PDA

View Full Version : கேன்சருக்கு உதவுங்கள்



பிச்சி
13-01-2007, 12:42 PM
மன்றத்தில் இருக்கும் அண்ணன்களுக்கும் அக்காக்களுக்கு, தோழ, தோழிகளுக்கும் என் பணிவான வேண்டுகோள்

என் நண்பர் ஒருவரின் தந்தைக்கு தொண்டைப் பகுதியில் கேன்சர் ஆகிவிட்டது. தமிழகத்தில் தலைசிறந்த கேன்சர் மருத்துவமனை பற்றி யாராவது உடனடியாக தகவல் தரமுடியுமா?.. தயவு கூறுங்கள்...

தயவு செய்து இங்கே பதில் அளியுங்கள்.......

இளசு
14-01-2007, 11:02 PM
பிச்சி அவர்களே


நோயைக் கண்டறிந்த முதல் மருத்துவரையே பரிந்துரைக்கச் சொல்லலாம்.


தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ கிளை புற்று நோய்களுக்கான
சிறப்பு மையம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

அறிஞர்
16-01-2007, 01:01 PM
அப்போல்லோ கான்சர் மருத்துவமனையும் சிறந்தது.

வேலூர் சி.எம்.சியும் சிறந்தது... அன்பரே...

tamil81
17-01-2007, 04:12 PM
சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவ மருத்துவ மனை உலக புகழ் பெற்றது

அறிஞர்
17-01-2007, 06:55 PM
சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவ மருத்துவ மனை உலக புகழ் பெற்றது
தற்பொழுது தரம்/கவனிப்பு எவ்வாறு இருக்கிறது எனத்தெரியவில்லை அன்பரே..

இளசு
17-01-2007, 07:31 PM
சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவ மருத்துவ மனை உலக புகழ் பெற்றது

அறிஞர் சொன்ன வேலூர் சிஎம்சியும் நண்பர் தமிழ்81 சொன்ன அடையாறு மருத்துவமனையும் நல்ல பரிந்துரைகள்.


பிச்சி அவர்களே

தற்போதைய நிலவரம் என்ன ?

srimariselvam
22-10-2009, 11:57 AM
சேலம் அருகிலுள்ள அம்மம்பாளையத்தில் சித்தாஸ்ரமம் உள்ளது. அங்குள்ள டாக்டர். திரு. ராபின்சன் கேன்சர் நோயை முற்றிலும் குணமாக்கி வருகிறார். உங்கள் நண்பரின் தந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். பிரார்த்தனைகள்.

வியாசன்
22-10-2009, 12:18 PM
உங்கள் நண்பரின் தந்தைக்காக பிரார்த்திக்க மட்டும் என்னால் முடியும். நலமாகி வரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்

வெற்றி
22-10-2009, 02:18 PM
கோவை..சேலம் என பல ஊர்கள் இருந்தாலும் சென்னை ரொம்ப நல்லது (ஆரம்ப கட்ட சிகிச்சை மற்றும் ஆப்ரேசனுக்கு சென்னை தான் பெட்டர்...அதன் பின் ரேடியேசன் மற்றும் ஊசி போடுதலுக்கு அவர்கள் ஊரின் அருகில் இருக்கும் எந்த மருத்துவமனையிலும் செய்து கொள்ளலாம்..... )
சென்னை அப்பலோ அல்லது அடையாருக்கே போகச்சொல்லி அறிவுறுத்தவும்..
ஆரம்ப சிகிச்சையில் அவர்கள் காட்டும் வேகம் & விவேகம் நோயின் வீரியத்தை குறைக்கும்... சீக்கரம் முடிவெடுத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளச்சொல்லவும்

praveen
22-10-2009, 04:39 PM
2007ல் கேட்கப்பட்டதற்கு தற்போது பதில் வந்தால், இந்நேரம் அவர் கிசிக்சை எடுத்திருப்பாரே. திரி ஆரம்பித்த தங்கை தான் பதில் சொல்ல வேண்டும்.

அமரன்
24-10-2009, 08:35 AM
2007ல் கேட்கப்பட்டதற்கு தற்போது பதில் வந்தால், இந்நேரம் அவர் கிசிக்சை எடுத்திருப்பாரே. திரி ஆரம்பித்த தங்கை தான் பதில் சொல்ல வேண்டும்.
விடுங்க பிரவீன்.. பிச்சிக்கு இல்லன்னா இன்னொருத்தருக்கு உதவிட்டுப் போகுது.

இளந்தமிழ்ச்செல்வன்
02-11-2009, 07:27 PM
விடுங்க பிரவீன்.. பிச்சிக்கு இல்லன்னா இன்னொருத்தருக்கு உதவிட்டுப் போகுது.

உண்மைதான்.

எனது நண்பரின் தந்தை மூலம் தெரிந்து கொண்ட விசயம்,

எறும்பூர் (திருவண்ணாமலையிலிருந்து ஆரணி செல்லும் வழி) என்ற ஊரில் அறுவை சிகிச்சை செய்யும் முன் மூலிகை மூலம் பூரண குணப்படுத்துகிறார்கள் என்றார்.

ஆரம்பத்தில் பலராமர் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி இச் சேவையை செய்ததாகவும் தற்போது அவரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் சென்னையிலும் கிளை நிறுவி செய்து கொண்டிருப்பதாகவும் எனது நண்பரும் இதனை கூறினார்.