PDA

View Full Version : 'தை' கவிதைகள்



மன்மதன்
15-01-2007, 06:11 PM
'தை' கவிதை இதழில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளை உங்கள் வாசித்தலுக்காக இங்கே கொடுக்கின்றேன். (நன்றி 'தை')

பெறுதல்

ஆயிரம் பேர்
கூடியிருக்கும் அவையில்
எனக்குப் பொருளுதவி செய்யாதே..

விரும்பினால்
என் குடிசைக்கு வந்து
யாருமறியாமல் தந்து போ
நீ
தரவிரும்பியவற்றை..

கனம் குறைந்திருந்தாலும்
மனம் நிறையும் எனக்கு..

உன்னுடைய அன்பளிப்புகளை
ஆலய முற்றங்களில்
கூனிக் குறுகிப் பெற்றுக்கொள்ள
வலிக்கிறது..

நான் ஏழையென்பதைப்
பிரகடனப்படுத்துவதற்காகப்
பொதுக்கூட்டங்கள்
போடாதே..

பசியை விட
பட்டினியை விட
சாவைவிட கொடுமையானது
எல்லோரையும் விட
நான் தாழ்ந்திருப்பதாய்
நீ
அறிவிப்புக் கூட்டம் நடத்துவது..

எனக்குத் தருவதாய்
சொல்லிக் கொள்கிறாய்
ஆனால்
தருவதை விட
அதிக மதிப்புள்ள
கர்வத்தைப் பெற்றுக் கொள்கிறாய்..

போகும்போது அதற்காக
சின்னதாய்
ஒரு நன்றியாவது
சொல்லிவிட்டுப்போ..

-------------------------------------------- சேவியர்

மன்மதன்
15-01-2007, 06:12 PM
கிராமப் பேருந்தில்
இடித்தவனை
நான் முறைத்தேன்

நகரப்பேருந்தில்
இடித்தவன்
என்னை
முறைத்தான்

-------------------------------- அமுதினி

மன்மதன்
15-01-2007, 06:20 PM
உன்னிடம்
ஒரு சாவிகூட
இல்லையென்றால்
அதன் பொருளென்ன
தெரியுமா?

உன் சாவிக்குக்
காத்திருக்கும் பூட்டில்லை

உன் பூட்டு
தொங்குவதற்கு
ஒரு தாழ் இல்லை

நீ தாழிட்டுப் பூட்ட
ஒரு கதவு இல்லை

கதவிடப்பட்ட
ஓர் அறை இல்லை

அறை அமைந்த
ஓர் இடம் இல்லை

இத்தனை பெரிய
பூமியில்
உனக்கு
ஓர் இடம் இல்லை

---------------------------------- மகுடேசுவரன்

மன்மதன்
15-01-2007, 06:26 PM
தன் தோழியின்
நாக்கை நீட்டச் சொல்லி
நாக்க நீட்டாதே வாக்கப் படாதே
குண்டாஞ் சட்டியில குட்டி போடாதே
என்று கைகொட்டிச் சிரித்த சிறுமி
வளர்ந்து பெரியவளானாள்.

எதையெல்லாம்
தோழியைச்
செய்யாதே என்றாளோ...

அதையெல்லாம்
இவள் செய்தாள்
இல்லை..இல்லை..
செய்ய வைத்தோம்.


-----------------------இரத்தின புகழேந்தி

பென்ஸ்
16-01-2007, 12:54 AM
உன்னிடம்
ஒரு சாவிகூட
இல்லையென்றால்
அதன் பொருளென்ன
தெரியுமா?


மடியில் கனமில்லை...!!!

ஆதவா
16-01-2007, 03:20 AM
உன்னிடம்
ஒரு சாவிகூட
இல்லையென்றால்
அதன் பொருளென்ன
தெரியுமா?

உன் சாவிக்குக்
காத்திருக்கும் பூட்டில்லை

உன் பூட்டு
தொங்குவதற்கு
ஒரு தாழ் இல்லை

நீ தாழிட்டுப் பூட்ட
ஒரு கதவு இல்லை

கதவிடப்பட்ட
ஓர் அறை இல்லை

அறை அமைந்த
ஓர் இடம் இல்லை

இத்தனை பெரிய
பூமியில்
உனக்கு
ஓர் இடம் இல்லை

---------------------------------- மகுடேசுவரன்

அட நம்ம ஊரு கவிஞரு....

எல்லாகவிதைகளும் அருமை

மனோஜ்
17-01-2007, 04:50 PM
கிராமப் பேருந்தில்
இடித்தவனை
நான் முறைத்தேன்

நகரப்பேருந்தில்
இடித்தவன்
என்னை
முறைத்தான்

-------------------------------- அமுதினி

இதை சற்று மாற்றி
கிராமத்தில் கடன் கொடுத்தவனை
நான் பின் தொடர்ந்தேன்

நகரத்தில் கடன் கொடுத்தவன்
என்னை பின் தொடர்ந்தான்
இது எப்படி ?

ஓவியன்
25-02-2007, 09:44 AM
உன்னிடம்
உன் சாவிக்குக்
காத்திருக்கும் பூட்டில்லை


வேறுபட்ட வரிகள், வித்தியாசமான சிந்தனை!

அது தானே நல்ல ஒரு கவிஞனுக்குத் தேவை!

ஷீ-நிசி
25-02-2007, 12:22 PM
எல்லாமே நல்ல நல்ல கவிதைகள்.. நண்பர் மனோஜ் எழுதியது உட்பட..

pradeepkt
26-02-2007, 05:53 AM
மகுடேஸ்வரனின் ஒரு ஆனந்த விகடன் கவிதை என் மனதைத் தைத்திருக்கிறது. சரியான வரிகள் மறந்துவிட்டன. ஆனால் கருத்து கீழ்க்கண்டதுதான்!

வாழ்ந்து கெட்டவனின் வீட்டை
விலைபேசி முடிக்குமுன் உற்றுக் கேள்
பின்கட்டில் மெலிதான விசும்பலை

சிதம்பரம்
11-04-2007, 02:45 AM
தை இதழ் இப்போது வருகிறதா?

அக்னி
23-11-2007, 06:43 PM
மிக அருமையான கவிதைகள்...
ஒவ்வொரு கவிதைகளும் எளிமையான, செறிவு கூடிய வரிகள்...
சமகாலத்தின் நடப்புநிலை, வரிகளில், சாட்டை வீசுகின்றன...

ஓவியன்
25-11-2007, 08:37 PM
தையில் வந்த வரிகளை
மீள
அசை போடுகையிலும்
தைக்கின்றன
ஆழமாக, நிதானமாக....

மேலெழுப்பிய அக்னிக்கு நன்றிகள்...