PDA

View Full Version : உலகத் தமிழ்இனமே எண்ணிப்பார்!

masan
15-01-2007, 02:35 PM
தமிழராய்ப்பிறந்து தமிழராய்வளர்ந்து தமிழராய் சாகும் தமிழ்நெஞ்சங்களுக்கு எனது வணக்கங்கள். கல்தோண்றி மண்தோண்றாக்காலத்திற்கு முன் தோண்றிய மூத்தமொழி தமிழ் மொழி.
அத்தகய தமிழை பேசும் மக்கள் தமிழர் எனப்படுகிண்றனர். இவர்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காவிட்டாலும் தமிழரெனப்படும்போது சகோதரர்களாகிண்றனர். ஒரு தமிழனுக்கு அநீதி இளைக்கப்பட்டால்க்கூட நெஞ்சைநிமிர்த்தி நியாயம்கேட்கும் உரிமை தமிழர்களாகப்பிறந்த அனைவருக்கும் உண்டு.அதனால்தான் நான் இண்று எனது உடன்பிறவாச்சகோதரங்களுக்கு ஈழத்தமிழ்மக்களது துன்பங்களைக்கூறி உன்மைநிலையை உலகிற்கு உணர்த்த அனைவரது உதவியையும் ஆதரவையும் நாடி இந்தக்கட்டுரையை வரயப்போகிண்ரேன்.

ஈழத்தில் தமிழர்கள் தமது உரிமைகளை பெறுவதற்காக சிங்கள அரசிடம் நீதி கேட்கத்தொடங்கி 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அகிம்சைவழிமூலம் உரிமைகளை வெண்றெடுக்கமுடியும் எண்ற நிலைமாறி
யுத்தத்தின்மூலமே தமிழர் தமது உரிமைகளை வெல்லவேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? எதற்காக தமிழர் தமது உரிமைகளை கேட்கவேண்டி வந்தது?தமிழர் தனிஅரசு கோருவது எதற்கு? என்பன போண்ற மில்லியன் டொலர் கேள்விகள் மூடிமறைக்கப்பட்டு அதற்கு பிழையான அர்த்தம் புகுத்தப்பட்டு அதுவே உண்மைநிலை எண்றும் நம்பவைக்க பல்வேறு வளிகளிலும் முயல்கிறது இலங்கை அரசு. இந்தக்கேள்விகள் பற்றி நாம் அடுத்த பாகத்தில் அலசுவோம். அதுவரை உங்கள் ஆதரவை நாடிநிற்கும் உங்கள்.....மாசன்

masan
22-01-2007, 12:20 AM
எந்த ஒரு ஆதரவும் கிடைக்காததால் இந்த திரியை மிகவும் மனவருத்தத்துடன் நிறுத்துகிண்றேன்.

தாமரை
22-01-2007, 12:31 AM
கருத்த்துக்களை ஆரம்பியுங்கள் மாசன்..என்ன வகை ஆதரவு எதிர்பார்க்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

Mano.G.
22-01-2007, 12:50 AM
கருத்த்துக்களை ஆரம்பியுங்கள் மாசன்..என்ன வகை ஆதரவு எதிர்பார்க்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

ஆமாம் மாசன்,
நான் இலங்கை தமிழன் அல்ல ஆனால் தமிழ் எனது தாய் மொழி
தமிழில் பேசும் அனைவரும் எனது உறவினர்கள் என நினைப்பவன்
இங்கே என்ன மாதிரி ஆதரவு எதிர்பார்க்கிறீர்கள்.

மனோ.ஜி

ஓவியா
22-01-2007, 01:30 AM
வருத்தம் வேண்டாம் மாசன்,

தங்களின் கோரிக்கை யாரையும் பாதிக்கா வண்ணம் அமையுமாயின்,
தங்களுக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு

இன்னும் சிறிது விரிவாக எழுதினால், தங்களுக்கு தேவையான கருத்து பின்னூட்டங்கள் வரும் என்பதில் ஐய்யமில்லை

வருந்தாமல் தொடருங்கள் நண்பரே

leomohan
22-01-2007, 05:13 AM
அவசியம் பேசுங்கள் மாசன். ஆனால் ஒரே ஒரு கேள்வி.

வெளியிலிருந்து இந்திய தமிழர்களின் ஆதரவும் ஊக்கமும் அன்பும் பேச விரும்பும் இலங்கை தமிழ் மக்கள், தமக்குள்ளே ஒற்றுமை இல்லாமல் பல்வேறு போராடும் குழுக்கள், அரசியல் குழுக்கள், மதக்குழுக்களாக பிரிந்து நிற்பதின் காரணம் என்ன.

இப்படி எத்தனை குழுக்கள் நிற்கின்றன, அவர்களின் தனித்தனி கொள்கைகள் என்ன, எதற்காக ஒன்று படாமல் தமுக்குள்ளே சண்டையிடுகின்றனர். இதை தெளிவு படுத்துங்கள்.

Narathar
22-01-2007, 12:13 PM
அவசியம் பேசுங்கள் மாசன். ஆனால் ஒரே ஒரு கேள்வி.

வெளியிலிருந்து இந்திய தமிழர்களின் ஆதரவும் ஊக்கமும் அன்பும் பேச விரும்பும் இலங்கை தமிழ் மக்கள், தமக்குள்ளே ஒற்றுமை இல்லாமல் பல்வேறு போராடும் குழுக்கள், அரசியல் குழுக்கள், மதக்குழுக்களாக பிரிந்து நிற்பதின் காரணம் என்ன.?

இப்படி எத்தனை குழுக்கள் நிற்கின்றன?

அவர்களின் தனித்தனி கொள்கைகள் என்ன?

எதற்காக ஒன்று படாமல் தமுக்குள்ளே சண்டையிடுகின்றனர்?

இதை தெளிவு படுத்துங்கள்.

ஒரு கேள்வி என்றூ சொல்லிவிட்டு நான்கு கேள்விகள் கேட்டுள்ளதால் மாசன் பதில் சொல்ல மாட்டார் என்று நினைக்கின்றீர்களா?

பதில் சொல்லுங்கள் மாசன்..............

நாராயணா!!!!!

masan
22-01-2007, 12:22 PM
நண்றி என் அன்புக்குரிய நன்பர்களே இந்த பதிப்பின் தொடர்ச்சியை தாமரைமண்றத்தில் எதிர்பாருங்கள்.

மயூ
22-01-2007, 01:20 PM
அவசியம் பேசுங்கள் மாசன். ஆனால் ஒரே ஒரு கேள்வி.

வெளியிலிருந்து இந்திய தமிழர்களின் ஆதரவும் ஊக்கமும் அன்பும் பேச விரும்பும் இலங்கை தமிழ் மக்கள், தமக்குள்ளே ஒற்றுமை இல்லாமல் பல்வேறு போராடும் குழுக்கள், அரசியல் குழுக்கள், மதக்குழுக்களாக பிரிந்து நிற்பதின் காரணம் என்ன.

இப்படி எத்தனை குழுக்கள் நிற்கின்றன, அவர்களின் தனித்தனி கொள்கைகள் என்ன, எதற்காக ஒன்று படாமல் தமுக்குள்ளே சண்டையிடுகின்றனர். இதை தெளிவு படுத்துங்கள்.
அன்பின் தேனி அவர்களே சொல்லுங்கள் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அத்தனை பிரிவுகளின் பின்னாலும் எத்தனை பேர் உள்ளனர்?
கிட்டத்தட்ட 99 வீதமான ஈழத்தமிழர்கள் ஒரே நோக்கையே கொண்டுள்ளர்கள்! இலங்கையரசின் பரப்புரைகளில் குளம்பிப்போன ஒரு நபர்தான் நீங்களும். தயவுசெய்து நான் சொல்லுவதைப் பிழையாக நினைக்க வேண்டாம்.

leomohan
22-01-2007, 04:57 PM

நன்றி மயூரேசன். இணையத்தில் நடத்தப்படும் தமிழ் இணையதளங்களும், இந்திய அரசின் செய்திகளும் பொய் என்றே வைத்துக் கொள்ளலாம்.

தினமும் மடியும் போட்டி குழுக்களும், இலங்கை முஸ்லீம்களும், மற்ற இலங்கை தமிழர்களும், கொலை செய்யும் குழுவும் ஒரே குறிக்கோளுக்காக போராடினால் ஏன் சேர்ந்து நிற்கவில்லை.

அப்படி சேர்ந்து நிற்கிறார்கள் என்றால் ரொம்ப சந்தோஷம். அதை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் வருத்தம்.

மயூ
23-01-2007, 03:44 AM

ஒரு போராட்டத்தை நசுக்க என்றுமே அடிவருடிகள் பயன் பட்டுள்ளனர்!
உதாரணம் பல எமது வரலாற்றில் உண்டு.(காக்கை வன்னியன், எட்டப்பன்). அப்போ இவர்களில் சிலர் காட்டிக்கொடுப்பதனால் மொத்தப்பேரும் எட்டப்பன்களா?
அதைவிட கொலைகள் நடப்பது அரச கட்டுப்பாட்டுப் பகுதியில்தான்.. புலிகளில் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை. அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் வைப்பதுதான் சட்டம்!
இலங்கை முஸ்லீம்கள் தனியான பரிமானம். அவர்கள் தமிழைப் பேசினாலும் தம்மை தமிழர்களாக அடையாளம் காட்டுவதில்லை அவர்கள் தனியான இனமாக இலங்கையில் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்!

மதுரகன்
23-01-2007, 05:37 PM
நண்பர் மயூரேசன் அவர்களே நானும் இலங்கையிலிருந்து அதுவும் பிரச்சனைகளை நிதமும் எதிர்நோக்கும் வவுனியாவிலிருந்து எழுதுகின்றேன்...
பல பிரச்சனைகளை கண்ணெதிரே கண்டு நொந்து போயுள்ளேன்...
இங்கு தினமும் நடைபெறும் கொலைகளில் ஒரு பங்கை அரசு செய்தாலும் மீதிக்கொலைகளெல்லாம் எங்கள் தமிழரினாலேயே நடைபெறுவது மனம் வருந்தத்தக்கது...
உயிர் யாருடையதானாலும் அது உயிர்தாம்...

Narathar
23-01-2007, 06:45 PM

லண்டனிலிருந்து நான் சொல்ல பயப்படும் உண்மையை வவுனியாவில் இருந்து தயங்காமல் சொல்லும் மதுரகனை மெச்சுகின்றேன்..................

masan
27-01-2007, 02:59 PM
தண்டனைகள் கடுமையானால்த்தான் தவறுகள் குறையும் இதில் தமிழர் சிங்களவர் வேறுபாடு பார்த்தால் இறுதியில் நிச்சயம் தமிழருக்கெண்று ஒரு வாழ்விடம் இருக்காது நன்பர்களே

மதுரகன்
27-01-2007, 04:11 PM
தண்டனைகள் கடுமையானால்த்தான் தவறுகள் குறையும் இதில் தமிழர் சிங்களவர் வேறுபாடு பார்த்தால் இறுதியில் நிச்சயம் தமிழருக்கெண்று ஒரு வாழ்விடம் இருக்காது நன்பர்களே
அர்த்தம் புரியவில்லை நண்பரே விளக்குங்கள்..

மயூ
28-01-2007, 02:53 AM
நண்பர் மயூரேசன் அவர்களே நானும் இலங்கையிலிருந்து அதுவும் பிரச்சனைகளை நிதமும் எதிர்நோக்கும் வவுனியாவிலிருந்து எழுதுகின்றேன்...
பல பிரச்சனைகளை கண்ணெதிரே கண்டு நொந்து போயுள்ளேன்...
இங்கு தினமும் நடைபெறும் கொலைகளில் ஒரு பங்கை அரசு செய்தாலும் மீதிக்கொலைகளெல்லாம் எங்கள் தமிழரினாலேயே நடைபெறுவது மனம் வருந்தத்தக்கது...
உயிர் யாருடையதானாலும் அது உயிர்தாம்...
கசப்பான உண்மையே!
ஏற்றுக் கொள்கின்றேன்... ஆனால் யார் ஆதரவுடன் நடைபெறுகின்றன!

மதுரகன்
28-01-2007, 03:54 PM
யார் ஆதரவுடன் நடைபெறுகின்றன
யார் ஆதரவு இரண்டு தரப்பும் தான் ஆதரவு அளிக்கின்றன..
இரண்டு தரப்பும் தான் மக்கள் மனைகள் நடுவில் தாக்குதல் நடத்துகின்றன...
யார் செய்தாலும் குற்றம் ஒன்றுதான்...

lolluvathiyar
15-03-2007, 04:57 PM
நியாமான காரனத்துக்காக தான்
போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன
ஆனால் காலபோக்கில் அதன் தலைவர்கள்
தங்கள் கூட்டத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கவும்
தங்கள் தலைமைக்கு ஆபத்து வராமல் இருக்கவும்
சில தவறான செயல்களில் ஈடுபட வேண்டி இருக்கு
அதில் ஒரு அங்கம் தான் வன்முறை

அமரன்
16-03-2007, 10:56 AM
நியாமான காரனத்துக்காக தான்
போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன
ஆனால் காலபோக்கில் அதன் தலைவர்கள்
தங்கள் கூட்டத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கவும்
தங்கள் தலைமைக்கு ஆபத்து வராமல் இருக்கவும்
சில தவறான செயல்களில் ஈடுபட வேண்டி இருக்கு
அதில் ஒரு அங்கம் தான் வன்முறை

வாத்தியாரே நான் உங்கக் பக்கம். உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன். அதையும் மீறி போராட்டப் பாதையை நெறிப்படுத்திய தலைவர்கள்தான் தனித்துவமாகப் பிரகாஷித்தார்கள்.