PDA

View Full Version : அம்மா என்பது தமிழ் வார்த்தை...



farhan mohamed
16-01-2007, 05:40 PM
:) அம்மா என்பது தமிழ் வார்த்தை...

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

என்றும் அன்புடன் பர்ஹான்:D

gragavan
17-01-2007, 10:15 AM
மிகவும் அருமையான பாடல். கே.வி.மகாதேவன் இசையில். இது ஜெயலலிதா திரையில் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன்.

farhan mohamed
17-01-2007, 03:00 PM
அன்பரே நன்றிகள்
விபரத்தை வழங்கியமைக்கு
உங்கள் ஒத்துழைப்பு
என்றும் அவசியம்

என்றும் அன்புடன் பர்ஹான்

இளசு
19-01-2007, 08:12 PM
நல்ல பாடல் பர்ஹான்.. நன்றி..இது சுசீலாம்மா பாடல்.
படம் தெரியவில்லை.


மிகவும் அருமையான பாடல். கே.வி.மகாதேவன் இசையில். இது ஜெயலலிதா திரையில் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன்.

ராகவன்

நீங்கள் சொல்வது -
அம்மா என்றால் அன்பு
படம் - அடிமைப்பெண்