PDA

View Full Version : சிகப்புக்கொடியும் மே ஒன்றும்..



rambal
30-04-2003, 05:03 PM
சிகப்புக்கொடியும் மே ஒன்றும்..

அட்டைகள்
அடிமைகளிடம் இருந்து உறிஞ்சிய
ரத்தத்தில் கட்டின
மாடமாளிகைகளும்..
கூட கோபுரங்களும்..

கட்டி முடித்துவிட்டு
கீழே போட்டன
அழகாய் அதுகளின்
கையெழுத்தை..

ரத்தத்தில்
உருவாயின
சில கொடிகளும்..
கொடிகளுக்குத்தலைவர்களும்...

இருப்பவன் தரமாட்டான்..
வயிறு பசித்தவன் விடமாட்டான்..
என்ற தாரக மந்திரத்தில்
ஆரம்பிக்கப்பட்டன
சோத்துக்கட்சிகளின்
சிகப்புக்கட்சி...

நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர் துறக்கவேண்டும் என்று
ஆசைப்பட்டார் சிகப்புக்கட்சிகளின்
தலைவர்..

மலத்தால் கட்டப்பட்ட
சிறையில் இருந்து
விடுதலை தர இன்னொரு
தலைவர் புறப்பட்டார்..

உலக அடிமைகளின்
விடுதலைக்கு என்று
ஒரு குரல்
பொலிவியாவில் இருந்து..

சிகப்பு பற்றி
பல கீதங்கள்
இசைத்து
உணர்ச்சி ஊட்டியது
சிலியில் இருந்து
ஒரு குயில்..

ஆங்காங்கு..
ஆயிரமாயிரம் தலைவர்களும்
லட்சக்கணக்கான
அடிமைகளும் ஒன்று சேர்ந்து
உருவாக்கின
சிகப்புகொடி..

இப்படி உருவான வரலாறு
ஏகாதிபத்தியங்களின்
கூட்டுச்சதியால்
உடைக்கப்பட்டு சுக்கு நூறாக..

அதில் எஞ்சி
தொக்கிக்கொண்டு நிற்பது
மே ஒன்று..

lavanya
30-04-2003, 11:53 PM
என்ன ராம்பால்ஜி... அ(க)னல் வீசுகிறது இன்று கவிதைகளில்?

gans5001
01-05-2003, 02:34 AM
ராம்.. உங்கள் ஆதங்கம் கனல் பறக்கும் வரிகளில் தெரிகிறது. உங்கள் மற்றொரு கவிதை சரியாக் புரியாமல் விமர்சித்த நண்பர் இதையும் பார்க்கக் கடவது

poo
01-05-2003, 08:10 AM
நெருப்புக் கவிஞரே.. பாராட்டுக்கள்!!

பாரதி
01-05-2003, 08:50 AM
அன்பு ராம்பால்...

உங்கள் தீக்கவிதை எல்லோரின் மனதையும் சுடுமானால் எனக்கும் மகிழ்ச்சியே.. அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்..

நண்பர் gans5001.. என்னைத்தான் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்தக் கவிதையிலும் நான் "கவிதையாய் பார்த்தால் மகிழ்ச்சி.. கருத்தைப்பார்த்தால் கஷ்டம்" என்றுதான் கூறியுள்ளேன்.
ஒரு நோக்கத்தைப் பார்ப்பதற்கும்..நோக்கத்தை வழிநடத்தி செல்வதாக கூறி எதிர்மறையாக நடக்கும் நபர்களைப் பார்ப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்தக் கருத்தில்தான் அது எளுதப் பட்டது.

அந்த வகையில் ராம்பாலின் இந்தக் கவிதை வெகு சிறப்பு.
பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.

என்னுடைய விமர்சனம் யாரையாவது தெரியாமல் காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக மன்னிப்பைக் கோருகிறேன்.

அன்புடன்,
பாரதி

karikaalan
01-05-2003, 08:54 AM
ராம்பால்ஜி!

மேதினக்கவிதை நல்லாவே இருக்குது. இன்னுமா இதையே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும்? ஒருவன் பொருளீட்டி மாடமாளிகைகள் கட்டும்போதுதான் அடுத்தவனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒருவன் தொழிற்சாலை கட்டி பொருள்கள் தயாரிக்க முயலும்போதுதான் அடுத்தவனுக்கு அங்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ஒருவரின்றி அடுத்தவனில்லை; இவனின்றி அவன் இல்லை; அவன் இன்றி இவன் இல்லை.

வாதாடத் துவங்கினால் பொழுது போதாது.

===கரிகாலன்

lavanya
01-05-2003, 09:37 AM
அன்பு ராம்பால்...

உங்கள் தீக்கவிதை எல்லோரின் மனதையும் சுடுமானால் எனக்கும் மகிழ்ச்சியே.. அருமையாய் சொல்லி இருக்கிறீர்கள்..

நண்பர் gans5001.. என்னைத்தான் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்தக் கவிதையிலும் நான் "கவிதையாய் பார்த்தால் மகிழ்ச்சி.. கருத்தைப்பார்த்தால் கஷ்டம்" என்றுதான் கூறியுள்ளேன்.
ஒரு நோக்கத்தைப் பார்ப்பதற்கும்..நோக்கத்தை வழிநடத்தி செல்வதாக கூறி எதிர்மறையாக நடக்கும் நபர்களைப் பார்ப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்தக் கருத்தில்தான் அது எளுதப் பட்டது.

அந்த வகையில் ராம்பாலின் இந்தக் கவிதை வெகு சிறப்பு.
பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.

என்னுடைய விமர்சனம் யாரையாவது தெரியாமல் காயப்படுத்தி இருக்குமேயானால் அதற்காக மன்னிப்பைக் கோருகிறேன்.

அன்புடன்,
பாரதி



மன்னிப்பு கேட்பதெல்லாம் அதிகம்... உங்கள் கருத்தை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் அவ்வளவே....

poo
01-05-2003, 09:57 AM
அண்ணன் கரிகாலன் கருத்து அருமை!..

rambal
01-05-2003, 03:02 PM
பாரதி அவர்களே.. மன்னிப்பெல்லாம் எதற்கு? கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இங்கே.. உங்கள் பார்வையில் படுவதை தைரியமாக சொல்லலாம். பாரதி என்று பேர் வைத்துக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கோருவதெல்லாம் அழகாய் இல்லை.

பாரதி
01-05-2003, 05:12 PM
நண்பர்களின் மனதை எந்தக் காரணத்தினாலும்
புண்படுத்த விரும்பவில்லை.

மன்னிப்பு கோருவதில் மனம் பண்படும். இல்லையா?

"பாரதி என்று பேர் வைத்துக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கோருவதெல்லாம் அழகாய் இல்லை." - ராம்பால்

அப்போ எப்பிடி அழகாய் மன்னிப்பு கேட்பதாம்..? சொல்லிக் கொடுங்கள் ராம்பால்...(சும்மாங்க.... கிண்டல்)

அன்புடன்
பாரதி

aren
01-05-2003, 05:20 PM
அரபிக்கரையில் இருந்துகொண்டு இப்படி ஒரு அழகான ஒரு கவிதையா? ஒவ்வொரு உழைப்பாளியும் படிக்க வேண்டியது.

கரிகாலன் அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நமக்கு அவர்கள் வேண்டும், அவர்களுக்கு நாம் வேண்டும். ஆனால் நம்மைவிட அவர்கள்தான் அதிகம் பலன் பெறுகிறார்கள். இந்த இடைவெளியினால்தான் பிரச்சனையே.

Mano.G.
01-05-2003, 11:54 PM
மே தினத்தின் வரலாறு
அருமை நண்பரே அருமை
மேல் மட்ட தொழிலாளிகளுக்கும்
கீழ் மட்ட தொழிலாளிகள் படும், பட்ட அவலங்கள்
பறைசாற்ற வந்த பாடல்.

பாராட்டுக்கள்

மனோ.ஜி

Narathar
02-05-2003, 05:45 AM
அதில் எஞ்சி
தொக்கிக்கொண்டு நிற்பது
மே ஒன்று..

அந்த தொக்கி நிற்கும் வரியிலேயே
கவிதையின் உயிர் நாடி தொக்கிநிற்கிறது

"கருத்து மாறாக்கவிஞன் நீர் என மெச்சுகிறேன்"