PDA

View Full Version : காதல் செய்வீர் ஜெகத்தீரே!.



nonin
14-01-2007, 11:34 AM
காதல் செய்வீர் ஜெகத்தீரே! - என
வாய் மொழிந்தான் பாரதி - நாம்
வழக்கம் போல் மாறாய் பொருள் கொண்டோம்.

எதிர்பாலினம் கண்டு உணர்வது மட்டும் காதலல்ல
எதிரியின் பால் இரங்குவதும் காதல்
கனிந்த அன்பே காதலென்றான்.

ஆண் பெண் எனும் பேதம் கடந்து
அனைத்து உயிர்களிடத்தும் மலரும்
மானுடத்தின் மென்மைதான்
மா கவி சொன்ன மெய்க்காதல்.

சூழும் விதியெனும் சூறாவளி சுற்றியடிக்க
படபடக்கும் சுடரோடு
வாழும் ஆசைதான் மாந்தர்க்கு
உயிர் மீதுள்ள காதல்.

மண்ணும், மரமும், பயிரும், கொடியும்,
பழமும், விதையும்,மலரும்,செடியும்,
வானும்,சுடரும்,ஒளிரும் மீனும்,
கடலும்,நதியும்,தண்ணொளி மதியும்,
காற்றும்,மழையும்,புகையும் பனியும்,
இவையாவும் படைப்புக்கு நம் மேலுள்ள காதல்தான்.

தான், தன்,இனம்,மொழி,மதம்,நாடு,உயிர் என
கயமை கழன்று கொண்டால்
காணும் பொருளிலெலாம் காதல் பெருகும்.
முடிவாயினும் முதலாய்.
நம்மை நாம் காதலிக்க கற்று கொண்டால்
ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி பெறும்.
உலகமெலாம் அன்பு பூ பூக்கும்.
மனிதம் வளரும்! மானுடம் செழிக்கும்!

ஓவியா
14-01-2007, 12:07 PM
காதல் செய்வீர் ஜெகத்தீரே

பாராட்டுக்கள் நானின்

கவிதயை வாசிக்கும் பொழுதே அன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது,
மனதினுல் அழுகை மட்டுமே வருகின்றது
(அன்பின் உணர்வை சொல்ல வார்தைகள் இல்லையே)


ஒரு வேண்டுகோள்

மிகவும் அழகான கவிதைக்கு தலைப்பு பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது......
வாய்பிருப்பின் இப்படி மாற்றுங்களேன் 'காதல் செய்வீர் ஜெகத்தீரே'

சான்றோர்களின் விமர்சனத்தின் பின் தொடர்கிறேன்

meera
14-01-2007, 02:56 PM
நானின்,

பாராட்டுகள்.உங்கள் கவிதை காதலுக்கு புது அர்த்தம் கொடுத்தது போல் இருக்கிறது.மேலும் தொடர வாழ்த்துகள்.

மதுரகன்
14-01-2007, 04:37 PM
சிறப்பான தொடக்கம் பாதிவெற்றி என்பார்கள்...
நீங்கள் தொடக்கத்திலேயே முழு வெற்றி பெற்று விட்டீர்கள்
வாழ்த்துக்கள்..
உங்கள் கவிதைகளுடன் மட்டும் எல்லைப்பட்டுவிடாது மற்றவர்கவிதைகளையும் வாசித்து விமர்சியுங்கள் ...
உங்கள் பயணம் தொடரட்டும்..

ஆதவா
14-01-2007, 05:12 PM
ஓவியா சொன்னது போல தலைப்பு பொருந்தாது போல இருந்தாலும்.. கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.. காதல் இப்படியும் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள்.. முதல் கவிதைக்கு என் முதல் வணக்கம்.


காதல் செய்வீர் ஜெகத்தீரே! - என
வாய் மொழிந்தான் பாரதி - நாம்
வழக்கம் போல் மாறாய் பொருள் கொண்டோம்.

ஹ ஹஹ..... அருமைதான்.. பாரதி சொன்னவைகளை நாம் பல மேற்கோள் காட்டியிருந்தாலும் வழக்கத்துக்கு மாறாக நாம் பொருள் கொள்வது இன்று நேற்றா நடக்கிறது.. முதல் கவிதையின் முதல் வரிகளில் முதல்வனின் முத்திரை இருக்கிறது..

எதிர்பாலினம் கண்டு உணர்வது மட்டும் காதலல்ல
எதிரியின் பால் இரங்குவதும் காதல்
கனிந்த அன்பே காதலென்றான்.

நிச்சயமாக.... இதை முதலாக சொன்னவர் புத்தர்.. அவர் வேறு வழிகளில் சொன்னார். நாம் இன்றும் எதிர்பாலினம் ( ஆணாயிருப்பின் பெண்... பெண்ணாயிருப்பின் ஆண் ) கண்டு உணருகிறோமா? முதலில் காதல் உணர்வினால் வரும் காதல் எத்தனை?? பாரதியை இங்கே இழுத்ததிற்கு மிகவும் நன்றி (அவர்சார்பாக)

ஆண் பெண் எனும் பேதம் கடந்து
அனைத்து உயிர்களிடத்தும் மலரும்
மானுடத்தின் மென்மைதான்
மா கவி சொன்ன மெய்க்காதல்.

( மேற்சொன்ன வரிகளை இங்கேயும் வைத்துக் கொள்ளலாம். )

சூழும் விதியெனும் சூறாவளி சுற்றியடிக்க
படபடக்கும் சுடரோடு
வாழும் ஆசைதான் மாந்தர்க்கு
உயிர் மீதுள்ள காதல்.

உயிர் மீதான காதல்.... அருமையான சிந்தனை///

மண்ணும், மரமும், பயிரும், கொடியும்,
பழமும், விதையும்,மலரும்,செடியும்,
வானும்,சுடரும்,ஒளிரும் மீனும்,
கடலும்,நதியும்,தண்ணொளி மதியும்,
காற்றும்,மழையும்,புகையும் பனியும்,
இவையாவும் படைப்புக்கு நம் மேலுள்ள காதல்தான்.

மேற்கோள்களின் பட்டியல் மிக அருமை.. அதிலும் ஒவ்வொரு வரிக்கும் அதனதன் இனத்தினைச் சேர்த்து எழுதியிருக்கிறீர்..
உதா: மண், மரம், பயிர், கொடி........
வான், சுடர், (ஆதவன்), தண்ணொளி மதி (நிலவு).....


தான், தன்,இனம்,மொழி,மதம்,நாடு,உயிர் என
கயமை கழன்று கொண்டால்
காணும் பொருளிலெலாம் காதல் பெருகும்.
முடிவாயினும் முதலாய்.
நம்மை நாம் காதலிக்க கற்று கொண்டால்
ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி பெறும்.
உலகமெலாம் அன்பு பூ பூக்கும்.
மனிதம் வளரும்! மானுடம் செழிக்கும்!

தான், தன்,இனம்,மொழி,மதம்,நாடு,உயிர் இவற்றின் மீதான பற்று விலகவேண்டுமென்ற உங்கள் சிந்தனை வரவேற்க்கத்தக்கது.... ஆனால் அதையே குறைய வேண்டுமென எழுதிய்யிருக்கலாம்.
முதல் கவிதை காதல் கவிதை... இங்கே காதலன் இல்லை காதலி இல்லை...

காதலிலே ஒரு சிந்தனைக் கவிதை கொடுக்கமுடியுமென முயன்று வாகை சூடியிருக்கிறீர்///

வாழ்த்துக்கள்..

nonin
15-01-2007, 02:42 AM
ஓவியா, ஆதவன் உங்களின் பாராட்டுக்கு நன்றிகள். குறிப்பாக ஆதவன் நீங்கள் கவிதை வரிகளை மேற்க்கோள்காட்டி அழகாக விமர்சனம் செய்வது
என் கவிதையை விட அழகு. இதை நான் உளமாற சொல்கிறேன்.
ஓவ்வொரு கவிதையயும் ரஸித்து வரிகளுடன் விமர்சனம் செய்வது ஒரு
பண்பட்ட கவிதை உள்ளத்துக்குதான் சாத்தியம்.அந்த வகையில் தங்களை
கண்டு நான் வெட்கி தலைகுனிகிறேன்.ஏனெனில் நான் வாசிக்கும் படைப்புகளுக்கு இருவரி,மூவரி பின்னூட்டங்களை இட்டு செல்வதில் மட்டுமே குறியாயிருந்தேன்.இனி நானும் முயல்வேன்.
ஓவியா இந்த கவிதை தலைப்பு பற்றிய தங்களின் கருத்துக்கு முற்றிலும்
உடன்படுகிறேன். உண்மையில் இந்த தலைப்பையிடும்பொழுது அது பொருந்தாததாகவே நிச்சயம் உணர்ந்தேன்.எனினும் நம் நண்பர்களை
ஈர்த்து உள்வரச்செய்யும் உத்தியாக இந்த தலைப்பை வைத்தேன்.அது மிக
மலிவான உத்தி என தங்கள் கருத்து மெய்ப்பித்து உள்ளதால் என் அன்பு நண்பர்களின் விருப்பத்திற்க்கேற்ப இப்படியும் இருக்கலாம் எனும் கவிதை
தலைப்பை காதல் செய்வீர் ஜெகத்தீரே! என திருத்திகொள்கிறேன்.
உங்களின் ஆக்கபூர்வமான விமர்சனத்திர்க்கு நன்றிகள் மீண்டும்...

எண்ணத்தில் நிற்க்கும் ஆசைகளேல்லாம் நிஜமாக்கி - காலதேவன் பொற்
கிண்ணத்தில் வைத்து தருவான் இனி!

தமிழ்மன்றம் தோழர்,தோழியர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்
வாழ்த்துக்கள்.

ஆதவா
15-01-2007, 04:06 AM
ஓவியா, ஆதவன் உங்களின் பாராட்டுக்கு நன்றிகள். இனி[/B[/color]]!

தமிழ்மன்றம் தோழர்,தோழியர் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள்
வாழ்த்துக்கள்.

அட !!! உங்கள் பாராட்டு என்பதை விட விமர்சனங்கள் உள்ளம் நெகிழ எழுதுவீர்கள் என்று சொன்னதே எனக்கு பெருமை.
அதே சமயம், ஒரு கவிதை சிறப்பாக இருந்தால்தான் விமர்சனமும் சிறப்பாக இருக்கும். அப்படிப் பார்க்கையில் எந்த விமர்சனமும் கவிதைக்கு ஈடாகாது.
நன்றி நானின்.

ஆதவா
15-01-2007, 04:07 AM
எண்ணத்தில் நிற்க்கும் ஆசைகளேல்லாம் நிஜமாக்கி - காலதேவன் பொற்
கிண்ணத்தில் வைத்து தருவான் இனி

இரு வரிக்கவிதை அருமை.... எனக்கும் நிறைய வரும்... தொடருங்கள்..

farhan
15-01-2007, 08:54 AM
all poems verry good i like all thanks to all friends

farhan
15-01-2007, 08:57 AM
உன் வார்த்தைகளையே என்னால் புரிய முடியவில்லை - உன்
மௌனத்தை எப்படி புரிந்து கொள்வது??

Narathar
15-01-2007, 10:57 AM
அன்பே சிவம்!
அது இல்லாதவன் சவம்!
நல்ல கருத்துக்கள்

உமாமீனா
15-02-2011, 05:05 AM
நல்லாஇருக்கு....நம்மதான் எதையுமே சரியாக புரிந்துகொள்ள மாட்டோமே?!