PDA

View Full Version : எனக்கும் ஒரு போகி வேண்டும்ஓவியா
14-01-2007, 06:29 PM
ஈ-மெய்லில் வந்த போகி அன் காதல் கவிதைகள், இங்கே பதிந்துல்லேன்

இப்படியும் போகி கொண்டாடலாமா?

1.
எழுந்தது புகை மேகம்
புதுப்பித்து கொண்டிருந்தார்கள்
வாழ்வை....

எரிந்து கொண்டிருந்தது
பழைய பொருட்கள்
எரித்து கொண்டிருந்தார்கள்
நம்மவர்கள்.....

என்னிடம் என்ன இருக்கிறது
எரிக்கும் அளவிற்கு
உன் நினைவைத்தவிர.....

2.
எரித்தேன்
- எண்ண அலைகளை
எரித்தேன்
- எழுதிய கவிகளை
எரித்தேன்
- எனக்கான உன்னை
எரித்தேன்
- என் எழுதா காவியத்தை

3.
பூத்தது அன்று,
எரிந்ததோ இன்று,
காதல் கல்லறையில்
சிலுவையிட்டேன் என் கண்ணீரை

மன்ற நண்பர்களும் தொடரலாம்

ஆதவா
14-01-2007, 06:43 PM
ஈ-மெய்லில் வந்த போகி அன் காதல் கவிதைகள், இங்கே பதிந்துல்லேன்

இப்படியும் போகி கொன்டாடலாமா?

1.
எழுந்தது புகை மேகம்
புதுப்பித்து கொண்டிருந்தார்கள்
வாழ்வை....

எரிந்து கொண்டிருந்தது
பழைய பொருட்கள்
எரித்து கொண்டிருந்தார்கள்
நம்மவர்கள்.....

என்னிடம் என்ன இருக்கிறது
எரிக்கும் அளவிற்கு
உன் நினைவைத்தவிர.....

2.
எரித்தேன்
- எண்ண அலைகளை
எரித்தேன்
- எழுதிய கவிகளை
எரித்தேன்
- எனக்கான உன்னை
எரித்தேன்
- என் எழுதா காவியத்தை

3.
பூத்தது அன்று,
எரிந்ததோ இன்று,
காதல் கல்லறையில்
சிலுவையிட்டேன் என் கண்ணீரை

மன்ற நண்பர்களும் தொடரலாம்

அட கேட்டவுடனே கொடுத்துவிட்டீர்களே!!! ஆனால் இது உங்கள் கவிதை அல்லபோல...
இனி நம் கவிதை.... போகியும் காதலும்

யோகி யருள் தெய்வம் தொய்வில்லை
காணீர் மாக்களே நெருப்பிலே - நீவிர்
யூகித் திரியும் தொன்மைப் பொருள்களை
அதனி னூடே எரிப்பீரே- காதல்
ஏகித் திரியும் காதலர்கள் கவிதைகள்
அவர்தம் புனைகள், கனவுகள் இந்த
போகித் திருநாளில் மலர்ந்திடுமே
தெய்வம் எரிந்தெழும் புகையினிலே!!

ஓவியா
14-01-2007, 06:47 PM
நன்றி ஆதவா

இது.................என்........... கவிதை................... இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது......

உங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா?

ஆதவா
14-01-2007, 06:55 PM
நன்றி ஆதவா

இது.................என்........... கவிதை................... இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது......

உங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா?

யோகி யருள் தெய்வம் தொய்வில்லை
காணீர் மாக்களே நெருப்பிலே - நீவிர்
யூகித் திரியும் தொன்மைப் பொருள்களை
அதனி னூடே எரிப்பீரே- காதல்
ஏகித் திரியும் காதலர்கள் கவிதைகள்
அவர்தம் புனைகள், கனவுகள் இந்த
போகித் திருநாளில் மலர்ந்திடுமே
தெய்வம் எரிந்தெழும் புகையினிலே!!

முதல் வரியில் நெருப்பை ஒரு யோக அருள் தெய்வம்னு டிக்ளேர் பண்ணியாச்சு
அடுத்து யூகித் திரியும் னா யோசனை செய்யும் தொன்மைப் பொருள் னா நினைவுகள் அதாவது பழைய நினைவுகள் அங்கெ எரிக்கப்படுது. அடுத்து, காதலர்களின் கவிதைகள், அலங்காரங்கள் கனவுகள் (புதுக் கனவுகள்) போகியிலே எரிக்கப்படும் நெருப்பிலிருந்து புகையாக வெளிவருகிறது..

சுருக்கமாக. யோக தெய்வத்தின் நெருப்பில் பழைய நினைவுகளைப் போட்டி எரித்து புதிய கனவுகளையும் கவிதைகளையும் புகையாகப் பெருகிறார்கள் காதலர்கள்....

எரிந்த புகை எங்கேயும் போய்விடாது.. ஏனெனில் நெருப்பானது யோகம்..

nonin
15-01-2007, 03:29 AM
மதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை
மறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.
பழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்
பழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.
ரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா
சுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.
சட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்
சாத்தானின் பிரதிநிதிகள்.
பண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....
எங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....

பென்ஸ்
15-01-2007, 03:56 AM
எரிகிறது
அவள் முன் ஹோமம்
அதில் என் காதலும்..!!!!

மன்னிக்க: கல்யான வீட்டில் மனவறையில் வளர்ப்பாங்களே... அது ஹோமம் தானே??? இல்லைனா கவிதையை மேற்பார்வையாளர்கள் திருத்தவும்..

meera
15-01-2007, 06:51 AM
ஓவி போகில ஏதோ சொல்லவர மாதிரி இருக்கு.நடக்கட்டும் நடக்கட்டும்.கவிதை தொகுப்பு அருமை.

meera
15-01-2007, 06:59 AM
எரிக்கிறார்கள் எதை எதையோ
எரிக்க வேண்டியவைகளை விட்டு விட்டு
காதலுக்கு தடையான
ஜாதியும் மதமும்......

மண்ணாசை கொண்டு
மனிதத்தை கொன்று
வளர்ந்துவரும் தீவிரவாதம்.......

இப்படி எரிக்க வேண்டியவை
எவ்வளவோ இருக்க
என்ன பாவம் செய்தன - இந்த
பேப்பரும் பிளாஸ்டிக்கும்?

thoorigai
15-01-2007, 07:24 AM
மதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை
மறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.
பழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்
பழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.
ரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா
சுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.
சட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்
சாத்தானின் பிரதிநிதிகள்.
பண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....
எங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....
நானின் நண்பனே,

வருத்தம் வடிய எழுதிய வரிகள்
மானுடம் புரியா மாயத் திரிகள்
ஏனிந்த இயலாமை உன்னுள்
ஏக்கம் களைய முடியும் நம்மால்
நம்பு நண்பா, நன்மை பயப்போம்

ஓவியா
15-01-2007, 12:20 PM
எனக்கு கவிதை எழுத வராது இல்லையென்றால் நானும் ஒரு கவிதையை எழுதுயிருப்பேன்....

மீரா அதெல்லம் என நண்பர்கள் எழுதியவை

ஆதவா, மீரா, பெஞ்சு, நோனின் உங்கள் அனைவரின் கவிதைகளும் அருமை

ஆதவா
16-01-2007, 08:01 AM
மதம் என்பது ஒரு புள்ளியில் இணையும் பல பாதைகள் என்பதை
மறந்து போனதால் இன்று தெருவெங்கும் மனித போகி.
பழையன கழிதல் எனும் தமிழனின் பழக்கத்தையும் கடந்து-உடன்பிறப்பாய்
பழகியவனையும் கழிக்க துடிக்குது அசுர போகி.
ரப்பரை எரித்தால் காற்று மாசுபடும் என்பதில் உள்ள அக்கறையும்-பெயர் தெரியா
சுப்பனை எரித்தால் மனிதம் தூக்கி வீசப்படும் என்பதில் இல்லையே.
சட்டி பானைகளுக்கு பதிலாக மனித சதைகளை கொளுத்தி விளையாடும்
சாத்தானின் பிரதிநிதிகள்.
பண்பட்ட,கலாச்சார,நாகரீக மனித உலகில் வாழ்கிறோமாம்....
எங்கு போய் அடித்துக்கொள்ள இந்த வங்கொடுமையை....

எரிக்கிறார்கள் எதை எதையோ
எரிக்க வேண்டியவைகளை விட்டு விட்டு
காதலுக்கு தடையான
ஜாதியும் மதமும்......

மண்ணாசை கொண்டு
மனிதத்தை கொன்று
வளர்ந்துவரும் தீவிரவாதம்.......

இப்படி எரிக்க வேண்டியவை
எவ்வளவோ இருக்க
என்ன பாவம் செய்தன - இந்த
பேப்பரும் பிளாஸ்டிக்கும்?

மீரா, நானின்,, கவிதைகள் படித்தேன் ஏற்கனவே!! பதில் எழுத முடியாமல் போய்விட்டது. அருமை... நம் நண்பர்கள் இன்னும் இங்கே வரவில்லையே!! கரும்பு தின்ன போய் விட்டார்களா???

ஷீ என்ன ஆனார்?

மீரா!! லீவு சொன்னீர்களே!!! இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

meera
16-01-2007, 10:44 AM
மீரா!! லீவு சொன்னீர்களே!!! இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அட இருப்பா..........

போறேன் போறேன்.எல்லாரும் படி படினு விரட்டுராங்களே..:eek: :eek:

அறிஞர்
16-01-2007, 12:55 PM
போகி பற்றி கவிஞர்களின் கவிதைகள் அருமை.......
---
ஓவியா மற்றவர்களின் கவிதைகளை இலக்கிய பிரிவில் பதிப்போம். மன்ற நண்பர்கள் கவிதை மழை பொழிந்ததால் இங்கே இருக்கட்டும்.

அறிஞர்
16-01-2007, 12:56 PM
மீரா!! லீவு சொன்னீர்களே!!! இங்கே போட்டு எதையோ எரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
படிக்கும் புள்ளைக்கு.... ஒரு மாற்றம் வேண்டாமா.. அதான் மன்றம் வராங்க... விடுங்கப்பா...

ஷீ-நிசி
16-01-2007, 01:43 PM
கவிதைகள் அருமை

ஓவியா
21-01-2007, 02:54 PM
போகி பற்றி கவிஞர்களின் கவிதைகள் அருமை.......
---
ஓவியா மற்றவர்களின் கவிதைகளை இலக்கிய பிரிவில் பதிப்போம். மன்ற நண்பர்கள் கவிதை மழை பொழிந்ததால் இங்கே இருக்கட்டும்.

அப்படியே ஆகட்டும்

அக்னி
01-06-2007, 09:15 PM
நன்றி ஆதவா

இது.................என்........... கவிதை................... இல்லை

எனக்கு கவிதை எழுத தெரியாது......

உங்கள் கவிதையை சற்று விளக்க முடியுமா?
அதான் கவிதைப் போட்டிகளில் வச்சு வாங்கறேளோ...?

ஓவியா
01-06-2007, 09:25 PM
அதான் கவிதைப் போட்டிகளில் வச்சு வாங்கறேளோ...?

இதில் 2 கவிதை என்னுடையது. ஒன்று மீராவின் கவிதை. மீதமோன்று ஒன்னொரு நண்பனின் கவிதை.

நன்றி நண்பா.

சக்தி
02-06-2007, 05:24 AM
நல்ல கவிதைகள்

devendira
02-06-2007, 08:46 AM
நகரங்களில் இருக்கும் போகி பற்றிய உங்கள் வரிகளின் வித்தைகளில் அசந்து நிற்கும் நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

ஓவியா
05-06-2007, 07:52 PM
நல்ல கவிதைகள்

நன்றி சக்தி

நகரங்களில் இருக்கும் போகி பற்றிய உங்கள் வரிகளின் வித்தைகளில் அசந்து நிற்கும் நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.

நன்றி தேவன்.இங்கே இன்னும் சில கவிதைகள் உள்ளன சென்று காணுங்கள். நன்றி

சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8498