PDA

View Full Version : பருவக் காதல்...



தீபன்
13-01-2007, 04:00 PM
பருவக் காதல்...

அவன்-
களிந்த வயதுகளின்
எண்ணிக்கையை தாண்டாதமீசை !
அவள்-
கடைத் தெரு பொம்மைக்காய்
கண்ணீர் சிந்தும் பேதை !

அவன்...
அவள்.....
அவர்களானார்கள்-
எவர்களதும் கருத்தும் கருதாமல்.. !

காத்திருந்த வேளை
காலதேவன் கழுதையில்..
காதல் வந்த வேளை
அதுவே கடுகதியில் !

சூழமும் சுற்றமும்
பிரச்சினையில்லை...
காரணம்,
ஓமோனின் ஆட்சியில் இவர்கள்

காலங்கள் கரைந்தன.....
தெய்வீகம் தெய்வமானது
தெய்வம் தெருவுக்கு வந்தது....

காமத்தின் கண்கள் களைப்படைய
கட்டாயலீவிலிருந்த
மூளையின் கலங்கள்
வேலைக்கு திரும்பின.....!

இளமையெனும் இமயம்
எதிர்கால மரியானாவுக்குள்
அமிழ்ந்து போனது!
வளமான வாழ்வுக்காய்
வாய்த்த காதல் வளமற்று தோன்றியது!

விடுபட விடைதேடியது மனம்
விடையின்றிகடந்தோடியது காலம்

காலங்கள் நீள
கண்டவர் சொன்னதும்
கருத்திலேறியது !
காதலில் கணமும்
களங்கமும் கூடியது!!

எறும்பாய் தீண்டியது பிரச்சினைகள்
எருமையாய் வந்து முட்டியது !
மலர் வனமாயிருந்த காதல்
மயானத்தில் திசை தேடி தவித்தது!!

யார் பேச்சும் கேட்காது
யாத்த காதல் நூல்,
ஊர் பேச்சு கேட்டு
ஊடலாகி ஊசலாடியது !

தெளிவுறுமா....?
நிலைபெறுமா....?
சுயதேடல் விடைகூறும்!!!

ஆதவா
13-01-2007, 04:52 PM
பருவக் காதல்

பருவ வயதுக் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார்... அதன் பிண்ணனியில் விளைவுகளின் செறிவைப் பற்றி எழுதியிருக்கிறார். இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் தீபன்? வழித்தெடுத்த வார்த்தைகளை நல்ல நல்ல இடத்தில் பிரயோகம் செய்திருக்கிறார். சில உதாரணங்கள் தெரிந்தவர்களுக்கு மட்டும் புரியும்.. உதாரணமாக ஓமோன்..

அவன்-
களிந்த வயதுகளின்
எண்ணிக்கையை தாண்டாதமீசை !
அவள்-
கடைத் தெரு பொம்மைக்காய்
கண்ணீர் சிந்தும் பேதை !

அவனும் அவளும் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்? களிந்த வயது என்பது அருமையான வார்த்தை.. டீன் ஏஜ் பையன்களின் அடயாளம். பெண்ணும் அவ்வாறே!

அவன்...
அவள்.....
அவர்களானார்கள்-
எவர்களதும் கருத்தும் கருதாமல்.. !

இருவரின் காதல் மோனைகளால் அடுக்கப்பட்டிருக்கிறது.. யாருடைய கருத்தும் கருதாமல். அருமை தீபன்.

காத்திருந்த வேளை
காலதேவன் கழுதையில்..
காதல் வந்த வேளை
அதுவே கடுகதியில் !

சூழமும் சுற்றமும்
பிரச்சினையில்லை...
காரணம்,
ஓமோனின் ஆட்சியில் இவர்கள்

நன்று தீபன். ஓமோன் பற்றி சொல்லுங்கள். இன்னும் கொஞ்சம் புரியும்..

காலங்கள் கரைந்தன.....
தெய்வீகம் தெய்வமானது
தெய்வம் தெருவுக்கு வந்தது....

காதலின் முடிவா? தெய்வம் என்ற வார்த்தை இங்கே விளையாடி இருக்கிறது. காதல் செத்துப் போனது என்று பொருள் விளங்க....

காமத்தின் கண்கள் களைப்படைய
கட்டாயலீவிலிருந்த
மூளையின் கலங்கள்
வேலைக்கு திரும்பின.....!

எளிமையான சிந்தனை. அதிலும். கட்டாய லீவிலிருந்த மூளை.. அருமைப் பா!

இளமையெனும் இமயம்
எதிர்கால மரியானாவுக்குள்
அமிழ்ந்து போனது!
வளமான வாழ்வுக்காய்
வாய்த்த காதல் வளமற்று தோன்றியது!

எளிமையும் புதுமையுமாய்... வளமில்லாது போனதே காதல்,,,,

விடுபட விடைதேடியது மனம்
விடையின்றிகடந்தோடியது காலம்

அட! காதலை விட்டொழிக்க நினைத்துவிட்டார்களா?

காலங்கள் நீள
கண்டவர் சொன்னதும்
கருத்திலேறியது !
காதலில் கணமும்
களங்கமும் கூடியது!!

உண்மைதான் தீபன்... காதலிக்கும் போது கண்டவன் சொன்னது கண்களில் படாது அதே விரிசலின் போது கண்டவன் சொன்னதே முன்னே நிற்கும்..

எறும்பாய் தீண்டியது பிரச்சினைகள்
எருமையாய் வந்து முட்டியது !
மலர் வனமாயிருந்த காதல்
மயானத்தில் திசை தேடி தவித்தது!!

சின்ன சின்ன உருவகங்கள். பெரிய தத்துவங்கள். எறும்பு எருமையாவதும் மலர் காதல் மயானம் தேடுவதும் அழகு வரிகள்.

யார் பேச்சும் கேட்காது
யாத்த காதல் நூல்,
ஊர் பேச்சு கேட்டு
ஊடலாகி ஊசலாடியது !

விளக்கம் வேண்டுமோ இதற்கு? (யாத்த = கட்டுண்ட... பழைய தமிழ் வார்த்தை... நாம் பழகாததால் பழையதாகிபோன வார்த்தைகள்.)

தெளிவுறுமா....?
நிலைபெறுமா....?
சுயதேடல் விடைகூறும்!!!

சந்தேகமென்ன ? தெளிவுமில்லை, நிலையுமில்லை.

விடலைப் பருவக் காதலின் விளைவுகளை மிக நேர்த்தியாக அதேசமயம் எளிமையாக யாருக்கும் விளங்குமாறு எழுதி அசாத்திய தீபனுக்கு வாழ்த்துக்கள்.. பிழைகளை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அவ்வளவு நேர்த்தி... தொடருங்கள் ; தீபமாய்..

ஷீ-நிசி
13-01-2007, 05:14 PM
காமத்தின் கண்கள் களைப்படைய
கட்டாயலீவிலிருந்த
மூளையின் கலங்கள்
வேலைக்கு திரும்பின.....!

நான் ரசித்த வரிகள்... அருமை அன்பரே!

மதுரகன்
13-01-2007, 05:25 PM
நல்ல சிந்தனை வளம் , தனிப்பட்ட கவிநடை(நவீன கவிதை மரபில்)

சிறந்த வார்த்தைக்கையாளல்கள்

காலங்கள் நீள
கண்டவர் சொன்னதும்
கருத்திலேறியது !
காதலில் கணமும்
களங்கமும் கூடியது!!

வியக்க வைக்கிறீர்கள்

வாழத்துகள்...

தீபன்
17-01-2007, 05:27 PM
நன்றி ஆதவா... நீங்கள் இருக்குமிடமே உங்களை புரிந்துகொள்ள போதுமானதாயிருக்கிறது..

நானெளுதியதைவிட அதற்கு உங்கள் விமர்சனம் ரொம்ப அருமை...

இத்தனைனாள் எங்கிருந்தீர்களென கேட்டிருந்தீர்கள்... ஆனாஅல் எத்தனை நாள் நாம் இங்கு இப்படியே இருக்கப்போகிறோமோ என்பது எமக்கே விடை தெரியாத வினா..

நிரம்பவே ரசித்து படித்து விமர்சனம் பண்ணியமைக்கு நன்றி நண்பரே.. துப்பாக்கி வெடிகளுக்கு மத்தியில் அவ்வப்போது காதல் எண்ணங்கள் தலைதூக்கும்போது மட்டுமே இவ்வாறான பதிவுகளை தரமுடிகிறது...

மேலும் பாராட்டுக்களை சொல்லிய ஷீ-நிசி, மதுரகன் ஆகியோருக்குமெனது நன்றிகள்..

ஆதவா
17-01-2007, 05:47 PM
நன்றி ஆதவா... நீங்கள் இருக்குமிடமே உங்களை புரிந்துகொள்ள போதுமானதாயிருக்கிறது..

நானெளுதியதைவிட அதற்கு உங்கள் விமர்சனம் ரொம்ப அருமை...

இத்தனைனாள் எங்கிருந்தீர்களென கேட்டிருந்தீர்கள்... ஆனாஅல் எத்தனை நாள் நாம் இங்கு இப்படியே இருக்கப்போகிறோமோ என்பது எமக்கே விடை தெரியாத வினா..

நிரம்பவே ரசித்து படித்து விமர்சனம் பண்ணியமைக்கு நன்றி நண்பரே.. துப்பாக்கி வெடிகளுக்கு மத்தியில் அவ்வப்போது காதல் எண்ணங்கள் தலைதூக்கும்போது மட்டுமே இவ்வாறான பதிவுகளை தரமுடிகிறது...

மேலும் பாராட்டுக்களை சொல்லிய ஷீ-நிசி, மதுரகன் ஆகியோருக்குமெனது நன்றிகள்..

நண்பரே உங்கள் உணர்வுகளை நான் புரிகிறேன்......... என்றும் காதலே வாழவும் வேண்டும்.....
தோட்டாக்கள் துளைக்காத பூவொன்று பறிக்கப்படுமானால் மட்டுமே தலையில் சூட வேண்டுமென்பது எனது அவா!
ஸ்ரீலங்கா இன்றும் இராவணனின் நரகமாயிருப்பது வேதனை........

தீபன்
19-01-2007, 04:53 PM
தோட்டாக்கள் துளைக்காத பூவொன்று பறிக்கப்படுமானால் மட்டுமே தலையில் சூட வேண்டுமென்பது எனது அவா!
ஸ்ரீலங்கா இன்றும் இராவணனின் நரகமாயிருப்பது வேதனை........

மன்னிக்கவும் நண்பரே.. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை... ராவணன் காலத்தில் இலங்கை இலங்கையர்க்கு சொர்க்கமாகத்தான் இருந்ததென கம்பரே சொல்லியிருக்கிறார்... திராவிடரும் இராவணனை நல்ல மன்னனாகத்தான் சொல்கிறார்கள்... எனவே இன்றைய எம் நிலையை ராவணன் ஆட்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல..

ஆனாலும் உங்கள் கரிசனைக்கு நன்றி தோழரே..

ஆதவா
19-01-2007, 05:07 PM
மன்னிக்கவும் நண்பரே.. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை... ராவணன் காலத்தில் இலங்கை இலங்கையர்க்கு சொர்க்கமாகத்தான் இருந்ததென கம்பரே சொல்லியிருக்கிறார்... திராவிடரும் இராவணனை நல்ல மன்னனாகத்தான் சொல்கிறார்கள்... எனவே இன்றைய எம் நிலையை ராவணன் ஆட்சியுடன் ஒப்பிடுவது சரியல்ல..

ஆனாலும் உங்கள் கரிசனைக்கு நன்றி தோழரே..

நண்பரே ராவணன் ஒரு கொடியவன் என்று கேள்விப் பட்டேன்... அதனாலேதான் அப்படிச் சொன்னேன்.............

மதுரகன்
19-01-2007, 05:17 PM
உண்மைதான் ஆதவா நானும் அதனை ஆமோதிக்கிறேன்..
பாரதிதாசன் கவிதைகள் படித்துள்ளீரா..
அவர் கூறுவார்...
"தென்திசையைப் பார்க்கின்றேன் என் செய்கேன்
என் சிந்தையெல்லாம் செய்கையெல்லாம் பூரிக்குதடடா
அன்றந்த இலங்கைதனை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழைப்பதித்தோன்
குன்றெடுக்கும் தோளான் கொடைகொடுக்கும் பெருங்கையான்
குள்ள நரிச்செய்கை செய்யும் கூட்டத்தின் கூற்றம்
.....
என் தமிழர் பெருமான்
என் தமிழர் மூதாதை இராவணன்காண்
இராவணனை வணங்குகின்ற தமிழரை தமிழர் என்பேன்
அல்லாதோரை சளக்கர் என்பேன்.."

பார்த்தீர்களா...

இப்பொழுதாவது உண்மை தெரிந்து கொள்ளுங்கள்...

மனோஜ்
19-01-2007, 05:26 PM
அறுமையாக உள்ளது தீபன் அவர்களே
தொடரட்டும் உங்கள் கவிதைகள்
ஆதவன் அவர்கள் அளித்த விமர்சனம் நன்று

ஆதவா
20-01-2007, 05:37 PM
உண்மைதான் ஆதவா நானும் அதனை ஆமோதிக்கிறேன்..
பாரதிதாசன் கவிதைகள் படித்துள்ளீரா..
அவர் கூறுவார்...
"தென்திசையைப் பார்க்கின்றேன் என் செய்கேன்
என் சிந்தையெல்லாம் செய்கையெல்லாம் பூரிக்குதடடா
அன்றந்த இலங்கைதனை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழைப்பதித்தோன்
குன்றெடுக்கும் தோளான் கொடைகொடுக்கும் பெருங்கையான்
குள்ள நரிச்செய்கை செய்யும் கூட்டத்தின் கூற்றம்
.....
என் தமிழர் பெருமான்
என் தமிழர் மூதாதை இராவணன்காண்
இராவணனை வணங்குகின்ற தமிழரை தமிழர் என்பேன்
அல்லாதோரை சளக்கர் என்பேன்.."

பார்த்தீர்களா...

இப்பொழுதாவது உண்மை தெரிந்து கொள்ளுங்கள்...

நண்பரே நீங்கள் சொன்னதை மேலோட்டமாக ஒத்துக்கொண்டாலும் வால்மீகியைப் பார்த்துவிட்ட நான் கம்பரையும் சுப்புவையும் கவனிக்கத் தவறிவிட்டேன்.......... ஆதலால் ஒத்துக்கொள்ளவில்லை.........


ஒரு நாட்டின் ராஜகுமாரியைத் தூக்கிக் கொண்டுவந்து சிறைபிடிக்கும் ஓர் அரசன் எங்ஙனம் அவன் நாட்டின் அழகிய பெண்களைப் பாதுகாப்பான்?
பாதுகாப்பில்லாத வாழ்க்கை நடத்திவரும் இளைஞிகளுக்கு மத்தியில் இராவணன் இலங்கையை எப்படி சொர்க்கபுரியாக ஆள முடியும்?
சொர்க்கமாக ஆண்ட இராவணனை ஏன் கருணையின்றி இராமன் கொல்லவேண்டும்? மன்னித்து அரசை அவனுக்கே கொடுக்கலாமே?!!
ஏன் முனிவர்கள் எல்லாம் இராவணனைப் பார்த்து நடுங்கி விஷ்ணுவிடம் அவதாரமெடுக்கச் செய்யவேண்டும்?
முனிவர்களும் தேவர்களும் வாழ முடியாத ஓர் நாட்டை எப்படி சொர்க்க புரியாக ஏற்றுக் கொள்ள முடியும் தீபன் மற்றும் மது?
இராவணன் ஆரம்பித்து இன்று வரை அங்கே நிம்மதி இல்லை! ஆக ராவணன் ஆட்சி என்று நான் சொன்னதில் தவறேது இருக்கமுடியும்?
வெறும் பேச்சினால், அனுமன் கோபத்தைக் கிளறிவிட்டு ஊரையே எரித்த ஓர் உத்தமன் ஆண்ட நாடு எவ்விதமய்யா சொர்க்கம்?பதில் சொல்லுங்கள்//////////

மதுரகன்
20-01-2007, 05:57 PM
ஆதவா இதற்கு பதில் புரிய வைக்க
விவாதங்கள் பகுதியில் தனித்திரி ஆரமபித்து விவாதிப்போம்..
நீங்கள் பதிலை அங்கே எதிர்பாருங்கள்..

ஓவியா
21-01-2007, 01:32 PM
வணக்கம் தீபன், நலமா?
யாவரும் நலமே காண்க

வெகு நாட்களுக்கு பின் தங்களின் கவிதையை கண்டு மனம் ஆனந்தமடைந்தது.


எழிய வார்த்தைகளில் பருவ காதலை அழகாக சொன்னவிதம் நன்று.
ரசித்து படித்தேன்

ஆதவாவின் கவிதை பின்னூட்டம் அருமை

தீபன்
22-01-2007, 05:04 PM
வணக்கம் தீபன், நலமா?
யாவரும் நலமே காண்க

வெகு நாட்களுக்கு பின் தங்களின் கவிதையை கண்டு மனம் ஆனந்தமடைந்தது.



நன்றி தோழி... நாங்கள் எப்படி நலமாயிருக்கிறோமென்று சொல்லமுடியும்...? ஏதோ இருக்கிறோம்...

எனது கருத்துக்கள் ஒரு புதிய விவாதத்திற்கே வளிவகுத்ததையிட்டு மகிள்ச்சி... இன்றுதான் அத்திரியை படித்தேன்.. எனது கருத்துக்களை பதிய போதிய அவகாசம் இல்லை... நாளை உங்கள் கேள்விகளுக்கான விடைகளுடன் அத் திரியில் சந்திக்கிறேன்..

என் படைப்பிற்கான உங்கள் பாராட்டுக்களிற்கு மீண்டுமெனது நன்றிகள் நண்பர்களே..

தீபா
09-07-2008, 07:35 AM
ஊர்மக்கள் திட்டாமல் போனாலும் இப்படி ஏதாச்சும் பேசியே கழுத்தறுப்பார்கள்... அதை வித்தியாசமாக கவிதையில் படைத்த தீபனுக்கு வாழ்த்துகள்.