PDA

View Full Version : கணினி ஒரு அறிமுகம் மற்றும் தகவல்கள்



மனோஜ்
17-01-2007, 06:57 AM
கம்பியூட்டர் பாகங்கள்

பவர் சப்ளே (smps)

பிரசசர்

மதர்போர்டு

ராம்

ஷார்டிஸ்க்

கிபோட்

மவுஸ்

சிடி பிளாபி டிரைவ்

ஆப்ரேட்டிங் சிஸ்டம்

சாப்டுவேர்

வைரஸ்

பிரின்டர்

ஸ்கேனர்

மானிட்டர்

ஸ்பிக்கர்
இன்னும் பலபாகங்கள் உள்ளது தற்பொழது இவைகளைபற்றி..

கம்பியூட்டருக்கு மிகமிக அவசியமான ஒன்று பவர் சப்ளே இது இல்லாவிட்டால் கம்பியூட்டர் இயங்கவே முடியாது தற்பொழது இதில் 400 வட்ஸ் வரை வற்துள்ளது

பிரசசர் இது கம்பியூட்டரின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும் முக்கிய பகுதி அனைத்தையும் இயக்குவது தற்பொழது பிரசசரை இன்டல் ஏஎம்டி ஆகிய நிருவனங்கள் வெளியிடுகிறது தற்பொழுது 3ஜுபி அதற்கு மேலும் உள்ளது

மதர்போர்டு அனைத்து தகவல் பரிமாற்றங்கள் செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தபடுகிறது 915 என்ற சிப் இப்பொழது உள்ளது

ராம் இது தேவைக்கு எற்ப மாறி இருக்கும் 128 512 தற்பெழுது இன்னும் அதிகமாக உள்ளது இது கம்பியூட்டரின் தற்காலிக நினைவகம்

கம்பியூட்டரில் மிகவும் முக்கிய பகுதி ஷார்டிஸ்க் இதில்தான் நாம் அனைவரும் தகவல்களை செமித்து வைக்கிறோம் இது தற்பொழது 120 160 ஜுபி வரை உள்ளது தற்பொழது இதற்கு மேலும் வந்து விட்டது

இவைகள் அடக்கியது காபனட் இதை சிபியூ என்கிறோம்

கிபோட் முலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யபடுகிறது தற்பொழது மல்டிமிடியாவுடன் உள்ளது

மவுஸ் என்பது கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்த படுகிறது தற்பொழது லேசர் மற்றும் பிளுடுத் உள்ளது

சிடி பிளாபி டிரைவ் இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தபடுகிறது தற்பொழது டீவிடி ரைட்டர் உள்ளது

ஆப்ரேட்டிங் சிஸ்டம் வின்டேஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP தற்பெழது வின்டேஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக் போன்றவைகளும் உள்ளது இதன் முலமாக தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும்

சாப்டுவேர் நாம் தேவைக்கு எற்ப உபயேகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை நமது தகவல்கலை மெருகூட்டகூடியது

வைரஸ் இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில வைரஸ் ஷார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவறு செய்து விடும் அதனால் ஆன்டிவைரஸ் பயன்படுத்த வேன்டும் அதுவும் அவ்வபெழுது அப்டேட் செய்ய வேன்டும் ஆன்டிவைரஸ்சை அப்டேட் செய்து கொன்டே இருக்க வேன்டும்

பிரின்டர் நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை தற்பொழது இன்ஜெட் லெசர் ஜெட் அதிகமாக உள்ளது

ஸ்கேனர் நாம் கொடுக்கும் தகவல்களை அதாவதது புகைபடம் அல்லது கடிதங்கள் அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது

மானிட்டர் (cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு பிரதிபளிக்க கூடியது தற்பொழது 19ஈஞ் வரை கிடைக்கிறது

ஸ்பிக்கர் நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம் வெளிபடுத்தும் தற்பொழது ஷேர்ம் தியட்டர் உள்ளது


இது தொடக்கம்....

ஆதவா
17-01-2007, 03:44 PM
தொடருங்கள் மஞ்சு,,,, இன்னும் புதுமையாக...............

ஆதவா
17-01-2007, 03:49 PM
கம்ப்யூட்ட பாகங்களில் வைரஸு தருவார்களா?? போனவாரம்தானே கணிணி வாங்கினேன். அப்படியொன்றும் தரவில்லையே!!

ஒரு குறிப்பு: நீங்க ஹ என்ற எழுத்தை தவறாக அழுத்துகிறீர்கள் ha என்று அழுத்தவும்.

இன்னுமொரு சிறு சந்தேகம். நான் வாங்கிய கணிணியில் Dual Core 2.8 ப்ராசசர் இருந்ததாக சொன்னார்கள்...
என்னுடைய பழைய கணிணியில் Pentium 4 2.8 உள்ளது..

பழைய கணினியில் 1 GB நினைவகம் (RAM) உள்ளது... புதியதில் 512 MB உள்ளது.... இரண்டில் எது அதிவேகமாக இருக்கும்?

ஷீ-நிசி
17-01-2007, 04:01 PM
நல்ல தொடக்கம்.. தொடர்ந்து இந்த திரியை புதுப்பியுங்கள்

மனோஜ்
17-01-2007, 05:16 PM
கம்ப்யூட்ட பாகங்களில் வைரஸு தருவார்களா?? போனவாரம்தானே கணிணி வாங்கினேன். அப்படியொன்றும் தரவில்லையே!!

ஒரு குறிப்பு: நீங்க ஹ என்ற எழுத்தை தவறாக அழுத்துகிறீர்கள் ha என்று அழுத்தவும்.

இன்னுமொரு சிறு சந்தேகம். நான் வாங்கிய கணிணியில் Dual Core 2.8 ப்ராசசர் இருந்ததாக சொன்னார்கள்...
என்னுடைய பழைய கணிணியில் Pentium 4 2.8 உள்ளது..

பழைய கணினியில் 1 GB நினைவகம் (RAM) உள்ளது... புதியதில் 512 MB உள்ளது.... இரண்டில் எது அதிவேகமாக இருக்கும்?

ஆதவன் அவர்களே எனக்கு புதுபெயர் வேன்டாம் மனோ எனலாமே

நன்றாக பாருங்கள் கண்களுக்கு புலபடமல் இருக்கலாம்

Dual core என்பது மிக நவின தொழில் நுட்பம்
1 Gb தான்
நாம் copy என்று கொடுக்கும் பொழது இந்த இடத்தில்தான் தகவல் சேமிக்க க்கப்படுகிறது

ஆதவா
17-01-2007, 05:29 PM
தவறுக்கு வருந்துகிறேன்......... கொஞ்சம் கவனமில்லாமல் இட்டுவிட்டேன்.
அப்படியென்றால் Dual core வேகம் எப்படி?

Dual core க்கும் Pentium 4 க்கும் வித்தியாசம் என்ன?

மதுரகன்
17-01-2007, 05:34 PM
ஆதவா உங்கள் கேள்வியைப்படித்தேன்...
நான் நினைக்கிறேன் இருகணினிகளுக்கும் பெருமளவில் வேறுபாடு காணப்படாது இருப்பினும் பிந்தயது சற்று விரைவானது...
காரணம் வேண்டுமெனில் பின்பு எழுதுகின்றேன்...

மனோஜ்
17-01-2007, 06:16 PM
மதுகரன் அவர்கள் கூறியது போன்று இரன்டுக்கும் அவளவு வித்தியாசம் இல்லை

பி4 ல் தகவல் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் ஆனால் டுயல் கோரில்
தகவல் பரிமாற்றம் ஒரேநேரத்தில் நடக்கும்

ஓவியா
28-04-2007, 10:36 PM
நல்ல தொடக்கம். முதல் கட்ட விசயங்கள்.

உபயோகமான பதிவு.

கண்ணியை பற்றி அறிய ஆவலாய் உள்ள ஆரம்ப கல்வி குழந்தைகளுக்கு தேவையானதும்.

pleasanthut
29-04-2007, 07:07 AM
வாழ்த்துக்கள் உங்களின் உதவிக்கு

ஷீ-நிசி
29-04-2007, 07:57 AM
மனோ! நல்ல உபயோகமான தொடர் இது.. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

கலைநேசன்
29-04-2007, 12:46 PM
நல்ல உபயோகமாக இருக்கிறது,இன்னும் தொடருங்கள் நண்பரே

அக்னி
29-04-2007, 12:57 PM
மனோஜ் அவர்களே... தகவல்கள் பயனுள்ளதாக உள்ளன. தொடர்ந்து தாருங்கள். மேலும், பதங்களை ஆங்கிலத்திலும் அடைப்புக்குறிக்குள் தருவது இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். மன்றம் ஏற்றுக்கொள்ளுமானால் முயற்சி செய்யுங்கள்...

மனோஜ்
30-04-2007, 02:29 PM
நண்பர்களே உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி