PDA

View Full Version : தமிழ் மன்ற கலைப் புயல்களுக்கு



farhan mohamed
16-01-2007, 05:21 AM
தமிழ் மன்ற கலைப் புயல்களுக்கு
எனது வந்தனங்கள்!!
எனது பெயர் பர்ஹான்
நான் உங்கள் அனைவரது
படைப்புக்களையும் கண்டு
வியப்படைந்தேன். அது
மாத்திரமல்ல மற்ற
புது நண்பர்களை தேர்ச்சி
மிகுந்த கலைப்புயல்கள்
வரவேற்று ஆர்வப் படுத்துவது
உளம் மெச்சுகின்றது.
நானும் உங்களில் புதியவன்
என்னில் தவறுகள் இறுப்பின்
நண்பர்கள் சுட்டிக்காட்ட
தவற வேண்டாம்.

என்றும் அன்புடன் பர்ஹான்

பிச்சி
16-01-2007, 05:31 AM
உங்கள் வரவு நல்வரவாகுக

மன்மதன்
16-01-2007, 05:38 AM
அன்பான வரவேற்புகள் ஃபர்ஹான். உங்கள் படைப்புகளை அள்ளித்தாருங்கள்.

farhan mohamed
16-01-2007, 06:03 AM
மிக்க நன்றிகள்
பிச்சி மன்மதன் இருவருக்கும்
இதமான வரவேற்பிற்கு

என்றும் அன்புடன் பர்ஹான்

இளசு
16-01-2007, 06:39 AM
வாருங்கள் நண்பரே

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

தங்கள் கருத்துகள், ஆக்கங்களை மன்றத்தில் இட்டு
இணைந்திருக்க வாழ்த்துகள்..ஃபர்ஹான்.

nonin
16-01-2007, 07:29 AM
வாருங்கள் அன்பு நண்பரே.இது பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
அல்ல.மன்றத்து நண்பர்களின் இதயநிலையில் வீசும் கலைப்பீலி(மயிலிறகு)
தாங்களும் சொக்கவைத்து நீங்களும் சுகம் பெற வாருங்கள்.

அறிஞர்
16-01-2007, 12:46 PM
வாருங்கள் அன்பரே.....

தங்களின் படைப்புக்களை கொடுங்கள்...

பலரின் திறமைகள் ஊக்கப்படுத்தாமல் மறைந்துவிடுகிறது. மன்றத்தின் முக்கிய பங்கு பலரை ஊக்குவிப்பதுதான்.. தொடருந்து படைப்புக்களை கொடுங்கள்.

Narathar
16-01-2007, 03:12 PM
பர்கான்...............
உங்கள் படைப்புக்களால் தமிழ் மன்றம் மிளிரட்டும்!

மதுரகன்
16-01-2007, 04:05 PM
பர்கானை வரவேற்கிறோம்...

முதலில் பாராட்டுக்கள்... எடுத்த மாத்திரத்திலேயே தமிழில் வெளுத்துக்கட்டுவதற்கு....

நீங்களும் விருந்தளியுங்கள்.... மனமார இங்கு விருந்துண்ணுங்கள்....
படைப்புகளை விசிறுங்கள்...
மற்றவர் படைப்புக்களையும் விமர்சியுங்கள்...

தவறுகளை கேட்டு கேட்டு திருத்துங்கள்...
மற்றவர்கள் தவறுகளையும் திருத்துமாறு அறிவுறுத்துங்கள்...

நீங்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க சிறிய தவறொன்று திருத்திக்கொள்ளுங்கள்...

என்னில் தவறுகள் இறுப்பின்

குறை நினைக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்...

நன்றி...

மதி
17-01-2007, 02:50 AM
வரவேற்புகள் ஃபர்ஹான்.

ஓவியா
21-01-2007, 03:34 PM
வணக்கம் ஃபர்ஹான்.

உங்கள் வரவு நல்வரவாகுக

தமிழ் மன்றத்தில் இணைந்திருக்க வாழ்த்துகள்

நண்பரே,
தங்களின் அருமையான பதிவுகளை கண்டேன், மிக்க மகிழ்ச்சி
அடியேன் விடுப்பில் சென்றுல்லேன், மே மாதம் வந்ததும் தங்களின் பதிப்பினை படித்து கருத்து பின்னூட்டம் இடுகின்றேன்

leomohan
21-01-2007, 03:41 PM
மீண்டும் நல்வரவு நண்பரே.

arun
22-01-2007, 10:34 AM
வாருங்கள் நண்பரே
உங்களது வரவு நல் வரவாகுக

farhan mohamed
22-01-2007, 10:41 AM
நன்றி ஓவியா, Arun , leomonan அனைவருக்கும். கட்டாயம் உங்கள் பின்னூட்டங்கள் எமக்கு அவசியம்.

ஆதவா
23-01-2007, 05:20 PM
என்னில் தவறுகள் இறுப்பின்

இது சிம்பாலிக்காக நாம் எடுத்துக்கொள்ளலாமே!!!!!

மதுரகன்
23-01-2007, 05:38 PM
என்ன வகையான சிம்பாலிக் ஆதவா???