுவைக்கும்) வரை. இருந்தாலும் முயற்சித்து எழுதிவிடுங்கள்