PDA

View Full Version : காயமே இது பொய்யடா!

lenram80
14-01-2007, 01:38 PM
(துரதிஷ்டம் துரத்தும் ஒருவன், மொட்டை மாடி சென்று, சுற்றுப்புரத்தைப் பார்க்கிறான்.
ஒவ்வொன்றும் கண்ணாடியாய் மாறி, இவன் பிம்பத்தை பிரதிபலிக்கக் காண்கிறான்.
பூங்கா, தேர், தெரு, அதில் உள்ள தெருவிளக்கு எல்லாமும் எப்போதும் போல் தான் இருக்கிறது.
ஆனால், இவனுக்கேனோ இப்படித் தெரிகிறது)

இலையுதிர் காலம்!
இரவு நேரம்!
அமாவாசை வானம்!
உற்றுப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஊனம்!

விரல் இலைகளை விட்டெறிந்து விட்டு வெறும் கையோடு குஷ்ட மரங்கள்! (இலையுதிர் காலம்!)
வெயிலில் சுற்றியதால் உடல் கறுத்த பூமி! (இரவு நேரம்!)
இருந்த ஒரே நெற்றிக் கண்ணையும் இழந்து நிற்கும் வானம்! (அமாவாசை வானம்!)

என்னைச் சுற்றி இப்படி ஒவ்வொன்றும் ஊனமாய்!
நானும் நிற்கிறேன் மொட்டை மாடியில் மௌனமாய்!

அதோ,
ஆரவாரமே இல்லாமல் அழுகிறது, நான் ஒடித் திரிந்த தெருக்கோடி!
கோடை விடுமுறை பள்ளி போல என் வாழ்க்கையும் வெறுச்சோடி!

அதோ,
ஒய்வே இல்லாமல் இழுத்தார்கள், இந்த தேரை ஊர்கூடி!
ஆளே இல்லாமல் நிற்கிறது அதே தேர், இப்போது ஊர் தேடி!

அதோ,
பறவைகளின் உற்சாக பாடலும்,அதற்கு பூக்களின் அற்புத ஆடலும்
விசில் அடிக்கும் இலைகளும், உடல் குலுங்க சிரிக்கும் மரங்களும்
இந்த அமக்களப் பூங்காவில் அப்போது எப்போதும் இசை விழா!

கிழட்டுக் கிளைகளின் முணகலும், அனாதைப் பறவைகளின் அலறலும்
காய்ந்த இலைகளின் கதறலும், இறந்த பூக்களுக்காய் இரங்கல் சத்தமும்
இந்த அமங்கள பூங்காவில் இப்போது இதைத்தவிர வேறேதும் காதில் விழா!

அதோ,
சந்தோஷங்களுக்கு சானை தீட்டி, ஆரவாரங்களுக்கு ஆயுள் கூட்டி
குறும்பு குழந்தைகளின் கும்மாளத்தால்
உடல் ஒளிரச் சிரித்தது அன்று இந்த 'திரு'விளக்கு!

இன்று,
கண்ணைச் சிமிட்டி சிமிட்டி, உயிரை ஒற்றைக்காலில் தாங்கிப் பிடித்து
மறு வாழ்வு மையங்களுக்கு மனு போடுகிறது அதே 'தெரு'விளக்கு!

தெய்வமே,
என்ன நடக்கிறது என் உலகத்தில்!
எதிர்மறையே என் கண்ணில் தெரிகிறதே!
ஒரு எரிமலையே என்னுள் எரிகிறதே!
உயிர் என் முன்னாலே உரிகிறதே!
உடல் என் முன்னாலே சரிகிறதே!

விடுமுறை கொடுக்கமாட்டாயா?
விதிமுறை மாற்றமாட்டாயா?

போதுமடா சாமி! எனக்கு இந்த தண்டனை!
என்று உன் கையால் அணைப்பாய் இந்த தொண்டனை?

ஆதவா
14-01-2007, 05:58 PM

யாருங்க இது நீங்களா?

இலையுதிர் காலம்!
இரவு நேரம்!
அமாவாசை வானம்!
உற்றுப் பார்த்தால், ஒவ்வொன்றும் ஊனம்!

ஆம் யோசிக்க வேண்டிய விசயம். யோசிக்காமலே இருக்கிறோம்

விரல் இலைகளை விட்டெறிந்து விட்டு வெறும் கையோடு குஷ்ட மரங்கள்! (இலையுதிர் காலம்!)
வெயிலில் சுற்றியதால் உடல் கறுத்த பூமி! (இரவு நேரம்!)
இருந்த ஒரே நெற்றிக் கண்ணையும் இழந்து நிற்கும் வானம்! (அமாவாசை வானம்!)

ஒரு கவிதையிலேயே விளக்கமா????? நன்று லெனின். எனது வேலையை சுலபமாக்கிவிட்டீர்..

என்னைச் சுற்றி இப்படி ஒவ்வொன்றும் ஊனமாய்!
நானும் நிற்கிறேன் மொட்டை மாடியில் மௌனமாய்!

நான் தான் சொன்னேனே முன்னமே.. அது நீங்கள் தான் என்று.. இப்போது ஒப்புக்கொண்டீர்...

அதோ,
ஆரவாரமே இல்லாமல் அழுகிறது, நான் ஒடித் திரிந்த தெருக்கோடி!
கோடை விடுமுறை பள்ளி போல என் வாழ்க்கையும் வெறுச்சோடி!

அதோ,
ஒய்வே இல்லாமல் இழுத்தார்கள், இந்த தேரை ஊர்கூடி!
ஆளே இல்லாமல் நிற்கிறது அதே தேர், இப்போது ஊர் தேடி!

லெனின்..நீங்கள் ரஷ்ய நாட்டவர்தானே (வாழ்க்கைக்கு மட்டும்) !! கம்யூனிசம் பேசுகிறது கவிதைகள் அடிக்கடி..

அதோ,
பறவைகளின் உற்சாக பாடலும்,அதற்கு பூக்களின் அற்புத ஆடலும்
விசில் அடிக்கும் இலைகளும், உடல் குலுங்க சிரிக்கும் மரங்களும்
இந்த அமக்களப் பூங்காவில் அப்போது எப்போதும் இசை விழா!

அமர்க்கள பூங்கா!! உருவகங்களாகப் பயன்படுத்தப்படும் சிலவற்றிற்கு உருவகமில்லாமல் உடுத்தியிருக்கிறீர் கவிதை ஆடை....

கிழட்டுக் கிளைகளின் முணகலும், அனாதைப் பறவைகளின் அலறலும்
காய்ந்த இலைகளின் கதறலும், இறந்த பூக்களுக்காய் இரங்கல் சத்தமும்
இந்த அமங்கள பூங்காவில் இப்போது இதைத்தவிர வேறேதும் காதில் விழா!

மேற்சொன்ன வரிகளின் நேர்மாறு... அமர்களப் பூங்கா இங்கே அமங்கலமாகிறது (லெனின் கவனிக்க "ள" அல்ல)
எதுகைகள் வரி தாண்டி அழகாக அமர்ந்து தாளமிடுகிறது..
இசை விழா, காதில் விழா(து)

அதோ,
சந்தோஷங்களுக்கு சானை தீட்டி, ஆரவாரங்களுக்கு ஆயுள் கூட்டி
குறும்பு குழந்தைகளின் கும்மாளத்தால்
உடல் ஒளிரச் சிரித்தது அன்று இந்த 'திரு'விளக்கு!

இன்று,
கண்ணைச் சிமிட்டி சிமிட்டி, உயிரை ஒற்றைக்காலில் தாங்கிப் பிடித்து
மறு வாழ்வு மையங்களுக்கு மனு போடுகிறது அதே 'தெரு'விளக்கு!

நம்ம ஊரே இப்படித்தான் லெனின்.. இரண்டாவது வரி அற்புதம்.. சமூகம் கண்ணைக் குத்திக்கொள்ள வேண்டும்..

தெய்வமே,
என்ன நடக்கிறது என் உலகத்தில்!
எதிர்மறையே என் கண்ணில் தெரிகிறதே!
ஒரு எரிமலையே என்னுள் எரிகிறதே!
உயிர் என் முன்னாலே உரிகிறதே!
உடல் என் முன்னாலே சரிகிறதே!

எதுகைகளின் அற்புதம் தெரிகிறது. முன்னது சொன்னது போல கண்ணுக்கு மாறாக அதேசமயம் சமூகத்தின் கண்களுக்கு தெரியவே மாட்டாத விசயங்கள்....

விடுமுறை கொடுக்கமாட்டாயா?
விதிமுறை மாற்றமாட்டாயா?

போதுமடா சாமி! எனக்கு இந்த தண்டனை!
என்று உன் கையால் அணைப்பாய் இந்த தொண்டனை?

கடைசி வரியில் தெய்வத்திடம் என்று அணைப்பாய் என்று கேட்கிறார்.... புரியவில்லை லெனின்.. இந்த சமூக மாற்றத்திற்கு நீங்கள் ஏன் கடவுளின் அணைப்பை வேண்டவேண்டும்..??

ஹி ஹி ஹி அருமையான கவிதை கொடுத்த லெனினுக்கு பாராட்டுக்கள்.. வரிகளின் நீளம் வார்த்தைகளால் தெரியவில்லை. சாதாரண விஷயங்கள் அசாதாரணமாக காட்டியிருக்கிறார்..

பாராட்டுக்கள்..

lenram80
15-01-2007, 02:47 PM
மீண்டும் ஒருமுறை நான் சமைத்த முழு சாப்பாட்டையும் ருசித்து சாப்பிட்ட ஆதவாவிற்கு நன்றி.

இந்த கவிதைக்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் அளிக்க விரும்பிகிறேன். துரதிஷ்டக்காரன் எப்படி தன்னைச் சுற்றியுள்ள
எல்லாவற்றையும் எதிர் மறையாகவேப் பார்ப்பான் என்று சொல்ல நினைத்தேன். அதனால், மாடி கூட இவனுக்கு
'மொட்டை'யாய் தெரிகிறது. பாவம் இவன் என்ன செய்வான்? தோல்விகளால் துவளும் போது, எதிர்மறைகள் நம்மில் ஆட்சி
செய்வதை தவிர்க்கமுடியாது.
இரவு நேரம் என்பதால், தெருவில் யாரும் இல்லை. அதை இவன் தெருவே வெறுச்சோடி உள்ளதே என்கிறான்.
இலையுதிர் காலம் என்பதால், இலைகள் இல்லை. பூக்கள் இல்லை. இதை இவன் காய்ந்த மரமாகக் கருதுகிறான்.
தெருவிளக்கு ஒன்று எரியாமல், மின்னிக் கொண்டே இருக்கிறது. அதையும் இவன் எதிர்மறையாகப் பார்க்கிறான்.
மேலும் இந்தக் கவிதையில் கவனிக்க வேண்டிய வார்த்தைகள்/வரிகள்
-கோடை விடுமுறை பள்ளி போல என் வாழ்க்கையும் வெறுச்சோடி!
- இந்த அமங்கள பூங்காவில் இப்போது இதைத்தவிர வேறேதும் காதில் விழா(து)!
-'திரு'விளக்கு & 'தெரு'விளக்கு
-என் உலகத்தில்! - என்பது 'என்னில்' எனப் பொருள் கொள்ளும்.

நான் நினைத்து எழுதியதை உங்களுக்குச் சேர்க்க வேண்டும் என்பதால் இந்த விளக்கம். இலையுதிர் காலம்!இரவு நேரம்!அமாவாசை வானம்!
இவை எப்படி ஊனமாய் தெரிகிறது என்று சொல்லிவிட்டு, () ப்ராகெட்டில் நான் இந்த மூன்று வார்த்தைகளையும் போட்டிருக்கக்கூடாது.
படிப்பவர்கள் தாமாகவே அதை புரிந்து கொள்ள வேண்டும். இருந்தாலும் நான் அதை போட்டிருப்பது கூட, கவிதை உங்களுக்கு முழுதாய்
புரிய வேண்டும் என்பதற்காகத் தான்.

ஆதவா
15-01-2007, 03:14 PM
தெளிந்தது அனைத்தும்.... நன்றூ.....

மதுரகன்
15-01-2007, 03:52 PM
கவிதையை யதார்த்தமாக எடுத்து வீசுகிறீர்கள் லெனின்..

தெய்வமே,
என்ன நடக்கிறது என் உலகத்தில்!
எதிர்மறையே என் கண்ணில் தெரிகிறதே!
ஒரு எரிமலையே என்னுள் எரிகிறதே!
உயிர் என் முன்னாலே உரிகிறதே!
உடல் என் முன்னாலே சரிகிறதே!

வாழத்துக்கள்..

தொடருங்கள்...