PDA

View Full Version : காணாத கவிதை



farhan mohamed
16-01-2007, 04:43 PM
;) கண்ணில் என்ன ஈரமோ??
கன்னியவளின் நாணமோ??

கவிவரிகள் வடிக்கவே
காதலையும் உரைத்தாளோ??...

காதலும் எழில் கொண்டது
காரிகையின் காதலால்...

காதலியே நம் காதலை
கவிஞன் கண்ணதாசன்
காணவில்லை கண்டிருந்தால்
படைத்திருப்பான் காதலில்
ஒரு புதுக்கவிதை - உலகுக்கு
ஓர் புதுக்கவிதை கிடைக்காமல்
போய்விட்டதோ??:confused:

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
17-01-2007, 01:55 PM
உங்களின் காதல் யாரும் காணாத காதலோ?

கண்ணில் என்ன ஈரமோ??
கன்னியவளின் நாணமோ??

கவிவரிகள் வடிக்கவே
காதலையும் உரைத்தாளோ??...
பர்ஹான்!!! கண்ணில் ஈரமும் நாணமும் காதலுக்கே உரியது. கவிதைவரிகள் காதலில் எங்கிரிந்து ஆரம்பமாகின்றன? கண்களிலிருந்துதான். கண்களின் பாஷைகள் அழும்போது கவிதைகள் நீர்த்துளிகளாய்க் கொட்டும்........

காதலும் எழில் கொண்டது
காரிகையின் காதலால்...
காரிகை என்றாலே பெண்...... அதாவது காதலி..... அவளின்றி காதலேது..? அவள் அழகென்பதைவிட அவளால் காதல் அழகு என்பது அருமையான சிந்தனை..........

காதலியே நம் காதலை
கவிஞன் கண்ணதாசன்
காணவில்லை கண்டிருந்தால்
படைத்திருப்பான் காதலில்
ஒரு புதுக்கவிதை - உலகுக்கு
ஓர் புதுக்கவிதை கிடைக்காமல்
போய்விட்டதோ??
கடைசியாக உங்கள் கவிதை வண்ணம் தெரிகிறது. ஒரு காதலைக் காணாது போய்விட்டானே கண்ணதாசன் என்று ஒரு வருத்தம்,.............
முதலில் கன்னியவள், காரிகை என்று பொதுப்படையாக சொல்லிவிட்டு அடுத்ததாக காதலியே என்று சுட்டுவது மட்டும் திருத்திவிட்டால் போதுமானது.............

பர்ஹான் உங்கள் கவிதைகளில் காதல் முளைக்கிறது......... இன்னும் நீர் ஊற்றுங்கள். அழகும் அருமையும் வரிகளில் துளிர் விடுவது தெரிகிறது.........
தொடருங்கள்.....

farhan mohamed
17-01-2007, 02:06 PM
ஆதவா
முயற்சி செய்கிறேன்
உங்களைப்போன்ற நண்பர்கள்
விமர்சனம் செய்யும் போதே
எமது படைப்புகள்
அழகு பெறுகின்றன.
என்றும் அன்புடன் பர்ஹான்

ஷீ-நிசி
17-01-2007, 02:35 PM
நன்றாக உள்ளது நண்பரே. இன்னும் பல்சுவை விருந்து அளியுங்கள்

அறிஞர்
17-01-2007, 03:48 PM
கன்னியவள்=காரிகை=காதலி.... ஜொலிக்கிறார் தங்கள் கவிதையில்.

கண்ணதாசன் காதலையும் காணவில்லை....
அவரை போல வளர்ந்திடும் கவிஞரையும் காணவில்லை....

மதுரகன்
17-01-2007, 04:15 PM
காதலும் எழில் கொண்டது
காரிகையின் காதலால்...

அற்புதமான வார்த்தைகள்...
வாழ்த்துக்கள்...
தொடருங்கள்..