PDA

View Full Version : புதிய பகுதிகள் தேவை



தமிழ்குமரன்
02-04-2003, 01:03 AM
தமிழ் மன்றத்தில் புதிய பகுதிகள் வேண்டும்.
1.கணணிதமிழ் ---இதில் கணணி மொழி கற்றுதர முயற்சிக்கலாம்.
2.பிறமொழி சாத்திரங்கள்- மொழிபெயர்ப்பு பகுதி
3.நாட்டுப்புற இலக்கியங்கள் பகுதி
போன்றவை வேண்டும்.

இராசகுமாரன்
02-04-2003, 03:29 AM
1) இதே பகுதியில் ஒரு தலைப்பு ஆரம்பித்து உள்ளேன். அதில் யாருக்காவது தமிழ் தட்டச்சு பயில வேண்டுமென்றால், தெரிவிக்க கூறியுள்ளேனே.. கவனிக்கவில்லையா?

2) எப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு என்று சரியாக புரியவில்லை? அதன் பயன் பற்றி கொஞ்சம் விளக்குவீரா?

3) இலக்கியத்திற்க்கென தனி பகுதியே உள்ளது, அதில் நாட்டுப்புற இலக்கியங்களும் அடக்கம்.

பகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால், மேலே கீழே நகர்த்து வது கடினமாக இருக்கும்.

தமிழ்குமரன்
02-04-2003, 04:45 AM
மொழி பெயர்ப்பு
இலக்கியங்களாக இருக்கலாம்,
மேலை நாட்டு இலக்கியம்,அரிய வடமொழி நூல்கள்,
கணனி தொடர்பான புதிய செய்திகள்.எ.கா. தமிழ் லைனக்ஸ்
போன்றவைகளை இங்கு வழங்கலாம்.

தமிழ்குமரன்
02-04-2003, 04:51 AM
கணனிமொழி எ.கா சி,சி++,போன்றவை,
மாணவர்களுக்கு,குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு
பெரிதும் பயன்படும். என நான் நம்புகிறேன்.

இராசகுமாரன்
02-04-2003, 05:22 AM
கணனிமொழி எ.கா சி,சி++,போன்றவை,
மாணவர்களுக்கு,குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு
பெரிதும் பயன்படும். என நான் நம்புகிறேன்.


நல்ல ஆலோசனை. எனக்கு நேரம் இருந்தால், எழுதுகிறேன். அல்லது வேறு யாரவது தொடரட்டும்.

கணனி,இணையம் பகுதியில் தொடரலாமே இதை!

aren
02-04-2003, 12:20 PM
தெரிந்தவர்கள் யாராவது எழுதினால் என்னைப் போல் உள்ளவர்களுக்கு படித்து தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

anushajasmin
04-04-2003, 10:45 AM
கணினி மொழி பற்றி எதுவும் எழுத வேண்டுமெனில் இந்த தளத்திற்காக நான்
எழுத தயார் (தலைவர் அனுமதியுடன்). ஒரு நான்கைந்து தலைப்பு தாருங்கள்
முயன்று பார்க்கிறேன்( அதி சிறிதளவு அடியேனுக்கு அனுபவம் உண்டு)

poo
04-04-2003, 02:36 PM
நல்லதொரு சேவை அய்யா.. தொடருங்களேன் யாரேனும்.. எனக்கும் கணினி மொழி படிக்க ஆசை.. ஆனால் கையையோ காலையோ அல்ல ஆளையே கடிக்குமளவு பொருளாதார நெருக்கடி.. உங்கள் போன்றோர் உதவினாலாவது அடிப்படை மட்டுமாவது கற்கலாம்.!!

இளசு
04-04-2003, 03:17 PM
கணினி புர (ல)வலர்கள் செய்யும் அறிவு தானத்தை
நன்றியோடு எதிர்பார்க்கிறோம்...

இவண்.....

அறிவு இரவலர்கள்.

aren
05-04-2003, 12:32 AM
கணினி மொழி பற்றி எதுவும் எழுத வேண்டுமெனில் இந்த தளத்திற்காக நான்
எழுத தயார் (தலைவர் அனுமதியுடன்). ஒரு நான்கைந்து தலைப்பு தாருங்கள்
முயன்று பார்க்கிறேன்( அதி சிறிதளவு அடியேனுக்கு அனுபவம் உண்டு)

நன்றி அனுஷா அவர்களே. நீங்களே உங்களுக்குத் தெரிந்த தலைப்பில் ஒன்றை ஆரம்பிக்கலாமே.

நன்றி வணக்கம்
ஆரென்

தமிழ்குமரன்
05-04-2003, 01:19 AM
நன்றி அனுஷா அவர்களே.
சி மொழி அடிப்படை
ஆரம்பிங்களேன்.
வாழ்த்துக்கள்.

இராசகுமாரன்
05-04-2003, 04:20 AM
அனுஷா,
ரொம்ப நன்றி..
நான் நேரமின்மையால் தவிக்கிறேன்.
தாங்கள் தொடருவதில் மிக்க மகிழ்ச்சி.

C++, C#, Java, Assembly Language
or VB, XML, PHP, Oracle
இதில் ஏதாவது ஒன்றோ, அல்லது
உங்களுக்கு பிடித்த ஒன்றோ, எதுவாக
இருந்தாலும் பரவாயில்லை.

Narathar
05-04-2003, 07:08 AM
அனுஷா எழுதுங்கள்.............
தெரியாததை தெரிந்துகொள்கிறோம்!!

aren
05-04-2003, 08:03 AM
எனக்கு கம்பியூட்டர் பற்றி சுத்தமாகத் தெரியாது. ஆகையால் நீங்கள் எதைப் பற்றி எழுதினாலும் படித்து தெரிந்துகொள்ள தயாராக இருக்கிறேன். ஆகையால் தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

anushajasmin
06-04-2003, 09:18 AM
இவ்வளவு வரவேற்பு தந்தமை குறித்து மிக்க சந்தோஷம். எந்தப் பகுதியில்
எழுதுவது எப்போது தொடங்குவது என தலைவர் சொன்னால் விரைவில் துவங்கி விடுவேன். அனுமதிக்கு காத்திருக்கிறேன்

பொன்னியின் செல்வன்
06-04-2003, 10:35 AM
அனுஷா,

தலைவர் அனுமதி அளித்து தலைப்புகள் சிலவற்றையும் கூறிவிட்டார். விரைவில் தொடங்குங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். எளிய முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய இனிய நடையில் எழுதுங்கள்.

இராசகுமாரன்
06-04-2003, 10:54 AM
தாமரை மன்றம், பகுதியில் உள்ள கணனி, இணையம், நமது தளம் பகுதியில் முதலில் ஆரம்பிக்கவும். தக்க சமயம் வரும் போது, தேவைப்பட்டால் அவை தனியாக மாற்றப்படும்.

anushajasmin
06-04-2003, 12:47 PM
அனுமதி கொடுத்தமைக்கு தலைவர்க்கு என் நன்றிகள்.
முதலில் ஆரக்கிள் தொடங்கலாம் என்றிருக்கிறேன். இன்று தகவல் தள மேலாண்மை அமைப்பில் ஆரக்கிள் முதலிடம் வகிக்கிறது. இதுபற்றி முதல்
பகுதி வரும் புதன் அன்று தலைவர் சொன்ன பகுதியில் வரும். பின்பு சி++
அதற்கு பிறகு சி-ஷார்ப் எழுதலாம் என்றிருக்கிறேன்.உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்

இராசகுமாரன்
06-04-2003, 12:55 PM
ஓராக்கிள், எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நானும் வேண்டுமென்றால் Javascript அல்லது PHP தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அதற்க்கு முன் HTML சுருக்கமாக விரைவில் வெளிவரும்.

aren
06-04-2003, 02:32 PM
எல்லோரும் புதிது புதிதாக என்னவோ சொல்கிறீர்கள். நீங்கள் எழுதியதைப் படித்தாலாவது நாங்களும் கொஞ்சம் இதைப் பற்றி கற்றுக்கொள்கிறோம். உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளசு
06-04-2003, 04:40 PM
அறிவுச் சுரங்கங்கள் தரும் தங்கப் புதையல் வாங்க
நன்றியோடு தவம் இருக்கிறோம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது...

மனிதன்
07-04-2003, 05:28 AM
எல்லோர் எண்ணங்களும் முயற்சியும் நல்ல அறுவடையைத் தரப்போவதில் சந்தேகமில்லை... தொடருங்கள் நண்பர்களே.. என் பங்குக்கு அடியேனும் எனக்குத் தெரிந்த தொலைத் தொடர்புத் தொழிநுட்பத் துறை சார்பாக - நண்பர்கள் விரும்பினால் - ஏதாவது தர முயற்சிக்கிறேன்...

அத்தோடு திரு இராசகுமாரன் அவர்கள் கூறியது போல் பகுதிகளின் என்ணிக்கையை இதற்கு மேல் அதிகரிப்பதைத் தவிர்த்து... வேண்டுமானால் இருப்பவற்றுள் உப பகுதிகளை உருவாக்குவது பற்றிச் சிந்திப்பது தான் பொருத்தமானது என்பது என் தாழ்மையான கருத்து....

தமிழ்குமரன்
07-04-2003, 10:21 AM
நன்றி தலைவர் அவர்களே.

gankrish
11-04-2003, 05:05 AM
ஹரே.. ஹரே.. இந்த மன்றத்தில் கணினியும் கற்று தர போகிறார்களா..
எப்போது... எப்போது

இளசு
11-04-2003, 07:02 AM
ஹரே.. ஹரே.. இந்த மன்றத்தில் கணினியும் கற்று தர போகிறார்களா..
எப்போது... எப்போது
ஊஹ்ஹம்..இது சரியில்லை நண்பனே
கணினி பகுதியில் பார்
அனுஷா பிச்சி உதறிக்கொண்டு இருக்கிறார்கள் (ஆரக்கிள் தொடர்)
மற்ற நண்பர்களும் படித்து, சந்தேகம் கேட்டு, குறைகள் சுட்டி
அனுஷாவை ஊக்க வேண்டுகிறேன்...

"ஊக்கமது கைவிடேல்"

Nanban
11-04-2003, 02:06 PM
fantastic...... முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

இலக்கியம், தமிழ் பெருமை என்று மயங்கிடாமல், புது உலகிற்கு வழிகாட்டியாகவும் இத்தளம் அமையப் போவதில் மிக்க மகிழ்ச்சி.....

அறிஞர்
02-05-2003, 06:49 AM
நல்ல.. முயற்சி நண்பர்களே.... நான்... சில... பாடங்களை... கற்று.. கொள்ள.. ஆவலுடன்... இருக்கிறேன்..

பரஞ்சோதி
13-02-2004, 09:54 AM
தலைமை நிர்வாகி இராசகுமாரன், இணை நிர்வாகி பப்பி, தலைமை கண்காணிப்பாளர் இளசு அண்ணா,

உங்கள் அனைவருக்கும் பரஞ்சோதியின் வணக்கங்கள்.

தமிழ் மன்றம் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கும் நேரத்தில் முதலாம் மாதம் கொண்டாட இருக்கும் நான் சொல்லும் ஆலோசனையை தவறாக நினைக்க வேண்டாம்.

தமிழ் மன்றத்தில் ஏன் சிறுவர் மன்றம் என்று ஒரு பகுதி தொடங்கக்கூடாது.
அதில் சின்னஞ் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் கதைகள், கட்டுரைகள், பொது அறிவு விசயங்கள், பாடங்கள், வினாடி வினா போட்டிகள் கொடுக்கலாமே. ஏற்கனவே நண்பர் பிஜிகே, லாவண்யா, மணியா, முத்து போன்றவர்கள் மிகவும் அருமையாக கொடுக்கிறார்கள். நானும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

எனக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் குழந்தை இருந்தால், கண்டிப்பாக மன்றத்தில் உறுப்பினராக இருப்பார். அதே போல் மற்ற மன்ற உறுப்பினர்களும் தங்கள் குழந்தைகளை இதில் சேர்த்து விடலாம். நண்பர் திருவருள் அளிக்கும் தமிழ் மொழி தொகுப்பு போன்றவற்றால் வாயிலாக வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளும் தமிழ் பயிலலாம். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கும் இப்பொழுதே நாம் கொடுக்கலாமே.

நான் கண்டிப்பாக என்னுடைய நண்பர்களின் குழந்தைகளுக்கு, என்னுடைய உறவினர் குழந்தைகளுக்கு தமிழ் மன்றம் பற்றி சொல்லிக் கொடுத்து, முரசு அஞ்சல் பற்றியும் சொல்லிக் கொடுத்தால், அவர்கள் மன்றம் வந்து தங்கள் தமிழ் அறிவை வளர்ப்பார்கள். அதன் மூலமாக தமிழ் மொழி வளரும் என்பது என்னுடைய எண்ணம்.

இதை தயவு செய்து தவறாக நினைக்கவேண்டாம், உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை, ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே இது போன்ற எண்ணம் இருந்தால் தொடங்க என்னுடைய வாழ்த்துக்கள்.

இளசு
14-02-2004, 12:03 AM
பப்பி அவர்களின் பதிலை எதிர்பார்ப்போம் முதலில்..

aren
14-02-2004, 01:52 AM
நல்ல ஆலோசனை பரஞ்சோதி அவர்களே. பப்பி அவர்களும் இளசு அவர்களும் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புவோம்.

Mano.G.
14-02-2004, 04:46 AM
நான் கணனி பற்றி தெரிந்து கொள்ள எந்த பள்ளியிலும்
படிக்க வில்லை , படிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது
நேரமும் வசதியும் இல்லாததால் முடியவில்லை
நமது மன்றத்தில் அதுபற்றிய தகவல் கட்டுரைகள் படைக்கபடப்போவது
மிக்க வரவேற்க தக்கது ஆவலுடன் காத்திருக்கிரோம்.

மனோ.ஜி