PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - பகுதி 1.



kavitha
13-01-2007, 04:36 AM
ஜாவாவின் வரலாறு:-

1995ம் ஆண்டில் பிறந்த ஜாவாவின் கதை மிக சுவாரசியமானது.
பேட் ரிக் நாக்ட்டன், ஜேம்ஸ் கோஸ்லிங் என்னும் சன் மைக்ரோ சிஸ்டத்தின் இரு பொறியியலார்களும் பயனாளர்களுக்காக மேசை கணினிக்கான மொழியை வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள். அத்தகைய மொழி தொலைக்காட்சி செயலாக்கி (டிவி ரிமோட்டிலும்) யில் பயன்படுத்தவல்லதாக இருக்கும்படி அமைக்கவேண்டியிருந்ததால், சிறிய நினைவகத்தையும், மின்சாரத்தேக்கத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியிருந்தது. அதே சமயத்தில் வெவ்வேறு உற்பத்தியாளருடைய பொருட்களுக்கும் அது வளைந்துகொடுக்கக்கூடியதாக இருக்கவேண்டியாதாகவும் இருந்தது. அந்த புரோஜெக்ட்டுக்கு அவர்கள் 'க்ரீன்' (பச்சை) என்று பெயரிட்டிருந்தார்கள்.

நடுநிலையான, எந்த வகையான சிபியூ விற்கும் ஏற்புடைய, குறைந்த நினைவகத்தை ஆக்ரமிக்கும் இந்த புரோஜெக்ட் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது. கோஸ்லிங் அதற்கு 'ஓக்' என்றே பெயரிட்டார். ஆனால் ஏற்கனவே அந்தப்பெயரில் வேறொரு மொழி இருந்ததால் பின்னாளில்
காப்புரிமையைக்கருத்தில் கொண்டு 'ஜாவா' என்று மாற்றவேண்டியதாயிற்று.


1992 ம் வெளியிடப்பட்ட 'பச்சை' '*7' என்றும் அழைக்கப்பட்டது. தொடர்பற்ற கட்டுப்படுத்தியாக (ரிமோட் கண்ட்ரோல்) இது சிறப்பாக செயல்பட்டது. இதனை கேபிள் டிவி பாக்ஸ் லும் ரிமோட் சாதனத்திலும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்காட்டினார்கள். இருப்பினும் இதனை வாங்கிக்கொள்ளவோ, விளம்பரப்படுத்தவோ எந்த நிறுவனமும் முன்வரவில்லை. எனவே பேட் ரிக் நாக்ட்டன் தாமே முயன்று கிட்டத்தட்ட 300,000 மைல்களுக்குச் சென்று மக்களிடம் இதன் சிறப்பைப்பற்றி எடுத்துரைத்தார். 1993 ல் மீண்டும் "�ப்ர்ஸ்ட் பர்சன்"என்ற பெயர் மாற்றத்தோடு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1994ல் நெட்ஸ்கேப் -ன் அறிமுகத்திற்குப்பிறகு "ப்ர்ஸ்ட் பர்சன்" முடிவுக்கு வந்தது. ஏனெனில் அந்த சமயத்தில் தான் இணையதளம் மக்களிடையே நன்கு புழங்கலாயிற்று. எனவே கிளையன்ட்-சர்வர் ஆர்க்கிடெக்சருக்கேற்ற சிறந்த பிரவுசரையும் அதற்குரிய துணைக்கருவிகளையும் சார்ந்த ஒரு மென்பொருள் தேவை என்பதை பேட் ரிக் நாக்ட்டன் -ம், ஜானாதன் பேனே -ம் உணர்ந்தார்கள். அதன்படி 1995 ல் 'ஹாட் ஜாவா' பிரவுசரையும் அறிமுகப்படுத்தினார்கள். இது ஜாவா மொழியிலே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாவாவின் சக்தி இணையத்தைத்துவக்கி, இணையத்தில் ஊடுறுவி, இணையத்தை நிர்வகித்து, இணையத்தைக் கட்டுப்படுத்துவது என்று எல்லாவிதத்திலும் இன்று வரை ஒரு ஆளுமையான மொழியாகவே திகழ்கிறது.


இப்படிப்பட்ட மொழியின் தொழிட்நுட்ப சிறப்புக்கள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவை அடுத்த பகுதியில் ...

(ஆர்வலர்கள் ஜாவா டெவலப்பர் கிட் டை www.java.sun.com (http://www.java.sun.com) ல் இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்)

.

ஆதவா
13-01-2007, 06:08 AM
அருமை... தொடருங்கள்...

Mathu
13-01-2007, 10:57 AM
பார்த்தோம் காத்திருக்கிறோம் கவிதா.....

இளசு
13-01-2007, 04:37 PM
அழகான முன்னுரை.
விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயனாளரைச் சந்த்தித்து விளக்குதல், மாறும் சூழல், தேவைகளுக்கேற்ப வடிவம் மாற்றும் தொடர் உழைப்பு -
இவற்றை ஜாவாவின் தந்தை பேட்ரிக் நாக்டனிடம் காண முடிகிறது.
உங்கள் எளிய தமிழில் வாசிக்க இனிமை...
தொடருங்கள் கவீ. பாராட்டுகள்!

kavitha
29-01-2007, 10:18 AM
ஆதவா, மதன், இளசு அண்ணா மற்றும் படித்த அனைவருக்கும் என் நன்றிகள். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

பரஞ்சோதி
29-01-2007, 10:20 AM
சகோதரி, மன்றத்தில் மீண்டும் கணினி கட்டுரை. வாழ்த்துகள்.

இனிய தமிழிலில் தெரியாதவற்றை படிப்பதில் தனி மகிழ்ச்சி உண்டு.

pradeepkt
29-01-2007, 12:11 PM
ம்ம்... முதலில் ஜாவாவின் வரலாறா? ஜாவா படித்திருக்கும் பலருக்கும் இது தெரிந்திருக்க நியாயமில்லை.

நல்ல தகவல்களுடன் தொடங்கி இருக்கிறீர்கள், வாழ்த்துகள் கவிதா.

paarthiban
29-01-2007, 06:30 PM
நல்ல தொடர் .பாராட்டுக்கள் கவிதா.

kavitha
31-01-2007, 06:46 AM
பரம்ஸ் அண்ணா, பிரதீப், பார்த்திபன் அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767