PDA

View Full Version : அயல் நாட்டு வாழ்க்கைlenram80
13-01-2007, 11:53 PM
ஆசை முத்தம் தர, ஆயிரம் அறிவுரை தர அம்மா இங்கே இல்லை!
ஆசிர்வாதம் தர அப்பா இங்கே இல்லை!
சின்னதாய் சண்டை போட அக்கா இங்கே இல்லை!
அம்மாவிடம் கோல் மூட்ட அண்ணன் இங்கே இல்லை!
அறிவுரை நாம் கூட கூற, தம்பி தங்கைகள் இல்லை!
இப்படி சொந்தமெல்லாம் சுற்றியிருக்கும்
சொர்க்கப்புறம் இங்கு இல்லை!

பாடித் திரிய நண்பர் படை இல்லை!
கூடிச் சிரிக்க தேநீர் கடை இல்லை!
அந்திரங்களைச் சொல்ல, சில அந்நியோனியங்கள் இல்லை!
உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, உற்ற துணையும் இல்லை!
இதையெல்லாம் விட,
கண் இருந்தும் காதலிக்கப் பெண் இல்லை!

அயல் நாட்டில் வசதிகள் அதிகம்!
அதைவிட மன அசதிகள் அதிகம்!

இது சீஸ்ஸால் செய்யப்பட்ட பீஸ்ஸா!
அது அன்பால் பிசைந்த பழைய சோறு!

இங்கே,
பஞ்சு மெத்தை, ஏசி காற்று, டொயோடா கார், பொட்டி பால்
இருந்தாலும் தாமரை இலை தண்ணீர் வாழ்க்கை!

அங்கே,
தெற்கு வாசல் வீடு, தென்றல் காற்று,
கயிறு கட்டில், தலை வைத்துப் படுக்க தாய்மடி
என அனுபவித்து மணக்கும் பன்னீர் வாழ்க்கை!

ஆயிரந்தான் இருந்தாலும் அயல்நாடு - வாக்கப்பட்ட வீடு!
ஆனால், நம் நாடு - நமக்காக வார்க்க்ப்பட்ட வீடு!
சந்தோஷங்கள் வாழும் சங்கீத கூடு!

கணிப்பொறியை துடைத்து வைத்து, ஆயுத பூஜை!
மானிட்டரில் வெடி கொளுத்தி, தீபாவளி!
பேப்பரில் பிரிண்ட் எடுத்து, சுடச்சுடப் பொங்கல்!
அட போங்கப்பா!
அயல் நாடும், அங்கு வாழ்க்கையும்!!!!!

Mano.G.
14-01-2007, 12:09 AM
பிரமாதம் இந்த பொங்கல்
நன்நாளின் அன்னிய நாட்டில்
குடும்பங்களையும், சொந்தங்களையும்
விட்டு பொருள் ஈட்ட வெளிநாடு
புறப்பட்ட உறவுகளின் உணர்வுகளை
உணர்ச்சி பூர்வமாக வார்த்தைகளில்
கொட்டி தனது ஆதங்கத்தை
வெளிப்படுத்திய லென்ராம்
உங்களுக்கு வாழ்த்துக்கள்


மனோ.ஜி

ஆதவா
14-01-2007, 01:29 AM
ஆசை முத்தம் தர, ஆயிரம் அறிவுரை தர அம்மா இங்கே இல்லை!
ஆசிர்வாதம் தர அப்பா இங்கே இல்லை!
சின்னதாய் சண்டை போட அக்கா இங்கே இல்லை!
அம்மாவிடம் கோல் மூட்ட அண்ணன் இங்கே இல்லை!
அறிவுரை நாம் கூட கூற, தம்பி தங்கைகள் இல்லை!
இப்படி சொந்தமெல்லாம் சுற்றியிருக்கும்
சொர்க்கப்புறம் இங்கு இல்லை!

அயல்நாட்டு வாழ்க்கை.... படப்பிடிப்பு போல எழுதியுள்ளீர்கள். அயல் நாட்டு நம்மவர்களின் ஏக்கம் தெளிவாகத் தெரிகிறது,

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?

பாடித் திரிய நண்பர் படை இல்லை!
கூடிச் சிரிக்க தேநீர் கடை இல்லை!
அந்திரங்களைச் சொல்ல, சில அந்நியோனியங்கள் இல்லை!
உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, உற்ற துணையும் இல்லை!
இதையெல்லாம் விட,
கண் இருந்தும் காதலிக்கப் பெண் இல்லை!

உறவுகளின் பிறிவைப் பற்றி சொல்லிவிட்டு இனிமைகளின் பிரிவையும் சொல்லி ஏங்குகிறீர். அயல்நாட்டு வாழ்க்கைக்கு ஏங்கும் இந்தியர்கள் யோசிக்க வேண்டியா விஷயம்.

அயல் நாட்டில் வசதிகள் அதிகம்!
அதைவிட மன அசதிகள் அதிகம்!

உண்மைதான். பிரிவுகளுக்கடுத்து விளைவுகள்... என்னதான் வசதியிருந்தாலும், நம் மண் ரோட்டில் பிரண்ட வாழ்க்கை எந்தாளும் மறக்க முடியாதது..

இது சீஸ்ஸால் செய்யப்பட்ட பீஸ்ஸா!
அது அன்பால் பிசைந்த பழைய சோறு!

இங்கே,
பஞ்சு மெத்தை, ஏசி காற்று, டொயோடா கார், பொட்டி பால்
இருந்தாலும் தாமரை இலை தண்ணீர் வாழ்க்கை!

அங்கே,
தெற்கு வாசல் வீடு, தென்றல் காற்று,
கயிறு கட்டில், தலை வைத்துப் படுக்க தாய்மடி
என அனுபவித்து மணக்கும் பன்னீர் வாழ்க்கை!

வெளி நாட்டுக்கு தனியே செல்வதினால்தான் இத்தனைத் தொந்தரவுகளும். ஒவ்வொரு பட்டியலும் இனிமை, எளிமை.

ஆயிரந்தான் இருந்தாலும் அயல்நாடு - வாக்கப்பட்ட வீடு!
ஆனால், நம் நாடு - நமக்காக வார்க்க்ப்பட்ட வீடு!
சந்தோஷங்கள் வாழும் சங்கீத கூடு!

வாக்கப் பட்ட வீடு என்றால் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது லெனின்,

கணிப்பொறியை துடைத்து வைத்து, ஆயுத பூஜை!
மானிட்டரில் வெடி கொளுத்தி, தீபாவளி!
பேப்பரில் பிரிண்ட் எடுத்து, சுடச்சுடப் பொங்கல்!
அட போங்கப்பா!
அயல் நாடும், அங்கு வாழ்க்கையும்!!!!

ஹஹஹஹ!!!! அருமை.... உங்கள் கவிதைகளில் இறுதி வரி எப்படி இப்படி அமைக்கிறீர்கள்?? செயற்கையான கம்ப்யூட்டர்தனமான வாழ்க்கை நடத்திவரும் பல ஆட்களை நான் நேரில் கண்டிருக்கிறேன். நீங்க சொன்ன அதே ஆயுத பூஜை டீபாவளீ, பொங்கல்..
பொங்கல் நாளாவது நம் நாட்டில் நம் வீட்டில் கொண்டாடுங்கள் தமிழர்களே!!!!
பாராட்டுக்கள் லெனின். எளிமையாக ஒரு சிந்தனைக் கவிதை கொடுத்ததற்கு....

nonin
14-01-2007, 10:43 AM
அட! பாதரவான வாழ்வே! தமிழன் அயல்நாட்டில் வயிற்றை கட்டி வாழ்வது போல் ஆண்மையை கட்டி வாழ்கிறான் என்று கவிஞர் வைரமுத்து சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ரொம்ப அருமையான நெஞ்சுருக்கும் கவிதை.

ஓவியா
14-01-2007, 01:19 PM
நெஞ்சில் கல் வைத்து
இதயதினுல் குண்டை தூக்கி போட்டு
என்னை உசுப்பி விட்டுடீரே............
இனி மூனு நாளைக்கு ஊரு ஞாபகம் தான்

கவிதை ரொம்ப அருமையாக இருக்கு,
தங்களின் கையொப்பமும் தூள்

பாராட்டுக்கள் லெனின்


ஆதவா,
நம் மண் ரோட்டில் பிரண்ட வாழ்க்கை எந்தாளும் மறக்க முடியாதது.
வெளி நாட்டுக்கு தனியே செல்வதினால்தான் இத்தனைத் தொந்தரவுகளும்........

பழைய ஞாபகமும், ஐடியாவும் கண்டு :D