PDA

View Full Version : நான் உன்னை நினைத்திருந்தேன்.....



farhan mohamed
16-01-2007, 07:12 AM
நான் உன்னை ரோஜாச் செடியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் முள் உள்ளதென
காட்டி(குத்தி) விட்டாய்..

நான் உன்னை தென்றலென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் புயல் உள்ளதென
வீசி விட்டாய்....

நான் உன்னை பூமாதேவியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் பூகம்பம் உள்ளதென
வெடித்து விட்டாய்.....

நான் உன்னை நதியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் வெள்ளம் உள்ளதென
அழித்து விட்டாய்....

நான் உன்னை நானாகவே
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ நான் யாரோ நீ யாரோ என
காட்டி விட்டாய்...

என்றும் அன்புடன் பர்ஹான்

ஆதவா
16-01-2007, 07:56 AM
முதலில் முதல் கவிதை அளித்த பர்ஹானுக்கு என் வணக்கம்.
முதல் கவிதையே காதலாக..........

நான் உன்னை ரோஜாச் செடியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் முள் உள்ளதென
காட்டி(குத்தி) விட்டாய்..

வழக்கமாக எல்லா காதல் கவிதைகளிலும் காட்டப்படும் ரோஜா முள் கதைதான். காதலியின் எதிர்ப்பை முள்ளாக காட்டியிருக்கிறீர்கள்.

நான் உன்னை தென்றலென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் புயல் உள்ளதென
வீசி விட்டாய்....

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்திருக்கலாம்... தென்றலுக்கு பதிலாக காற்றை இட்டிருக்கலாம். தென்றலில் புயல் இருக்கதல்லவா?

நான் உன்னை பூமாதேவியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் பூகம்பம் உள்ளதென
வெடித்து விட்டாய்.....

பூமாதேவி! பூகம்பம். அருமைதான்.. கொஞ்சம் கொஞ்சமாக காதலியை அவள் எதிர்ப்பை அழகுபடுத்துகிறீர்கள்

நான் உன்னை நதியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் வெள்ளம் உள்ளதென
அழித்து விட்டாய்....

இயற்கையை காதலுக்கு ஒப்பிடும்போது எவ்வளவு அழகு பார்த்தீர்களா பர்ஹான்..

நான் உன்னை நானாகவே
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ நான் யாரோ நீ யாரோ என
காட்டி விட்டாய்...

உங்கள் காதலியின் எதிர்ப்பு நன்றாகவே தெரிகிறது

முடிவாக, அருமையான காதல் கவிதை........... கொஞ்சம் அழகுபடுத்துங்கள்... (இது என் கருத்து மட்டுமே) கடைசி வரிகளில் எதிர்ப்ப்பு அழகாய் காட்டியிருக்கிறீர்கள். முதல் கவிதை முத்தாரமாய்ய்...........
இன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
என்றும் அன்புடன் பர்ஹான்

farhan mohamed
16-01-2007, 08:19 AM
ஆதவா!!
உண்மையில் ஆழமாக
ஒவ்வொருவரியையும் விமர்சிப்பதற்கு
எனது நன்றிகள். என் கவிதைகளைவிட
உங்கள் பதில் வரிகள் பிரமாதம்
தொடர்ந்து எமக்கு துணை நிற்கவும்

என்றும் அன்புடன் பர்ஹான்

Mano.G.
16-01-2007, 08:53 AM
பார்ஹான் உங்களை வரவேற்பதில்
மகிழ்ச்சி அதோடு உங்கள் கவிதையை
கண்டு படித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

farhan mohamed
16-01-2007, 09:47 AM
மனோ.ஜி(க்கு)
எனது நன்றிகள்

என்னை மனமாற வரவேற்று
பாராட்டும் என் அனைத்து
உள்ளங்களுக்கும் எனது
உளமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன் பர்ஹான்

meera
16-01-2007, 10:47 AM
பார்ஹான்,

மன்றத்தில் முதல் கவிதைக்கு வாழ்த்துகள்.
படித்தேன் ரசித்தேன்.

அறிஞர்
16-01-2007, 12:50 PM
இயற்கையை வைத்து... காதலியை சாடிவிட்டீர்கள்.... அருமை......

இயற்கை போல், பல நேரம் காதலியிடம் எந்த நேரத்தில் என்ன வெளிப்பாடு (ரியாக்சன்) வெளிப்படுமோ.. என்பது தெரிவதில்லை.... தெரிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சமாளிக்கலாம்.
-------
ஆதவனின்.... கருத்துக்கள் அருமை.. வளரும் கவிஞரே.... உங்கள் வளர்ச்சிக்கு அந்த கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஷீ-நிசி
16-01-2007, 01:49 PM
முகம்மது ஆரம்பக் கவிதை ஜோர்! இன்னும் வித்தியாசமான கவிதைகளினால் எங்களுக்கு தீனியிடுங்கள்

மதுரகன்
16-01-2007, 04:36 PM
பர்கான் உங்கள் முதல் கவிதையின் ஓட்டமும் பாங்கும் அடுத்து பல விருந்துகளை அளிக்கவிருக்கிறீர்கள் என்பதை காட்டுகின்றது..

ஆதவாவின் விமர்சனத்தை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்..

நானும் உங்கள் கவிதையில் ஒரு புது முயற்சியெடுக்கிறேன்...
அதுதானுங்க விமர்சிப்பது..

நீங்கள் காதலியின் இயல்புகளுக்கு இரு பக்கங்களை உங்கள் சார்பாக வரையறுத்துவிடுகிறீர்கள்
நான் உன்னை பூமாதேவியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் பூகம்பம் உள்ளதென
வெடித்து விட்டாய்.....


இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவையாய்..
நான் உன்னை தென்றலென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் புயல் உள்ளதென
வீசி விட்டாய்....


ஒன்று உங்களை ஆராதிப்பதாய்...
நான் உன்னை நதியென
நினைத்திருந்தேன்

ஒன்று உங்களை அச்சுறுத்துவதாய்..
ஆனால்
நீ அதில் வெள்ளம் உள்ளதென
அழித்து விட்டாய்....


நான் உன்னை ரோஜாச் செடியென
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ அதில் முள் உள்ளதென
காட்டி(குத்தி) விட்டாய்..
உங்கள் உணர்வுகளின் வேகத்தை அற்புதமாக வெளிப்படுத்தினாலும்
ஆதவா கூறியதபோல் ரோஜாவை இந்த கோணத்திலல் பலமுறை பார்த்தாயிட்டு...
எனவே எனிவரும் காலங்களில் வார்த்தைகளையும் சிந்தனைகளையும் புதிதாக பார்த்துக்கொள்ளுங்கள்
அது உங்கள் கவிதைக்கு ஒரு தனித்துவத்தை வழங்கும்...

என்றாலும் உங்களுக்கு வேகமிருக்கிறது ஆர்வமிருக்கிறது
எல்லாவற்றிற்கும் மேலாக திறமையிருக்கிறது என்பதை
இறுதிப்பகுதி உணர்த்திவிட்டது...
நான் உன்னை நானாகவே
நினைத்திருந்தேன் - ஆனால்
நீ நான் யாரோ நீ யாரோ என
காட்டி விட்டாய்...

தன் நினைப்புகளெல்லாம் சிதறடிக்கப்பட்ட காதலனின் எண்ணவலைகள்..
அற்புதமான கவிதைக்கரு... இன்னும் பல சிந்தனைகள் கருக்கொள்ள வாழத்துக்கள்...

ஆக மொத்தம் உங்கள் அடுத்த படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்...